Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சொல் ஜாலம்...
- ஆப்கனில் புதிய நாடாளுமன்றம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்:ரூ.600 கோடி இந்திய உதவியில் கட்டப்பட்டது
- வாஜ்பாய் 91-ஆவது பிறந்த நாள்:பிரதமர் மோடி, தலைவர்கள் வாழ்த்து
- ஆர்எஸ்எஸ் பங்களிப்பை மக்கள் அறியச் செய்ய வேண்டும்
- பள்ளிகள் மாணவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிவிட்டன
- தமிழகத்தில் பாஜக யாருடன் கூட்டணி?
- ஜல்லிக்கட்டு: திமுக போராட்டம் ஒத்திவைப்பு
- காவல் துறைக்கான ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் கடிதம்
- ஒரே பக்கத்தில் விண்ணப்பப் படிவங்கள்!மத்திய அரசு புதிய திட்டம்
- 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அவகாசம் வேண்டும்:தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை
- பழம்பெரும் ஹிந்தி நடிகை சாதனா மறைவு
- சாலையில் திரியும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும்: ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை
- இபிஎஃப்ஓ அமைப்புக்கு முகநூல், சுட்டுரைக் கணக்குகள் தொடக்கம்
- பயங்கரவாதி அப்துல் ரகுமான் ஒடிஸா தலைமைச் செயலகத்துக்கு வந்தாரா?காவல்துறை ஆணையர் மறுப்பு
- காங்கிரஸின் ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பு?மகாராஷ்டிர அரசு கவலை
- கர்நாடகத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி
- அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் தேதியை அறிவிக்க வேண்டும்: சிவசேனை
- சத்தீஸ்கர்: நக்சலைட் சுட்டுக் கொலை
- ரயில்வே மேம்பால பணி தொடங்கக்கோரி நடைபயணம்
- அவசரக் கால நிவாரணத்துக்கு அதிக நிதி:ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை
- ஒரு செ.மீ. உயரத்தில் தங்கத்தில் மாடுபிடி வீரர் சிலை: ராஜபாளையம் தொழிலாளி சாதனை
- மோடியின் பயணம்: வரவேற்பும், எதிர்ப்பும்!
- ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஜன.4-இல் போராட்டம்
- கோயில்கள் குறித்த கருத்து: உ.பி. அரசு ஆலோசகர் நீக்கம்:அகிலேஷ் அதிரடி
- வாடிப்பட்டி அருகே லாரி மோதி பெண் சாவு
- கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை தாருங்கள்:அமித் ஷாவுக்கு கீர்த்தி ஆஸாத் கடிதம்
- அதிமுகவினர் அமைதி ஊர்வலம்
- சாலையை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்குவதால் 2 கி.மீ., சுற்றளவுக்கு 15 அடியில் நிலத்தடி நீர்மட்டம்
- கிறிஸ்துமஸ் தினம்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்
- லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை
- பெட்டிக்கடையில் மதுவிற்ற இருவர் கைது
- குலாம் நபி ஆஸாத் பாதுகாவலர் துப்பாக்கி தோட்டா பாய்ந்து காயம்
- ரஷியாவின் எண்ணெய் நிறுவனப் பங்குகளை இந்தியா வாங்குகிறது
- கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
- மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
- மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை வெல்ல ஆஸ்திரேலியா தீவிரம்
- கைத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
- சிவகாசி
- கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள்
- பட்டாசு வியாபாரி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
- தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்:டர்பனில் இன்று தொடக்கம்
- ராபின் சிங் அபாரம்:இலங்கையை வீழ்த்தியது இந்தியா
- வெப்பம் கடத்தா செங்கல்: பொறியியல் கல்லூரி மாணவி உருவாக்கம்
- தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- புதிய பொது விநியோக கட்டடம் திறப்பு
- தேசிய ஊரக விளையாட்டுப் போட்டி:தமிழக அணி சாம்பியன்
- தேனி அருகே ஆற்றில் சிறுமி சடலம் மீட்பு
- தேனீ கொட்டியதில் 20 க்கும் மேற்பட்டோர் காயம்
- ஊக்கமருந்து: குசல் பெரேராவுக்கு 4 ஆண்டு தடை?
- செந்துறை ஊராட்சியில் ரூ.19 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் தகவல்
- தேசிய பளுதூக்குதல்:சஞ்ஜிதாவுக்கு தங்கம்
- தென் மண்டல கால்பந்து:தமிழகம், புதுச்சேரி அணிகள் வெற்றி
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி தேவாலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு
- ரோமியோ, தேசாய்க்கு நோட்டீஸ்
- ஆண்டிபட்டி அருகே வேன் கவிழ்ந்து பெண் சாவு; நான்கு பேர் காயம்
- மாணவிக்கு கருக்கலைப்பு: உறவினர் உள்பட 3 பேர் கைது
- பகட்டுகளைத் தவிர்த்து எளிமையாய் வாழுங்கள்:போப் பிரான்ஸிஸ் கிறிஸ்துமஸ் உரை
- தேனி நகராட்சி சந்தை முன் விவசாயிகள் முற்றுகை
- கார் மோதி விவசாயி சாவு
- போலி பீடி விற்பனையாளர்கள் 3 பேர் கைது
- சுருளி அருவியில் தவறி விழுந்து சென்னை ஐயப்ப பக்தர் சாவு
- போடியில் விலையில்லாப் பொருள்கள்: அமைச்சர் வழங்கினார்
- திண்டுக்கல்
- குடிபோதையில் மனைவியை தாக்கியவர் கைது
- சீன நிலச்சரிவுக்கு மனிதத் தவறே காரணம்:விசாரணை அதிகாரிகள்
- திண்டுக்கல் மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி
- வேளாண் பொறியில் துறை சார்பில் மானிய விலையில் நெல் நடவு இயந்திரம்
- தனியார் பேருந்து வீட்டில் மோதி விபத்து: 10 பேர் காயம்
- அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் அம்மன் பொன்னூஞ்சல்
- தொலைதூர வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து?
- கிறிஸ்துமஸ் விடுமுறை: பழனியில் பக்தர்கள் கூட்டம்
- காலியாகவுள்ள 1,000 டிடிஏ குடியிருப்புகள்! நலிவடைந்த பிரிவினருக்காக கட்டப்பட்டவை
- வங்கி மோசடி: 2 பேர் கைது
- ஆம் ஆத்மியில் இணைந்தார்: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ
- அமெரிக்காவில் புயல்: 14 பேர் பலி
- கர்கர்டூமா நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் திட்டமிட்டு ஈடுபடுத்தப்பட்ட சிறார்கள்!
- நைஜீரியாவில் சமையல் எரிவாயு லாரி வெடித்து 100-க்கும் மேற்பட்டோர் பலி
- கட்டட விபத்தில் ஒருவர் பலி; 5 பேர் காயம்
- ஆப்கனில் பேருந்து - லாரி மோதல்:24 பேர் சாவு
- சீனா: சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 17,000 நிறுவனங்கள் மூடல்
- தனியார் பாதுகாப்பு நவீனப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்த வலியுறுத்தல்
- சோழா எம்எஸ் நிறுவனப் பங்கு விற்பனை
- பங்கேற்பு ஆவணம் மூலமான முதலீடு:ரூ.2.54 லட்சம் கோடியாக சரிவு
- புது தில்லி
- இண்டிகோ விமானங்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
- 11 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல்
- ரிலையன்ஸ் சிமென்ட் பிரிவு விற்பனை:இந்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது
- கணவர் சுட்டுக் கொலை: மனைவி விஷம் குடிப்பு
- சரோஜினி நகர் ரயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டெடுப்பு: ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை
- ரூ.30 லட்சம் போதை பொருளுடன் நைஜீரியர் கைது
- 11 ஆண்டுகளாகியும் மறையாத ஆழிப் பேரலையின் வடுக்கள்!
