Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விபத்தில் ஊழியர் சாவு

Posted: 28 Dec 2015 01:12 PM PST

கோவையை அடுத்த சரவணம்பட்டியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில்  தனியார் பேருந்து ஊழியர் சம்பவ இடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தார்.

ஸ்ரீ அனுமன் ஜெயந்தி பிரம்மோற்சவம்

Posted: 28 Dec 2015 01:12 PM PST

செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக வீர ஆஞ்சநேய பீடத்தில் 14-ஆம் ஆண்டு ஸ்ரீ அனுமன் ஜெயந்தி பிரம்மோற்சவம்

கோவை சிறைக் கைதி மாரடைப்பால் சாவு

Posted: 28 Dec 2015 01:12 PM PST

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

ஈஷா சார்பில் ஷாம்பவி மகா முத்ரா பயிற்சி

Posted: 28 Dec 2015 01:11 PM PST

கோவை குறிச்சி ஈஷா யோக மையம் சார்பில் ஷாம்பவி மகா முத்ரா பயிற்சி வகுப்பு புதன்கிழமை (டிசம்பர் 30) முதல் ஒரு வார காலத்துக்கு நடைபெறவுள்ளது.

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 590 மனுக்கள்

Posted: 28 Dec 2015 01:11 PM PST

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 590 மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அரசுப் பொருட்காட்சி:10 நாள்களில் 23 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

Posted: 28 Dec 2015 01:11 PM PST

திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் அரசுப் பொருட்காட்சியை டிசம்பர் 18-ஆம் தேதி முதல் கடந்த 10 நாள்களில் 23,161 பேர் பார்வையிட்டுள்ளனர்.

சுங்கச் சாவடி போராட்டக் குழுவுக்கு மிரட்டல்

Posted: 28 Dec 2015 01:10 PM PST

கணியூர் சுங்கச் சாவடி கட்டண வசூலை எதிர்த்துப் போராடும் போராட்டக் குழுவினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அக்குழுவினர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் கொடுத்துள்ளனர்.

போலி பாஸ்போர்ட்:பெண் கைது

Posted: 28 Dec 2015 01:10 PM PST

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பெண்ணை விமான நிலைய போலீஸர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் நாணயங்கள் கண்காட்சி

Posted: 28 Dec 2015 01:10 PM PST

அரசு அருங்காட்சியகம், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் உலக ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் கண்காட்சியை திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.ஆனந்தி தொடங்கி வைத்தார்.

கோவையில் ஆட்டோ எரிந்து சேதம்

Posted: 28 Dec 2015 01:09 PM PST

கோவை காந்திபார்க் அருகே பயணிகள் ஆட்டோ ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எரிந்து சேதமடைந்தது.

வெள்ளப் பாதிப்பு: தென் மாவட்டங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் விரைவில் வருகை

Posted: 28 Dec 2015 01:09 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை மத்திய அமைச்சர்கள் விரைவில்

புரூக்பாண்ட் சாலை போக்குவரத்து மாற்றத்தால் நெருக்கடி: தீர்வு காண இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 28 Dec 2015 01:08 PM PST

புரூக்பாண்ட் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் புதிதாக சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு: சிபிஐ விசாரணை தேவை; கீர்த்தி ஆஸாத்

Posted: 28 Dec 2015 01:08 PM PST

தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்க இயக்ககம் உள்ளிட்ட மத்திய அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்று

அவினாசிலிங்கம் பல்கலை. விவகாரம்: அரசு தலையிடக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 28 Dec 2015 01:08 PM PST

கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலை மகளிர் பல்கலைக்கழகம் சுயநிதி பல்கலைக்கழகமாக மாற்றப்படாமல் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் தலைமையில் ஆலோசனை

Posted: 28 Dec 2015 01:07 PM PST

கோவையில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனையில் அறிமுகமாகிறது: நோயாளிகளை அழைத்துச் செல்ல நவீன பேட்டரி ஆம்புலன்ஸ்

Posted: 28 Dec 2015 01:07 PM PST

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச் செல்ல வசதியாக நவீன பேட்டரி ஆம்புலன்ஸ் மற்றும் வாகனம் இயக்கப்படவுள்ளது.

புத்தாண்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மத்திய அமைச்சர் ஜாவடேகர் சூசகம்

Posted: 28 Dec 2015 01:07 PM PST

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக புத்தாண்டில் நற்செய்தி வரும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்

காலதாமதமாக துவங்கிய விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 28 Dec 2015 01:06 PM PST

பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர் கூட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட காலதாமதமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

ஜி.கே.வாசன் பிறந்த நாள்:  அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Posted: 28 Dec 2015 01:06 PM PST

கோவை புறநகர் வடக்கு மாவட்ட தமாகா சார்பில் ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி, அன்னூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் திங்கள்கிழமை அணிவிக்கப்பட்டது.

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம்: எல்பிஜி மானியம் ரத்து

Posted: 28 Dec 2015 01:05 PM PST

சமையல் எரிவாயு உருளையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வரி செலுத்தத்தக்க வருமானம் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு

கைத்தறிக் குழும திட்டப் பயனாளிகள் கூட்டம்

Posted: 28 Dec 2015 01:05 PM PST

பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையம் கைத்தறிக் குழுமத் திட்டப் பயனாளிகளுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தடுப்பு அணையில் குளித்த இளைஞர் சாவு

Posted: 28 Dec 2015 01:03 PM PST

கோவை உக்கடம் அருகே உள்ள புட்டுவிக்கி தடுப்பு அணையில் குளித்த இளைஞர் சேற்றில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தரின் பயணச் செலவு ரூ. 46 லட்சம்: 4 நாள் செல்லிடப்பேசி செலவு ரூ. 2 லட்சம்

Posted: 28 Dec 2015 01:02 PM PST

கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ்பிச்சை, தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட பயணங்களுக்காக  ரூ.46 லட்சம் செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

காரமடை பேரூராட்சியில் 2-ஆவது குடிநீர்த் திட்டம்: காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார்

Posted: 28 Dec 2015 01:02 PM PST

காரமடை பேரூராட்சியில் ரூ.13.25 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 2-ஆவது குடிநீர்த் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்: நடனக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 28 Dec 2015 12:59 PM PST

மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மேடை நடனக் கலைஞர்கள் முன்னேற்ற நலச் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மோடி, ஸ்மிருதி இரானி மீது அவதூறு: காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு கண்டனம்

Posted: 28 Dec 2015 12:31 PM PST

பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் தொடர்புபடுத்தி அவதூறு கருத்து வெளியிட்ட அஸ்ஸாம்

குடியரசு தின விழாவில் 3 நாள் கலை நிகழ்ச்சிகள்

Posted: 28 Dec 2015 12:29 PM PST

2016ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது முதல்முறையாக, தில்லி செங்கோட்டை பகுதியில் அனைத்து மாநிலங்களின் பங்கேற்புடன்

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம்: சுமித்ரா மகாஜனுக்கு சரத் யாதவ் எதிர்ப்பு

Posted: 28 Dec 2015 12:27 PM PST

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் விடுத்துள்ள கோரிக்கைக்கு,

உணவுப் பாதுகாப்பு சட்ட பயனாளி பட்டியலில் கட்டாக் மேயர் பெயர்: விசாரணைக்கு உத்தரவு

Posted: 28 Dec 2015 12:27 PM PST

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகை விலையில் உணவு தானியங்கள் பெறும் பயனாளிகளின் பட்டியலில் கட்டாக் மேயர் அனிதா

ராமநாதபுரத்தில் பலத்த மழை

Posted: 28 Dec 2015 12:26 PM PST

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. 

ஆந்திரம்: நக்ஸலைட் சுட்டுக் கொலை

Posted: 28 Dec 2015 12:25 PM PST

ஆந்திரப் பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை ஒன்றில், சுமார் 15 வழக்குகளில்

மேடை நடனக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 28 Dec 2015 12:25 PM PST

நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கக் கோரி சிவகங்கை மாவட்ட நடன நாட்டிய கலைஞர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வந்து ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

ப. சிதம்பரம் அண்ணன் வீட்டில் திருடியவர் கைது: 100 பவுன் தங்க நகை, 40 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

Posted: 28 Dec 2015 12:25 PM PST

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் அண்ணன் வீட்டில் திருடிய நபரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 பவுன் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காய்கனி, மலர்கள் கண்காட்சி நடந்த பாலைப் பூங்காவை மேலும் மேம்படுத்த முடிவு

Posted: 28 Dec 2015 12:24 PM PST

ராமநாதபுரம் அருகே காய்கனி, மலர்கள் கண்காட்சி நடந்த பூங்காவை மேலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மானாமதுரை ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை விழா

Posted: 28 Dec 2015 12:23 PM PST

மானாமதுரையிலுள்ள  ஐயப்பன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மண்டல பூஜை விழா நடைபெற்றது.

உளவுத் துறை ஐ.ஜி. மாற்றம்: 17 டி.எஸ்.பி.க்கள் கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு

Posted: 28 Dec 2015 12:23 PM PST

காவல் துறையின் உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்பில்

பாம்பன் அருகே விபத்து: 11 பெண் பக்தர்கள் காயம்

Posted: 28 Dec 2015 12:23 PM PST

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே திங்கள்கிழமை குடிசைக்குள் வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 11 பெண் பக்தர்கள் காயமடைந்தனர்.

காரைக்குடியில் துப்புரவுப் பணியாளர் குடியிருப்பு வளாகம் திறப்பு

Posted: 28 Dec 2015 12:22 PM PST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் துப்புரவுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திங்கள்கிழமைத் திறந்து வைத்தார்.

திருக்கோஷ்டியூர் கோயிலில் வேடுபறி உற்சவ விழா

Posted: 28 Dec 2015 12:22 PM PST

திருக்கோஷ்டியூரில் செளமிய நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் வேடுபறி உற்சவ விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரத்தில் பலத்த மழை

Posted: 28 Dec 2015 12:21 PM PST

ராமேசுவரத்தில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்து சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்ட இறகுப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 28 Dec 2015 12:21 PM PST

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான இறகுப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தனியார் ரசாயன ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted: 28 Dec 2015 12:20 PM PST

காரைக்குடி அருகே தனியார் ரசாயன ஆலைக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சி 131ஆம் ஆண்டு தொடக்கவிழா

Posted: 28 Dec 2015 12:20 PM PST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை அக்கட்சியின் 131 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.

சிவகங்கை

Posted: 28 Dec 2015 12:19 PM PST

ரயில்வே தொழிற்சங்க தலைவருக்கு பாராட்டு விழா

Posted: 28 Dec 2015 12:19 PM PST

மானாமதுரை ரயில் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ்.ஆர்.இ.எஸ். கிளைச் செயலர் இ.பிரதாபனுக்கு பாராட்டு விழா ரயில் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

காரைக்குடி ரயில்நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் மேம்பாடு

Posted: 28 Dec 2015 12:18 PM PST

காரைக்குடி ரயில் நிலையத்தில் செயல்படாமலிருந்த டிஜிட்டல் விளக்கு, ரயில் வருகை நேரம் அறிவிப்பு போன்றவற்றை ரயில்வே நிர்வாகம் சரி செய்துள்ளது.

பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு

Posted: 28 Dec 2015 12:18 PM PST

ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்குக் குடியிருப்பு கிராமத்துக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மாணவிகள் புறக்கணிப்பு: சிவகங்கை விளையாட்டு அலுவலர் மீது பெற்றோர் புகார்

Posted: 28 Dec 2015 12:17 PM PST

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் தங்களது குழந்தைகளைப் புறக்கணிப்பதாக காளையார்கோயிலைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவியர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

Posted: 28 Dec 2015 12:17 PM PST

ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினத்தில் 10 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரைப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

காரைக்குடியில் காங்கிரஸ் நிறுவன நாள் விழா

Posted: 28 Dec 2015 12:16 PM PST

காங்கிரஸின் 131ஆவது ஆண்டு நிறுவன நாள் விழா காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட புதிய எஸ்.பி.-யாக ஜியாவுல்ஹக் பொறுப்பேற்பு

Posted: 28 Dec 2015 12:16 PM PST

சிவங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி.-யாக ஜியாவுல்ஹக் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அடிப்படை வசதி கோரி சிவகாசி உதவி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 28 Dec 2015 12:15 PM PST

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சிவகாசி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம்பெண் வெட்டிக் கொலை

Posted: 28 Dec 2015 12:15 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை இளம்பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

குருந்தமடம் அரசுப் பள்ளியில் புதிய கட்டடப் பணிகள் தொடக்கம்

Posted: 28 Dec 2015 12:14 PM PST

அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது.

"நாடாளுமன்றத்தில் இதேநிலை நீடித்தால் போராட்டம்'

Posted: 28 Dec 2015 12:14 PM PST

நாடாளுமன்றத்தில் இதேநிலை நீடித்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சுதாகர்ரெட்டி கூறினார்.

சிவகாசி

Posted: 28 Dec 2015 12:13 PM PST

சிவகாசியில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா

Posted: 28 Dec 2015 12:13 PM PST

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை அக்கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பில் சிவகாசியில் நடைபெற்றது.

சாத்தூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

Posted: 28 Dec 2015 12:12 PM PST

சாத்தூரில் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் பா.ம.க. மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

Posted: 28 Dec 2015 12:12 PM PST

ராஜபாளையம் ரயில்வே பீடர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தினர் ரூ.4.83 லட்சம் வெள்ள நிவாரணம் வழங்கல்

Posted: 28 Dec 2015 12:11 PM PST

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வெள்ள நிவாரண நிதியாக ரூ.4.83 லட்சத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சங்கத்தின் தலைவரான ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா அனுப்பினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேலாண்மை பயிற்சி முகாம்

Posted: 28 Dec 2015 12:11 PM PST

சிவகாசி வட்டார வேளாண்மைத் துறை சார்பில் திங்கள்கிழமை நிலக்கடலை மற்றும் எள் பயிர்களுக்கான மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

வெள்ளை மாளிகையின் படிக்கட்டுகளில் ஏற...

Posted: 28 Dec 2015 12:10 PM PST

பல்வேறு சறுக்கல்கள் இருந்தாலும் உலகிலேயே ஆயுதம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியாக வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நாடு அமெரிக்கா

நியாயவிலைக் கடையை திறக்க கோரி காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 28 Dec 2015 12:10 PM PST

நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை கல்லாம்பிரம்பு கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

சின்னவள்ளிக்குளம் சாலையை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

Posted: 28 Dec 2015 12:09 PM PST

விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளம் கிராமப் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனர்.

பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Posted: 28 Dec 2015 12:09 PM PST

சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் 1990ஆம் ஆண்டு இறுதி ஆண்டு படித்த மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து ஞாயிற்றுக்கிழமை தங்களது குடும்பத்துடன் சந்தித்துக் கொண்டனர்.

வங்கிக் கடனுதவியே உயிர்நாடிப் பிரச்னை!

Posted: 28 Dec 2015 12:09 PM PST

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தால் வீடுகளையும், உடமைகளையும் இழந்தவர்கள்

ராஜபாளையம் அருகே இலவச மருத்துவ முகாம்

Posted: 28 Dec 2015 12:08 PM PST

ராஜாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி மிராஸ் ஏ.பார்த்தசாரதி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில்   இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

Posted: 28 Dec 2015 12:08 PM PST

திருத்தங்கல் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை அருகே தண்ணீர் திறப்பதில் மோதல்: கண்மாய்க்கு போலீஸ் பாதுகாப்பு

Posted: 28 Dec 2015 12:07 PM PST

தண்ணீர் திறப்பதில் 2 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, நிலக்கோட்டை அடுத்துள்ள பிள்ளையார்நத்தம் கண்மாய்க்கு திங்கள்கிழமை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பெரியகுளம் அருகே கடையில் ரூ.10ஆயிரம் திருட்டு

Posted: 28 Dec 2015 12:07 PM PST

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சி கவுன்சிலரின் கடையில் ரூ.10ஆயிரம்,செல்லிடப்பேசிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

சின்னமனூர் அருகே மரங்களை சேதப்படுத்தியவர் கைது

Posted: 28 Dec 2015 12:06 PM PST

சின்னமனூர் அருகே தோட்டத்தில் புகுந்து மரங்களை சேதப்படுத்தியவரை  போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

உதவித் தொகை வழங்க திருநங்கைகள் கோரிக்கை

Posted: 28 Dec 2015 12:05 PM PST

திருநங்கைகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்கக் கோரி திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரத்தில் மிலாது விழா

Posted: 28 Dec 2015 12:05 PM PST

ஒட்டன்சத்திரத்தில் தீனி கிட்ஸ் மக்தப் மதரஸா சார்பில் சனிக்கிழமை மிலாது விழா கொண்டாடப்பட்டது.

ஜி.கே.வாசன் பிறந்த நாள்

Posted: 28 Dec 2015 12:04 PM PST

பழனியை அடுத்த ஆயக்குடியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அவசர அவசியத் தேவை!

Posted: 28 Dec 2015 12:02 PM PST

நோயாளிகளின் மருத்துவச் செலவைக் குறைக்கும் செயல்பாடுகளில் மத்திய சுகாதாரத் துறை ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி சில பயனுள்ள மாற்றங்களை செய்து வருகிறது. அண்மையில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கான 18 மாத்திரைகளை விலைக்கட்டுப்பாட்டு சட்டத்துக்குள் கொண்டுவந்து, அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்தது. தற்போது இதய அறுவைச் சிகிச்சையில் தமனியில் பொருத்தப்படும் வலைக்குழாய் (STENT) விலையை அதிகபட்சமாக ரூ.28,000 என நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்குள் 50 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: துணைவேந்தர்

Posted: 28 Dec 2015 12:01 PM PST

2022ஆம் ஆண்டுக்குள் 50 கோடி பேருக்கு தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காந்தி கிராம பல்கலை. துணைவேந்தர் சு.நடராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

விலையில்லா பொருள்கள் பெற டோக்கன் வாங்க வரிசையில் நின்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு

Posted: 28 Dec 2015 12:00 PM PST

விலையில்லா பொருள்கள் பெறுவதற்காக டோக்கன் வாங்க வரிசையில் நின்ற முதியவர் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தார்.

பழனியில் டிசம்பர் 30 மின்தடை

Posted: 28 Dec 2015 11:59 AM PST

பழனி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிச. 30) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

பழனி- பொள்ளாச்சி ரயில் பாதையில் 8 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரம்

Posted: 28 Dec 2015 11:59 AM PST

பழனி முதல் பொள்ளாச்சி வரையிலான ரயில் பாதை வழித் தடத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி மதிப்பில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழனி வையாபுரி குளத்தில் ஆண் சடலம் மீட்பு

Posted: 28 Dec 2015 11:58 AM PST

பழனி வையாபுரி குளத்தில் ஆண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கார் மோதி முதியவர் சாவு

Posted: 28 Dec 2015 11:57 AM PST

கொடைரோட்டில் கார் மோதி முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

நான்காம் கட்ட நிலக்கரிச் சுரங்க ஏலம் ஜனவரியில் தொடக்கம்

Posted: 28 Dec 2015 11:57 AM PST

நிலக்கரி சுரங்கங்களுக்கான நான்காம் கட்ட ஏலம் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என மத்திய நிலக்கரித் துறைச் செயலர் அனில் ஸ்வரூப் தெரிவித்தார்.

பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை மைய உரிமம்: வேளாண்மை பட்டதாரிகளுக்கே வாய்ப்பு

Posted: 28 Dec 2015 11:57 AM PST

வேளாண்மைத் துறை மற்றும் அறிவியல் தொடர்பான பாடங்களில் பட்டம் முடித்தவர்களுக்கு மட்டுமே பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை மையம் நடத்த உரிமம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்ததாரர்கள் முற்றுகை

Posted: 28 Dec 2015 11:56 AM PST

தேனி நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை நகராட்சி ஒப்பந்ததாரர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி தைப் பூசத் திருவிழா: ஜன.18இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 28 Dec 2015 11:56 AM PST

பழனி தைப்பூசத் திருவிழா வரும் ஜன. 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி இணையதளத்தில் ரயில் பயண முன்பதிவு செய்யும் வசதி

Posted: 28 Dec 2015 11:56 AM PST

ரயில் பயணத்துக்கான முன்பதிவுகளை ஐசிஐசிஐ வங்கி இணையதளத்தின் மூலமாக மேற்கொள்ளலாம் என அவ்வங்கி அறிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் 195 புள்ளிகள் அதிகரிப்பு

Posted: 28 Dec 2015 11:54 AM PST

முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு

பழனி

Posted: 28 Dec 2015 11:54 AM PST

டி.பொம்மிநாயக்கன்பட்டியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

Posted: 28 Dec 2015 11:53 AM PST

ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

"யூரியா உற்பத்தி அதிகரிப்பால் ரூ.10,000 கோடி மானியம் குறையும்'

Posted: 28 Dec 2015 11:53 AM PST

வரும் 2016-17 நிதி ஆண்டில் யூரியா உற்பத்தியை 2.50 கோடி டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய குடும்ப அட்டை வழங்கல்

Posted: 28 Dec 2015 11:53 AM PST

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 60 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார்.

தேனியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 28 Dec 2015 11:52 AM PST

தேனி அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிரியாவில் குண்டு வெடிப்பு: 14 பேர் சாவு

Posted: 28 Dec 2015 11:52 AM PST

சிரியாவில் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் 14 பேர் உயிரிழந்தனர்; 132 பேர் காயமடைந்தனர்.

நைஜீரியா: போகோ ஹராம் தாக்குதலில் 80 பேர் பலி

Posted: 28 Dec 2015 11:52 AM PST

நைஜீரியாவில் போகா ஹராம் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய தாக்குதல்களில் 80 பேர் உயிரிழந்ததனர்.

சுயஉதவிக் குழு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி மனு

Posted: 28 Dec 2015 11:52 AM PST

சுயஉதவிக் குழு சார்பில் கன்னிவாடிப் பேரூராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபடுவோருக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ஆப்கனில் நேட்டோ வாகனங்கள் மீது தற்கொலைத் தாக்குதல்: ஒருவர் பலி

Posted: 28 Dec 2015 11:51 AM PST

ஆப்கன் தலைநகர் காபூலில், நேட்டோ வாகனங்கள் மீது தலிபான்கள் திங்கள்கிழமை நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட 10 தொகுதிகளில் கிறிஸ்தவ வன்னியர்கள் போட்டி

Posted: 28 Dec 2015 11:51 AM PST

நத்தம், திண்டுக்கல், ரிஷிவந்தியம் உள்பட 10 தொகுதிகளில் கிறிஸ்தவ வன்னியர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது என ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டியில் மக்கள்நல கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 28 Dec 2015 11:50 AM PST

ஆண்டிபட்டி பகுதியில் முடங்கிக் கிடக்கும் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி மக்கள் நல கூட்டு இயக்கத்தினர் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி

Posted: 28 Dec 2015 11:50 AM PST

நிலக்கோட்டை வட்டாரத்தில் உள்ள விளாம்பட்டியில் நெல் பயிரில் விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளியின் 2ஆவது வகுப்பு விவசாயி சிவக்குமார் வயலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காச நோயாளிகளுக்கு உதவும் திட்டம்: 50 ஆயிரம் அஞ்சல் தலைகள் விற்பனைக்கு இலக்கு

Posted: 28 Dec 2015 11:50 AM PST

காசநோயாளிகளுக்கு உதவும் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 50,400 அஞ்சல் தலைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™