Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


புகார்களை விசாரிக்க தகவல் ஆணையம் மறுப்பு

Posted: 24 Dec 2015 06:52 AM PST

'பொது தகவல் அதிகாரி, தவறான தகவல் அளித்ததாக வரும் புகார்களை விசாரிக்க முடியாது' என, மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை எழுந்துள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் பெறலாம். இதற்காக விண்ணப்பிக்கும் போது, அரசு துறைகளில் உள்ள பொது தகவல் அதிகாரிகள், சில நேரங்களில், தவறான அல்லது சம்பந்தம் இல்லாத தகவல்களை அளித்து மனுதாரர்களை அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.இந்த சமயங்களில் மனுதாரர், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடமும், அவரை தொடர்ந்து, மாநில தகவல் ...

டில்லி அரசின் புதிய திட்டம்: கெஜ்ரிவாலுக்கு விதிவிலக்கில்லை

Posted: 24 Dec 2015 07:26 AM PST

புதுடில்லி,: ''டில்லியில், ஜனவரி, 1 முதல் அமலுக்கு வர உள்ள, ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் கார்கள் ஓடும் நடைமுறை, டில்லி முதல்வருக்கும், எம்.எல்.ஏ.,களுக்கும் பொருந்தும்; அவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படாது,'' என, ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், அதைக் குறைக்க, ஜனவரி, 1 முதல், ஒரு நாள் விட்டு ஒரு நாள், ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை பதிவெண்கள் உடைய கார்கள் ஓடும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இந்தப் புதிய திட்டம் தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: * டில்லி ...

டிஜிட்டல்' மயமாகிறது ரயில்வே: பேப்பர் டிக்கெட் இனி இல்லை!

Posted: 24 Dec 2015 07:29 AM PST

புதுடில்லி: இந்திய ரயில்வே, 'டிஜிட்டல்' மயமாகிறது. பேப்பர் டிக்கெட் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, எஸ்.எம்.எஸ்., மூலம் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில், தற்போது தினமும், 11 லட்சம் டிக்கெட்டுகள் பயணி களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில், ஆறு லட்சம் டிக்கெட்டுகள், பேப்பராக வழங்கப்படுகின்றன.மீதமுள்ள ஐந்து லட்சம் டிக்கெட்டுகள், எஸ்.எம்.எஸ்., ஆக, பயணிகளின் மொபைல் போனுக்கு அனுப்பப்படுகின்றன. ரயில்வே துறையை முழுவதுமாக, டிஜிட்டல் மயமாக்கும் வகையில், பேப்பர் டிக்கெட் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு ...

இருமடங்காக உயர்கிறது எம்.பி.,க்கள் சம்பளம்

Posted: 24 Dec 2015 07:42 AM PST

புதுடில்லி: லோக்சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.,க்களின் சம்பளத்தை, தற்போதுள்ளதை விட, இரண்டு மடங்காக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், சம்பளத்துடன் சேர்த்து, ஒவ்வொரு மாதமும், எம்.பி.,க்களுக்கு, 2.80 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

கார் வாங்க கடன் தற்போது, எம்.பி.,க்களுக்கு மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, தொகுதி உதவித் தொகையாக, 45 ஆயிரம், உதவியாளர் சம்பளம் மற்றும் அலுவலக செலவுக்காக, 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்படி, எம்.பி.,க் களுக்கு, ஒவ்வொரு மாதமும், 1.40 ...

ஆசாத் விஷயத்தில் பா.ஜ.,வில் உட்கட்சி பூசல்..உச்சகட்டம் அத்வானி, ஜோஷி அவசர ஆலோசனை

Posted: 24 Dec 2015 07:46 AM PST

புதுடில்லி: பா.ஜ.,விலிருந்து, கீர்த்தி ஆசாத், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது குறித்து, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள், நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். இதனால், பா.ஜ.,வில், உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்தபோது, பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.
சலசலப்பு':இந்த குற்றச்சாட்டு உண்மை தான். அருண் ஜெட்லிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்' என, பா.ஜ., - எம்.பி.,யும், ...

ரஷ்யாவில் புடின் - மோடி சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி பேச்சு

Posted: 24 Dec 2015 09:05 AM PST

மாஸ்கோ:இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, நேற்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசினார். அப்போது, ராணுவம், அணுசக்தி உட்பட, பல்வேறு துறைகளில், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.

வரவேற்பு : இந்தியா - ரஷ்யா இடையேயான, 16வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, மாஸ்கோவில், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், ரஷ்ய அதிபர் புடின் அளித்த விருந்தில் மோடி பங்கேற்றார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து, இருவரும் ...

தமிழக கலாசாரத்திற்காக சுப்ரீம் கோர்ட்டின் சவாலை ஜெயலலிதா...சந்திப்பாரா? :நினைத்தால் ஜல்லிக்கட்டிற்காக அவசர சட்டம் கொண்டு வர முடியும்

Posted: 24 Dec 2015 09:52 AM PST

'முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் மட்டுமே, அவசர சட்டம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியும்' என, ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கங்கள் கருதும் நிலையில், தமிழக கலாசாரத்தை காப்பாற்ற, உச்ச நீதிமன்றத்தின் சவாலை ஜெயலலிதா சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும், 16 மாவட்டங்களில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. அதன் பின், ஜல்லிக்கட்டை அனுமதிக்கக் கோரி, பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. பொங்கல் பண்டிகை ...

அம்பலத்துக்கு வந்த விஜயகாந்த் 'டிராமா'

Posted: 24 Dec 2015 10:36 AM PST

சென்னையில், கடந்த வாரம், பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மோகன்ராஜுலு ஆகியோர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்தனர்; கூட்டணியில் தொடரும் படி கோரிக்கை விடுத்தனர்.

நேற்று முன்தினம், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, முத்தரசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர், விஜயகாந்தை சந்தித்தனர்; தங்கள் அணிக்கு வருமாறு அழைத்தனர்.அதே நாளில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும், தங்கள் கூட்டணிக்கு வருமாறு, விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.அடுத்தடுத்து நடந்த இந்நிகழ்வுகள் காரணமாக, 8 சதவீத ஓட்டு வங்கி உள்ள, தே.மு.தி.க.,வை, எப்படியும் ...

பழைய நிலைக்கே திரும்பியது கூவம்

Posted: 24 Dec 2015 11:31 AM PST

சென்னை: வெள்ளத்தால் சுத்தமாகி இருந்த கூவம் ஆறு, மீண்டும் தனது பழைய நிலைக்கே திரும்பிவிட்டது. அந்த ஆற்றில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களில், அதிகளவில் கழிவுகள் கலந்து மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால், கடந்த ஒரு மாதமாக நீரோட்டம் அதிகரித்து, கூவம் ஆறு சுத்தமாகி இருந்தது. குறிப்பாக, கடந்த, 1ம் தேதி பெய்த பெருமழை, அதைத் தொடர்ந்து திறந்துவிடப்பட்ட புழல், கொரட்டூர், அம்பத்துார் ஆகிய ஏரிகளின் உபரிநீர் காரணமாக, கூவம் ஆற்றில் அதிகபடியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கழிவு நீரானது: இதனால் கூவத்தில் ...

தாதா பதவிக்கு தாவூத் முழுக்கு?

Posted: 24 Dec 2015 11:54 AM PST

மும்பை : மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், தாதா பதவிக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளான். பாகிஸ்தானில் இன்று நடக்கும், தன், 60வது பிறந்த நாள் விழாவில், புதிய தாதா யார் என்பதை அறிவிக்க, அவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிழல் உலக தாதா : மும்பையில், நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராகிம், பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளான். இதையடுத்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில், அந்த நாட்டு உளவு அமைப்பின் கடும் பாதுகாப்பு வளையத்துக்குள் அவன் வசித்து வருகிறான். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™