Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'சேம் சைட் கோல்' அடித்த காங்., பத்திரிகை: நேரு, சோனியாவுக்கு சரமாரி 'அர்ச்சனை'

Posted: 28 Dec 2015 08:40 AM PST

மும்பை:காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை விமர்சித்தும், தற்போதைய தலைவர் சோனியாவின் தந்தையை, 'பாசிச எண்ணமுள்ள ராணுவ வீரர்' என வர்ணித்தும், அக்கட்சி பத்திரிகையில் வெளியான கட்டுரையால், காங்., தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான, மறைந்த தலைவர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம், கடந்த 15ல், அனுசரிக்கப்பட்டது. மும்பை காங்., பிரிவு, மாதந்தோறும் வெளியிட்டு வரும், 'காங்கிரஸ் தர்ஷன்' பத்திரிகை, படேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிறப்பிதழ் வெளியிட்டது. காங்., கட்சியின், 131ம் நிறுவன தினம் ...

போலீஸ் ஏட்டுக்கு ரூ.5 கோடி சொத்து

Posted: 28 Dec 2015 08:45 AM PST

இந்துார்,:மத்திய பிரதேசத்தில், லஞ்சப் புகாரில் சிக்கிய, போலீஸ் ஏட்டு ஒருவரிடம் இருந்து, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ஆவணங்களை, 'லோக் ஆயுக்தா' எனப்படும், மக்கள் நீதிமன்ற போலீசார் அதிரடி சோதனை நடத்திகைப்பற்றி உள்ளனர்.

ஜபல்பூர் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில், அருண்குமார் சிங் பஹல் என்பவர், தலைமை காவலராக உள்ளார். இவர் மீது பலர்லஞ்சப் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, அவருக்கு சொந்தமான இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஐந்து இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், ஆறு வீடுகள், நான்கு சொகுசு ...

ரூ.10லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவரா? புத்தாண்டு முதல் மானிய காஸ் 'கட்'

Posted: 28 Dec 2015 08:57 AM PST

புதுடில்லி:பத்து லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, ஆண்டு வருமானமுள்ளவர்களுக்கு, அடுத்த மாதம் முதல், மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர் அளிப்பதை நிறுத்திக் கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும், 16.35 கோடி பேர், சமையல் காஸ் சிலிண்டர்களை பெற்று வருகின்றனர். இவர்களில், 14.78 கோடி பேரின் வங்கிக் கணக்குகளில், மானியத் தொகை, நேரடியாகச் செலுத்தப்படுகிறது. மானிய விலையில், ஆண்டுக்கு, 12 சமையல் காஸ் சிலிண்டர்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் வினியோகிக்கப்படுகின்றன. மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை அளிப்பதால், மத்திய அரசுக்கு, ஆண்டு தோறும், பல கோடி ...

மஹாராஷ்டிராவில் உன்னத முயற்சி ரொட்டி வங்கி எந்த நேரமும் ஏழைகளுக்கு உணவு

Posted: 28 Dec 2015 09:00 AM PST

அவுரங்காபாத்,: மஹாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத் நகரம், அஜந்தா, எல்லோரா குகைக் கோவில்களுக்குப் பிரசித்தி பெற்றது. இப்போது, 'ரொட்டி வங்கி' என்ற நுாதன திட்டம் மூலம், மேலும் புகழ் பெற்றுள்ளது. 'பசி வந்தால், பத்தும் பறந்து போகும்' என்பது முதுமொழி. அத்தகைய கொடிய பசியைப் போக்க உதவுகிறது, இந்த ரொட்டி வங்கி. அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் யூசுப் முகதி. ஹாரூன் முகதி இஸ்லாமிக் சென்டர் என்ற அமைப்பின் நிறுவனர்; துணிக் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவர் தான், ரொட்டி வங்கியை நிறுவியவர். இந்த வங்கி பற்றி அவர் கூறியதாவது:பல ஏழை முஸ்லிம் ...

பொது தேர்வு தேதி வெளியாவதில் இழுபறி

Posted: 28 Dec 2015 09:14 AM PST

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் ஏற்பட்ட, மழை வெள்ள பாதிப்பால், பொதுத் தேர்வை தள்ளிப் போடலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், கல்வி ஆண்டின் இறுதியில், சட்டசபை தேர்தல் வர உள்ளதால், தேர்வுகளை விரைவில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறையும், தேர்வுத்துறையும் இணைந்து, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை தயாரித்தன. ஆனால், அந்த ...

அவசர சட்டம் எதற்கு; அரசாணையே போதும்!

Posted: 28 Dec 2015 09:22 AM PST

'ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வர தேவையில்லை; அரசாணையே போதும்' என்கிறனர், சட்ட வல்லுனர்கள்.பொங்கல் பண்டியை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'ஜல்லிக்கட்டு நடத்த, மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க., தலைவரும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினார். 'எப்படியும் ஜல்லிக்கட்டு நடக்கும்' என, அமைச்சரும் உறுதி கூறியுள்ளார்.இந்நிலையில், இதற்கு அவசர சட்டம் தேவையில்லை; அரசாணையே போதும் என, சட்ட வல்லுனர்கள் ...

காங்.,க்கும் இடம் உண்டு: கருணாநிதி

Posted: 28 Dec 2015 10:26 AM PST

சென்னை:''சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சில், காங்கிரஸ் கட்சியை விலக்கி வைக்க வில்லை என்றும், அக்கட்சிக்கு கூட்டணியில் இடம் உண்டு,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து, மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும். மாணவர்கள், வணிகர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில், தி.மு.க., தேர்தல் அறிக்கை இருக்கும். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சில், காங்கிரஸ் கட்சியை விலக்கி வைக்கவில்லை. கூட்டணி என வரும்போது, காங்கிரஸ் கட்சிக்கும் இடம் உண்டு.இவ்வாறு ...

காணொலி காட்சியில் முதல்வர் திறப்பு: போக்குவரத்து மாற்றமோ தர்மபுரியில்...

Posted: 28 Dec 2015 10:27 AM PST

காரிமங்கலம்: முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்து, காணொலி காட்சி மூலம், தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். இதற்காக, அந்த கட்டடம் அமைந்துள்ள பெரியாம்பட்டி நகரில், போக்குவரத்தை போலீசார் மாற்றம் செய்ததால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில், மாணவியர் விடுதி புதிதாக கட்டப்பட்டது.இந்த விடுதியை, சென்னையில் இருந்தபடி, நேற்று மதியம், 12:10 மணிக்கு, காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.இந்த ...

சென்னையைத் தொடர்ந்து தஞ்சையிலும் விஜயகாந்த் உளறல்

Posted: 28 Dec 2015 10:33 AM PST

சென்னையில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பத்திரிகையாளர்களிடம் உளறினார். அது தொடர்பான சர்ச்சை முழுமையாக அடங்குவதற்குள், தஞ்சையில் நேற்று, விவசாயிகளுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திலும் உளறலாக பேசி, நிதானத்தை இழந்தார்.பொது இடங்களில் நிதானம் இழந்து பத்திரிகையாளர்களிடமும், கட்சிக்காரர்களிடமும் விஜயகாந்த் அநாகரிகமாக நடந்து கொள்வது வாடிக்கையாகி உள்ளது. அவர் கட்சி ஆரம்பித்த நாள் முதல், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு வரும் போதும் யாரையாவது ...

பாக்., போனால் 'குளோஸ்!' சிவசேனா விமர்சனம்

Posted: 28 Dec 2015 11:18 AM PST

மும்பை,:'பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்ட யாரும், அரசியலில் நீண்ட காலம் நீடித்ததில்லை' என, பா.ஜ.,வின் தோழமைக் கட்சியான சிவசேனா விமர்சித்துள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வில் வெளியாகியுள்ள தலையங்கம்:பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, எல்.கே.அத்வானி, பாகிஸ்தான் சென்ற போது, அந்நாட்டின் முதுபெரும் தலைவரான, முகம்மது அலி ஜின்னாவின் கல்லறைக்கு சென்றார்; அவரை புகழ்ந்து பேசினார். அதன் பின், அத்வானியின் அரசியல் வாழ்க்கை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™