- மதன் மோகன் மாளவியாவுக்கு கேஜரிவால் புகழாரம்
- சர்வதேச மோசடி கும்பல் கைது
- வேதங்கள் உலக சகோதரத்துவத்தை வலியுறுத்துகின்றன: பிரணாப் முகர்ஜி
- தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
- அரசுப் பள்ளிகள் அசுத்தமாக இருந்தால் ஊதிய உயர்வு நிறுத்தம்
- மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்: 8 பேர் கைது
- வெட்டுக் காயத்துடன் ஆண் சடலம் மீட்பு
- ஏரியின் சேற்றில் சிக்கி மாணவர் சாவு
| Posted: 26 Dec 2015 05:25 AM PST இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். |
| ஆப்கனில் புதிய நாடாளுமன்றம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்:ரூ.600 கோடி இந்திய உதவியில் கட்டப்பட்டது Posted: 25 Dec 2015 11:30 AM PST இந்தியாவின் நிதியுதவியுடன் ஆப்கானிஸ்தானுக்கு சுமார் ரூ.600 கோடியில் (9 கோடி அமெரிக்க டாலர்கள்) கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். |
| வாஜ்பாய் 91-ஆவது பிறந்த நாள்:பிரதமர் மோடி, தலைவர்கள் வாழ்த்து Posted: 25 Dec 2015 11:29 AM PST முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 91ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். |
| ஆர்எஸ்எஸ் பங்களிப்பை மக்கள் அறியச் செய்ய வேண்டும் Posted: 25 Dec 2015 11:28 AM PST சமூகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் பங்களிப்பை ஆய்வு செய்து, அதை மக்கள் அறியச் செய்ய வேண்டியது அவசியம் என்று மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கேட்டுக் கொண்டார். |
| பள்ளிகள் மாணவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிவிட்டன Posted: 25 Dec 2015 11:28 AM PST இந்தியப் பள்ளிகள் மாணவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிவிட்டன என்று இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் தெரிவித்தார். |
| தமிழகத்தில் பாஜக யாருடன் கூட்டணி? Posted: 25 Dec 2015 11:27 AM PST சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுச் செயலரும், மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர் ராவ் கூறினார். |
| ஜல்லிக்கட்டு: திமுக போராட்டம் ஒத்திவைப்பு Posted: 25 Dec 2015 11:27 AM PST ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி, மதுரையில் நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். |
| காவல் துறைக்கான ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted: 25 Dec 2015 11:26 AM PST காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். |
| ஒரே பக்கத்தில் விண்ணப்பப் படிவங்கள்!மத்திய அரசு புதிய திட்டம் Posted: 25 Dec 2015 11:25 AM PST அரசு சேவைகளைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஒரே பக்கத்தில் இருக்கும் வகையில் எளிமைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அவகாசம் வேண்டும்:தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை Posted: 25 Dec 2015 11:25 AM PST ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள், மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன. |
| பழம்பெரும் ஹிந்தி நடிகை சாதனா மறைவு Posted: 25 Dec 2015 11:23 AM PST நீண்ட நாள்களாக உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் ஹிந்தி நடிகை சாதனா சிவதசானி வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74. |
| சாலையில் திரியும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும்: ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை Posted: 25 Dec 2015 11:23 AM PST இம்மாதம் 31 ஆம் தேதிக்குப் பிறகு ராமநாதபுரத்தில் சாலைகளில் திரியும் கால்நடைகள் ராமேசுவரம் கோயில் கோசாலையில் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| இபிஎஃப்ஓ அமைப்புக்கு முகநூல், சுட்டுரைக் கணக்குகள் தொடக்கம் Posted: 25 Dec 2015 11:22 AM PST தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎஃப்ஓ), தற்போது முகநூல், சுட்டுரை ஆகிய சமூக வலைதளங்களில் இணைந்துள்ளது. |
| பயங்கரவாதி அப்துல் ரகுமான் ஒடிஸா தலைமைச் செயலகத்துக்கு வந்தாரா?காவல்துறை ஆணையர் மறுப்பு Posted: 25 Dec 2015 11:21 AM PST "கட்டாக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட அல்-காய்தா பயங்கரவாதி அப்துல் ரகுமான், ஒடிஸா தலைமைச் செயலகத்துக்கு வந்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அவர் அங்கு வரவே இல்லை' என்று புவனேசுவரம்- கட்டாக் காவல் துறை ஆணையர் ஆர்.பி.சர்மா திட்டவட்டமாகத் தெரிவித்தார். |
| காங்கிரஸின் ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பு?மகாராஷ்டிர அரசு கவலை Posted: 25 Dec 2015 11:21 AM PST மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, முக்கியப் பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டதால், அந்த மாநில பாஜக அரசு கவலையடைந்துள்ளது. |
| கர்நாடகத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி Posted: 25 Dec 2015 11:20 AM PST கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு டிரைவர்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
| அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் தேதியை அறிவிக்க வேண்டும்: சிவசேனை Posted: 25 Dec 2015 11:20 AM PST அயோத்தியில் ராமர் கோயிலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று மத்தியில் ஆட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள் அறிவிக்க வேண்டும் என்று சிவசேனை வலியுறுத்தியுள்ளது. |
| சத்தீஸ்கர்: நக்சலைட் சுட்டுக் கொலை Posted: 25 Dec 2015 11:20 AM PST சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| ரயில்வே மேம்பால பணி தொடங்கக்கோரி நடைபயணம் Posted: 25 Dec 2015 11:20 AM PST விருதுநகரில் ரயில்வே மேம்பாலப் பணியை தொடங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபயணம் மேற்கொண்டனர். |
| அவசரக் கால நிவாரணத்துக்கு அதிக நிதி:ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை Posted: 25 Dec 2015 11:20 AM PST அவசரக் கால நிவாரணங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. |
| ஒரு செ.மீ. உயரத்தில் தங்கத்தில் மாடுபிடி வீரர் சிலை: ராஜபாளையம் தொழிலாளி சாதனை Posted: 25 Dec 2015 11:19 AM PST ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி 1.5 மில்லிகிராம் தங்கத்தில், ஒரு செ.மீ உயரம் உள்ள மாடுபிடி வீரர் உருவத்தை செய்துள்ளார். |
| மோடியின் பயணம்: வரவேற்பும், எதிர்ப்பும்! Posted: 25 Dec 2015 11:19 AM PST பிரதமர் மோடி திடீரென பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை சந்தித்துள்ளது, தேசிய அளவில் ஒரு தரப்பில் வரவேற்பையும், வேறொரு தரப்பில் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் |
| ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஜன.4-இல் போராட்டம் Posted: 25 Dec 2015 11:18 AM PST ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி ஜன.4 இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கோயில்கள் குறித்த கருத்து: உ.பி. அரசு ஆலோசகர் நீக்கம்:அகிலேஷ் அதிரடி Posted: 25 Dec 2015 11:17 AM PST அயோத்தி, மதுரா ஆகிய இடங்களில் கோயில்கள் கட்டுவதற்கு முஸ்லிம்கள் உதவ வேண்டும் என்று கருத்து தெரிவித்த உத்தரப் பிரதேச மாநில இணையமைச்சருக்கு இணையான அந்தஸ்துள்ள சமாஜவாதி பிரமுகர் ஓம்பால் நெஹ்ராவை முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். |
| வாடிப்பட்டி அருகே லாரி மோதி பெண் சாவு Posted: 25 Dec 2015 11:17 AM PST மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார். |
| கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை தாருங்கள்:அமித் ஷாவுக்கு கீர்த்தி ஆஸாத் கடிதம் Posted: 25 Dec 2015 11:17 AM PST கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அளிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு அக்கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட தர்பங்கா தொகுதி எம்.பி. கீர்த்தி ஆஸாத் கடிதம் எழுதியுள்ளார். |
| Posted: 25 Dec 2015 11:17 AM PST எம்.ஜி.ஆரின் 28-ஆவது நினைவு தின ஊர்வலம் அருப்புக்கோட்டையில் சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. |
| சாலையை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 25 Dec 2015 11:16 AM PST சிவகாசி மணிநகரிலிருந்து விஸ்வநத்தம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் நல கூட்டணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்குவதால் 2 கி.மீ., சுற்றளவுக்கு 15 அடியில் நிலத்தடி நீர்மட்டம் Posted: 25 Dec 2015 11:16 AM PST விருதுநகரின் மையப் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருவதால், சுற்றியுள்ள 2 கி.மீ. பகுதியில் சுமார் 15 அடியில் நிலத்தடி நீர்மட்டம் உள்ளது. |
| கிறிஸ்துமஸ் தினம்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம் Posted: 25 Dec 2015 11:15 AM PST இயேசு கிறிஸ்து அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் புனித நாள் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. |
| லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை Posted: 25 Dec 2015 11:15 AM PST ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லபட்டார். |
| பெட்டிக்கடையில் மதுவிற்ற இருவர் கைது Posted: 25 Dec 2015 11:15 AM PST சிவகாசியில் உரிய அனுமதியின்றி பெட்டிக்கடையில் மதுவிற்றதாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| குலாம் நபி ஆஸாத் பாதுகாவலர் துப்பாக்கி தோட்டா பாய்ந்து காயம் Posted: 25 Dec 2015 11:15 AM PST காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாதின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைவீரரின் காலில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. |
| ரஷியாவின் எண்ணெய் நிறுவனப் பங்குகளை இந்தியா வாங்குகிறது Posted: 25 Dec 2015 11:15 AM PST ரஷியாவின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான வாங்கர்நெஃப்டின் 15 சதவீதப் பங்குகளை இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. |
| கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு Posted: 25 Dec 2015 11:14 AM PST சிவகாசி ஆறுமுகம் சாலையில் நீதிமன்றம் அருகே சிவகுமார்(42) செங்கல் விற்பனைக் கடை வைத்துள்ளார். இவர் வெள்ளிக்கிழமை காலை கடைக்கு வந்து பார்த்தபோது, கடைக் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே மேஜையில் வைத்திருந்த பணம் ரூ.6 ஆயிரம் திருடு போனது தெரியவந்து. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். |
| Posted: 25 Dec 2015 11:14 AM PST சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சித்துராஜபுரம் தேவிநகரைச் சேர்ந்த சண்முகம் மனைவி சுப்புலட்சுமி(65). இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, மோட்டார்சைக்கிளில் வந்த இரு மர்மநபர்கள், சுப்புலட்சுமியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துள்ளனர். சுப்புலட்சுமி சங்கிலியை பிடித்துக் கொண்டதில் பாதி மட்டும் கொள்ளையர்கள் வசம் சென்றுவிட்டது. உடனே அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர். அவர்கள் கையில் 6 பவுன் சங்கிலி சென்றுவிட்டதாக தரப்பட்ட புகாரின்பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகைபறித்த மர்மநபர்களை தேடிவருகின்றனர். |
| மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை வெல்ல ஆஸ்திரேலியா தீவிரம் Posted: 25 Dec 2015 11:13 AM PST ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி மெல்போர்னில் சனிக்கிழமை தொடங்குகிறது. |
| கைத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது Posted: 25 Dec 2015 11:13 AM PST ராஜபாளையத்தில் அனுமதி பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடிவருகின்றனர். |
| Posted: 25 Dec 2015 11:13 AM PST |
| Posted: 25 Dec 2015 11:12 AM PST கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராஜபாளையம் ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| பட்டாசு வியாபாரி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு Posted: 25 Dec 2015 11:12 AM PST சிவகாசியில் பட்டாசு வியாபாரி வீட்டில் 25 பவுன் நகை திருடப்பட்டுள்ளதாக போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது. |
| தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்:டர்பனில் இன்று தொடக்கம் Posted: 25 Dec 2015 11:12 AM PST தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது. |
| ராபின் சிங் அபாரம்:இலங்கையை வீழ்த்தியது இந்தியா Posted: 25 Dec 2015 11:10 AM PST தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் இலங்கையைத் தோற்கடித்தது. இந்திய வீரர் ராபின் சிங் இரு கோல்களை அடித்து அசத்தினார். |
| வெப்பம் கடத்தா செங்கல்: பொறியியல் கல்லூரி மாணவி உருவாக்கம் Posted: 25 Dec 2015 11:10 AM PST சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரி கட்டடவியல்துறை மாணவி ஆர்.சுகன்யா வெப்பம் கடத்தா செங்கலை உருவாக்கியுள்ளதாக அக்கல்லூரி முதல்வர் எஸ்.அறிவழகன் தெரிவித்துள்ளார். |
| தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Posted: 25 Dec 2015 11:10 AM PST விருதுநகரில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி, மறையுரை மற்றும் ஜெப வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். |
| புதிய பொது விநியோக கட்டடம் திறப்பு Posted: 25 Dec 2015 11:09 AM PST பழனி அருகே மல்லையகவுண்டன்பட்டியில் புதிய பொது விநியோக கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. |
| தேசிய ஊரக விளையாட்டுப் போட்டி:தமிழக அணி சாம்பியன் Posted: 25 Dec 2015 11:09 AM PST அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊரக விளையாட்டு போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. |
| தேனி அருகே ஆற்றில் சிறுமி சடலம் மீட்பு Posted: 25 Dec 2015 11:09 AM PST தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைப் பெரியாற்றில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. |
| தேனீ கொட்டியதில் 20 க்கும் மேற்பட்டோர் காயம் Posted: 25 Dec 2015 11:08 AM PST ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். |
| ஊக்கமருந்து: குசல் பெரேராவுக்கு 4 ஆண்டு தடை? Posted: 25 Dec 2015 11:08 AM PST இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா ஊக்கமருந்து பயன்படுத்தியது "பி' மாதிரி சோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என தெரிகிறது. |
| செந்துறை ஊராட்சியில் ரூ.19 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் தகவல் Posted: 25 Dec 2015 11:08 AM PST கடந்த 4 ஆண்டுகளில் செந்துறை ஊராட்சியில் மட்டும் ரூ.19 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார். |
| தேசிய பளுதூக்குதல்:சஞ்ஜிதாவுக்கு தங்கம் Posted: 25 Dec 2015 11:08 AM PST தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சஞ்ஜிதா சானு, கொரடா ரமணா ஆகியோர் தங்கம் வென்றனர். |
| தென் மண்டல கால்பந்து:தமிழகம், புதுச்சேரி அணிகள் வெற்றி Posted: 25 Dec 2015 11:07 AM PST திருச்சியில் நடைபெற்று வரும் தென் மண்டல கால்பந்து போட்டியின் லீக் ஆட்டங்களில் தமிழகம், புதுச்சேரி அணிகள் வெற்றி பெற்றன. |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி தேவாலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு Posted: 25 Dec 2015 11:07 AM PST ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக காளைகளை அழைத்துவந்து, கிராம மக்கள் சார்பில் தேவாலாயத்தின் முன்பு பொங்கல் வைத்து வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது. |
| Posted: 25 Dec 2015 11:07 AM PST பயிற்சி முகாமுக்கு வராத கால்பந்து வீரர்கள் ரோமியோ பெர்னாண்டஸ், மந்தார் தேசாய் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்). |
| ஆண்டிபட்டி அருகே வேன் கவிழ்ந்து பெண் சாவு; நான்கு பேர் காயம் Posted: 25 Dec 2015 11:07 AM PST ஆண்டிபட்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பலியானார். மேலும் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். |
| மாணவிக்கு கருக்கலைப்பு: உறவினர் உள்பட 3 பேர் கைது Posted: 25 Dec 2015 11:06 AM PST கொடைக்கானலைச் சேர்ந்த மாணவியை கார்ப்பமாக்கி, பின்னர் கருக்கலைப்பு செய்த அவரது சித்தப்பா, சித்தி உள்ளிட்ட 3 பேரை மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| பகட்டுகளைத் தவிர்த்து எளிமையாய் வாழுங்கள்:போப் பிரான்ஸிஸ் கிறிஸ்துமஸ் உரை Posted: 25 Dec 2015 11:06 AM PST "உலகம் முழுவதும் வசிக்கும் கிறிஸ்துவர்கள், பகட்டுளைக் கைவிட்டு, எளிமையான வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்' என போப் பிரான்ஸிஸ் அறிவுரை கூறியுள்ளார். |
| தேனி நகராட்சி சந்தை முன் விவசாயிகள் முற்றுகை Posted: 25 Dec 2015 11:05 AM PST தேனி அல்லிநகரம் நகராட்சி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும் வேளாண் விளைபொருள்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை நகராட்சி சந்தை வளாகம் முன் விவசாயிகள் முற்றுகையிட்டனர். |
| Posted: 25 Dec 2015 11:05 AM PST ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதியதில் பலத்த காயமடைத்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| போலி பீடி விற்பனையாளர்கள் 3 பேர் கைது Posted: 25 Dec 2015 11:05 AM PST தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் போலி பீடிகள் மொத்த விற்பனையில் ஈடுபட்ட வந்த மூவரை ஓடைப்பட்டி போலீஸார் கைது செய்தனர். |
| சுருளி அருவியில் தவறி விழுந்து சென்னை ஐயப்ப பக்தர் சாவு Posted: 25 Dec 2015 11:04 AM PST சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சுருளி அருவியில் குளிக்கும்போது தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| போடியில் விலையில்லாப் பொருள்கள்: அமைச்சர் வழங்கினார் Posted: 25 Dec 2015 11:04 AM PST போடியில் 2-ஆம் கட்டமாக விலையில்லா பொருள்களை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினார். |
| Posted: 25 Dec 2015 11:03 AM PST |
| குடிபோதையில் மனைவியை தாக்கியவர் கைது Posted: 25 Dec 2015 11:03 AM PST ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (50). இவர் தினசரி குடித்து விட்டு வந்து மனைவி ஈஸ்வரி (43)யை அடித்து துன்புறுத்துவராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை குடித்து விட்டு வந்து மனைவியை அடித்துள்ளார். இது குறித்து அவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வேலாயுதத்தைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
| சீன நிலச்சரிவுக்கு மனிதத் தவறே காரணம்:விசாரணை அதிகாரிகள் Posted: 25 Dec 2015 11:02 AM PST சீனாவின் ஷென்ùஸன் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுக்கு மனிதத் தவறே காரணம் என்று விசாரணை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். |
| திண்டுக்கல் மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி Posted: 25 Dec 2015 11:02 AM PST கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். |
| வேளாண் பொறியில் துறை சார்பில் மானிய விலையில் நெல் நடவு இயந்திரம் Posted: 25 Dec 2015 11:01 AM PST வேளாண் பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் பண்ணைக் கருவிகளைப் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். |
| தனியார் பேருந்து வீட்டில் மோதி விபத்து: 10 பேர் காயம் Posted: 25 Dec 2015 11:00 AM PST திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல்நிலையம் அருகே வெள்ளிக்கிழமை தனியார் பேருந்து வீட்டில் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். |
| அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் அம்மன் பொன்னூஞ்சல் Posted: 25 Dec 2015 11:00 AM PST பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மன் பொன்னூஞ்சல் விழா நடைபெற்றது. சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. |
| தொலைதூர வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து? Posted: 25 Dec 2015 11:00 AM PST அருகிலுள்ள விண்கற்களைவிட, தொலைதூரத்தில் இருக்கும் வால்நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். |
| கிறிஸ்துமஸ் விடுமுறை: பழனியில் பக்தர்கள் கூட்டம் Posted: 25 Dec 2015 10:59 AM PST கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தொடர்விடுமுறை காரணமாக பழனியில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. |
| காலியாகவுள்ள 1,000 டிடிஏ குடியிருப்புகள்! நலிவடைந்த பிரிவினருக்காக கட்டப்பட்டவை Posted: 25 Dec 2015 10:59 AM PST பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ) மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை காலியாக உள்ளதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார். |
| Posted: 25 Dec 2015 10:58 AM PST தில்லியில் போலியான ஆவணங்கள் மூலம் வங்களில் கடன் பெற்று, லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| ஆம் ஆத்மியில் இணைந்தார்: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ Posted: 25 Dec 2015 10:58 AM PST பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சுக்பல் சிங் கேரா ஆம் ஆத்மி கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தார். |
| அமெரிக்காவில் புயல்: 14 பேர் பலி Posted: 25 Dec 2015 10:57 AM PST அமெரிக்காவின் தெற்கு மற்றும் வடமத்தியப் பகுதி மாகாணங்களில் புதன்கிழமை வீசிய புயல் மற்றும் சுழல் காற்றுக்கு 14 பேர் பலியாகினர். |
| கர்கர்டூமா நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் திட்டமிட்டு ஈடுபடுத்தப்பட்ட சிறார்கள்! Posted: 25 Dec 2015 10:57 AM PST தில்லி கர்கர்டூமா நீதிமன்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் சிறார்கள் என்றும், சிறார்களுக்கான சட்டத்தின் வசதிகளை கருத்தில் கொண்டே திட்டமிட்டு அவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். |
| நைஜீரியாவில் சமையல் எரிவாயு லாரி வெடித்து 100-க்கும் மேற்பட்டோர் பலி Posted: 25 Dec 2015 10:57 AM PST நைஜீரியாவில் சமையல் எரிவாயு மையத்தில் லாரி வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். |
| கட்டட விபத்தில் ஒருவர் பலி; 5 பேர் காயம் Posted: 25 Dec 2015 10:57 AM PST தெற்கு தில்லியில் உள்ள நியூ ஃபிரண்ட்ஸ் காலனியில் கட்டுமானம் நடைபெற்று வந்த கட்டடத்தின் அடித்தளம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். |
| ஆப்கனில் பேருந்து - லாரி மோதல்:24 பேர் சாவு Posted: 25 Dec 2015 10:57 AM PST ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்து லாரியுடன் மோதி பள்ளத்துக்குள் விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். |
| சீனா: சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 17,000 நிறுவனங்கள் மூடல் Posted: 25 Dec 2015 10:56 AM PST சீனாவில் சுற்றுச் சூழலுக்கு மாசுபாடு ஏற்படுத்திய 17,000 நிறுவனங்களை இழுத்து மூடியதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. |
| தனியார் பாதுகாப்பு நவீனப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்த வலியுறுத்தல் Posted: 25 Dec 2015 10:56 AM PST திறன்மிக்க பாதுகாவலர்களை உருவாக்கும் வகையில், நாடு முழுதும் நவீனப் பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தனியார் பாதுகாப்புத் துறையை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. |
| சோழா எம்எஸ் நிறுவனப் பங்கு விற்பனை Posted: 25 Dec 2015 10:56 AM PST சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கொண்டுள்ள பங்கில் 14 சதவீதத்தை விற்பனை செய்ய அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. |
| பங்கேற்பு ஆவணம் மூலமான முதலீடு:ரூ.2.54 லட்சம் கோடியாக சரிவு Posted: 25 Dec 2015 10:56 AM PST வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கேற்பு ஆவணம் (பி-நோட்) வாயிலாக மேற்கொண்ட முதலீடு சென்ற நவம்பர் மாத இறுதியில், ரூ.2.54 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது என இந்திய பங்கு-பரிவர்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது. |
