Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதியில் துவாதசி தரிசனத்துக்கு ரூ.300 டிக்கெட் 10 ஆயிரத்து 800 வழங்க ஏற்பாடு

Posted: 16 Dec 2015 10:44 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 22–ந்தேதி துவாதசி தரிசனத்துக்கு ரூ.300 டிக்கெட் ஆன்லைன் மூலம் 10 ஆயிரத்து 800 வழங்கப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் தேவஸ்தான அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பு எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்

Posted: 16 Dec 2015 10:36 PM PST

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம், கடந்த 2007-2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியில் இருந்து அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வரும் என்ற நம்பிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்கும் வரை ஆம்ஆத்மி மந்திரிகளின் சிபாரிசுகளை ஏற்க கூடாது: மத்திய மந்திரிகளுக்கு பா.ஜனதா உத்தரவு

Posted: 16 Dec 2015 10:31 PM PST

டெல்லி மாநில அரசின் தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக வந்த புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள்

3 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 11 இந்திய ராணுவ வீரர்கள் கைது: மேல்–சபையில் மந்திரி தகவல்

Posted: 16 Dec 2015 10:23 PM PST

3 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 11 ராணுவ வீரர்கள் உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி மேல்–சபையில் கேள்வி நேரத்தின்போது பாகிஸ்தானின் ஐ.எஸ்.எஸ். உளவாளிகள் கைதானது பற்றி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து உள்துறை இணை மந்திரி எச்.பி.சவுத்திரி கூறியதாவது:–

ஏலத்தில் எடுத்த தாவூத் இப்ராகிம் காரை திட்டமிட்டபடி கொளுத்துவேன்: இந்து மகாசபா தலைவர்

Posted: 16 Dec 2015 10:09 PM PST

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவனது சொத்துக்களை ஏலம் விட கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கார்கள், கட்டிடம் உள்பட 7 சொத்துக்கள் கடந்த 9–ந்தேதி ஏலம் விடப்பட்டது. இதில் பங்கேற்று தாவூத்தின் காரை ஏலம் எடுப்பதற்காக டெல்லியைச் சேர்ந்த இந்து மகா சபா தலைவர் சக்ரபாணி டெல்லியில் இருந்து மும்பை வந்தார்.

மத்திய மந்திரிகளுக்கு மோடி இன்று விருந்து

Posted: 16 Dec 2015 10:06 PM PST

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. மந்திரிகள் ஒவ்வொருவரும் எப்படி செயல்படுகிறார்கள் என்று ஆய்வு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளார். சில மந்திரிகளை அவர் அழைத்து அறிவுரைகளும் வழங்குவது உண்டு. பா.ஜ.க. மந்திரிகள் வழிகாட்டுதலில் மத்திய அரசுத் துறைகள் எவ்வாறு

மார்கழிமாத பிறப்பையொட்டி சபரிமலையில் கலசபூஜை வழிபாடு

Posted: 16 Dec 2015 09:00 PM PST

பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. வருகிற 27–ந்தேதி சுவாமி அய்யப்பனுக்கு தங்க அங்கி மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெற உள்ளது.

திருவனந்தபுரம் அருகே குடிபோதையில் பாகன் மயங்கியதால் ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்

Posted: 16 Dec 2015 08:54 PM PST

திருவனந்தபுரம் அருகே உள்ள மங்களாபுரத்தை அடுத்த புறக்கோடு கள்ளிவிளையை சேர்ந்தவர் முகம்மது. நேற்று இரவு வீட்டில் இவர் குடும்பத்துடன் தூங்கினார். அதிகாலையில் இவரது வீட்டு அருகே ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால் அவர் எழுந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு பெரிய யானை அவரது வீட்டு

தமிழக மழை வெள்ள சேதம் எவ்வளவு? டெல்லி மேல்-சபையில் மத்திய மந்திரி தகவல்

Posted: 16 Dec 2015 07:33 PM PST

தமிழக வெள்ள சேதம் குறித்து டெல்லி மேல்-சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- தமிழக மழை வெள்ளம் குறித்து மாநில அரசு நடத்திய முதற்கட்ட ஆய்வின்

கெஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை: அன்னா ஹசாரே, உத்தவ் தாக்கரே கருத்து

Posted: 16 Dec 2015 07:09 PM PST

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் (தலைமை செயலகம்) உள்ள அவருடைய முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரின் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர். மத்திய அரசின் தூண்டுதலின்பேரில், தன்னுடைய அலுவலகத்தில் இந்த

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு வட்டியில்லா சிறப்பு கடன்: அருண்ஜெட்லியிடம் விக்கிரமராஜா வலியுறுத்தல்

Posted: 16 Dec 2015 07:04 PM PST

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு முத்ரா வங்கி மூலம் வட்டியில்லா சிறப்புக்கடன் திட்டத்தை அறிவிக்கவேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

கமல், மம்மூட்டி, மோகன்லாலை விட மிகச்சிறந்த நடிகர் மோடி: குஷ்பு காட்டம்

Posted: 16 Dec 2015 04:05 PM PST

கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு நாட்டின் சிறந்த நடிகர் நரேந்திர மோடி என்று கூறியுள்ளார். 'கேரள மாணவர் யூனியன்' சார்பில் கோழிக்கோட்டில் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு, "மோடி சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்.

அருணாசல பிரதேச அரசியல் நிலவரம்: ஜனாதிபதி தலையிட காங்கிரஸ் எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தல்

Posted: 16 Dec 2015 03:51 PM PST

அருணாசல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நபம் துகி, முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இந்த மாநில கவர்னரான ஜோதி பிரசாத், மாநில அரசையோ அல்லது முதல்-மந்திரியையோ கலந்து ஆலோசிக்காமல், சட்டசபை கூட்டத்தொடருக்கு தன்னிச்சையாக அறிவிப்பு

ரூ.24 ஆயிரம் கோடி செலவில் ராமேசுவரம்-இலங்கை இடையே கடல் பாலம்: பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Posted: 16 Dec 2015 03:28 PM PST

பாராளுமன்றத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து, பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. தெற்கு ஆசியாவுக்கும், தென்கிழக்கு

மேகி நூடுல்ஸ் விவகாரம்: மைசூரு ஆய்வகத்துக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 16 Dec 2015 02:53 PM PST

சுவிட்சர்லாந்து நாட்டின் நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் மோனோசோடியம் குளுட்டாமேட் என்ற வேதிபொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதாக கூறி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒரு சில மாநிலங்களில் தற்போது விலக்கி

கோவையில் ஏர் இந்தியா நிலம் விற்பனை: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 16 Dec 2015 02:49 PM PST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், கோவை பங்கஜா மில்ஸ் சாலையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த நிலத்தை

பருவநிலை மாநாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நன்றி

Posted: 16 Dec 2015 02:39 PM PST

பாரிஸ் பருவநிலை மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உதவியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது, பாரிசில் நடந்த

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 16 Dec 2015 01:55 PM PST

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு நேற்று அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வணிகச்சின்னம் இல்லாத பெட்ரோல் மீதான உற்பத்தி வரி 30 பைசாவும், டீசல் மீதான உற்பத்தி வரி 1 ரூபாய் 17 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வணிக சின்னம் இல்லாத

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி சனிக்கிழமை கோர்ட்டில் ஆஜர்: ஜாமீன் கேட்கும் திட்டம் இல்லை என தகவல்

Posted: 16 Dec 2015 12:43 PM PST

முன்னாள் பிரதமர் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை முறைகேடாக கைப்பற்றியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் 4 பேர் மீதுசுப்பிரமணியசாமி டெல்லி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நிலவில் இறங்கி ஆய்வு நடத்த 2017-ம் ஆண்டு இந்தியா அனுப்பும் சந்திரயான்-2 விண்கலம்: மத்திய மந்திரி தகவல்

Posted: 16 Dec 2015 11:42 AM PST

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய விண்வெளித்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்து கூறியதாவது:- நிலவில் இறங்கி ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான்-2 விண்கலம் 2017-ம் ஆண்டு ஏவப்படும். இந்த விண்கலம் அங்கு தரையிறங்கி நிலவில் வேறு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™