Tamil News | Online Tamil News |
- தென் மாவட்டங்களை நோக்கி மழை
- தூர் வாரவில்லை: வீரியமானது வெள்ளம்
- நிவாரணத்தில் பாரபட்சம்: மக்கள் கடும் அதிருப்தி
- தூர்வாருவது எப்படி: தெரிந்து கொள்வாரா அமைச்சர்?
- காப்பீடு ஆவணம் இன்றி இழப்பீடு
- செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை
- வரலாறு காணாத மழை - வெள்ளம்இயற்கை கற்று தந்த முதல் பாடம்!
- தென் சென்னை மிதக்க இது தான் காரணம் 13 ஆண்டுகளில் நீர்நிலைகள் கபளீகரம்
- சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த மழைக்கு தயார்
- குடிசை இழந்திருந்தால் ரூ.10,000; பாதிப்புக்கு ரூ.5,000: எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்தவர்கள் கடும் கோபம்
- 25 லட்சம் வாகனங்கள் பாதிப்பு
| Posted: சென்னை: 'வங்க கடலின் தென் மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தை நோக்கி நகருவதால், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, இம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:குமரி கடலில் மையம் கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது; இதனால், லட்சத் தீவுப் பகுதியில் மழை பெய்யும்.அதேபோல் நேற்று முன்தினம், வங்க கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான, காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தை நோக்கி நகருவதால், தென் மாவட்டங்களில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும்.தமிழக கடலோர பகுதிகளில், ஒரு சில ... |
| தூர் வாரவில்லை: வீரியமானது வெள்ளம் Posted: அடையாறு மற்றும் கூவம் ஆறுகள் துார்வாரப்படாததால், 40 சதவீத கொள்ளளவு குறைந்து, வெள்ளப் பெருக்கின் வீரியம் அதிகரித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் திறந்து விடப்பட்ட ஏரி நீர், அந்த ஆறுகளின் கொள்ளளவை மீறியதால், கரையைத் தாண்டி, ஊருக்குள் புகுந்து நாசப்படுத்திவிட்டது. இதற்கான காரணங்களை, கடலியல், புவியியல், நீர் ஆதாரம் மற்றும் நீர் மேலாண்மை அதிகாரிகள், இது போல் நடக்கலாம் என எண்ணாது, இப்போது, ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில், கூவம், அடையாறு ஆறுகள், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் மற்றும் புழல் ஏரிகள், சிறிய நீர்த் ... |
| நிவாரணத்தில் பாரபட்சம்: மக்கள் கடும் அதிருப்தி Posted: கடலுார்:மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலுார் மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி, மாவட்ட நிர்வாகம் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கடலுார் நகராட்சி, மூன்றாவது வார்டு குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற, அப்பகுதி கவுன்சிலர், நகராட்சி நிர்வாகத்திடம், ஜே.சி.பி., இயந்திரம் கேட்டார். அவர், தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால், இயந்திரத்தை வழங்காமல் காலம் கடத்தினர். ஆவேசமடைந்த மக்களும், கவுன்சிலரும் நேற்று காலை, நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பின், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாலை ... |
| தூர்வாருவது எப்படி: தெரிந்து கொள்வாரா அமைச்சர்? Posted: அடையாறு, கூவம் ஆறுகள் கடலில் சேரும் முகத்துவாரத்தில் உள்ள, மணல் திட்டுகளை, வெடிபொருட்கள் மூலம் அகற்றலாம் என, கடற்படையில் பணிபுரிந்த நிபுணர் தெரிவித்துள்ளார். இனியாவது, அதை பொதுப்பணி துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிந்து கொண்டு செயல்படுத்தினால், வெள்ள சேதத்தை தடுக்க முடியும்.கனமழையால், சென்னையில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி விட்டன. பலத்த மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து, முழு கொள்ளளவை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் உபரி நீர், மறுகாலாக ... |
| Posted: மழையில் காப்பீட்டு ஆவணங்களை இழந்திருந்தாலும், உடனே இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், நவ., மாதம் முதல் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில், வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் வீடு, வாகனம், தொழில் நிறுவனங்களில், தண்ணீர் புகுந்து, பல கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலிசிதாரர்கள் இழப்பீடு கோரி, இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல வசதிகளை துவக்கி உள்ளன. இதுகுறித்து, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:வௌ்ளத்தில் ... |
| செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை Posted: சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு தொடர்பாக, டிச., 1ல் நடந்த நிகழ்வுகள் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்பட்டால், சென்னை மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள உண்மை தெரிய வரும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, ஒரே சமயத்தில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு, 900 கன அடியில் இருந்து, 29 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டதாலேயே மணப்பாக்கம் முதல் கோட்டூர்புரம் வரையிலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கவும், முன் எப்போதும் இல்லாத வகையில் விமான நிலையம் முடங்கவும் காரணம் என்று ... |
| வரலாறு காணாத மழை - வெள்ளம்இயற்கை கற்று தந்த முதல் பாடம்! Posted: 'சென்னையில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய கனமழை தான், உலக வரலாற்றில் பருவநிலை மாற்றம் கற்றுத் தந்த முதல் பாடம். இனி வரும் ஆண்டுகளில், குறிப்பாக, 2040ம் ஆண்டுக்குள், இதைவிட மோசமான பேரிடர் சம்பவங்கள் வரும்' என, விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.அண்ணா பல்கலை பருவநிலை ஆராய்ச்சித் துறையின் முன்னாள் இயக்குனரான பேராசிரியர் ராமச்சந்திரன் கூறியதாவது:இந்த பேரிடரை தவிர்க்கவும் முடியாது; தடுக்கவும் முடியாது. இனி வரும் ஆண்டுகளில், இது போன்ற நிகழ்வுகள் தொடரும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளில் இதுவே முதல் நிகழ்வு. சர்வதேச அளவில், நம் கடலோர ... |
| தென் சென்னை மிதக்க இது தான் காரணம் 13 ஆண்டுகளில் நீர்நிலைகள் கபளீகரம் Posted: சென்னை நகரம் முன் எப்போதும் இல்லாத வகையில், வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கு திட்டமிடாத வளர்ச்சி தான் காரணம் என்றாலும், நீர்நிலைகளையும், விலைமதிப்பில்லா, சதுப்பு நிலங்களையும், கண்மூடித்தனமாக, 'கான்கிரீட்' காடுகளாக மாற்ற, அரசு உடந்தையாக இருந்ததே காரணம் என்பது, மீண்டும் உறுதியாகியுள்ளது.சோழிங்கநல்லுார் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் முளைத்திருக்கும், ஐ.டி., கட்டடங்களுக்காக, நிலப் பயன்பாடு மாற்றம் பெரும் அளவில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், பழைய மகாபலிபுரம் சாலையே, பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும் ... |
| சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த மழைக்கு தயார் Posted: மழை தொடரும் என்பதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், இரண்டு டி.எம்.சி., தண்ணீர் தேக்கும் அளவுக்கு, காலியாக விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் மூலம், சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு, 11 டி.எம்.சி., மழையால் நீர்வரத்து அதிகரித்ததால், நவ., 17 முதல், இந்த ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றம் துவங்கியது. ஒவ்வொரு ஏரியிலும், அதன் மொத்த உயரத்தில், இரண்டு அடி விட்டு, தண்ணீர் தேக்க அனுமதி உள்ளது. இருப்பினும், ஏரிகளின் பாதுகாப்பு கருதி, அதற்கு முன்பாகவே, ... |
| Posted: வெள்ளத்தில் குடிசை இழந்திருந்தால், 10 ஆயிரம் ரூபாய்; பாதிப்புக்கு, 5,000 ரூபாய் என, அரசு தரப்பில் நிவாரண உதவி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடு, பொருள், உடைமை, உயிர் என, எல்லாவற்றையும் இழந்து, நடுத்தெருவிற்கு வந்தவர்கள், 'இவ்வளவுதான் நிவாரணத் தொகையா' என, கடும் கோபமடைந்து உள்ளனர்.கொட்டித் தீர்த்த கோர மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்கள், அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, அகதிகளாக சாலைகளிலும், உறவினர் வீடுகளிலும், அரசு முகாம்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். அடுத்த வேளை சோற்றுக்கு ... |
| Posted: 'தமிழகத்தில், மழை, வெள்ளம் பாதித்த, சென்னை, கடலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 25 லட்சம் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன; இதனால், 10 ஆயிரம் கோடி ரூபாய் வாகன உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது' என, போக்குவரத்து துறை அதிகாரிகள், அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 08,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |