Tamil News | Online Tamil News |
- இன்று முதல் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள்!
- பெரிய வீட்டில் வசிக்கும் சோனியா
- பசுவுடன் 'செல்பி:' அதற்கு பெயர் 'கவ்பி!'
- பார்லி.,யை முடக்க காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை
- ஆட்சி மாற்றம் ஏற்படும்: கருணாநிதி
- ஜெ., எடுத்த 8ம் வகுப்பு பாடம்: எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம்
- முடிவு வந்தது வடகிழக்கு பருவ மழை 2005 ஆண்டை விட குறைவு தானாம்!
- பொதுக்குழுவில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினர்..உற்சாகம்
- முடிந்தது 2015 - பிறந்தது 2016! நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
- புத்தாண்டு கொண்டாட்டத்தி்ல் விபத்து: துபாயில் ஓட்டலில் பயங்கர தீ
- கூடுதல் வரியாக இதுவரை வசூலித்த தொகை ரூ.3 லட்சம் கோடி பயன்படுத்தப்படாமல் வைத்திருப்பது அம்பலம்
| இன்று முதல் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள்! Posted: 31 Dec 2015 06:54 AM PST புதுடில்லி: இன்று, 2016, ஜனவரி 1 - ஆங்கில புத்தாண்டு. இந்த புத்தாண்டில் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள், இதோ:சலுகைகள்இன்று முதல், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொது துறைகளில் மத்திய அரசு பணியில், 'குரூப் - சி' மற்றும் 'குரூப் - டி' பிரிவு ஊழியர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு கிடையாது ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான படுக்கை வசதி நான்காக அதிகரிக்கப்படுகிறது. இதனால், தம்பதியாக பயணம் செய்வோர், ஒரே பெட்டியில் பயணம் செய்ய முடியும் மொபைல் போனில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நடுவில், 'கால் டிராப்' ஆனால், வாடிக்கையாளருக்கு ... |
| பெரிய வீட்டில் வசிக்கும் சோனியா Posted: 31 Dec 2015 07:00 AM PST புதுடில்லி:பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களைக் காட்டிலும், பெரிய வீட்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா வசிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் ஆர்வலர் ஒருவர், டில்லி நகர்புற அபிவிருத்தி துறையிடம் பெற்ற தகவலின் முக்கிய அம்சங்களாவன :ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 'ராஷ்டிரபதி பவன்' என்ற பிரம்மாண்ட மாளிகையில் வசிக்கிறார். அவர் மட்டுமின்றி, இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர், அதில் தான் வசிப்பர். இந்தியா மட்டுமின்றி, உலகிலேயே, ஒரு நாட்டின் தலைவர் வசிக்கும் வீடு என்ற வகையில் மிகப் ... |
| பசுவுடன் 'செல்பி:' அதற்கு பெயர் 'கவ்பி!' Posted: 31 Dec 2015 07:01 AM PST கோல்கட்டா: பசுக்களை பாதுகாக்கவும், பசு வதையை தடுக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கோல்கட்டாவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, 'பசுவுடன் செல்பி' எனப்படும், போட்டோ எடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அதற்கு, 'கவ்பி' என புதிய பெயரும் வைத்துள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நாட்டில், இப்போது, பசு வதை தடை, மாட்டிறைச்சி தடை, ஆகிய விவகாரங்கள் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பசு வதைக்கு தடைபா.ஜ., ஆட்சி நடக்கும், ஹரியானா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பசு ... |
| பார்லி.,யை முடக்க காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை Posted: 31 Dec 2015 07:29 AM PST நொய்டா, :''லோக்சபாவில் காங்கிரஸ் நடத்தி வரும் அமளியால், என்னால் அங்கு பேச முடியவில்லை; அதனால், ஜன சபையான இந்த பொதுக்கூட்ட மேடையில், காங்கிரசின் செயலை கண்டிக்கிறேன். 60 ஆண்டுகளாக ஆட்சியை அனுபவித்த காங்கிரஸ், எங்களை செயல்பட விடாமல் தடுக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.உத்தர பிரதேசத்தின் மீரட் நகரையும், டில்லியையும் இணைக் கும், 14 வழிச்சாலை திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின், பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: புத்தாண்டு தீர்மானம்நாளை (இன்று) புத்தாண்டு பிறக்கிறது; இதில், காங்கிரஸ் ஒரு தீர்மானத்தை எடுக்க ... |
| ஆட்சி மாற்றம் ஏற்படும்: கருணாநிதி Posted: 31 Dec 2015 07:48 AM PST சென்னை:ஆட்சி மாற்றம் காணும்' என ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது வாழ்த்து செய்தி:அ.தி.மு.க., அரசின் பால் விலை உயர்வால், மின் கட்டண உயர்வால், பஸ் கட்டண உயர்வால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, ஐந்தாண்டுகள் ஆகியும் விலைவாசியை குறைக்கவில்லை. தி.மு.க., ஆட்சி உருவாக்கிய மின் திட்டங்கள்தந்த மின்சாரம் அல்லாமல், ஒரு மெகாவாட் மின்சாரத்தைக் கூட உற்பத்தி செய்திடவில்லை.சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலச் சாலைத் திட்டம், அ.தி.மு.க., அரசால் முடக்கப்பட்டு, துறைமுக ... |
| ஜெ., எடுத்த 8ம் வகுப்பு பாடம்: எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் Posted: 31 Dec 2015 09:31 AM PST சென்னை:''செம்பரம்பாக்கம் ஏரியில், 75 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பு வைத்திருந்தாலும், நீர் திறப்பை, இரண்டு மணி நேரம் மட்டுமே தாமதப்படுத்தி இருக்க முடியும். இதுகுறித்து எதிர்க்கட்சியினருக்கு புரியவில்லை என்றால், 8ம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள, 'காலம் மற்றும் வேலை' குறித்த கணக்குகளை படித்து தெரிந்து கொள்ளலாம்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில், நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: நம்மை எதிர்ப்பவர்கள், அதிலும் குறிப்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், தங்களின் கற்பனைக்கு தோன்றிய பொய்களை ... |
| முடிவு வந்தது வடகிழக்கு பருவ மழை 2005 ஆண்டை விட குறைவு தானாம்! Posted: 31 Dec 2015 09:52 AM PST நடப்பு ஆண்டில், பெரும் வெள்ள சேதத்தை ஏற்படுத்திய, வடகிழக்கு பருவ மழை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 2005ஐ விட, நடப்பாண்டில், 26 சதவீத மழை குறைவாகவே பதிவாகி உள்ளது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் மறக்க முடியாத அளவுக்கு, வடகிழக்கு பருவ மழை அமைந்தது.தமிழகத்தில், ஆண்டுதோறும், அக்., 1 முதல் டிச., 31 வரை, வடகிழக்கு பருவ மழை காலம். இக்காலத்தில், சராசரியாக, 43 செ.மீ., மழை பெய்யும். நடப்பு ஆண்டில், அக்டோபர் இறுதி வாரம் வரை எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. அக்., 28ல் தான் பருவ மழை துவங்கியது. அப்போது முதல், டிச., 31வரை, தமிழகத்தின் சராசரியான, 43 செ.மீ., மழையை தாண்டி, 67 செ.மீ., ... |
| பொதுக்குழுவில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினர்..உற்சாகம் Posted: 31 Dec 2015 10:17 AM PST சென்னை:''இனிமேல் அ.தி.மு.க.,விற்கு வெற்றிதான்; என்றுமே வெற்றிதான்; இனி எந்தக் காலத்திலும் தோல்வி இல்லை,'' என அ.தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கையுடன் பேசியதால் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்தனர். அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதாவது: நான்கு மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளை செய்திருக்கிறோம். அனைத்து தரப்பு மக்களையும் ... |
| முடிந்தது 2015 - பிறந்தது 2016! நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் Posted: 31 Dec 2015 10:37 AM PST புதிய சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கையோடு பிறந்துவிட்டது புத்தாண்டு (2016) உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்,2015-ம் ஆண்டு நிறைவடைந்து 2016-ம் ஆண்டு துவங்கியது, முன்னதாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை ஆடல் பாடலுடன் அந்நகர மக்கள் வரவேற்றனர். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் வாண வெடி வெடித்து புத்தாண்டை இனிதே வரவேற்றனர். தைவான் தலைநகர் தைப்பே நகரில் உயரமான கட்டடம் ஒன்றில் வண்ண வாண வேடிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடினர். தாய்லாந்திலும் புத்தாண்டையொட்டி பட்டாசு ... |
| புத்தாண்டு கொண்டாட்டத்தி்ல் விபத்து: துபாயில் ஓட்டலில் பயங்கர தீ Posted: 31 Dec 2015 12:25 PM PST துபாய்: துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்த நட்சத்திர ஹோட்டலில் பட்டாசு வெடித்ததில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் கட்டடம் முழுவதும் எரிந்தது.துபாயில், உலகின் மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலிபா என்ற கட்டடம் உள்ளது இதன் அருகே டவுன்டவுன் என்ற நட்சத்திர சொகுசு ஹோட்டல் உள்ளது. புத்தாண்டையொட்டி இங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் 22-வது மாடி கட்டடத்தில் பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாடி கொண்டிருந்தனர் அப்போது பட்டாசு தீப்பொறி அங்கிருந்த உணவகத்தில் விழுந்ததில் தீப்பிடித்து எரிந்தது, தீ மளமளவென பரவி மற்ற மாடிகளில் பரவி ... |
| கூடுதல் வரியாக இதுவரை வசூலித்த தொகை ரூ.3 லட்சம் கோடி பயன்படுத்தப்படாமல் வைத்திருப்பது அம்பலம் Posted: 31 Dec 2015 12:50 PM PST புதுடில்லி,: மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக, கூடுதல் வரி என்ற பெயரில் வசூலிக்கும் தொகை, அத்தகைய திட்டங்களுக்கு செலவிடப்படாமல் உள்ளதை, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் கண்டுபிடித்துள்ளது. அந்த வகையில், '2002 - 03 முதல், 2014 - 15 வரையிலான, 13 நிதியாண்டுகளில், ஆறு திட்டங்களுக்காக விதிக்கப்பட்ட கூடுதல் வரியில் பெருந்தொகை, பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஒரு சில திட்டங்களுக்காக விதிக்கப்பட்ட கூடுதல் வரி, வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது' என, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், மேலும் உள்ள ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 01,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |