Tamil News | Online Tamil News |
- அடையாறு வழிகளை அடைத்தால் வாழ முடியாது!
- கோட்டூர்புரத்தில் விடிய விடிய கேட்ட அபயக்குரல்
- 'ஆக்சிஜன்' கிடைக்காமல் 18 நோயாளிகள் இறந்த கொடூரம்: சென்னையில் தனியார் மருத்துவமனைகள் மூடல்
- அவசரமாக பஸ்சில் ஏறிய பயணிகள்: மீண்டும் வழக்கமான பாதையில் பஸ்கள்
- அத்தியாவசிய பொருட்களை கப்பலில் கொண்டு வரலாம்!
- 'எங்களை மீட்கயாரும் வரவில்லை': புறநகரில் தொடரும் சோகம்!
- வரத்து குறைவு: பறக்குது காய்கறி விலை: 4 நாட்கள் வரை இதே நிலை தான்
- பாதிப்பு பகுதிகளை பார்வையிட வந்த மந்திரிகள் விரட்டியடிப்பு: முதல்வர் தொகுதியில் மக்கள் கடும் கோபம்: அடியில் இருந்து தப்ப ஹெலிகாப்டர் தான் ஒரே வழி
- சென்னைக்கு வர திணறிய மீட்பு கப்பல்: மேலும் இரண்டு கப்பல்கள் வருகின்றன
- வெள்ளம் சூழ்ந்த கட்டடங்களில் பொதுமக்களை வெளியேற்றுங்கள்!
- தமிழகத்தை மிரட்டி வரும் கனமழை டிச., 8ல் நிற்குமா?
- ராணுவ, தேசிய மீட்பு படையினர் கூடுதல் எண்ணிக்கையில் வருகை
- ஆவின், தனியார் பாலுக்கு கடும் தட்டுப்பாடு: போக்குவரத்து சீரானால் தான் சிக்கல் தீரும்
| அடையாறு வழிகளை அடைத்தால் வாழ முடியாது! Posted: சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமின்றி, குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள, 50க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளின், உபரி நீரை கடலுக்கு கடத்தி செல்லும் பெரும்பணியை அடையாறு ஆறு செய்கிறது. இந்த ஆற்றை ஆக்கிரமித்தாலோ, முறையாக பராமரிக்காமல் விட்டாலோ, சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்குவதை யாராலும் தடுக்க முடியாது.வடகிழக்கு பருவமழை, சென்னை நகருக்கு பெரும் பாடத்தை கற்று தந்துள்ளது. சென்னையின் மையப்பகுதியில் கூவம், அடையாறு ஆகிய இரண்டு ஆறுகள் மட்டுமே ஓடுகின்றன. விரிவாக்க பகுதியில் கொற்றலை ஆறு பயணிக்கிறது. இந்த ஆறுகளை தவிர்த்து, செயற்கையாக ... |
| கோட்டூர்புரத்தில் விடிய விடிய கேட்ட அபயக்குரல் Posted: உயிரை கையில் பிடித்துக் கொண்டு, இரவு முழுக்க அபயக்குரல் எழுப்பிய, கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகளை, எந்த எதிர்பார்ப்பும் இன்றி, படகுகளுடன் களம் இறங்கி, மீனவர்கள் மீட்டு உள்ளனர். துணிச்சலாக உள்ளே சென்றது; குழந்தைகள், முதியோர் என பலரையும் மீட்டது; வர மறுத்தவர்களுக்கு கவுன்சிலிங் தந்து அழைத்து வந்தது; கர்ப்பிணிகளை காப்பாற்றியது என, இவர்கள் செய்த பணியை, எந்த அரசு நிவாரணமும் ஈடு செய்ய முடியாது.டிச., 2 இரவு, 5,000 வீடுகள் உள்ள கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், இரண்டாவது தளம் வரை, மழைநீர் புகுந்ததால், உயிரை காப்பாற்றி ... |
| 'ஆக்சிஜன்' கிடைக்காமல் 18 நோயாளிகள் இறந்த கொடூரம்: சென்னையில் தனியார் மருத்துவமனைகள் மூடல் Posted: சென்னை:சென்னையில், இரண்டு தனியார் மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்ததால் அவை மூடப்பட்டன. அங்கு சிகிச்சை பெற்றோர் பிற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரு மருத்துவமனையில், 'ஆக்சிஜன்' எனப்படும் பிராண வாயு கிடைக்காமல், 18 நோயாளிகள் இறந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வட கிழக்கு பருவ மழையின் தாக்கம், சென்னையை தீவாக மாற்றிவிட்டது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இப்பிரச்னையில் இருந்து, மருத்துவமனைகளும் தப்ப முடியவில்லை.சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, 'மியாட்' மருத்துவமனை, அடையாறு ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. ... |
