Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Posted: 31 Dec 2015 01:17 PM PST

புத்தாண்டு பிறப்பு: ஆளுநர் ரோசய்யாவின் வாழ்த்துச் செய்தி - உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது: வான வேடிக்கையுடன் கொண்டாட்டம் - - ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும், அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர். - -------------------------------------- - An estimated 1.6 million people gathered for New Year fireworks in Sydney. -

புத்தாண்டு கொண்டாட்டத்தி்ல் விபத்து: துபாயில் ஓட்டலில் பயங்கர தீ

Posted: 31 Dec 2015 01:13 PM PST

- துபாய்: துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்த நட்சத்திர ஹோட்டலில் பட்டாசு வெடித்ததில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் கட்டடம் முழுவதும் எரிந்தது. - துபாயில், உலகின் மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலிபா என்ற கட்டடம் உள்ளது இதன் அருகே டவுன்டவுன் என்ற நட்சத்திர சொகுசு ஹோட்டல் உள்ளது. புத்தாண்டையொட்டி இங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் 22-வது மாடி கட்டடத்தில் பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாடி கொண்டிருந்தனர் அப்போது பட்டாசு தீப்பொறி அங்கிருந்த உணவகத்தில் விழுந்ததில் ...

உதவி – ஒரு பக்க கதை

Posted: 31 Dec 2015 12:40 PM PST

சுந்தர் தன்னை நோக்கி நடந்து வருவதைப் பார்த்துவிட்டான் கணேஷ். 'ஐயோ, இவனா? அப்பப்போ ஆயிரம், ஐந்நூறுன்னு வாங்குவான். எதையும் திருப்பித் தரமாட்டான். பத்து வருஷமா தொல்லை இல்லாம இருந்தேன். இப்போ பார்த்தான்னா, அஞ்சாயிரம் கொடு, பத்தாயிரம் கொடுன்னு கேட்பான்' என மனதுக்குள் நினைத்தவன், சுந்தரைப் பார்க்காதது போல பைக்கைக் கிளப்பிக் கொண்டு வேகமாய் போனான் கணேஷ். – தன்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு கிளம்புவது நண்பன் கணேஷ்தான் என்பதை அடையாளம் கண்டுகொண்டான் சுந்தர்.'இவனைப் பார்த்து பத்து ...

வருஷப்பிறப்பு…! – ஒரு பக்க கதை

Posted: 31 Dec 2015 12:39 PM PST

- ''ஏங்க, நேரம் ஆச்சே! கிளினிக் போகலையா?'' – தன் கணவன் டாக்டர் செல்வமணியைக் கேட்டாள் அவள்.  செல்வமணி ஒரு சிறு நகரத்தில் மெடிக்கல் ஷாப்புக்குப் பக்கத்தில் கிளினிக் வைத்திருக்கிறார். சுற்றிலும் நிறைய கிராமங்கள் இருக்க, 'ராசியான டாக்டர்' என்ற பேரும் இருக்க, தினம் கும்பல் இருக்கும். ''இன்னிக்கு வருஷப் பிறப்பு. அதான் லீவு விட்டுடலாம்னு நினைக்கிறேன்!''''வருஷப் பிறப்பும் அதுவுமா போகாம இருக்கக்கூடாது. இன்னிக்கு போகலன்னா வருஷம் முழுக்க சரியா கேஸ் வராது, அதனால போயிட்டு வாங்க!''எதுவும் பதில் சொல்லாமல் ...

வேலன்:-இணைய வீடியோக்களை பதிவிறக்கி பார்மெட் மாற்றமும் செய்திட.

Posted: 31 Dec 2015 12:35 PM PST

இணைய  வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும். வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும்.வீடியோக்களை ரெக்கார்ட் செய்திடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 33 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் பதிவிறக்கம் செய்யவேண்டிய வீடியோவின் யுஆர்எல முகவரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.உங்களுக்கான வீடியோ பதிவிறக்கம் ஆவதை காணலாம். ஓரே நேரத்தில் பல வீடியோக்களை பதிவிறக்கம் செய்கையில் இதன் ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 31 Dec 2015 12:31 PM PST

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ................காக்காயும் ராணியின் வைர மாலையும் !

Posted: 31 Dec 2015 12:29 PM PST

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

கோவைப்பழ தத்துவம்...!!

Posted: 31 Dec 2015 12:19 PM PST

''இனிமேல் நீங்க தினமும் ஒரு வேளைதான் சாப்பிடணும்...'' - ''ஏன் டாக்டர்..?'' - ''எனக்கு உங்ககிட்ட இருந்து நிறைய ஃபீஸ் வர வேண்டி இருக்கே..!'' - - பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி. - -------------------------------------------------- - கோவைப் பழத்தை கோவையில வாங்கலாம். அதே பழத்தை மதுரையில வாங்கினா 'மதுரைப்பழம்'னோ, திருச்சியில வாங்கினா 'திருச்சிப்பழம்'னோ சொல்ல மாட்டாங்க. அங்கேயும் கோவைப்பழம்னுதான் சொல்லுவாங்க! - - ஜி.தாரணி, மதுரை. - ---------------------------------------------------- - ''அந்த ...

பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆடை என்ன?- பட்டியலுடன் பலகை வைத்தது கோயில் நிர்வாகம்

Posted: 31 Dec 2015 12:16 PM PST

- ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடு விவரம் கொண்ட பலகை | படம்: சி.வெங்கடாசலபதி. ----------------------------------------------------------------- ஜனவரி 1 முதல் பக்தர்கள் என்ன மாதிரியான உடையணிந்து கோயிலுக்கு வரலாம் என்ற பட்டியலடங்கிய பலகைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில் நிர்வாகங்களும் வைத்துள்ளன. இந்த வரிசையில் வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் ஆடை கட்டுப்பாடு குறித்து விளக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆடவர் பேண்ட், சட்டை, வேட்டி போன்ற ...

பழனி கோவிலில் நாளை முதல் பெண்கள் ஜீன்ஸ்–லெகின்ஸ் அணிந்து செல்ல தடை

Posted: 31 Dec 2015 12:14 PM PST

- பழனி, டிச.31– தமிழ்கடவுள் முருகபெருமானின் 3–வது படைவீடான பழனி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகம் காணப்படும். கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் லுங்கி, பெர்முடாஸ் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆண்கள், வேட்டி சட்டை, பைஜாமா மற்றும் பேண்ட் சட்டை அணிந்து வரலாம். தற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளிட்ட கோவில்களில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ...

மனைவியை மடக்க சில யோசனைகள்...

Posted: 31 Dec 2015 12:10 PM PST

மனைவியை மடக்க சில யோசனைகள்… – 1. மாமியார் விரதம் இருக்கும்போது, ''உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்பை வருத்திக்கறாங்க?''னு அக்கறையா கோபப்படணும் (கொஞ்சம் நடிங்க பாஸ்!) – 2. டி.வியில நகைக்கடை விளம்பரம் போகும்போது, ''அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு வாங்கணும்''னு அவுத்து விடணும். – 3. நண்பர்கள் போன் பண்ணி ட்ரீட்க்கு கூப்பிட்டாங்கன்னா, ''இல்லடா, ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோயிலுக்கு போறேன்… என்னால வர முடியாது!''னு அவங்க காதுல கேக்கற மாதிரி சத்தமா சொல்லணும். – 4. ''உங்க வீட்டுக்குப் ...

சாண்டில்யனின்- ஜலதீபம்

Posted: 31 Dec 2015 11:50 AM PST

சாண்டில்யனின்- ஜலதீபம் நண்பர்களே! சாண்டில்யனின் ஜலதீபம் என்ற நாவல் உங்களுக்காக: ஜலதீபம்- பாகம் ஒன்று: http://www.mediafire.com/?ua59fsw069mf4om#1 ஜலதீபம்-பாகம் இரண்டு: http://www.mediafire.com/?ua59fsw069mf4om#2 ஜலதீபம்-பாகம் மூன்று: http://www.mediafire.com/?sqlxmmsq4qnqn62#1 குறிப்பு: இந்த நாவல் இணையத்தில் இருந்து தேடி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது நன்றி-http://tamil-ebooks.webs.com

சென்றுவா 2015--- பெற்றதும் கற்றதும்

Posted: 31 Dec 2015 11:21 AM PST

புத்தாண்டு பிறக்க இன்னும் சிலமணித்துளிகளே உள்ளன பிறக்கப்போவது என்னமோ உறுதி பிறந்து போய் இறந்து போன இந்த ஆண்டு பதித்துப் போன பதிவுகள் இன்னமும் இறுக்கமாக ஒட்டிக்கொண்டுள்ளது , நேபாளத்தை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம் முதல் பாரீஸ் தாக்குதல் வரை இந்த ஆண்டு நிகழ்வுகள் அனைத்தும் மறந்துபோகும் இன்னம் சில நாட்களில் ஆயினும்இந்த ஆண்டு சென்னை சந்தித்த பெருவெள்ளத் துயரம் நீங்கா நினைவாக இருக்கும் இன்னமும் பல நாட்கள் சென்ற புத்தாண்டு பிறந்தபோது மீளாத வறட்சியில் இருந்தது ...

நானும் ஒரு பாடம்!

Posted: 31 Dec 2015 11:19 AM PST

தமிழில் தமிழரசியும்
ஆங்கிலத்தில் அனுசுயாவும்
கணிதத்தில் காவ்யாவும்
அறிவியலில் ஆனந்தியும்
சமூக அறிவியலில் சத்யாவும்
முதலிடம் பிடித்தனர்...
இவர்களைப் பார்த்து
அனைத்துப் பாடங்களிலும்
நான் ஃபெயில் ஆனதால்,
இன்று பள்ளிக்கூடத்துக்கே
பாடமானேன்!

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Posted: 31 Dec 2015 11:17 AM PST

- அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் குட்டிக்கதை கூறி ஸ்டாலினையும், திமுகவையும் முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். - சென்னை திருவான்மியூரில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசியபோது, ''சட்டமன்றத்துக்கான தேர்தல் நெருங்குவதால் திமுக பல பொய்களை கட்டவிழ்த்துவிடும். எனவே, அதிமுக அமைச்சர்கள் திமுக-வின் பொய்களை தோலுரித்துக் காட்ட மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது போன்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் பொய்களுக்கு அமைச்சர்கள் ...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

Posted: 31 Dec 2015 11:16 AM PST

ஜனவரியின் ஜனனத்தில் மார்கழியின் மங்களத்தில்-கூடவே தை திங்களின் தகதகப்பில் புதுவருட புன்னகையில் பொங்கலின் பூரிப்பில் இருக்கும் எங்களுக்கு ஆளவரும் அரசியல் தலைவர்கள் ஊழலில்லா உத்தமர்களாய் இருக்க தந்து கடமையுடன் பணியாற்றி கையூட்டு பெறா அதிகாரிகளாய் இருக்க கண்டு நாங்கள் அவர்களை நன்றியுடன் போற்றி வேளாண்மை புரியும் விவசாயிகள் வாழ்வில் தாளாண்மை தந்து ஆடை நெய்யும் நெசவாளி வீட்டில் கோடை போய் குளுமை வீசி சத்தான வாழ்வை சகல உயிர்களும் பெற   நிலமகளின் பிள்ளைகளின் வாழ்வில் நிம்மதி ...

உலகின் மிகப்பெரிய ஏமாற்றம்,..!

Posted: 31 Dec 2015 11:13 AM PST

- உலகின் மிகப்பெரிய ஏமாற்றம், காபியில முக்கின பிஸ்கட் திரும்ப வராமல் காபில மூழ்குவதுதான்! - - பெரியசாமி மாதேஸ்வரன் - ----------------------------------------------- - 'இந்த பீப்சாங் என்னோட 16வது வயசுல பாடுனது'னு சொன்னா சிம்பு எஸ்கேப் ஆகிடலாம். பத்தாயிரம் பணமும் கொடுப்பாங்களாம்! - ------------------------------------------- - வெளிநாட்டுக்காரன் புதுசு புதுசா கிரகத்தைக் கண்டு புடிக்கிறான். இங்க என்னடான்னா பைக் துடைக்க வச்சிருந்த பழைய துணியை ஆட்டைய போட்ருக்காய்ங்க... எப்புடி வல்லரசு ...

Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை

Posted: 31 Dec 2015 10:07 AM PST

நண்பர்களே, Rhonda Byrne (இரகசியம் புத்தகம் எழுதியவர் )
எழுதிய " சக்தி", "கதாநாயகன்" ஆகிய புத்தகங்கள் தேவை. யாராவது கொடுத்து உதவுங்கள். நன்றி

குடும்ப அட்டைக்கு (RATION CARD) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை

Posted: 31 Dec 2015 10:05 AM PST

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள ...

தமிழ் மின்னூல்கள் தரவிறக்கம்

Posted: 31 Dec 2015 09:55 AM PST

1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் காயும் அம்புலிகள் 4.Athirsta Kaatru----Is அதிர்ஷ்ட காற்று 5.Athu mattum Ragasiyam---Is அது மட்டும் ரகசியம் இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு .... download link:- http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html

தோழி - ஒரு பக்க கதை

Posted: 31 Dec 2015 09:44 AM PST

- ''ஷர்மிளாவின் பால்ய சிநேகிதி ஸ்ருதி நீண்ட நாட்களுக்குப் பின் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் பெண்ணுக்கு பூப்புனித நன்னீராட்டு விழாவாம். - பத்திரிகை வைக்க வந்திருந்தாள்.பார்க்க மிகவும் ஏழ்மையாகத் தெரிந்தாள். சாதாரண கைத்தறிப் புடவை, கழுத்தில் தாலியைத் தவிர வேறொன்றுமில்லை. - கைகளில் ரப்பர் வளையல். கண்கள் அலை பாய, இருப்புக் கொள்ளாமல் ஒருவித தவிப்புடன் ஏதோ முள்மேல் உட்கார்ந்த மாதிரி இருந்தாள். - இந்த வீட்டு ஆடம்பரம் அவளுக்கு அன்னியமாய் தெரிந்தது போலும். ரொம்ப நாட்களுக்கு அப்புறம் ...

தாய்மை - ஒரு பக்க கதை

Posted: 31 Dec 2015 09:38 AM PST

- ''சித்ரா, ஈவினிங் ரெடியா இரு! ஆஸ்பத்திரிக்குப் போகணும்!'' - செல்வம் சொன்னதும் திடுக்கிட்டாள் சித்ரா.''எதுக்குங்க... டெஸ்ட் பண்றதுக்குத்தானே..?'' - பதட்டத்துடன் கேட்டாள். - ''இல்ல... அபார்ஷன் பண்றதுக்கு!'' சித்ராவின் விழிகள் துடித்தன. - மாலை செல்வம் வீட்டுக்கு வந்ததும், ''அப்பா...'' என்று ஓடி வந்து கட்டிக்கொண்டான் ஐந்து வயது மகன் ராஜேஷ். அவன் முகத்தில் ஆயிரம் நிலவின் மலர்ச்சி. - ''என்ன ராஜேஷ், ரொம்ப சந்தோஷமாயிருக்கே... என்ன விஷயம்?'' ''அம்மாவுக்கு பாப்பா பொறக்கப் போகுதாம்'' ...

*எனது தவம்*

Posted: 31 Dec 2015 09:35 AM PST

இழப்பதற்கும் கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை என்ற விளிம்பு நிலைக்குத்  தள்ளப்பட்ட வருடம் 2015. மிகச்சரியான  நேரத்தில் அனைத்துப் பாடங்களும் கற்றுணர்ந்த  போக்கு  என்னுள்ளே எழுவதுற்கு நான் ஆச்சர்யப் பட வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன், இதைப் போல் மட்டுமே என்னை நான் முற்றிலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றும் எண்ணிக்கொள்கிறேன். கடுமையான மனத் துன்பங்களுக்குப் பின்பு ஒரு அழகான அமைதி நிலவுவதை யாராலும் மறுக்க முடியாது! அதை அவ்வப்போது என் இருதயம் கனம் குறையும் போது நானும் உணர்ந்தேன் என்னோடு ...

புதுவையில் புத்தர் சிலைகள்

Posted: 31 Dec 2015 09:33 AM PST

அருகன்மேடு புதுவை அருங்காட்சியம் 2.1 கருவடிக்குப்பம் 2.2 கோரிமேடு- பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் 2.3 கிருமாம்பாக்கம்     1. அருகன்மேடு அமைவிடம் புதுவை (அ) புதுச்சேரி (அ) பாண்டிச்சேரியில் உள்ள  அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு உள்ளது. இது புதுவை தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. புதுவை பேருந்து நிலையத்திலிருந்து வில்லியனூர் வழியாக சென்றால் 9.2 கி. மீ (அ) தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக சென்றால் 10.8 ...

வைப்பு நிதியின் அவசியம்

Posted: 31 Dec 2015 09:31 AM PST

வைப்பு நிதியின் அவசியம் கோவாலு வர வர நம்ம தலிவரு ஏன் வைப்பு நிதியை பத்தி ரொம்ப பேசறாரு கூட்டத்துலன்னு தெரியுமா? அதான்னே - வருங்காலத்துக்கு உதவியா இருக்குமேன்னு தான் தலிவரு நம்ம தொண்டர்களுக்கு வைப்பு நிதியைப் பத்தி அவரு கணக்கா ஜோடா கூட குடிக்காம கத்தினு இருக்காரு. போடா மாக்கான் அப்டி இல்லடா. என்னன்னே சொல்றீங்க? அது ஒன்னுமில்லடா நம்ம ஊர்ல ரெண்டாந்தாரம், மூனாந்தாரம் இதெல்லாம் என்ன சொல்வோம்? கீப்புன்னு சொல்லுவோம்ன்னே. அதுக்கு தமிழ்ல வச்சுக்கறதுன்னு அர்த்தம், அப்டீன்னா வைப்பு/ ...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்

Posted: 31 Dec 2015 09:10 AM PST



டெல்லி:
பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகளும் மற்றும்
டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.06 குறைந்துள்ளது.

மேலும் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று
எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
-
------------------------------------------------------------------------
தினகரன்

தமிழ்நாட்டின் சிறப்புகள்

Posted: 31 Dec 2015 09:04 AM PST

1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் 2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி 3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர் 4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர் 5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர் 6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி) 7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் ) 8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர் 9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் ...

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???

Posted: 31 Dec 2015 08:44 AM PST

இந்த வருஷம் என்னத்த கிழிச்ச??? அடடா கொஞ்சம் முன்னாடி இப்டிக்கா வந்த வருஷம் அப்டிக்கா அழகா/அழுக்கா ஓடிடுச்சே. கண்ணசந்த நேரத்தில கபால்ன்னு கடலை மிட்டாய் சிலருக்கும் கவலை முட்டாய் பலருக்கும் கொடுத்துட்டு இந்த வருஷம் கண்ணசர போகுதேப்பா. சரி நைனா புலம்பினது போதும் அப்பாலிக்கா சொல்லு, ஷார்ட்டா சிம்பாலிக்கா சொல்லு இந்த வருஷம் நீ என்னத்த கிழிச்ச? வர வருஷத்துல என்னத்த கிழிக்கற ஐடியால கீரேன்னு ? அத்தெல்லாம் பெரிய சீக்ரட் இல்லபா, நீயும் நானும் அத்த தான செய்றோம் வருஷா வருஷம். இந்த வருஷம் ரெண்டு ...

சுஜாதா கதை தொகுப்புகள் [PDF FULL COLLECTIONS]

Posted: 31 Dec 2015 08:01 AM PST

சுஜாதா கதை தொகுப்புகள் [PDF FULL COLLECTIONS] தொகுப்பு 1 சுட்டி தொகுப்பு 2 சுட்டி --- நன்றி - தமிழ்ப்ரீபுக்ஸ் வலைப்பூ

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!

Posted: 31 Dec 2015 06:57 AM PST

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்! ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.  இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.  ஜனவரி : இது 'ஜானஸ்' என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார். பிப்ரவரி : இது லத்தீன் மொழி ...

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 11 செல்பீ (தாமி) டிப்ஸ்

Posted: 31 Dec 2015 05:43 AM PST

ஒரு நல்ல செல்பீ உருவாக இரண்டு காரணிகள் தேவை - அது நல்ல போஸ் மற்றும் நல்ல கேமிரா ஆப். இந்த இரண்டுமே இருந்தாலும் கூட, சிலரால் தங்களுக்கு பிடித்த மாதிரியான செல்பீயை எடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை..! இனி அந்த கவலையே வேண்டாம். இனி எல்லோராலும் தங்களுக்கு பிடித்த மாதிரியான செல்பீயை எடுக்க உதவும்  'டிப்ஸ்'களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகளை நீங்கள் 'ஃபாலோ' செய்தால்.. 'லைக்ஸ்'கள் உங்களை 'ஃபாலோ' செய்யும்..! #டிப் 01 : முதலில் உங்கள் 'லுக்'கை மாற்றுங்கள்..! #டிப் 02 : கிடைக்கும் ...

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்

Posted: 31 Dec 2015 04:43 AM PST

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் நானுண்டு கடையுண்டு         வீடுண்டு என்றிருந்தேன் கூச்சமுடைய குணத்தில்        நான் குருகி இருந்தேன் ஆகையால் யாவரிடமும்        பழகாமல் அருகி இருந்தேன்   காலமது கையில் பிடித்து        கசக்கி பிழிய தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்         துவண்டிருந்தேன்   வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார் வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்   அவர் பெயரை கூறினாலோ        சங்கடத்தில் நாணிக்கொள்வார் அவர் பெயரை கூறாவிட்டால்         குற்றுயிராய் ...

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I

Posted: 31 Dec 2015 02:57 AM PST

காமாட்சியம்மன் கோயில்
தளவிதிமுறைகளின் படி பிறதளங்களின் சுட்டி அனுமதியில்லை

10 வருடங்களுக்கு முன்பு செல்போனின் நிலை

Posted: 31 Dec 2015 02:18 AM PST

* பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோங்களை SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக் கேட்டோம். * பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு வெள்ளை படங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக் கொண்டோம். * GPRSல் டவுன்லோடு செய்பவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம். * கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள் பெரும்பணக்காரர்களாக இருந்தார்கள். * பலரது மொபைலில் ஏர்டெல் டோன்களை ரிங்டோன்களாக வைத்திருந்தார்கள். * மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து வேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம். * ரீசார்ஜ் செய்ய ...

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - வேர்க்கடலை கம்பு சிப்ஸ் !

Posted: 31 Dec 2015 02:13 AM PST

இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும்  உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின்  பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் ...

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 31 Dec 2015 12:06 AM PST

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

நவராத்திரி - அப்பம் !

Posted: 30 Dec 2015 11:57 PM PST

நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு  வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம். சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல ...

கை விரிக்கும் மத்திய அரசு! நடக்குமா ஜல்லிக்கட்டு ?

Posted: 30 Dec 2015 09:43 PM PST

Wednesday, 30 Dec, 7.06 பம் கை விரிக்கும் மத்திய அரசு! நடக்குமா ஜல்லிக்கட்டு ? மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதிக்கவில்லை எனவும், ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™