Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தெற்கே 2 நாட்களுக்கு கன மழை

Posted:

சென்னை: 'தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்; சென்னையில், கன மழைக்கு வாய்ப்பில்லை' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு நிலைவங்கக் கடலில், லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, லட்சத்தீவு மற்றும் குஜராத் கடற்பகுதி அருகே நிலை கொண்டுள்ளது.புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தென்மேற்கு வங்கக் கடலில், வட தமிழகம் மற்றும் இலங்கை அருகே, காற்றழுத்த ...

வதந்தியை நம்ப வேண்டாம்: வானிலை அறிவிப்பு வெளியிடாது 'நாசா'

Posted:

'மழை பெய்வது மற்றும் வானிலை குறித்த முன்னெச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை' என, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சென்னை அரசு கல்லுாரி பேராசிரியரின், இ - மெயில் கேள்விக்கு அந்த நிறுவனம், பதிலளித்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக பெய்த கன மழையால், சென்னை நகரம் துவம்சமாகி விட்டது. அதே நேரம், மழை மற்றும் புயல் குறித்து, பல வதந்திகள் வலம் வந்து, மக்களை மிரட்டி கொண்டிருக்கின்றன. இதில், சில தகவல்கள், சென்னை மக்களை கடுமையாக மிரட்டின. 'சென்னையில், நவ., 21, 22ல் மிகக் கன மழை பெய்யும்' என, அந்த தகவலில் சொல்லப்பட்டு இருந்தது. ...

குவிந்து கிடக்கும் குப்பை மலையால் சென்னைக்கு.. சோதனை!

Posted:

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரில் திரும்பிய பக்கமெல்லாம் ஒரு லட்சம் டன் அளவுக்கு மலை போல குப்பை குவிந்து கிடக்கிறது. மாநகராட்சியால் அதை விரைவாக அகற்ற முடியாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வட கிழக்கு பருவ மழையின் கோர தாண்டவத்தால் சென்னை நகரம் நிலை குலைந்து போயுள்ளது. அடையாறு கூவம் உள்ளிட்ட பெரிய நீர் வழித்தடங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குடியிருப்புகளில் புகுந்ததால் நகரம் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் குப்பை கூளமாக காட்சிஅளிக்கிறது.

தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் வெள்ளத்தால் அடித்து ...

வெள்ள நிவாரண கணக்கெடுப்பு: ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் சேர்க்க உத்தரவு

Posted:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரணத்திற்கான கணக்கெடுப்பு பணி துவங்கி உள்ளது. அரசியல் தலையீடு இன்றி, விவரம் சேகரிக்க, வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, பிற மாவட்டங்களில் இருந்து, வருவாய் துறையினர், 6,000 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.'குடிசை வீடுகளை இழந்தோருக்கு, 10 ஆயிரம் ரூபாய்; வெள்ளம் புகுந்து பாதித்த வீடுகளுக்கு, 5,000 ரூபாய்; 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு குறித்து, நேற்று காலை, கலெக்டர் அலுவலகங்களில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில் எடுக்கப்பட்ட ...

சத்யசாயி சேவா வெள்ள நிவாரணம்

Posted:

சென்னை,:சென்னை, கடலுார் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இரண்டு வாரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க, சத்யசாயி சேவா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.இது குறித்து அந்த அமைப்பின் துணைத் தலைவர் சுரேஷ் கூறியதாவது:சென்னை, கடலுார் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு, இரண்டு வார காலத்திற்கு தேவையான, அரிசி, பருப்பு, எண்ணெய், உடை, பாய் உள்ளிட்ட பொருட்கள் வழங்க உள்ளோம். இப்பொருட்களை தானமாக வழங்க முன்வருபவர்கள், நாடு முழுவதும் உள்ள, சத்யசாயி நிறுவன கிளைகளில் வழங்கலாம். எங்களிடம் நேரடியாக நிவாரணப் பொருட்கள் வழங்க ...

சூரத் பாடத்தை தமிழகம் புறக்கணித்ததால் பாதிப்பு!

Posted:

'குஜராத் மாநிலம், சூரத் நகரில், 2006ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை, தமிழக அரசு கவனத்தில் கொண்டிருந்தால், சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தவிர்த்து இருக்கலாம்' என, நகரமைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அறிவியல், தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளதாக சொல்லும் நம்மால், இந்த பேரிடரை தவிர்த்து இருக்க முடியாதா என்பதே, பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் எழும் கேள்வியாக ...

வெள்ளத்தில் தத்தளிக்கும் தொழிற்சாலைகள் ரூ.20,000 கோடி 'அவுட்!'

Posted:

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கன மழையால் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுார், விழுப்புரம் மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நவம்பரில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து, மீள முடியாமல் தொழிற்சாலைகள் தவித்த நிலையில், டிச., 1ல் பெய்த பேய் மழையில், ...

கட்டுமான நிறுவனங்கள் உதவலாம் தண்ணீரில் நின்ற வீடுகளுக்கு 'முதலுதவி' மிகவும் அவசியம்!

Posted:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஏராளமான அமைப்புகளால், உணவு, உடை வழங்கப் பட்டு வரும் நிலையில், வெள்ள நீர் தேங்கியதால் சேறும், சகதியான வீட்டை சுத்தம் செய்ய, பெரிய அளவில் உதவி தேவைப்படுகிறது. 'கட்டுமான நிறுவனங்கள் இவர்களுக்கு உதவ முன் வர வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்து, முகாம்களில் இருந்த மக்கள், தங்கள் வீடுகளுக்கு செல்ல துவங்கி உள்ளனர். தொடர்ந்து, மூன்று நாட்கள் வரை தேங்கிய தண்ணீர் வடிந்த போதிலும், வீடுகள், சேறும், சகதியுமாகவே உள்ளன; மின் சாதனங்களும், குடிநீர், கழிவு நீர் குழாய் ...

அரசு குடியிருப்புகள் ஆய்வு செய்ய முடிவு

Posted:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள, வீட்டுவசதி மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.தொடர் மழை, வெள்ளத்தால், சென்னை கட்டடங்கள் பல, வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளன. 'தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளின் உறுதி தன்மை குறித்து, அதன் உரிமையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்' என, கட்டட அமைப்பியல் வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அரசு துறையான, வீட்டுவசதி வாரியம் சார்பில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை பகுதிகளில், வாடகை குடியிருப்புகள் உள்ளன. இதே பகுதிகளில், குடிசை மாற்று வாரிய ...

வீடுகளை சீரமைக்க ரூ.100 கோடி கடன்!

Posted:

சென்னை : 'தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க, சிறப்பு கடன் வழங்குவதற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என, தேசிய வீட்டுவசதி வங்கி நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் கல்யாணராமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, தேசிய வீட்டு வசதி வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க, வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் வாயிலாக கடன் வழங்க, தமிழகத்துக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து, வங்கி நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் கல்யாணராமன் கூறியதாவது: மழை, ...

காஞ்சி மாவட்டத்தில் நிவாரணம் பெற பொய் புகார்கள்

Posted:

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயற்கையாக இறப்பவர்களை, மழை காரணமாக இறந்ததாக கூறி, நிவாரணம் பெற, சிலர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து பெய்துவரும், வடகிழக்கு பருவமழை காரணமாக, காஞ்சி மாவட்டத்தில் இதுவரை, 128 பேர் இறந்தது தெரிய வந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்றைய(டிச.,8) கணக்கெடுப்பின்படி, இதுவரை 128 பேர், மழையின் காரணமாக, பல்வேறு வகையில் இறந்துள்ளார்கள். இதுமட்டுமல்லாமல், மத்தியக்குழு வருகை தந்த, கடந்த மாதம் 25ம் தேதி வரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,087 கோடி ரூபாய் அளவிற்கு, அரசு சொத்துக்கள் சேதமடைந்து உள்ளன. அதை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™