| அவசரமாக பஸ்சில் ஏறிய பயணிகள்: மீண்டும் வழக்கமான பாதையில் பஸ்கள் Posted: சென்னையில் இருந்து, நேற்று, தென் மாவட்டங்களுக்கு வழக்கமான பாதையில், பஸ்கள் இயக்கப்பட்டன. 'தப்பித்தால் போதும்' என்ற மன நிலையில், பயணிகள் அவசர, அவசரமாக பஸ்சில் ஏறிச் சென்றனர்.கன மழையால், இரண்டு நாட்களாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளான, ஜி.எஸ்.டி., சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது.சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள், பூந்தமல்லி, வாலாஜா, திண்டிவனம் வழியாக சென்றன. படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னையில் வசித்தவர்கள், ... |
| அத்தியாவசிய பொருட்களை கப்பலில் கொண்டு வரலாம்! Posted: அத்தியாவசிய பொருட்களைகப்பலில் கொண்டு வரலாம்!சென்னையில், சாலை மற்றும் ரயில் வழியாக சரக்கு போக்குவரத்து குன்றியுள்ள நிலை உள்ளதால், மளிகை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மீண்டும் இப்பொருட்கள் எப்போது இயல்பாக கிடைக்கும் என்பது தெரியாததால், மக்களும் தாங்கள் வழக்கமாக வாங்கும் அளவை விட, அதிகமாக பொருட்களை வாங்கி வருகின்றனர். பலசரக்கு கடைகளில் பொருட்கள் வேகமாக காலியாகி வருவதால், சாதாரண உணவு பொருட்களின் விலை கண்டபடி உயர்ந்துள்ளதாகவும், பல பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ... |
| 'எங்களை மீட்கயாரும் வரவில்லை': புறநகரில் தொடரும் சோகம்! Posted: சென்னை:'வெள்ளத்தில் சிக்கிய எங்களை மீட்க யாரும் வரவில்லை' என, வடசென்னை பகுதிவாசிகள் வேதனையுடன் தெரிவித்தனர். ஓட்டேரி நல்லா கால்வாய், கேப்டன் காட்டான் கால்வாயில் வெள்ளம் இன்னும் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓட்டேரி - கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி சாலையில் வெள்ளம் சீறிப்பாய்ந்தது.ஓட்டேரி, புளியந்தோப்பில் குடியிருப்புகளை ஐந்து அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்தது.வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மாடிகளில் பகுதிவாசிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். மூன்று நாட்களாகியும் மீட்க யாரும் வரவில்லை என, அவர்கள் கூறியுள்ளனர். இந்த பகுதியில் ... |
| வரத்து குறைவு: பறக்குது காய்கறி விலை: 4 நாட்கள் வரை இதே நிலை தான் Posted: வரத்து குறைவாக உள்ளதால், பெரும்பாலான காய்கறிகளின் விலை, 1 கிலோ, 100 ரூபாய் வரை சென்றுள்ளது. 10 ரூபாய் விலை கொண்ட சுரைக்காய், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 'மழை விட்டால், நான்கு நாட்களில் இயல்பு நிலைக்கு வரும்' என, வியாபாரிகள் கூறினர்.இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவையும் மழை விட்டு வைக்காததால், தமிழகத்திற்கான காய்கறி வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 300 லாரிகளில் காய்கறி வரும். ஒரு வாரமாக, 100 லாரிகள் கூட வரவில்லை. நேற்று, 110 லோடுகளில் காய்கறி வந்தது. இரண்டு நாட்களாக ... |
| Posted: சென்னை:தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான சென்னை ஆர்.கே.நகரில், நேற்று, வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட வந்த அமைச்சர்களை, கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் விரட்டி அடித்தனர். அமைச்சர்கள் முன்னிலையில், ஆளுங்கட்சியின் மாவட்ட செயலருக்கு அடி விழுந்ததால், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் செய்வதறியாது தவித்தனர்.புழல் ஏரி திறந்து விடப்பட்டதை அடுத்து, வட சென்னையில் வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இப்பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள், வீடுகளை விட்டு அகதிகள் போல் வெளியேறி ... |
| சென்னைக்கு வர திணறிய மீட்பு கப்பல்: மேலும் இரண்டு கப்பல்கள் வருகின்றன Posted: மீட்பு பணியில் ஈடுபட வந்த கடற்படை கப்பல், மோசமான வானிலை காரணமாக, பல மணி நேர போராட்டத்துக்குப் பின், சென்னைக்குள் நுழைந்தது. இதுதவிர, மேலும், இரண்டு கடலோர காவல் படை கப்பல்கள், இன்று சென்னை வருகின்றன.கடற்படையின் ஐ.என்.எஸ்., ஐராவத் கப்பல், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து, நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது. அது, சென்னைக்கு, நேற்று காலை வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்கக் கடலின் மோசமான வானிலை காரணமாக அதன் வேகம் தடைபட்டது. அதனால், பிற்பகல், 3:00 மணிக்கு வரும் என அறிவிப்பு வெளியானது; அப்போதும் சென்னயை நெருங்க முடியவில்லை.அதன்பின், இரவு, 7:30 ... |
| வெள்ளம் சூழ்ந்த கட்டடங்களில் பொதுமக்களை வெளியேற்றுங்கள்! Posted: சென்னையில், கட்டடங்களை சூழ்ந்த வெள்ளம் வடியாத நிலையில், பழைய கட்டடங்களில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றா விட்டால், பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக, கட்டுமான வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.கட்டுமான வல்லுனர்கள் கூறியதாவது:கான்கிரீட் சுவரை ஒட்டி, 3 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்க கூடாது. அப்படி தேங்கும் தண்ணீரும், 24 மணி நேரத்துக்குள் வடிய வேண்டும். இல்லாவிடில், அந்த சுவர் அரிக்கப்பட்டு கட்டடம் இடிந்து விழும் நிலை ஏற்படும்.சென்னையில், பல இடங்களில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் வெள்ள நீர் தேங்க துவங்கியது. தற்போதைய ... |
| தமிழகத்தை மிரட்டி வரும் கனமழை டிச., 8ல் நிற்குமா? Posted: சென்னை: 'வங்க கடலில் தொடரும் காற்றழுத்த தாழ்வு நிலையால், விழுப்புரம், கடலுார், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். கன்னியகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.இந்த எச்சரிக்கை 7ம் தேதி வரை மட்டும் விடப்பட்டுள்ளதால், 8ம் தேதிக்கு பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது: வங்க கடலின் தென்மேற்கே, இலங்கை அருகே, நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தொடர்ந்து அப்பகுதியிலேயே நீடிப்பதால், தமிழகம் மற்றும் ... |
| ராணுவ, தேசிய மீட்பு படையினர் கூடுதல் எண்ணிக்கையில் வருகை Posted: பேரிடரில் சிக்கி தவிக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட, கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு படையினர், நேற்று வந்தனர். ராணுவ வீரர்களும் கூடுதல் எண்ணிக்கையில் வெளியூர்களில் இருந்து, இன்று வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெள்ளம் பாதித்த பகுதிகளில், அரக்கோணம், ஆந்திரா, ஒடிசா மற்றும் டில்லி யில் இருந்து வந்த, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 800 பேர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அதிகாலை, 400 பேர் வந்தனர். இவர்கள், 30 குழுக்களாக பிரிந்து, மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, விமானப் படை, கடலோர ... |
| ஆவின், தனியார் பாலுக்கு கடும் தட்டுப்பாடு: போக்குவரத்து சீரானால் தான் சிக்கல் தீரும் Posted: சோழிங்கநல்லுார் ஆவின் பால் பண்ணை செயல்பாட்டை துவக்கினாலும், சென்னையில் ஆவின் பால் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; மாதாந்திர அட்டைதாரர்களுக்குகூட கிடைக்காததால் மக்கள் திண்டாடினர்.சென்னையின் கனமழையால், அம்பத்துார் ஆவின் பால் பண்ணையில் தண்ணீர் புகுந்து, நான்கு நாட்களாக உற்பத்தி முடங்கியுள்ளது. ஊழியர் வராததால் முடங்கிய, சோழிங்கநல்லுார் ஆவின் பால் பண்ணையில், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, உற்பத்தி துவங்கியுள்ளது. வழக்கமாக, 11.5 லட்சம் லிட்டர் பால் சென்னையில் வினியோகம் செய்யப்படும்.நேற்று முன்தினம், 6 லட்சம் லிட்டர்; நேற்று, 8 லட்சம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 05,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |