Tamil Star |
- சீஸ் ஆரோக்கியமா? பன்னீர் ஆரோக்கியமா?
- வெண்கடுகின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
- பூகோள பருவநிலை மாற்ற உடன்பாடு: கனடாவின் பங்களிப்பும் அளப்பரியது!
- ரொரன்ரோவின் எக்ளிங்டன் மேற்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பலர் காயம்!
| சீஸ் ஆரோக்கியமா? பன்னீர் ஆரோக்கியமா? Posted: 13 Dec 2015 08:01 PM PST
பால் வகையை சேர்ந்த இந்த இரண்டு உணவுகளையும் பிரட், தோசை என எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறோம், இவை ஆரோக்கியமானது என்றாலும் கூட ஒருவகையில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதுதான். சீஸ் சீஸ்ஸில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மேலும், விட்டமின் ஏ டி மற்றும் விட்டமின் பி12, பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 10 கிராம் சீஸில் 33 கிராம் கொழுப்பு உள்ளது. சீஸ் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக சீஸில் அதிக அளவில் உப்பும், ப்ரிசர்வேடிவ்ஸும் சேர்க்கப்படுகின்றன. சீஸை ஃப்ரீசரில் வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும். பாஸ்தா, பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளில் அதிக அளவு சீஸ் சேர்த்து செய்கிறார்கள். இது உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகமாக்கிவிடும்.
பன்னீர் 100 கிராம் பன்னீரில் 18 கிராம் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது, இந்த புரோட்டின் சத்தானது உடலில் உள்ள தசைகளின் வலிமைக்கு உதவுகிறது. பன்னீரும் பாலில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், பாலில் கிடைக்கும் அனைத்து சத்துக்களும் பன்னீரில் இருந்து கிடைக்கின்றன, மேலும் கால்சியம் சத்து அதிகளவில் நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும், புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது, அதுமட்டுமின்றி இதயநோய்களிலிலுந்தும் தடுக்கிறது. பன்னீரை எப்படி சமையலில் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். சிலர் எண்ணெயில் வறுத்த பனீரை உணவில் சேர்ப்பார்கள். இது ஆரோக்கியமல்ல. கீரையுடன் சேர்த்து செய்யும் பாலக் பன்னீர், எண்ணெய் இல்லாமல் செய்யும் பன்னீர் டிக்கா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். பன்னீர் கலந்த உணவுகளையும் அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல், வாரம் இரு முறை என்று அளவோடு உட்கொள்ளலாம். The post சீஸ் ஆரோக்கியமா? பன்னீர் ஆரோக்கியமா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெண்கடுகின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா? Posted: 13 Dec 2015 07:58 PM PST சமையலுக்கு பயன்படுத்தும் கருப்பு கடுகை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அறிந்திருப்போம். ஆனால், வெண்கடுகை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடுகைப்போலவே இதிலும் ஏராளமான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளன. வெண்கடுகை சாம்பிராணி போடுவது போன்று புகைக்க செய்து வீடு முழுவதும் பரவசெய்தால் நோய்கிருமிகள் அழிந்துவிடும். வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். வெண்கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, […] The post வெண்கடுகின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பூகோள பருவநிலை மாற்ற உடன்பாடு: கனடாவின் பங்களிப்பும் அளப்பரியது! Posted: 13 Dec 2015 07:46 PM PST
அந்த மாநாட்டில் பங்களித்து பணியாற்றி வரும் கனடாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் கத்தரீன் மக்கெனா(Catherine McKenna) கனடாவின் பங்களிப்பும் பாரிய அளவில் உள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.இந்த உடன்பாட்டினை ஏற்படுத்துவதில் கனடாவும் ஒரு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளமை குறித்து தாம் மிகவும் பெருமை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் இது குறித்து விளக்கமளிக்கையில், பூகோள பருவநிலை மாற்றத்தினை தடுக்கும் வகையில் 195 நாடுகள் இணைந்து இந்த மிக முக்கிய இணக்கப்பாட்டினை எட்டியுள்ள இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். ஏற்படுத்தப்பட்ட இந்த உடன்பாட்டினால் உலக வெப்பமயமாதலை பெரிதும் கட்டுப்படுத்த முடிவதுடன், சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் ஒரு மைல் கல்லாக அது அமைகிறது. இந்த அனைத்துலக இணக்கப்பாட்டின் மூலம், சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் காபன் வாயுக்களின் வெளியேற்றம் முதன் முறையாக கட்டுப்படுத்தப்படவுள்ளதுடன், தொழில்மய ரீதியில் ஏற்படுத்தப்படும் வெப்பமும் இரண்டு பாகை செல்சியசினுள் மட்டுப்படுத்தப்படும். அத்துடன் மனிதர்களின் நடவடிக்கைகளால் விளையும் இந்த சுற்றுச்சூழல மாசு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம், மரங்கள், மண், சமுத்திரங்கள் என்பன மீண்டும் 2050ஆம் ஆண்டிலிருந்து 2100ஆம் ஆண்டுக்குள் இயற்கையான நிலைக்கு மாற்றமடையும் என அறிவியலாளர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்த இலக்கினை எட்டுவதற்கு, சுற்றுச் சூழலை பாதிக்கும் மசகு எண்ணெய், நிலக்கரி போன்ற்றின் பாவனைகளை கணிசமான அளவில் கட்டுப்படுத்த வேண்டும். என கனேடிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். The post பூகோள பருவநிலை மாற்ற உடன்பாடு: கனடாவின் பங்களிப்பும் அளப்பரியது! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோவின் எக்ளிங்டன் மேற்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பலர் காயம்! Posted: 13 Dec 2015 07:38 PM PST
சம்பவ இடத்தில் ஒருவரும், அருகில் உள்ள Venn Crescent பகுதியில் மற்றொருவருமாக இரண்டு ஆண்கள் தமது கால்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாக சம்பவ இடத்திற்கு விரைந்திருந்த ரொரன்ரோ காவல்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். காயமடைந்திருந்த இருவரும் அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இருவரும் மோசமான காயங்களுக்கு ஆளான போதிலும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் சிறிய காயங்களுக்கான இன்னுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவ அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதேவேளை அந்த கட்டிடத்தில் வளைகாப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும், அந்த நேரத்திலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றிருந்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.அத்துடன் சம்பவ இடத்திலிருந்து இரண்டு கறுப்பு இன ஆண்கள், கறுப்பு நிற அங்கிகளுடன் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். The post ரொரன்ரோவின் எக்ளிங்டன் மேற்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பலர் காயம்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இன்றைய நவீன உலகின் மனிதர்கள் உட்கொள்ளும் உணவில் காய்கறிகள் இடம்பிடிக்கிறதோ இல்லையோ பன்னீர், சீஸ் ஆகிய இரண்டும் கட்டாயம் இருக்கும்.


பூகோள பருவநிலை மாற்றம் தொடர்பில் உலகத் தலைவர்கள் உடன்பாடு ஒன்றினை எட்டியுள்ள நிலையில், அந்த உடன்பாட்டுக்கான நடவடிக்கையில் கனடாவின் பங்களிப்பும் அளப்பரியது என தெரிவிக்கப்படுகிறது.
ரொரன்ரோவின் எக்ளிங்டன் மேற்கில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீல் வீதிக்கு அருகே, 2480, Eglinton Avenue Westஇல் அமைந்துள்ள அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் நேற்று இரவு எட்டு மணியளவில இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.