Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அப்பாடா... சனிக்கிழமை முதல் மழை இருக்காது

Posted:

ஒரு ரவுண்டு கொலை வெறி மழை, இப்போது தான் முடிந்துள்ளது. அதற்குள், 'மறுபடியுமா...!' என, அசர வைக்கும் வகையில், 'சென்னையில் மேலும், 250 செ.மீ., மழை கொட்டப் போகுது!' என, 'வாட்ஸ் ஆப்' வதந்தி, பீதியை கிளப்பி வருகிறது.

'அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கப் போவதில்லை' என, 'அக்யூவெதர்' இணையதளத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் கிரிஸ்டினா பிடிநோவ்ஸ்கி, நிம்மதியளிக்கும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்காள விரிகுடாவின் வட பகுதியில் இருந்து உயர்ந்த காற்றழுத்த மண்டலம், இந்தியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. ...

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Posted:

'இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், அதிக பட்சமாக, வடகிழக்கு பருவமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ள பாதிப்பை தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என, அரசு நிர்வாகம் மீது புகார் எழுகிறது.ஆனால், 'யாரும் எதிர்பார்க்காத வகையில், மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, ...

ரூ.100 கோடி உணவுப்பொருட்கள் வீண்

Posted:

'வானத்து சுனாமி'யாக விடாது கொட்டிய கன மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள், வீணாகி விட்டன. மழை விடும் சமயம், கடைகளை திறந்த வியாபாரிகள், உள்ளே இருக்கும் வீணான உணவு பொருட்களை, விரக்தியில், வீதியில் கொட்டினர்.

வணிகர்கள் கண்ணீர்:
தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, கடுமையாக பெய்து வருகிறது. ஏரிகள் நிரம்பியதால், உபரி நீர் திறக்கப்பட்டன; இதனால், சென்னை நகரம், கடல் போல மாறியது. வெள்ளத்தில், ஏராளமான வணிக நிறுவன கட்டடங்களும் மூழ்கின.
இரண்டு நாட்கள் மழை விட்டு, சற்று வெள்ளம் வடிந்த ...

7 மாவட்டங்களின் வடிகால் கடலூர்

Posted:

கடலுார்:பூகோளரீதியாக, கடலுார் மாவட்டம், மேற்கே உள்ள, ஏழு மாவட்டங்களின் வடிகாலாக அமைந்துள்ளது. இதனால், கடலுார் மாவட்டத்தில் மழை பெய்யாவிட்டாலும், மேற்கே அமைந்துள்ள மாவட்டங்களில் மழை பெய்தால், கடலுார் வெள்ளக்காடாக மாறி விடுவது வழக்கம்.

இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி தீர்ப்பதால், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மாவட்டத்தில் உள்ள, 228 ஏரிகளில், 199 ஏரிகள் நிரம்பி வழிந்தோடுகின்றன.நேற்று முன்தினம் கொட்டிய கனமழையால், அனைத்து நீர் நிலைகளில் இருந்தும், ஒரு லட்சத்து, 83 ஆயிரத்து, 436 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ...

மத்திய அரசை புறக்கணிக்கிறதா தமிழக அரசு

Posted:

விடாது கொட்டிய மழையால் சின்னாபின்னமான சென்னைக்கு உதவ மத்திய அரசுத் துறைகள்

தயாராக இருந்தும், தமிழக அரசு ஏற்க மறுப்பதாகக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
மத்திய உள்துறையில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், 'சென்னையை இடர்பாடுகளில் இருந்து மீட்டெடுக்க மத்திய உள்துறை அமைச்சகம், பிற துறைகள்
தயாராக உள்ளன. ஆனால் தமிழக அரசு உதவியைக் கேட்டு பெற தயாராக இல்லை' என வேதனையோடு கூறியுள்ளார்.
டில்லியில் உள்ள 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் நிபுணர் குழுவை அனுப்ப தயாரான
மத்திய சுகாதார அமைச்சகம், தமிழக ...

இருள் சூழ்ந்த வீடுகளில் அகல் விளக்கு: உறவுகளுடன் பேச வைத்த மின் தடை

Posted:

கனமழை காரணமாக, மின் தடை ஏற்பட்ட வீடுகளில், கார்த்திகை தீபத்திற்கு வாங்கப்பட்ட அகல் விளக்குள் தான் கை கொடுக்கின்றன.தமிழகத்தில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, வீடுகளில் விளக்கு ஏற்றுவது வழக்கம். நவ., 25ல், கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது. இதற்காக பலர், அகல் விளக்குகள் வாங்கினர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், நவ., 30 முதல், கனமழை பெய்து வருகிறது.சென்னை மற்றும் புறநகரில் உள்ள துணை மின் நிலையங்களில் தண்ணீர் புகுந்தது. டிச., 1 முதல், பல இடங்களில், மின் வினியோகம் தடைபட்டது. வெள்ள நீர், கடைகளுக்குள் புகுந்ததால், மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு ...

குடும்பம், குடும்பமாக ரயில் மூலம் வெளியேறும் மக்கள்

Posted:

சென்னையை தொடர்ந்து மழை மிரட்டி வரும் நிலையில், நேற்று இயக்கப்பட்ட சில ரயில்களில், சொந்த ஊருக்கு செல்ல பயணிகள் குடும்பம், குடும்பமாக சென்றனர். இதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கட்டுமான பணியாளர் முதல், ஐ.டி., ஊழியர் வரை, சென்னையில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். படிப்பு, வேலை, வியாபாரம் நிமித்தமாக, சென்னையில் வசித்து வந்தவர்கள், பாதுகாப்பு கருதி சொந்த ஊருக்கு பஸ்களில் செல்கின்றனர்.டிச., 2 முதல், 5 வரை, நான்கு நாட்களுக்கு, ரயில் சேவை முழுமையாக முடங்கியது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் ...

வங்கியில் தனி நபர் கடன் கிடைக்குமா? உடைமை இழந்தோர் வேண்டுகோள்

Posted:

'வெள்ளத்தில் உடைமைகளை இழந்து, புதிய வாழ்க்கையை துவங்க உள்ளவர்களுக்கு, வங்கிகள், தனிநபர் கடனை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மழை வெள்ளத்தில், உயிர் இழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு, மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அளிக்கின்றன. ஆனால், வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்கள், புதிதாக வாழ்க்கையை துவங்க வேண்டி உள்ளது. அவர்களின் திருப்பி செலுத்தும் தகுதிக்கு ஏற்ப, ஒரு லட்சம் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை, 5 முதல், 7 சதவீத வட்டியில், குறுகிய கால கடனை வங்கிகள் வழங்க வேண்டும்.சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த, தனியார் நிறுவன அதிகாரி எழில் ...

100 ஆண்டு இல்லாத மழையால் சென்னை, புறநகரில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு

Posted:

தமிழகத்தில், 100 ஆண்டுகளுக்கு இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்ததால், சென்னை மற்றும் புறநகரில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், எப்போது வீடு திரும்புவோம் என, ஏக்கத்தில் காத்திருக்கின்றனர். மீண்டும் மழை பெய்வதால், நிவாரணப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், 14 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கி உள்ளனர்.* சென்னை மாநகராட்சியின் கணக்கு படி, வீடுகள் என்ற கணக்கில், 11 லட்சம் கட்டடங்களுக்கு வரி ...

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு நிறுவனங்கள் தாராள உதவி

Posted:

புதுடில்லி:சென்னையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, பல நிறுவனங்கள் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன.இது குறித்து, மத்திய உணவு மற்றும் பதப்படுத்துதல் துறை அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர் பாதல் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மக்களுக்கு, பால், பதப்படுத்தப்பட்ட உணவு, பாட்டில் குடிநீர் போன்றவற்றை தடையின்றி கிடைக்கச் செய்யும்படி, உணவு நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதை ஏற்று, 'நெஸ்லே இந்தியா' நிறுவனம், 10 டன் 'மேகி' நுாடுல்ஸ், 5,000 லிட்டர் பாக்கெட் பால், 50 ஆயிரம் காபி பாக்கெட்டுகளை அனுப்பியுள்ளது.அத்துடன், 25 முதல், 30 ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™