Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பொட்டு சுரேஷ் கொலை வழக்கு விசாரணை: சி.பி.சி.ஐ.டி.க்கு கூடுதல் ஆய்வாளர் நியமனம்

Posted: 03 Dec 2015 02:02 PM PST

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் டிசம்பர் 20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதை அடுத்து, சி.பி.சி.ஐ.டி.க்கு கூடுதல் ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடி உதவி: வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் பிரதமர் மோடி அறிவிப்பு

Posted: 03 Dec 2015 02:02 PM PST

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

வீடுகளைச் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்

Posted: 03 Dec 2015 02:02 PM PST

சீர்காழி பகுதியில் வீடுகளைச் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் புதன்கிழமை தீவிரப்படுத்தப்பட்டது.

சேடபட்டி அருகே பெண்ணிடம் நூதன முறையில் மோசடி

Posted: 03 Dec 2015 02:01 PM PST

சேடபட்டி அருகே பெண்ணிடம் நூதன முறையில் ஏடிஎம் அட்டையின் எண்ணைப் பெற்று, பணம் திருடப்பட்டுள்ளது.

தீக்காயமடைந்த பெண் சாவு

Posted: 03 Dec 2015 02:01 PM PST

நாகப்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள்கள் தேர்வு

Posted: 03 Dec 2015 02:01 PM PST

மதுரை மாநகர் ஊர்க்காவல் படைக்கு ஆள்கள் தேர்வு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

"பொதுப் பணித் துறையினர் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்'

Posted: 03 Dec 2015 02:00 PM PST

கடைமடை அணைகளில் இருந்து வெள்ளநீரை வெளியேற்றுவதில் பொதுப் பணித் துறையினர் தீவிர கவனமாகச் செயல்பட வேண்டுமென காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இ. வல்லவன் அறிவுறுத்தினார்.

வடிகால்கள் தூர்வாரும் பணியில் பொதுப் பணித் துறையினர் தீவிரம்

Posted: 03 Dec 2015 02:00 PM PST

காரைக்காலில் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதை ஆட்சியர் இரவு, பகலாக நேரில் ஆய்வு செய்து தகவல் தெரிவித்து வருவதையொட்டி, பொதுப் பணித் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் வடிகால்கள் தூர்வாரும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மதுரையில் 3 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் நிறுத்தம்

Posted: 03 Dec 2015 02:00 PM PST

மதுரை மாவட்டத்தில் நான்குவழிச் சாலையில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் வாகனக் கட்டணம் வசூலிப்பது வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக, ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.

பத்திரப் பதிவுக்கு பொது ஆவண அதிகாரம் அளித்தவரின் ஆயுள் சான்று அவசியம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 03 Dec 2015 02:00 PM PST

பத்திரப் பதிவுக்கு பொது ஆவண அதிகாரம் அளித்தவரின் ஆயுள் சான்று தேவையில்லை என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பேரையூர், தே.கல்லுப்பட்டி பகுதிகளில் மழையால் 3000 ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு

Posted: 03 Dec 2015 01:59 PM PST

தே.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு 11 செ.மீ. அளவு மழை பெய்தது. இதனால், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன.

ஒருபோக சாகுபடி பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

Posted: 03 Dec 2015 01:58 PM PST

மேலூர் ஒருபோகச் சாகுபடி பகுதியில் நாற்றங்கால் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதால், கால்வாய்களில் கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் பொதுப்பணித் துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

காமராஜர் பல்கலை.யில் 105 பேர் ரத்த தானம்

Posted: 03 Dec 2015 01:58 PM PST

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட 105 பேர் ரத்த தானம் செய்தனர்.

தியாகராஜர் கல்லூரி பருவத் தேர்வு முடிவு

Posted: 03 Dec 2015 01:57 PM PST

மதுரை தியாகராஜர் கல்லூரியில் நவம்பர் 2015 பருவத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

குப்பைத் தொட்டி பற்றாக்குறையால் சாலையோரம் கொட்டப்படும் குப்பை

Posted: 03 Dec 2015 01:57 PM PST

காரைக்கால் நகரில் குப்பை சேகரிக்கும் தொட்டிப் பற்றாக்குறையால், பொதுமக்கள் சாலையோரங்களிலேயே குப்பைகளைக் கொட்டும் அவல நிலை தொடர்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு நாளை அறிவியல் கண்காட்சி

Posted: 03 Dec 2015 01:57 PM PST

மதுரையில் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது.

திருநள்ளாறு வரை ரயில் சேவை நீட்டிப்பு: மத்திய அரசிடம் வலியுறுத்துமா புதுச்சேரி அரசு?

Posted: 03 Dec 2015 01:57 PM PST

காரைக்கால் வரை பயன்பாட்டில் உள்ள ரயில் சேவையை திருநள்ளாறு வரை முதல் கட்டமாக நீட்டிக்க ரயில்வே அமைச்சரை, புதுச்சேரி அரசு நிர்பந்திக்க வேண்டும்.

காந்தி அருங்காட்சியகத்தில் சமஸ்கிருத தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

Posted: 03 Dec 2015 01:56 PM PST

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு  சமஸ்கிருத தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

கிரானைட், மணல் குவாரிகளை அரசே நடத்த எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

Posted: 03 Dec 2015 01:56 PM PST

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் அரசு வருவாய் இழப்பை ஈடுகட்ட கிரானைட், மணல் குவாரிகளை அரசே நேரடியாக நடத்திடவேண்டும் எனவும் சோஷியல் டெமாக்கிரடிவ் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி மாநில தலைவர் தெஹ்கிரான்பாகவி வலியுறுத்தினார்.

கோயில் அறங்கவாலர்கள் பொறுப்பேற்பு

Posted: 03 Dec 2015 01:55 PM PST

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பார்வதீசுவரர், ஸ்ரீ ஆதிபுரீசுவரர் ஆகிய கோயில்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

திருப்பரங்குன்றத்தில் நாளை மண் வள அட்டை வழங்கும் விழா

Posted: 03 Dec 2015 01:55 PM PST

மதுரை வேளாண்மைக் கல்லூரி வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண் துறை இணைந்து மண்வள அட்டை வழங்கும் விழா, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தொடர் மழை: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து குறைவு

Posted: 03 Dec 2015 01:55 PM PST

தொடர்ந்து மழை பெய்து வருவதால் காரைக்கால் துறைமுகத்துக்கு ஏற்றுமதித் தரம் வாய்ந்த மீன்வரத்து நின்றுவிட்டது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்தி பிரசாரம்

Posted: 03 Dec 2015 01:54 PM PST

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, புதுச்சேரி ஓவியர் மன்றம் இணைந்து உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தே.கல்லுப்பட்டி பகுதியில் நோய் பாதிப்பில் பலியாகும் ஆடுகள்

Posted: 03 Dec 2015 01:54 PM PST

தொடர் மழை காரணமாக, தே.கல்லுப்பட்டி பகுதியில் நோய் தாக்கி ஆடுகள் மடிந்து வருகின்றன.

கப்பலூர் பகுதியில் டிசம்பர் 03ம், செக்கானூரணியில் டிசம்பர் 04 மின்தடை

Posted: 03 Dec 2015 01:53 PM PST

மதுரை கப்பலூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (டிச.4) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற ஆட்சியர் உத்தரவு

Posted: 03 Dec 2015 01:50 PM PST

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்றுமாறு, அரசுத் துறையினருக்கு ஆட்சியர் இ. வல்லவன் உத்தரவிட்டார்.

ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயில் குளம் தூர்வாரும் பணி தீவிரம்

Posted: 03 Dec 2015 01:49 PM PST

வருகிற 6-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், பொதுப் பணித் துறை நிர்வாகத்தாரால் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயில் குளம் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாஜக கிளை தலைவர்கள் தேர்வு

Posted: 03 Dec 2015 01:48 PM PST

காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக கிளைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Posted: 03 Dec 2015 01:47 PM PST

காரைக்காலில் பெய்து வரும் கனமழை காரணமாக வியாழக்கிழமை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் இ. வல்லவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

கி.வீரமணி பிறந்த நாள் விழா

Posted: 03 Dec 2015 01:38 PM PST

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிறந்த நாளையொட்டி, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டன. மேலும், இலவசமாக சக்கர நாற்காலியையும் அக்கட்சியினர் புதன்கிழமை வழங்கினர்.

மன்னார்குடியில் இன்று மின் நிறுத்தம்

Posted: 03 Dec 2015 01:38 PM PST

மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (டிச.3) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழுக் கூட்டம்

Posted: 03 Dec 2015 01:37 PM PST

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மாதாந்திர நிர்வாகக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தலைவர் சா. குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.

அரிமா சங்கம் சார்பில் மாணவிகளுக்கு புத்தாடை வழங்கல்

Posted: 03 Dec 2015 01:37 PM PST

திருத்துறைப்பூண்டி அரிமா சங்கம் சார்பில், புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 10 பேருக்கு புத்தாடைகளும், அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

ஆயுதப்படை காவலாóகளுக்குப் பாராட்டு

Posted: 03 Dec 2015 01:36 PM PST

பல்வேறு திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர்களை குடவாசல் அருகே கைது செய்ததற்காக ஆயுதப்படை காவலர்கள் இருவரை ஐ.ஜி. சத்தியமூர்த்தி பாராட்டி வெகுமதி வழங்கினார்.

மன்னார்குடியில்...

Posted: 03 Dec 2015 01:36 PM PST

மன்னார்குடியை அடுத்த மூவாநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மழைநீரில் மூழ்கிய விவசாய நிலங்களை மாநில உணவு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் புதன்கிழமை பார்வையிட்டார்.

நீரில் மூழ்கிய விளைநிலங்கள்: அமைச்சர் ஆய்வு

Posted: 03 Dec 2015 01:36 PM PST

திருவாரூர், மன்னார்குடி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீரில் மூழ்கிய விவசாய நிலங்களை தமிழக உணவு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் புதன்கிழமை பார்வையிட்டார்.

கிட்டி அணை பாலத்தில் விரிசல்: கனரக வாகனங்களுக்குத் தடை

Posted: 03 Dec 2015 01:34 PM PST

சீர்காழி அருகே பழையார் செல்லும் வழியில் உள்ள கிட்டி அணை பாலத்தில் ஏற்பட்ட விரிசலால், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனப் போக்குவரத்து புதன்கிழமை நிறுத்தப்பட்டது.

தொடரும் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

Posted: 03 Dec 2015 01:34 PM PST

நாகப்பட்டினத்தில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததுடன், நாள் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது. மேலும், மழை காரணமாக வியாழக்கிழமையும் (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

புதுப்பொலிவு பெரும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை

Posted: 03 Dec 2015 01:33 PM PST

தரங்கம்பாடியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையை பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்புடன் நடைபெறுகிறது.

அரசுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 03 Dec 2015 01:33 PM PST

செம்போடை ஆர்.வி. பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், அரசு தொழில்நுட்பத் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

கொடிநாள் விழா: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

Posted: 03 Dec 2015 01:31 PM PST

நாகப்பட்டினத்தில் வருகிற 7-ஆம் தேதி நடைபெற உள்ள கொடிநாள் விழாவில் பங்கேற்க முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்புன்கூர் கோயிலில் மழை நிற்க வேண்டி சிறப்புக் கூட்டு வழிபாடு

Posted: 03 Dec 2015 01:24 PM PST

நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருப்புன்கூர் சௌந்தர்நாயகி அம்மன் உடனாகிய சிவலோகநாதர் சுவாமி கோயிலில் மழை நிற்க வேண்டி சிறப்புக் கூட்டு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

ஒப்பந்ததாரர் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது

Posted: 03 Dec 2015 01:24 PM PST

முத்துப்பேட்டை அருகே ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் மேலும் இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

இளைஞர் மர்மச் சாவு

Posted: 03 Dec 2015 01:24 PM PST

சென்னையிலிருந்து திருவாரூருக்கு அரசுப் பேருந்தில் வந்த இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விவசாயியை மிரட்டிய 4 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 03 Dec 2015 01:24 PM PST

கொரடாச்சேரி அருகே நிலப் பிரச்னை தொடர்பாக விவசாயியை மிரட்டிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமலாலய குளத்தின் நீர்மட்டம் உயர்வு

Posted: 03 Dec 2015 01:24 PM PST

வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளத்தின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது.

மழை பாதிப்பு: ரயில்வே நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

Posted: 03 Dec 2015 01:24 PM PST

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, அதன் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கும், ரயில் பயணிகளுக்கும் உதவும் வகையில் தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் நிர்வாகிகள் குழு அமைத்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் இன்று கால பைரவாஷ்டமி விழா

Posted: 03 Dec 2015 01:24 PM PST

நீடாமங்கலம் அருகே தேவாரப் புகழ்பெற்ற பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை காலபைரவாஷ்டமி விழா நடைபெறவுள்ளது.

திருவாரூர் மாணவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு

Posted: 03 Dec 2015 01:24 PM PST

தில்லியில் நாடாளுமன்றத்தில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ள திருக்குறள் நிகழ்ச்சியில் திருவாரூரைச் சேர்ந்த 2 மாணவர்களுக்குப் பாராட்டிப் பரிசு வழங்கப்படவுள்ளது.

நீடாமங்கலத்தில் 59.6 மி.மீ. மழை பதிவு

Posted: 03 Dec 2015 01:24 PM PST

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நீடாமங்கலம் பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

மழை நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

Posted: 03 Dec 2015 12:21 PM PST

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே கங்காதரபுரம் குடியானத்தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர்(30), கட்டடத் தொழிலாளி. கடந்த 30-ம் தேதி வீட்டை விட்டுச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை.

"ஈழப் பெண் கவிஞர்களின் படைப்புகள் பன்முகத் தன்மை கொண்டவை'

Posted: 03 Dec 2015 12:21 PM PST

ஈழ பெண் கவிஞர்களின் படைப்புகள் பன்முகம் கொண்டவையாக உள்ளன என்றார் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் வ. மகேஸ்வரன்.

பெண்ணிடம் நகை திருட்டு

Posted: 03 Dec 2015 12:21 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி, அவரது மகள் ஆனந்தி இருவரும் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

ஆலங்குடி அருகே 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Posted: 03 Dec 2015 12:20 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பசுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (50), விவசாயி. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

தொடர் மழை: வயல்களில் தண்ணீர் வடிவதில் தாமதம்

Posted: 03 Dec 2015 12:20 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிவதில் தாமதம் நிலவுகிறது.

அரியலூரில் டிச. 12-ல் மக்கள் நீதிமன்றம்

Posted: 03 Dec 2015 12:19 PM PST

அரியலூர் நீதிமன்றத்தில் டிச. 12 ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் (லோக் ஆயுக்தா) மூலம் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்படும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ரகுமான் தெரிவித்தார்.

கரூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.4.49 கோடியில் கூடுதல் கட்டடம் திறப்பு

Posted: 03 Dec 2015 12:19 PM PST

கரூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ. 4.49 கோடியில் கூடுதல் கட்டடம் அண்மையில் திறக்கப்பட்டது.

பெண்ணை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு

Posted: 03 Dec 2015 12:15 PM PST

கும்பகோணம் அருகே பெண்ணை கடப்பாரையால் தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

பெரம்பலூரிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் உணவுப் பொருள்கள்

Posted: 03 Dec 2015 12:14 PM PST

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட சுமார் ரூ. 12 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வியாழக்கிழமை இரவு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பண்ணைத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

Posted: 03 Dec 2015 12:14 PM PST

தினக்கூலி பண்ணைத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நெல் பயிரில் குலைநோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

Posted: 03 Dec 2015 12:13 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சம்பா நெல் பயிரைத் தாக்கும் குலைநோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

புதுகையில் 71 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 15.51 லட்சம் நலத் திட்ட உதவி

Posted: 03 Dec 2015 12:13 PM PST

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகள் 71 பேருக்கு ரூ. 15.51 லட்சத்தில் உதவி உபகரணங்களை ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் வழங்கினார்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 03 Dec 2015 12:12 PM PST

தஞ்சாவூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மனமகிழ் மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 03 Dec 2015 12:12 PM PST

பொன்னமராவதி அலுவலர் மனமகிழ் மன்றத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தஞ்சையில் நாளை மகளிர் விளையாட்டுப் போட்டி

Posted: 03 Dec 2015 12:11 PM PST

தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான மகளிர் தேர்வு விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (டிச.5) நடைபெறவுள்ளன.

நாட்டுச்சாலையில் இலவச பொது மருத்துவ முகாம்

Posted: 03 Dec 2015 12:11 PM PST

பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறை

Posted: 03 Dec 2015 12:11 PM PST

தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. சுப்பையா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாபநாசம் அருகே மழை நீரில் மூழ்கி கட்டட தொழிலாளி சாவு

Posted: 03 Dec 2015 12:10 PM PST

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

தஞ்சையில் வெள்ள பாதிப்பு கணக்கெடுப்பு தொடரும்

Posted: 03 Dec 2015 12:09 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு மழைக்காலம் முடியும் வரை தொடரும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

அப்போது ஏன் வாய் திறக்கவில்லை?

Posted: 03 Dec 2015 12:08 PM PST

ஆமிர் கான் பொத்தாம் பொதுவாக இந்தியர்களிடையே சகிப்புத் தன்மை குறைந்து கொண்டு வருவதாகக் கூறிப் புலம்பியிருப்பதிலிருந்தே

தஞ்சை பகுதிகளில் நாளை மின் தடை

Posted: 03 Dec 2015 12:08 PM PST

தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.5) மின் விநியோகம் இருக்காது.

கொலை வழக்கு : கைதியை காவலில் எடுத்து விசாரணை

Posted: 03 Dec 2015 12:08 PM PST

மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கூலிப்படை தலைவரை கும்பகோணம் அருகே நடந்த கொலை வழக்கு தொடர்பாக குடந்தை போலீஸார் காவலில் எடுத்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர்.

நாம் கற்றுக்கொள்ள மறுக்கின்றோம்!

Posted: 03 Dec 2015 12:08 PM PST

இன்றைய தமிழகத்தில் கடுமையான மழைக்குப் பிறகு, பேரிடர் மேலாண்மை பற்றிய விவாதம் எங்கும் எதிரொலிக்கிறது. இந்த விவாதம்

மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

Posted: 03 Dec 2015 12:07 PM PST

மகாமகத் திருவிழாவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என மக்களவையில் அண்மையில் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் வலியுறுத்தினார்.

ஆவணம் அரசுப் பள்ளியில் நிலவேம்பு கசாயம் அளிப்பு

Posted: 03 Dec 2015 12:07 PM PST

பேராவூரணியை அடுத்த ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஏசிஇ அறக்கட்டளை, லயன்ஸ் சங்கம் ஆகியன சார்பில் மழைக்கால இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

டிச. 17-ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

Posted: 03 Dec 2015 12:07 PM PST

தஞ்சாவூர் மாவட்ட கருவூல அலுவலகத்தில் டிச. 17-ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

பெருமழையல்ல, பேரிடர்!

Posted: 03 Dec 2015 12:06 PM PST

மழைச் சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பிறகு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.940 கோடியைத் தொடர்ந்து உடனடியாக மேலும்

மஞ்சலாற்றுத் தலைப்பில் 31.6 மி.மீ. மழை

Posted: 03 Dec 2015 12:06 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மஞ்சலாற்றுத் தலைப்பில் 31.6 மி.மீ. மழை பெய்தது.

மழை, வெள்ள பாதிப்புக்கு உடனடி நிவாரணம் தேவை

Posted: 03 Dec 2015 12:06 PM PST

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பேராவூரணி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 03 Dec 2015 12:05 PM PST

தஞ்சாவூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூரில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Dec 2015 12:05 PM PST

கரூரில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னைக்கு 3 லாரிகளில் நிவாரணப் பொருள்கள்

Posted: 03 Dec 2015 12:05 PM PST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 3 லாரிகளில் நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் பொறுப்பேற்பு

Posted: 03 Dec 2015 12:04 PM PST

கரூரில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக்கல்லூரியின் முதன்மையராக (டீன்) டாக்டர் ரேவதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல்

Posted: 03 Dec 2015 12:04 PM PST

கரூர் அருகே கழிவுநீர்த் தொட்டியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்த அவர்களது உறவினர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

Posted: 03 Dec 2015 12:03 PM PST

சென்னை மற்றும் கடலூரில் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு குளித்தலையில் உள்ள ஆலயங்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.9 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Posted: 03 Dec 2015 12:03 PM PST

நிகழாண்டில் 2,061 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

மூத்த கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பயண அட்டை வழங்க வலியுறுத்தல்

Posted: 03 Dec 2015 12:02 PM PST

55 வயதைக் கடந்த மூத்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என கரூரில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட பாரதீய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் பால், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு!

Posted: 03 Dec 2015 12:02 PM PST

மழை, வெள்ளம் காரணமாக, சென்னையில் பெரும்பாலான இடங்களில் பால், குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரூ. 3 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி அளிப்பு

Posted: 03 Dec 2015 12:02 PM PST

சென்னை ஸ்ரீ சாரதா சக்தி பீடம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் போர்வைகள், கோரைப்பாய்கள் நிவராண உதவியாக வழங்க கரூரில் இருந்து வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

ஆண்டிமடம் அருகே மூதாட்டியை தாக்கிய பெண் கைது

Posted: 03 Dec 2015 12:01 PM PST

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள காங்குழி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பட்டு (60). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மனைவி வசந்தாவுக்கும் இடையே இடப்பிரச்னை இருந்துள்ளது.

அண்ணா பல்கலை. நுழைவுத் தேர்வு ரத்து

Posted: 03 Dec 2015 12:01 PM PST

தொடர் மழை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வையும்

முகநூல் மூலம் தகவல் அனுப்பலாம்

Posted: 03 Dec 2015 12:00 PM PST

சென்னை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், தனது பயன்பாட்டாளர்களுக்காக "நான் பாதுகாப்பாக

இலங்கைக்கு கஞ்சா கடத்திய வழக்கு: ஒருவர் கைது

Posted: 03 Dec 2015 12:00 PM PST

இலங்கைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்கள் வெளியேற எச்சரிக்கை

Posted: 03 Dec 2015 12:00 PM PST

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆட்சியர் ச. ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் புனித சவேரியார் கோயில் தேர்பவனி

Posted: 03 Dec 2015 11:59 AM PST

ராமநாதபுரம் புனித சவேரியார் கோயில் திருவிழா தேர்பவனி புதன்கிழமை ந டைபெற்றது.

"மாணவர்களுக்கு அறிவியல் படைப்புகளை உருவாக்கும் எண்ணம் வேண்டும்'

Posted: 03 Dec 2015 11:59 AM PST

அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டு செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணங்களில் அடுத்த கல்வி ஆண்டில் தாமும் அறிவியல் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்றார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

தொடர் மழை: தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க வேளாண் துறை யோசனை

Posted: 03 Dec 2015 11:59 AM PST

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையிலிருந்து தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க மாவட்ட தோட்டக்கலைத் துறை யோசனை தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி

Posted: 03 Dec 2015 11:58 AM PST

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 03 Dec 2015 11:58 AM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி வசந்தா (57).

டெங்கு விழிப்புணர்வு முகாம்

Posted: 03 Dec 2015 11:58 AM PST

பரமக்குடி பள்ளிகளில் தமுமுக மற்றும் இந்தியன் மருத்துவ அறக்கட்டளை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™