Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி

Posted: 07 Dec 2015 10:03 AM PST

சென்னை வாசிகளை வதைத்த வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி சிதைந்து சின்னா பின்னமாகிப் போன வாழக்கையை நினைத்து மக்கள் வடிக்கும் கண்ணீர் மட்டும் கரை புரண்டு ஓடி கொண்டிருக்கிறது. சென்னைக்கு உதவுங்கள் என்ற கோஷம் நியூயார்க் நகர வீதிகளில் கூட எதிரொலிக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கரங்கள் நீளுகிறது. இந்த துயரத்தில் இருந்து விரைவிலேயே ஒவ்வொரு வரும் மீண்டாக வேண்டும். ஒன்றிணைந்தால் அது நம்மால் நிச்சயம் முடியும். மழை தந்த பாதிப்பை விட அடுத்து வரப்போகும் ...

ரிலாக்ஸ் ப்ளீஸ் - தொடர் பதிவு

Posted: 07 Dec 2015 09:59 AM PST


-

இடுக்கண் வருங்கால் ….

Posted: 07 Dec 2015 09:56 AM PST

இடுக்கண் வருங்கால் …. 1) வெள்ள உதவி அறிவிப்புச் செய்யும் F.M. ரேடியோக்காரர் - சொல்லுங்கமா! உங்களுக்கு என்ன குறை ? வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் – என் பொண்ணுக்கு 35 வயசு ஆகுதுங்க ; கல்யாணம் ஆகமாட்டேங்குது ! எதினாச்சும் செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும் ! F.M. காரர் - ?! ……?! 2) F.M. ரேடியோவில் – வெள்ள நிவாரணத்திற்கு அருணாசலம் என்பவரிடம் 300 சப்பாத்தி இருக்காம் ; தொடர்பு கொள்ளலாம் ! கேட்டவர் - சப்பாத்தி இருக்கு ; குருமா இருக்கா? 3) வெள்ள உதவி செய்யும் F.M. ரேடியோவிடம் ஒருவர் – ஐயா ...

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Posted: 07 Dec 2015 09:50 AM PST

இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.  தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், அதிக பட்சமாக, வடகிழக்கு பருவமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ள பாதிப்பை தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என, அரசு நிர்வாகம் மீது புகார் எழுகிறது.ஆனால், 'யாரும் ...

சத்தியம் வாங்கி நிவாரணம் வழங்கும் அ.தி.மு.க.வினர் அராஜகம்!

Posted: 07 Dec 2015 09:14 AM PST

'அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும்...!'- சத்தியம் வாங்கி நிவாரணம் வழங்கும் அ.தி.மு.க.வினர் அராஜகம்! கடலூர்: 'அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும்!' என்று சத்தியம் வாங்கிக் கொண்டு  அ.தி.மு.க.வினர் அராஜக போக்குடன் நிவாரணம் வழங்குவதால், கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் ஆல்பேட்டையில், சேட்டு நகர், சேகர் நகர், முத்தையா நகர் போன்ற பல பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்,  ...

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Posted: 07 Dec 2015 09:08 AM PST

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்... குலைநடுங்க வைக்கும் பி.பி.சி. By OneIndia Tamil, 07 Dec 2015 11:07 AM (7 Dec) லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன்கூடியகனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.. சென்னையில் 3 நாட்கள் பேய்மழை தொடரும்.. மழையளவு 50 செ.மீ. இருக்கும் ...

என்னைப்பற்றி

Posted: 07 Dec 2015 08:54 AM PST

பெயர்:பிரபு

சொந்த ஊர்: தஞ்சாவூர்

ஆண்/பெண்: ஆண்

ஈகரையை அறிந்த விதம்: வலைத்தளம்

பொழுதுபோக்கு : கற்றுகொண்டே இருப்பது .........

தொழில்: அடிப்படையில் நான் ஒரு பேராசிரியர் . ஜோதிடம் மீது ஈடுபாடு கொண்டவன் . பகுதிநேரமாக ஜோதிடம் பார்க்கிறேன் . மேலும் இயற்கை அங்காடி ஒன்றையும் நிர்வாகித்து வருகிறேன் .

மேலும் என்னைப் பற்றி: பிறந்ததிலிருந்து என்னைப்பற்றி என்னிடமே தேடிக்கொண்டே இருக்கிறேன் .............

படித்ததில் பிடித்தது :) --கண்டறாவி ......கலிகாலம்!

Posted: 07 Dec 2015 08:52 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

காலத்தாற் செய்த உதவி!

Posted: 07 Dec 2015 08:19 AM PST

கடைவீதியில் நடந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த நிலத்தரகர், ''என்ன சார்... உங்க வீட்ல குடியிருக்கற மனோகரன், கடன் தொல்லையால சொந்த வீட்ட வித்துட்டான் போலிருக்கே... உங்க வாடகை பாக்கியெல்லாம் கொடுத்துட்டானா...'' என்றார். இதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. என் கண்முன் உழைப்பால் உயர்ந்தவன். பேராசையால் இன்று சரிந்து விட்டானே என்று வேதனையாக இருந்தது. ''வீட்ட வித்துட்டு, எங்க போகப் போறானாம்,'' என்றேன். ''சென்னையில யாரோ சொந்தக்காரங்க இருக்காங்களாம்... அவங்ககிட்ட சம்பளத்துக்கு வேலைக்கு போகப் ...

மக்களின் கண்ணீர் மழை

Posted: 07 Dec 2015 08:05 AM PST

வருணபகவான்  வருத்ததால் வாரி வாரி  பொழிந்தான்!!  பொழிந்த  இடத்தில் உள்ள  த(க)ண்ணீர்  போக்கிடமில்லாமல்  பொட்டி பொட்டியாய் இருந்த புறாக்கூடுக்குள்  புகுந்தது!!  ஆம் புறாக்கூடுதான்  ஏழைகளின்  இருப்பிடம்!   அடுக்குமாடி குடியிருப்பும்  அடைமழைக்கு  தப்பவில்லை!  இருந்ததும்  போயிற்று!!  உணவும்  இல்லை!  உறங்க  இடமும் இல்லை!!  உடுக்க  உடையும்  இல்லை!!  உற்ற  உறவுகளும்  கையறு  நிலையில்  காட்சி பொருளாய்  கஷ்டத்தில்  இருக்க!  என்ன தான்  செய்வது  இறைவா??  கைக்குழந்தையுடன்  கண்களில்  கண்ணீரோடு  கையேந்தி  நிற்க ...

விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி

Posted: 07 Dec 2015 07:50 AM PST

ஆந்திர பிரதேசத்தில் கடை ஒன்றில் மதுபான குடித்தவர்களில் 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானர்கள். மேலும் 15 பேர் கடும் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா மாவட்டத்தில் கிரிஷ்ணாலங்கா என்ற பகுதியில் உள்ள மதுபான கடை ஒன்றில் இன்று காலை வேலைக்கு செல்வதற்கு முன்பாக 20-க்கும் கூடுதலான தொழிலாளர்கள் மதுபானம் குடித்துள்ளனர். அதன்பின் வெளியே வந்த அவர்கள் வாந்தி எடுத்தப்படி மயங்கியும் விழுந்தனர். இது பற்றிய தகவலை அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ...

கணவர் தன் தாயின் சமையலைப் புகழ்கிறாரா? பொறாமையில் பொசுங்க வேண்டாம், மருமகளே!

Posted: 07 Dec 2015 07:37 AM PST

கணவரின் உடன் பிறந்தவர்களையும் பெற்றோரையும் உறவுப்பெயர்களிட்டு உரிமையுடன் அழையுங்கள். அன்பைக் கொட்டுங்கள், பதிலுக்குக் அன்புமழை பூமழையாகக் கொட்டும். கணவர் தன் தாயின் சமையலைப் புகழ்கிறாரா? பொறாமையில் பொசுங்க வேண்டாம், காதிலே புகை வர விட வேண்டாம். அப்படியா, நான் அவங்ககிட்டே கத்துக்கிறேன், அதே போலச் செய்ய முயற்சி பண்ணறேன். இதில் தவறில்லையே. அதே போல் மாமியார் செய்யும் சிறு நல்ல செயல்களையும் வாயாரவும் மனதாரவும் புகழுங்கள், நாத்தனாரின் ஆடை, அணிகலனைப் பாராட்டுங்கள்.  இன்முகத்துடன் பேசிப் பழகுங்கள்.உங்களுக்கு ...

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Posted: 07 Dec 2015 07:34 AM PST



திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது

நன்றி-முகநூல்

ஆன்மிக சிந்தனை

Posted: 07 Dec 2015 05:47 AM PST

7-12-2015 ஆன்மிக சிந்தனை முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு, அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும் --விவேகானந்தர் நன்றி-தினத்தந்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (143)

Posted: 07 Dec 2015 05:45 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

யார் இவர்? - 'சர் ஜேம்ஸ் சிம்சன்.'

Posted: 07 Dec 2015 03:32 AM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்

Posted: 07 Dec 2015 03:18 AM PST

வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள் பொதுவாக வீட்டில் தரை, பாத்திரங்கள், துணிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டே இருக்கும். ஆனால் இவை எல்லாம் விட கிருமிகள் அதிகம் வாழும் சில விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை பல வீடுகளில் சுத்தப்படுத்துவதே கிடையாது என்பதுதான் அச்சம் தறும் செய்தியாகும். முதலில், கால் மிதியடிகள் : ஒரு கால் மிதியடியை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்கிறீர்கள் என்று கேட்டால், பல இல்லத்தரசிகள் யோசித்துத்தான் பதில் சொல்வார்கள். ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 07 Dec 2015 02:34 AM PST

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

இப்படியே சென்றுவிடுமா உலகம்...

Posted: 07 Dec 2015 01:14 AM PST

இன்றைய சூழ்நிலையில் வரலாறு காணாத மழையும்.. புயல்களும்.. எரிமலை சீற்றங்களும்..ஆழி பேரலைகளும்..விலை ஏற்றமும்.. ஆங்காங்கே போர் செய்திகளும்..மனித மனதில் ஒரு வித அச்சத்தை விதைதிருக்கின்றது என்பது உண்மைதான்.. ஒரு சந்தோசமே இல்லாத இந்த உலகத்தில் பொய்யானதை பேசிக்கொண்டு..வராத சிரிப்பை வரவழைத்துகொண்டு..மனதில் ஒரு சந்தோசமில்லாமல் கேள்விகுறியாகி போயிருக்கும் மனித வாழ்க்கை..இப்படிப்பட்ட நேரத்திலும் பிறரை ஏமாற்றவேண்டும்.. தவறான ஒழுக்கமற்ற சிந்தனைகளுடன் சுற்றி திரியும் மனிதர்களை கண்டால்..இன்னும் மனிதனுக்கு ...

சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல்

Posted: 07 Dec 2015 01:02 AM PST

- - ஒரு குறிப்பிட்ட பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடையும்போது சூறாவளி என அழைக்கப்படுகிறது. – பொதுவாக சூறாவளியானது இடி, மழை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு, வெள்ளம் ஆகிய நிகழ்வு களோடு தொடர்புடையது. – 1840ம் ஆண்டு ஹென்றி பிடிங்க்டன் என்பவர்தான் முதன்முதலில் சூறாவளி (சைக்ளோன்) என்ற பெயரைப் பயன்படுத்தினார். இது 'சுழன்று அடிக்கும்' எனப் பொருள்படும் 'கைக்லோன்' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. – சூறாவளி உருவாக கடல்நீரின் வெப்பநிலை 26 டிகிரி ...

திருவண்ணாமலை கிரிவலம்.

Posted: 07 Dec 2015 12:50 AM PST

அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் ஐம்பூதத் தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என சண்டை மூண்ட பொழுது, யார் தன்னுடைய அடியையும், முடியையும் காணுகிறார்களோ அவர்களே பெரியவர் என்று சிவபெருமான் நீண்ட நெருப்புத் தண்டாக காட்சியளித்தார். இவ்வடிவம் லிங்கோத்பவர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வடிவின் ...

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை

Posted: 07 Dec 2015 12:45 AM PST

கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் ...

என் இசை இதையும்,கேட்டுப் பாருங்கள்

Posted: 07 Dec 2015 12:42 AM PST

இந்த இசையை கேட்டுப்பாருங்கள். பாடும் குரலுக்காக கீபோரெட் இசைத்தது கிரிகாசனே! எப்படி இருக்கிறது??? http://www.mediafire.com/listen/7w209txprf89g9d/roja+extra+2.mp3 http://mfi.re/listen/xvc1ka94qseejkm/Rajavvin.mp3 http://www.mediafire.com/listen/yofe5w5601nw4eh/Roja.mp3

அவர்கள் காத்திருக்கின்றனர்!

Posted: 06 Dec 2015 11:26 PM PST

''கோபத்த கொறச்சுக்கங்க. உங்கள கவனிச்சுக்க இனி, நா இருக்க மாட்டேன்; அதனால, இனிமே நீங்க தான் எல்லா விதத்திலேயும் அனுசரிச்சு போகணும். உங்களுக்கு பசி பொறுக்காது; கைக்குழந்தைய பாத்துக்குற மாதிரி, இத்தனை வருஷமா உங்கள கவனிச்சுக்கிட்டேன். இப்ப, இப்படி நிராதரவா உங்கள விட்டுட்டுப் போகப் போறேன்,'' என,  நீர் கோத்த கண்களுடன், திக்கித் திணறி கூறிய, சர்மாவின் மனைவி, அடுத்த சில வினாடிகளில் கண்களை மூடி விட்டாள். வீடு நிறைய உறவினர்கள் இருந்ததால், மனைவியின் மறைவு சர்மாவை அவ்வளவாக பாதிக்கவில்லை. வந்திருந்த ...

கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம்

Posted: 06 Dec 2015 11:24 PM PST

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், நிவாரண பொருட்களை வழங்கவும், ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். - கடலுார் மாவட்டத்தில், டிசம்பரில், சராசரி மழையளவு, 158.7 மி.மீ., ஆகும். ஆனால், கடந்த, 1 முதல், 6ம் தேதி வரை, 634 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று இரவு மட்டும், சராசரியாக 104 மி.மீ., மழை பெய்துள்ளது; அதிகபட்சமாக, கீழ்ச்செருவாயில், 160 மி.மீ., பதிவாகி உள்ளது. கன மழை காரணமாக, ...

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Posted: 06 Dec 2015 10:58 PM PST

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில் - ஐதராபாத் : எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும் திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார். - -----------

பாரீஸ் காதல் பூட்டு பாலத்தில் பூட்டுக்கள் பூட்ட தடை

Posted: 06 Dec 2015 10:55 PM PST

- பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் அமைந்துள்ள காதல் பூட்டு பாலம் நெப்போலியன் காலத்தில் கட்டப்பட்டது. இந்த வரலாற்று புகழ் பெற்ற பாலத்தின் தடுப்பு சுவரில் காதலர்கள் வந்து தங்கள் காதலின் அடையாளமாக ஒரு பூட்டை பூட்டி விட்டு அதன் சாவியை ஆற்றில் எறிந்து விட்டு செல்வர். அந்த பாலத்தில் தற்போது ஒரு மில்லியன் வரையிலான பூட்டுக்கள் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட இந்த பூட்டுக்களின் எடை சுமார் 45 கிலோ எடை கொண்டதாக இருந்தது என பாரீஸ் மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பூட்டுக்கள் பூட்டப்பட்டிருந்த பாலத்தின் ...

தெரிஞ்சுக்கோங்க!..---இறைச்சி தின்னும் மீன்

Posted: 06 Dec 2015 10:53 PM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

விநாடி முள் யாருக்காக?

Posted: 06 Dec 2015 10:45 PM PST

கி.ஆ.பெ.விசுவநாதம் ஒரு சமயம் நிகழ்த்திய உரை இது… ''கடிகாரத்தில் மூன்று முட்கள் உள்ளன. இதில் ஒரு முள் மணியைக் காட்டுகிறது. இரண்டாவது முள், நிமிடத்தைக் காட்டுகிறது. மூன்றாவது முள் விநாடியைக் காட்டுகிறது. மணியைக் காட்டும் முள் இந்தியர்களுக்காக ஓடுகிறது. நிமிடத்தைக் காட்டுகின்ற முள் ஆங்கிலேயர்களுக்காக ஓடுகிறது. விநாடியைக் காட்டுகின்ற முள் யாருக்காக ஓடுகிறது என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டுக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்தது. ...

பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை

Posted: 06 Dec 2015 10:44 PM PST

- வதோதரா: விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இந்தியர்கள் பலரும் பணக்காரர்களாக இருக்கையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், தேசிய துப்பாக்கிச்சுடும் வீராங்கனை ஒருவர், தெரு ஓரத்தில் நூடுல்ஸ் விற்று தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருவது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா குப்தா(21), துப்பாக்கி சுடும் விளையாட்டில் தேசிய அளவில் பட்டம் வென்றவர். கடந்த 2013ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த புஷ்பாவுக்கு, தேசிய மாணவர் படையில் சேர்ந்த பின்னர், தனக்குள் துப்பாக்கிச் ...

தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Posted: 06 Dec 2015 10:40 PM PST

சென்னை : - - தங்கம் விலை இன்று(நவ.28ம் தேதி) சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,388-க்கும் சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.19,104-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.150 குறைந்து 25,540-க்கும் விற்பனையாகிறது. -- வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.36.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.34,090-க்கும் விற்பனையாகிறது. - ----------------

என்ன எழுதினார்?

Posted: 06 Dec 2015 10:35 PM PST

உலகப் புகழ்பெற்ற கவிஞர் வால்ட் விட்மனின் மகள் சென்னைக்கு வந்திருந்தார். அவரும் கவிஞர்தான். அவரைச் சந்திக்க விரும்பினார் கவிஞர் கண்ணதாசன். அந்தப் பெண்மணி தங்கியிருந்த கன்னிமாரா ஹோட்டலுக்கு வந்தார் கவிஞர். வாசலில் நின்றிருந்த உதவியாளர், ''உங்கள் விசிட்டிங் கார்டு இருந்தால் கொடுங்கள், அனுமதி பெற்று வருகிறேன்'' என்றார். கண்ணதாசனுக்கு விசிட்டிங் கார்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை. எனவே அவர் ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதிக் கொடுத்தார். உதவியாளர் உள்ளே சென்று வால்ட் விட்மனின் ...

ஒருமுறைதான்!

Posted: 06 Dec 2015 10:33 PM PST

ஜெர்மன் அரசர் ஃபிரடெரிக் ஒருமுறை கோச் வண்டியில் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக வண்டி கவிழ்ந்து கீழே விழுந்து விட்டார். அவருக்கு அடி எதுவும் படவில்லை. என்றாலும் ஆத்திர மடைந்த ஃபிரடெரிக், சவுக்கை எடுத்து கோச் வண்டி ஓட்டியவரை அடிக்க முயன்றார். அதற்கு அந்த நபர், ''பிரபு! தவறு என்னுடையதுதான். இருந்தாலும் எவ்வளவோ வீரராகிய தாங்களும் பல போரில் தோற்கவில்லையா? எனது இருபது வருட பணிக்காலத்தில் நான் இந்த ஒருமுறைதானே தவறு செய்துவிட்டேன்'' என்றான் பணிவாக! மன்னர் ஃபிரடெரிக்கின் ...

முற்றிய கதிர்;...(கவிதை)

Posted: 06 Dec 2015 10:29 PM PST

-

-
வயல் உறங்கும் நெல்மணி.
தலை வணங்கும் மணமகள்;
வம்சம் உறங்கும் விதை.

–

– சா. ராஜாராம்,

==================

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 06 Dec 2015 10:27 PM PST

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

பூட்டு …

Posted: 06 Dec 2015 10:27 PM PST

- – வெறுப்பின் அடையாளமாய் சாத்தப்பட கதவுக்குள் திறந்தே கிடக்கின்றன கண்களும் காதுகளும்… – சுவற்றைத் தின்றுவிடும் எண்ணங்களின் சுழற்சியில் சீனப்பெருஞ்சுவர் செய்கிறோம் பக்கத்து வீடுகளுக்கான இடைவெளியில் – வெளியற்ற பயணங்கள் கொண்டதான மாபெரும் கால் தடங்களை பதிக்கிறது வாங்காத வண்டிகளும் – ஜன்னல் புகும் காற்று கூட மறுவீட்டு ஜன்னலைத் தாண்டாவண்ணம் வடிவமைக்கிறோம் – மிகப் பெரிய ரகசியமாய் மாயச்சுவர்களில் மறைந்து கொண்டே நடக்கிறோம் கடக்கிறோம்… – மரநிழல்கூட மிகப் பெரிய வன்முறையை சுமப்பதாக ...

நிலத்தின் கருணைதான் நெல்மணி!

Posted: 06 Dec 2015 10:25 PM PST

- உயர்ந்த மணியெதுவென ஒருபோட்டி நடந்தது. மின்னி மினுக்கி நவமணிகள் நடந்து வந்தன. – நெல்மணி வந்தது நெளிந்தும் தலைகுனிந்தும்! அரங்கம் அதிர்ந்தது ஆரவாரித்து! ஒவ்வொரு நெல்மணியிலும் இறைவனாய் ஒளிவீசுகிறான் உழவன்! – காற்றுப் போகும் திசையில் கழுத்தை வளைத்து ஏதோ கதைபேசிச் சலசலக்கும் கதிர்மணியின் அழகை வரப்பில் நின்று பார்த்தால் போதும்; மனசுக்கு வண்ணங்கள் பூசும்! – வள்ளலார் செல்வந்தர்களிடம் சென்று யாசித்தது பொன்மணியை அல்ல நெல்மணியைத்தான்! – சொல்மணி வேண்டுமா? நெல்மணி ...

விவசாயிகளின் கண்மணி…

Posted: 06 Dec 2015 10:23 PM PST

- நெல்மணி நீ என்றும் விவசாயிகளின் கண்மணி எம்மை மகிழவைக்கும் நல்மணி – நீ விளைந்து செழிக்காத மண்ணில் நிம்மதி என்பதேது – வரப்புகளுக்கிடையே நீ வனப்பாக எழுந்து வரவில்லையெனில் வயிற்றுக்குச் சரியான உணவில்லை அள்ளித்திங்க அருமையான சோறில்லை – அளவில்லாப் பேச்சினால் என்ன பயன் எதெதையோ தின்னு ஏப்பம் விட்டும் சோறு கிடைக்காத சோம்பேறிப்பயல் காரு ஓட்டினால் என்ன கழுதையை ஓட்டினால்தான் என்ன களிப்பாக செழிப்பாக வாழ இயலாதவன் களைத்து உடல் இளைத்துத் தன் கணக்கைத் தானே தீர்த்துக்கொண்டு காணாமல் போய்விடுவானே ...

வசீகர வள்ளி!

Posted: 06 Dec 2015 10:21 PM PST

- நடனக் கலைஞர் அலர்மேல் வள்ளிக்கு, இந்த ஆண்டுக்கான 'நாட்டிய கலா ஆச்சார்யா விருது' வழங்கி சிறப்பிக்கவுள்ளது சென்னை மியூசிக் அகாதமி, பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி என்று விருதுகளால் நிறைந்திருக்கும் அவரது மணிமகுடத்தில் இது மற்றுமொரு ரத்தினக் கல். அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரதத்தில் தனி முத்திரை பதித்து ஜொலிக்கும் வசீகர வள்ளி, எப்போதும் பி.ஸி. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகள், பரத நாட்டிய வகுப்புகள் என்று நிரம்பி வழிகிறது அவரது டைரி குறிப்புகள். – மேகம் கறுத்து மழை வரக் காத்திருந்த ...

சாக்லேட், 'பேஷன்' திருவிழா!

Posted: 06 Dec 2015 10:15 PM PST

பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸ் நகரில், சமீபத்தில் வித்தியாசமான, 'பேஷன் ஷோ' நடந்தது. இப்போட்டியில் பங்கேற்ற அழகிகள், வழக்கமான உடைகளுக்கு பதிலாக, முற்றிலும் சாக்லேட்டால் வடிவமைக்கப்பட்ட உடைகளை அணிந்து அசத்தினர். விதம் விதமான சுவைகளால் தயாரான சாக்லேட்டுகளை, அழகான உடைகளாக வடிவமைத்திருந்தனர், உடை அலங்கார நிபுணர்கள். போட்டி முடிந்ததும், அழகிகள் அணிந்திருந்த சாக்லேட் உடைகள், பல லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. தினமலர் 

2 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை: புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை

Posted: 06 Dec 2015 10:07 PM PST


-
தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
ஏற்கெனவே சில நாள்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை
கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டுள்ளது.

இந்த இரு நிலைகளால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில்
2 நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™