| Posted: 25 Dec 2015 10:55 AM PST |
| இண்டிகோ விமானங்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு Posted: 25 Dec 2015 10:55 AM PST உள்நாட்டில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனத்தின் விமானங்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது. |
| 11 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் Posted: 25 Dec 2015 10:55 AM PST போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை ஓட்டியதாகப் பிடிபட்ட 11 ஆயிரம் பேரின் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. |
| ரிலையன்ஸ் சிமென்ட் பிரிவு விற்பனை:இந்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது Posted: 25 Dec 2015 10:55 AM PST சிமென்ட் உற்பத்திப் பிரிவைக் கைவிட ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனம் முடிவு செய்துள்ளதையடுத்து, புதிய முதலீட்டாளர்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இவ்வாரம் வெளியாகும் எனத் தெரிகிறது. |
| கணவர் சுட்டுக் கொலை: மனைவி விஷம் குடிப்பு Posted: 25 Dec 2015 10:54 AM PST திருமணமாகி 20 நாள்களே ஆன நிலையில், கணவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் வேதனையும் அதிர்ச்சியுமடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். |
| சரோஜினி நகர் ரயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டெடுப்பு: ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை Posted: 25 Dec 2015 10:54 AM PST தெற்கு தில்லி சரோஜினி நகர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் பெண் உள்பட மூன்று பேரின் சடலங்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கண்டெடுத்தனர். அச்சடலங்களுடன் காயமடைந்த நிலையில் இருந்த ஒருவரையும் போலீஸார் மீட்டுள்ளனர். |
| ரூ.30 லட்சம் போதை பொருளுடன் நைஜீரியர் கைது Posted: 25 Dec 2015 10:53 AM PST தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருளுடன் நைஜீரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| 11 ஆண்டுகளாகியும் மறையாத ஆழிப் பேரலையின் வடுக்கள்! Posted: 25 Dec 2015 10:53 AM PST தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி முடித்த பலரும் அடுத்த நாளின் விடியல் தங்களுக்கு மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தும் என நினைத்திருக்கமாட்டார்கள். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கியது. |
| மதன் மோகன் மாளவியாவுக்கு கேஜரிவால் புகழாரம் Posted: 25 Dec 2015 10:53 AM PST கலாசார மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் மதன் மோகன் மாளவியா என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புகழாரம் சூட்டினார். |
| Posted: 25 Dec 2015 10:52 AM PST "விலை உயர்ந்த' மூலிகை விதைகளை தருவதாக, தொழிலதிபர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த 3 நைஜீரியர்கள் உள்பட 4 பேர் கொண்ட கும்பலை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். |
| வேதங்கள் உலக சகோதரத்துவத்தை வலியுறுத்துகின்றன: பிரணாப் முகர்ஜி Posted: 25 Dec 2015 10:52 AM PST "வேதங்கள் உலக சகோதரத்துவத்தை நமக்கு வலியுறுத்துகின்றன; அவற்றை நாம் அழியாமல் பாதுகாக்க வேண்டும்' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். |
| தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு Posted: 25 Dec 2015 10:51 AM PST தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில், சனிக்கிழமை ஆங்காங்கே மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
| அரசுப் பள்ளிகள் அசுத்தமாக இருந்தால் ஊதிய உயர்வு நிறுத்தம் Posted: 25 Dec 2015 10:51 AM PST தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தூய்மையாகப் பராமரிக்காவிட்டால், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை இரண்டு ஆண்டுகள் வரை நிறுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது. |
| மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்: 8 பேர் கைது Posted: 25 Dec 2015 10:49 AM PST காஞ்சிபுரம் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 8 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| வெட்டுக் காயத்துடன் ஆண் சடலம் மீட்பு Posted: 25 Dec 2015 10:49 AM PST செங்கல்பட்டை - புலிப்பாக்கம் இடையே நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழே தலையில் வெட்டுக் காயத்துடன் இளைஞரின் சடலம் தொங்கவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. |
| ஏரியின் சேற்றில் சிக்கி மாணவர் சாவு Posted: 25 Dec 2015 10:49 AM PST சோழவரம் ஏரியின் சேற்றில் சிக்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |