Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அனைவருக்கும் அன்பான கிருஸ்துமஸ் வாழ்த்துகள் !

Posted: 25 Dec 2015 02:21 PM PST

அனைவருக்கும் அன்பான கிருஸ்துமஸ் வாழ்த்துகள் !

மகனை மகிழ்விக்க கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய அமீர் கான்

Posted: 25 Dec 2015 01:51 PM PST

வெள்ளித்திரையில் பலகோடி ரசிகர்களை மகிழ்விக்கும் பாலிவுட் நடிகர் அமீர் கான், தனது மகன் ஆசாத் மற்றும் அவனது நண்பர்களை மகிழ்விப்பதற்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து பரிசுகளை அள்ளி வழங்கினார். இதுதொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் படங்களுடன் தகவலை பகிர்ந்துள்ள அமீர் கான், எங்கள் வீட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்காக சாண்டா கிளாஸ் வேடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்துவிட்டு வந்தேன் என குறிப்பிட்டுள்ளார். -

கந்தர் அலங்காரம் 62 , 70 , 72

Posted: 25 Dec 2015 11:12 AM PST

ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறுமையன் காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில் வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே. ... 62 விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே. ... 70 சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் ...

சீனாவில் தொலைக்காட்சியில் நேரலையாக செய்தி வாசிக்கும் ரோபா

Posted: 25 Dec 2015 08:54 AM PST

- முதல் முறையாக சீன தொலைக்காட்சியில் ஒரு ரோபோ நேரலையாக வானிலை அறிக்கை வாசிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் தொலைகாட்சி அறிவிப்பாளர்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காய் டிராகன் டி.வி.யில் வானிலை அறிக்கை வாசிக்கிறது. அந்த ரோபோவுக்கு 'ஸியோக்' என பெயரிடப்பட்டுள்ளது. இனிமையான பெண் குரலில் அச்செய்தி வெளியாகிறது. முதன் முறையாக பேசிய 'ரோபோ' ''வானிலை அறிக்கையை வாசிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்'' என தனது இனிமையான குரலில் தொடங்கியது. இது அங்கு பணிபுரிபவர்களை ...

சுமைதாங்கி

Posted: 25 Dec 2015 08:48 AM PST

சுமைகள் இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப்போன்றது என்றே சொல்லலாம். சுமைகள்தான் நாம் சாதனை புரியத் தூண்டுகோலாக அமைகின்றன. நாமே சுமையாகத்தான் இப்பூவுலகில் பிறக்கிறோம். அடுத்தவருக்கு சுமையாக இருந்த பிறகுதான் நாம் நல்லடக்கம் செய்யப்படுகிறோம். ஒருவருக்கு (தாய்க்கு) மட்டும் சுமையாகத் தொடங்குகிற வாழ்க்கை நால்வருக்கு சுமையாக முடிகிறது. இதுதான் வாழ்க்கை. சுமை என்று சொன்னாலே வருத்தத்தைக் கொடுக்கும். சுமை பாரமானது; அழுத்தக்கூடியது. சுமை என்பது துன்பம். ஒருவகையில் உலகில் எல்லோருமே துன்புறுகிறோம். ...

இமான் அண்ணாச்சி நாயகனாக நடிக்கும் ‘குட்டிப் பட்டாளம்’

Posted: 25 Dec 2015 08:32 AM PST

- நகைச்சுவை நடிகர்கள் அண்மைக் காலமாகக் கதாநாயகர்களாக மாறி வருகின்றனர். வடிவேலு, விவேக், சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள் நாயகர்களாக மாறி நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இந்த வரிசையில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சியும் இடம் பெற இருக்கிறார். 'குட்டிப் பட்டாளம்' என்ற படம் மூலம் அவர் நாயகனாகி உள்ளார். இவருடன் மாஸ்டர் ஏ.வி.பாலா உட்பட 20 குழந்தைகள் நடிக்கிறார்கள். இப்படத்தை ரவிதம்பி இயக்குகிறார். இவர் இப்படம் குறித்து கூறும் போது, "குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவராக ...

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

Posted: 25 Dec 2015 08:28 AM PST

போன்ஸாய் குட்டி குட்டி மரங்கள்

Posted: 25 Dec 2015 08:24 AM PST

புனித மாதம்'

Posted: 25 Dec 2015 08:16 AM PST

ஆண்டின் கடைசி மாதமாக விளங்குவது டிசம்பர் மாதமாகும். முப்பத்தோரு நாள்களைக் கொண்டது. "டிசம்' என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் டிசம்பர். இந்த மாதத்தை "வின்டர்' மாதம் எனவும் "புனித மாதம்' எனவும் அழை ஆண்டின் கடைசி மாதமாக விளங்குவது டிசம்பர் மாதமாகும். முப்பத்தோரு நாள்களைக் கொண்டது. "டிசம்' என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் டிசம்பர். இந்த மாதத்தை "வின்டர்' மாதம் எனவும் "புனித மாதம்' எனவும் அழைக்கிறார்கள். ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் நாளை கிறிஸ்துமஸ் தினமாக உலகம் ...

தின செய்தி நாளிதழில் என் கட்டுரை - ஆதிரா

Posted: 25 Dec 2015 08:14 AM PST

டிச., 25., தின செய்தி நாளிதழில்...
என் சிறப்புக் கட்டுரை..
இணையத்தில் வாசிக்க.. dinacheithi.com

என் சோஷலிச சொர்க்கமே.......

Posted: 25 Dec 2015 08:00 AM PST

எல்லோரும் ஓர் திசையில் ஓட ஏதோ ஒன்று குறிக்கிட வழி தவறியவன் வந்து சேர்ந்த கதையாக நிதி சறுக்கலில் பாரதம் பாதி தப்பி பிழைக்க சாதித்தோம் என்று மார் தட்டிக்கொள்கிறார்கள் மண்ணாலும் மன்னவர்கள். வெள்ளையடிக்க தேவையில்லையாம் வெள்ளைமாளிகைக்கு கருப்பு நிறம் பூச கருவி செய்தார்கள் தாஜ்மகாலுக்கு அருகில் தொழிற்சாலைகள்.. பலகட்சி பலக்கொள்கை பங்குவர்த்கமாயின பாரதத் தேர்தல்.. பாரதத்தின் பலம் பண்பாடாம் பதவி என்ற இருக்கையின் பலம் பணமட்டுமாம் சட்டமியற்றும் கடமை மறக்க உறுப்பினர்கள் ...

மதம் பிடித்த மது

Posted: 25 Dec 2015 07:58 AM PST

மதம் பிடித்த மது மனிதனை மனிதனாக அல்லாமல் மிருகமாய் ஆக்கும் மது மனைவியை மனைவியாக அல்லாமல் எதிரியாய் பார்க்கும் மது குடி போதையில் குடிசை இல்லாமல் குந்தியிருக்கசெய்யும் மது மக்கள் முன்னே மானமில்லாமல் மல்லாந்து கிடக்கசெய்யும் மது உரமான உடலையும் உணர்வில்லாமல் உருக்குலைக்கும் மது திடமான மனதையும் தெளிவில்லாமல் திரை பிடிக்கும் மது நல்லோர் மத்தியில் நாணயமில்லாமல் நகைப்புக்கு உள்ளாக்கும் மது குடும்பத்தை கோவிலாக அல்லாமல் குதறி கூறுபோடும் மது மதம் பிடித்த மதுவே மனித இனம் காக்க மனித மனம் ...

கூடா நட்பு கேடாய் முடியும்

Posted: 25 Dec 2015 07:20 AM PST

சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் | படம்: வீடியோ பதிவிலிருந்து... எங்களுக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம் என்று சிம்புவின் தாயார் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு பாடிய 'பீப் பாடல்' யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ...

விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

Posted: 25 Dec 2015 07:17 AM PST

முன்குறிப்பு: இக் கட்டுரையில் இடம்பெறும் சம்பவங்களும் வர்ணனைகளும் முழுக்க கற்பனையே. ஆனால், அவை எதிர்காலத்தில் நிகழவும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை!  ஒரு பக்கம் விஜயகாந்தை கூட்டணிக்காக மக்கள் நலக் கூட்டணி கையைப் பிடித்து இழுக்க, மறுபக்கம் கருணாநிதி வாய்விட்டே வரவேற்பு கொடுக்கிறார். வழக்கம்போல விஜயகாந்த் முறுக்கிக் கொண்டிருக்கிறார். வரும் நாட்களில் இந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் கலகல அத்தியாயங்களை எட்டும். அதை நமது கற்பனையில் இப்போதே ஓட்டிப் பார்த்தோம். நீங்களும் உங்கள் ...

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேரவிட்டால் கடத்துவோம் - “மிஸ் ஈராக்” அழகிக்கு மிரட்டல்!

Posted: 25 Dec 2015 07:13 AM PST

- ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேராவிட்டால் கடத்துவோம் என்று மிஸ் ஈராக் பட்டம் வென்ற அழகிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஈராக்கில் கடந்த 1972 ஆம் ஆண்டிற்கு பிறகு 43 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் முதன் முறையாக அழகிப் போட்டி நடந்தது. அதில் ஷாய்மா குயாசிம் அப்துல் ரகுமான் என்ற 20 வயது பெண் "மிஸ் ஈராக்" பட்டம் வென்றார். - கடத்துவோம் நிச்சயம்: --------------------------- எங்களது ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் நீங்கள் சேர வேண்டும். மறுத்தால் உங்களை கடத்துவோம் ...

பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம்

Posted: 25 Dec 2015 07:08 AM PST

பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கான தனது முதலாவது பயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார். முன்னறிவிப்பில்லாத திடீர் விஜயமாக பாகிஸ்தானின் லாஹூர் நகருக்கு அவர் சென்றுள்ளார். இந்த திடீர் விஜயம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்ட அவர், பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரிப்பை இன்று மதியம் லாகூரில் சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இன்று பிறந்த நாள் ...

நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்...

Posted: 25 Dec 2015 05:47 AM PST

ராஜாக்கள் காலத்திலே, ஒரு மந்திரியின் பிள்ளைகள் இருவர் சேஷ்டைகள் செய்ததின் பேரில் அவர்களை சிறை செய்தார்கள்... இதை அறிந்த மந்திரி, ராஜாவிடம் சென்று அவர்களை மன்னித்து விடுவிக்குமாறு கேட்டு கொண்டார்... மன்னனும் மனமிரங்கி நேரம் கிடைத்தவுடன் சிறைச்சாலைக்கு சென்று இருவரையும் வெளியே அழைத்தார் ... தண்டணையின்றி விடுதலை செய்ய விரும்பாத மன்னர், இருவரையும் காட்டிலே சென்று ஒவ்வொருவரும் தனியாக சொந்த திறனில் ஒரு மரத்து கனிகள் நான்கு பறித்து வர சொல்லி அனுப்பினார்... காட்டுக்கு சென்றவர்களில் ஒருவன் முதலில் ...

நைஜீரியாவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி

Posted: 25 Dec 2015 05:44 AM PST

நைஜீரியாவில் ஒரு எரிவாயு டேங்கர் லாரி வெடித்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நடந்ததால் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தென்கிழக்கு நைஜீரியாவில் சமையல் எரிவாயு தொழிற்சாலை அருகே இச்சம்பவம் நடடந்துள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிரப்ப வந்தவர்கள் விபத்தில் சிக்கினர். தீயணைப்பு நிர்வாகம், விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது எனினும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. - தினமணி கிறிஸ்துமஸ் ...

ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள்

Posted: 25 Dec 2015 12:53 AM PST

ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள்   சிரியாவில் கடும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், சிரிய நாட்டவர்கள் ஜெர்மனிக்குச் செல்வதற்கு விசா பெறுவதற்காக தமிழகத்தின் சென்னைக்கு வந்துசெல்வது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. சிரியாவில் போர் தீவிரமடைந்த பின்னர், அங்கிருந்து தப்பி கடல் வழியாக ஜெர்மனி சென்று, அகதித் தஞ்சம் பெற்றுள்ள ஆண்களின் குடும்பத்தினரே தற்போது விசா பெறுவதற்காக சென்னையில் காத்திருக்கின்றனர். சென்னையில் உள்ள ஜெர்மானிய தூதரகத்தில் "குடும்பத்தினருடன் இணைவதற்கான" ...

சிந்தித்து செயல்பட வேண்டும்

Posted: 25 Dec 2015 12:06 AM PST

ஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது, அதன்படி நிறைய நபர்கள் நேர்கானலுக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள். அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது. இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார், இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது. உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதற்க்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலலிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும் என்றார், ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது.. நேரம் ...

எங்க ஏரியா ஏரி’யா மாறி இருந்தது!”

Posted: 24 Dec 2015 11:28 PM PST

மாப்பிள்ளை வீட்டுக்காரரும் பெண் வீட்டுக்காரரும் பேசிக் கொண்டதாக ஒரு கற்பனை.. பொண்ணுக்கு எவ்வளவு பவுன் போடுறீங்க… நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க… ஐம்பது பவுன் போடுங்க.. என்னாது.. பொண்ணையும் கொடுத்து, ஐம்பது பவுன் நகையும் கேக்கறீங்களே.. இது நடக்கிற காரியமா? வேணும்னா பொண்ணை நீங்க வெச்சுக்குங்க.. ஐம்பது பவுன் நகையை மட்டும் கொடுங்க. ???? என்னங்க தரையில உருளச் சொல்லி ஒரு ஷாட் எடுத்தீங்க, அவ்வளவுதானா படத்துல என்னோட பங்கு? நான்தான் அப்பவே சொன்னேனே, படத்துல உங்களுக்கு ஒரு சின்ன 'ரோல்'னு! சின்ன ரோல்னு ...

சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே

Posted: 24 Dec 2015 10:43 PM PST

சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. தீவு நாடான ஃபிஜியில் கடற்கரைகள் உல்லாசப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் யார் என்பது தொடர்பில், 65 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கை அழகுகள் நிறைந்துள்ள ஃபிஜித் தீவில் நீந்தி மகிழும் பெண் ஒருவர் அந்தக் கருத்துக் கணிப்பின்படி 75 சதவீதமான மக்கள், தமது வாழ்க்கை குறித்து ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(407)

Posted: 24 Dec 2015 07:45 PM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

இணையத்திலிருந்து - (பல்சுவை)

Posted: 24 Dec 2015 07:10 PM PST


-

காந்திஜியை ஏன் சுட்டேன் - கோட்சேயின் வாக்குமூலம்

Posted: 24 Dec 2015 06:41 PM PST

காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ் வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:- காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்களுக்கு ...

வீதியில் வெறிச்செயல்: 24 பேரை வெட்டிய ஆடவர் சுட்டுக்கொலை

Posted: 24 Dec 2015 06:21 PM PST

-- தேர்வில் தோல்வியடைந்து விரக்தியின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற இளையர் ஒருவர் வீதியில் போவோர் வருவோரை எல்லாம் கூர்வாளால் தாக்கினார். தெலுங்கானா மாநிலம் கரிம் நகரில் நேற்று முன்தினம் காலை இச்சம்பவம் நிகழ்ந்தது. அங்குள்ள லட்சுமி நகரில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பல்விந்தர் சிங் எனப்படும் அந்த 25 வயது இளையர், முதலில் வீட்டில் இருந்த தமது பெற்றோரை வாளால் தாக்கிக் காயப்படுத்தினார். பின்னர் வீதிக்கு ஓடி வந்த அவர், ஆட்டோ ஓட்டுநரை வெட்டி னார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஆண், பெண், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™