Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கோடை மின் தேவையை சமாளிக்குமா வாரியம்?

Posted: 25 Dec 2015 07:18 AM PST

கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க, முன் கூட்டியே பணிகளை துவக்க, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் தினசரி மின் தேவை, சராசரியாக, 12 ஆயிரத்து, 500 மெகாவாட். கோடை காலத்தில், மின் தேவை வழக்கத்தை விட, 1,000 - 1,500 மெகாவாட் கூடுதலாக அதிகரிக்கும். 2014 ஜூன், 24ல், மின் தேவை, 13 ஆயிரத்து, 775 மெகாவாட்; இதுவே, உச்சக்கட்ட மின் தேவை. இதனால், நடப்பு ஆண்டின் கோடை காலத்தில், மின் தேவை, 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

சட்டசபை தேர்தல்:
ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஏப்., முதல் ஜூலை வரை, விட்டு விட்டு பெய்த மழையால், மின் தேவை, 13 ...

7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தாதீங்க: ஐந்து மாநிலங்கள் கோரிக்கை

Posted: 25 Dec 2015 07:36 AM PST

புதுடில்லி:'ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை, அடுத்த மாதம் அமல்படுத்தக் கூடாது; அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு, அதன் பரிந்துரையை, மத்திய அரசிடம் அளித்துள்ளது.

கூடுதல் செலவு:
அதில், 'மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், 2016, ஜன., 1 முதல், அதை அமல்படுத்த வேண்டும்' என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய ...

டில்லி கிரிக்கெட் சங்க விவகாரம்: கவர்னர் - முதல்வர் மோதல்

Posted: 25 Dec 2015 07:38 AM PST

புதுடில்லி :டில்லியில், கவர்னர் நஜீப் ஜங்கிற்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே, மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கவர்னராக உள்ள நஜீப் ஜங், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சில நடவடிக்கைகள் குறித்து, ஏற்கனவே கேள்வி எழுப்பினார்.

பரபரப்பு:
கவர்னர் நியமித்த அதிகாரியை முதல்வர் ரத்து செய்ததும், முதல்வர் நியமித்த அதிகாரியை கவர்னர் ரத்து செய்ததும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் ஏவல் ஆளாக, கவர்னர் செயல்படுவதாக, கெஜ்ரிவால் ...

காற்றில் கலக்கும் கந்தக துகள்: அமில மழை அபாயம்

Posted: 25 Dec 2015 08:04 AM PST

காரைக்குடி: காற்றில் கலக்கும் கந்தக துகள் அளவு 1990ம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு 20 ஆண்டுக்கும் 300 சதவீதம் அதிகரித்து வருகிறது. இதனால் சாதாரண மழை கொஞ்சம், கொஞ்சமாக அமில மழையாக மாறி வருகிறது, என்கின்றனர் அறிவியலாளர்கள்.கட்டடம் கட்டி 15 ஆண்டு தான் ஆகிறது, அதற்குள் கான்கிரீட் கம்பி துருபிடித்து, விரிசல் விட்டுள்ளது. கார், டூவீலர் வாங்கி ஒரு ஆண்டு தான் ஆகிறது கலர் மங்கி விட்டது. 1,500 ரூபாய் கொடுத்து வாங்கிய சட்டை, ஓராண்டிலேயே கலர் மங்கி விட்டது, என்பது நம் வாழ்வின் அன்றாடம் நடக்கும் உரையாடல். மழையில் சிறிது நேரம் தான் நனைந்தேன் காய்ச்சல் வந்து விட்டது, என டாக்டரை ...

பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ்.,: பிரதமர் மோடியின் புதிய திட்டம்

Posted: 25 Dec 2015 08:12 AM PST

புதுடில்லி,: மக்களுடன் மிக நெருக்கமாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக, பிரதமர் மோடி, மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., தகவல்களை அனுப்ப முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவை மின்னணுமயமாக்கும், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, 2014ல், பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, 'இ - சம்பர்க்' என்ற பிரிவு உள்ளது. இப்பிரிவின் கீழ், மத்திய, மாநில அரசு ஊழியர்களை மட்டுமின்றி, பல்துறை வல்லுனர்கள், சாதாரண குடிமக்கள் உள்ளிட்டோரையும், எஸ்.எம்.எஸ்., என்ற, குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்ள மோடி ...

மத்திய அமைச்சர் அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதம் ஒத்திவைப்பு: கருணாநிதி அறிவிப்பு

Posted: 25 Dec 2015 09:05 AM PST

சென்னை :'ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என, மத்திய அமைச்சர் அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று, உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது' என தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதுதான் காரணம். 'இதற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்' என கவர்னரிடம் முறையிட்டேன். 'விசாரணை நடத்தப்படும்' என கவர்னர் உறுதியளித்தார்; ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.இதற்கிடையே வெள்ள நிவாரணம் வழங்குவதிலும் ஆளுங்கட்சியினரால் முறைகேடுகள் ...

கூட்டணிக்காக விஜயகாந்திடம் தி.மு.க., கெஞ்சுவதா? ஸ்டாலின் ஆதரவாளர்கள் முணுமுணுப்பு

Posted: 25 Dec 2015 09:06 AM PST

'தேர்தல் கூட்டணிக்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம், தி.மு.க., கெஞ்சுவதா' என, ஸ்டாலின் ஆதரவு வட்டாரத்தில், முணுமுணுப்பு கிளம்பி உள்ளது.ஏற்கனவே விடுத்த கூட்டணி அழைப்புக்கு, பதில் சொல்லாத நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, இரு நாட்களுக்கு முன், மீண்டும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இது, தி.மு.க.,வில், பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர் வட்டத்தில், கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 'தனித்து போட்டியிடும் அளவுக்கு, கட்சியை ஸ்டாலின் தயார்படுத்தி வரும் நிலையில், விஜயகாந்திடம், எதற்காக இறங்கி போக வேண்டும்; கெஞ்ச வேண்டும்' என்பது தான், அவர்கள் ...

வெள்ளத்தால் நேர்ந்த அவலம்: கார் விலையை விட 'சர்வீஸ்' செலவு அதிகம்

Posted: 25 Dec 2015 09:53 AM PST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும், ஆயிரக்கணக்கான கார்கள், சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 'சர்வீஸ் சென்டர்'களில் குவிந்த கார்களின் பாதிப்புக்கு ஏற்றவாறு, மூன்று வகைகளாக பிரிக்கின்றனர்.இன்ஜினுக்குள் நீர் புகுந்திருந்தால், நிறைய பாகங்கள் பாதிக்கப்படும்; அந்த கார்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட உதிரி பாகங்களை மாற்ற வேண்டும். அதனால், கார் வாங்கிய விலையை காட்டிலும், உதிரி பாகங்களை மாற்றுவதற்கான செலவு, மிக அதிகமாக இருப்பதாக, உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து கார் சர்வீஸ் சென்டர் நிர்வாகிகள் கூறியதாவது:காரின் ...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு மோடி திடீர் விஜயம்: இரு நாட்டு உறவில் புதிய திருப்பத்திற்கு வாய்ப்பு

Posted: 25 Dec 2015 10:16 AM PST

லாகூர்: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு, பிரதமர் மோடி, நேற்று திடீர் பயணம் மேற்கொண்டார். பிரதமரின் பாக்., பயணத்தால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில், புதிய திருப்பத்துக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவில், இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை முடித்து, நேரடியாக டில்லி திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. திடீர் திருப்பமாக, பிரதமர் மோடி, நேற்று காலை, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றார். அங்கு, இந்தியா சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள, புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைத்தார். பின், ஆப்கன் ...

நொய்டா - ஆக்ராவை இணைக்கும் யமுனா விரைவு சாலை விற்பனை: 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனால் ஜே.பி., குழுமம் அதிரடி

Posted: 25 Dec 2015 11:06 AM PST

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலத்தில், கிரேட்டர் நொய்டாவையும், ஆக்ராவையும் இணைக்கும், 165 கி.மீ., நீளமுள்ள, 'யமுனா விரைவு நெடுஞ்சாலை'யை, விற்பனை செய்யப் போவதாக, அதை அமைத்த ஜே.பி., குழுமம் அறிவித்துள்ளது.டில்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவையும், ஆக்ராவையும் இணைக்கும், அதிவிரைவு நெடுஞ்சாலை திட்டத்தை, 2003ல், உ.பி.,யின் அப்போதைய முதல்வராக இருந்த மாயாவதி அறிவித்தார். பின், ஆட்சி மாற்றம் காரணமாக, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2007ல், மாயாவதி மீண்டும் உ.பி., முதல்வரானதும், 'யமுனா விரைவு நெடுஞ்சாலை' என்ற பெயரில், இத்திட்டம் உயிர் பெற்றது. ஜே.பி., குழுமம் என்ற நிறுவனம், ...

ராணுவ ஹெலிகாப்டர் தயாரிக்க கைகோர்க்கும் ரஷ்யா

Posted: 25 Dec 2015 12:47 PM PST

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின், 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, 'கமோவ்' ரகத்தைச் சேர்ந்த, 200 ஹெலிகாப்டர்களை, ரஷ்யா தயாரிக்க உள்ளது.ரஷ்ய பயணம் மேற்கொண்ட மோடி, நேற்று முன்தினம், மாஸ்கோ நகரில், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா - ரஷ்யா இடையே, 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.அவற்றில், 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ், கமோவ் ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு மற்றும் அணு உலைகள் நிர்மாணம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது, இந்தியாவில் தயாரிப்போம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™