Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சென்னை வெள்ள நிலைமை அபாயகரம்: ராஜ்நாத்

Posted:

புதுடில்லி: ''சென்னையின் வெள்ள நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளது. அதன் பாதிப்புகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது,'' என, லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:

பயங்கர மழை, வெள்ளத்தால், சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரமான இயற்கை பேரிடரை சந்தித்துள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, தமிழகம் தனித்தீவாகியுள்ளது. வழக்கமாக, டிசம்பர் மாதம் முழுவதும், 250 மி.மீ., மழை தான் பெய்யும் நிலையில், டிசம்பர், 2ம் தேதி காலை, 8:30 ...

பேரிடர் மேலாண்மை தோல்வி: பொன்ராஜ் வேதனை

Posted:

சென்னையில் பேரிடர் நிகழ்ந்து, 48 மணி நேரமாகியும் பாதிக்கப்பட்ட மக்கள், உதவிக்காக கட்டடங்களின் மேல் காத்திருபது, பேரிடர் மேலாண்மை தோல்வி அடைந்துவிட்டதை காட்டுவதாக, முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேதனை கருத்துகள் பரவி வருகின்றன.

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், முகநுால் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
சென்னையின் மையப்பகுதிகளில் மழை பெய்யாமல் இப்படிப்பட்ட வெள்ளம் உருவானது வரலாறு காணாதது. அடையாற்றை ஒட்டியுள்ள சைதாப்பேட்டை, அசோக் பில்லர், ரங்கநாதன் சுரங்கப் பாதை போன்ற பகுதிகளைச் ...

செம்பரம்பாக்கத்தை காப்பாற்ற சென்னை பலியா?: பொதுபணித்துறை மீது மக்கள் கடும் அதிருப்தி

Posted:

'செம்பரம்பாக்கம் ஏரியை பாதுகாக்க, சென்னை மக்களை பொதுப்பணித் துறை வெள்ளத்தில் மூழ்கடித்தது ஏன்?' என, பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம், 21 அடியை எட்டியதால், நவ., 16 முதல் உபரிநீர் திறக்கப்பட்டது. திறந்து விடப்படும் நீரின் அளவு, படிப்படியாக, 10 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது.
இதன் பின், ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால், திறந்து விடப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, ...

வட சென்னையில் மரண ஓலம்

Posted:

சமீபத்திய கனமழையால், தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டன. ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு மழை நின்றதும், வட சென்னை யின் பல பகுதிகள் மூழ்கியதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வட சென்னையில் உள்ள, எம்.கே.பி., நகர், கண்ணதாசன் நகர், விவேகானந்தன் நகர், எஸ்.எம்., நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தேவர் நகர் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும், தலா, 30 ஆயிரம் - 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.புழல் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கேப்டன் காட்டன் கால்வாய் வழியாக, இப்பகுதிகளில் புகுந்தது. ...

விமானத்தை மிஞ்சியது ஆம்னி பஸ் கட்டணம்

Posted:

சென்னை,:சென்னையில் பெய்த அடைமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 150 ஆம்னி பஸ்கள் மூழ்கி உள்ள நிலையில், சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு, விமான கட்டணத்தை விட கூடுதலாக, கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு, 650 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், கடந்த சில நாட்களாக, சென்னையில் பெய்த அடை மழையால், 150 ஆம்னி பஸ்கள், சென்னையில் இருந்து வெளியே வரமுடியாத நிலையில், ஓரங்கட்டப்பட்டுள்ளன.
உடுமலைப்பேட்டை, விழுப்புரம், மதுரவாயல், பெருங்களத்துார் வழித்தடம் வெள்ள ...

ஏரி திறப்பை எச்சரிக்காத அரசு நிர்வாகம் எல்லாம் காலியான பின் எட்டி பார்த்தனர்

Posted:

கூவம், அடையாற்றில் அதிகரித்த நீர் அளவு குறித்து, கரையோர மக்களுக்கு அரசு நிர்வாகம் எச்சரிக்கை செய்யாமல் விட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், வதந்திகள் பரவி மக்கள் பீதியடைந்தனர்.

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவில் எந்த அறிவிப்புமின்றி திறந்து விடப்பட்ட தண்ணீரால், சென்னை நகர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஏரிகளிலிருந்து திறந்து விடப்பட்ட, ஒரு லட்சம் கனஅடி நீர், கூவம் மற்றும் அடையாற்றில் ஒரே நேரத்தில் பாய்ந்தபோது, ஆற்றங்கரை வாழ் மக்கள் திக்குமுக்காடினர்.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, பல ...

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு

Posted:

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கும் வட தமிழகத்துக்கும் இடையே, இரு நாட்களுக்கு முன் நிலை கொண்டிருந்த காற்று அழுத்த தாழ்வு மறைந்து விட்டது. தற்போது அதே இடத்தில், புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், தமிழக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை ...

தமிழகத்திற்கு மேலும் ரூ.1,000 கோடிபிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

Posted:

சென்னை:தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்கு உடனடியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

ஏற்கனவே 940 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.நவ.,8 முதல் பெய்த மழையில் 8,841 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது. 'இடைக்கால நிவாரணமாக உடனடியாக 2,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அதைத் தொடர்ந்து உடனடியாக 940 கோடி ரூபாயை பிரதமர் ஒதுக்கினார். கடந்த சில ...

சென்னையில் மேலும் பல பகுதிகளை சூழ்ந்தது வெள்ளம் 50 லட்சம் பேர் பாதிப்பு : தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மீட்பு படை திணறல்

Posted:

இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், சென்னையில், மேலும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 50 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை சற்று குறைந்தாலும், தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மீட்புப் படை வீரர்கள் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், வடகிழக்கு பருவ மழை, இடைவிடாது கொட்டித் தீர்த்தது. ஏரிகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டதால், நிலைமை மிக மோசமானது. சென்னையில், பெரும்பாலான பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம், முடிச்சூர், வண்டலுார், தாம்பரம், அண்ணா ...

தமிழக கன மழையால் சபரிமலையில் பாதிப்பு

Posted:

சபரிமலை: தமிழகத்தில் பெய்யும் பலத்த மழையால், சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருமானம் குறைந்துள்ளது. 'பெர்மிட்' வாங்கிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க முடியாமல், கேரள அரசு போக்குவரத்துக்கழகம் தடுமாறுகிறது. சபரிமலையில் மண்டல சீசன் ஆரம்பித்த, நவ., 17 முதல், தமிழகத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால், வட மாவட்டங்களில் இருந்து, சபரி மலைக்கு செல்லும் பக்தர் கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.அதிகாலை நேரத்தை தவிர்த்து, பிற நேரங்களில், நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்ய முடிகிறது. கடந்த நவ., 30-ம் தேதி வரை உள்ள வருமானத்தை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 10 கோடி ரூபாய் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™