Tamil News | Online Tamil News |
- சர்வதேச அளவிலான பேரிடர்களால் ரூ.6 லட்சம் கோடி இழப்பு
- மக்கள் வரிப்பணம் 10 கோடி ரூபாய் வீணடிப்பு: காங்., அமளியால் முடங்கியது ராஜ்யசபா
- 20 மாதங்களில், ரூ.16 ஆயிரம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு
- காங்கிரசை விமர்சித்ததற்காக வருத்தம் தெரிவித்தார் சபாநாயகர்
- வெள்ள நிவாரண கணக்கெடுப்பு: கருணாநிதி வீட்டில் அதிகாரிகள் விசாரணை
- மதுராந்தக சிறுவன் மீது புதிய சிறார் சட்டம் பாயுமா?
- வெள்ள பாதிப்பு எதிரொலி: வங்கி கடனை திருப்பி செலுத்த அவகாசம்
- 'அமுதம்' கடைகளில் அதிக விலையா?
- விஜயகாந்தை மக்கள் நல இயக்கத்தினர் வளைப்பு: கூட்டணிக்கு வருமாறு நேரில் வலியுறுத்தல்
- காத்திருக்க விரும்பாத 'பைலட்': விமானத்தை தவறவிட்ட கவர்னர்
- புடினுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது: பிரதமர் மோடி
| சர்வதேச அளவிலான பேரிடர்களால் ரூ.6 லட்சம் கோடி இழப்பு Posted: 23 Dec 2015 07:36 AM PST புதுடில்லி: சென்னை வெள்ளம், நேபாள பூகம்பம் உட்பட, இந்தாண்டு ஏற்பட்ட சர்வதேச அளவிலான பேரிடர்களால், ஆறு லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது; 26 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, 'ஸ்விஸ் ரே' என்ற காப்பீட்டு நிறுவனம், சர்வதேச அளவில், இந்தாண்டு ஏற்பட்ட பேரிடர்கள் குறித்தும், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்தும், முதல்கட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. |
| மக்கள் வரிப்பணம் 10 கோடி ரூபாய் வீணடிப்பு: காங்., அமளியால் முடங்கியது ராஜ்யசபா Posted: 23 Dec 2015 08:01 AM PST புதுடில்லி: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால், ராஜ்யசபா அலுவல்கள், 55 மணி நேரம் வீணாகியுள்ளன. இதன் மூலம், மக்கள் வரிப்பணம், 10 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், நவ., 26ல் துவங்கியது. இதில், ஜி.எஸ்.டி., மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக, முக்கிய மசோதாக்கள் எதுவும் நிறைவேறாமலேயே, பார்லி.,யின் இரு சபைகளும், நேற்று மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன. லோக்சபாவில், ... |
| 20 மாதங்களில், ரூ.16 ஆயிரம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு Posted: 23 Dec 2015 08:05 AM PST புதுடில்லி: ''கடந்த, 20 மாதங்களில், 16 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,'' என, மத்திய அரசின் வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கடந்த, 2014 ஏப்ரல் முதல், இந்த ஆண்டு நவம்பர் வரையிலான, 20 மாதங்களில், வருமான வரித்துறையினர் மேற்கொண்ட அதிரடிநடவடிக்கை காரணமாக, கணக்கில் வராத, 16 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கறுப்பு பணம் பதுக்கியவர்கள், அதுபற்றிய விவரத்தை ... |
| காங்கிரசை விமர்சித்ததற்காக வருத்தம் தெரிவித்தார் சபாநாயகர் Posted: 23 Dec 2015 08:06 AM PST புதுடில்லி, :'காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கு, நாட்டு நலனில் அக்கறை இல்லை; சொந்த நலனில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்' என, நேற்று முன்தினம் தெரிவித்த கருத்துக்காக, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று வருத்தம் தெரிவித்தார். டில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நேற்று முன்தினம், லோக்சபாவில், காங்., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்; சபாநாயகர் மேடையருகே சென்று கூச்சலிட்டனர். இதனால், எரிச்சல் அடைந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 'உங்களுக்கு ... |
| வெள்ள நிவாரண கணக்கெடுப்பு: கருணாநிதி வீட்டில் அதிகாரிகள் விசாரணை Posted: 23 Dec 2015 09:25 AM PST வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டுக்கும் சென்று விசாரித்தனர். 'வெள்ளத்தால் பாதிப்பு எதுவுமில்லை; கணக்கெடுப்பு வேண்டாம்' எனக்கூறி, கருணாநிதியின் உதவியாளர்கள், அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லமும், மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்தது. வீட்டின் காம்பவுண்டுக்குள் தண்ணீர் புகுந்தது. அதை அறிந்து தான், நிவாரணத்துக்காக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ... |
| மதுராந்தக சிறுவன் மீது புதிய சிறார் சட்டம் பாயுமா? Posted: 23 Dec 2015 10:08 AM PST சென்னை: சிறார் குற்றங்களை கடும் குற்றமாக கருதும் புதிய சட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே நடந்த பெண் கற்பழிப்பு வழக்கில் கைதாகி உள்ள, 16 வயது சிறுவன் மீது பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மதுராந்தகம் அருகே, 21 வயது பெண்ணை, மூன்று பேர் கும்பல், கற்பழித்துள்ளது. இச்செயலில் ஈடுபட்டதாக, செய்யூரைச் சேர்ந்த கமல், 25, நாகராஜ், 26, மற்றும், 16 வயது சிறுவனை, மதுராந்தகம் போலீசார் கைது செய்துள்ளனர். கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச் செயலில் ஈடுபடுவர்கள், 18 வயதுக்கு மேல் இருக்கும் போது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழும், 18 வயதுக்கு கீழ் இருந்தால், சிறார் ... |
| வெள்ள பாதிப்பு எதிரொலி: வங்கி கடனை திருப்பி செலுத்த அவகாசம் Posted: 23 Dec 2015 10:11 AM PST சென்னை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், கடனை திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டிப்பதோடு, கூடுதலாக, ஒன்று முதல், இரு ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்க, வங்கிகள் திட்டமிட்டு உள்ளன.மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டிச., 19ல், சென்னை வெள்ள பாதிப்பை பார்வையிட வந்தார்; வங்கி மற்றும் காப்பீட்டு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு, இந்த இரு துறைகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுத்துறை வங்கி அதிகாரிகள் ... |
| 'அமுதம்' கடைகளில் அதிக விலையா? Posted: 23 Dec 2015 10:13 AM PST அமுதம், கூட்டுறவு அங்காடிகளில், மளிகை பொருட்கள், அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில், வெளிச்சந்தையில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட, மளிகை பொருட்கள் விலையை கட்டுப்படுத்த, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள் மூலம், பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன.இவற்றில், வெளிச்சந்தையை விட, அதிக விலைக்கு மளிகை பொருட்கள் விற்பனை செய்வதாக, குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. 115 கடைகள் : வாணிப கழகத்திற்கு, 'அமுதம்' என்ற பெயரில், சென்னையில், 20; கடலுாரில், மூன்று என, 23 கூட்டுறவு ... |
| விஜயகாந்தை மக்கள் நல இயக்கத்தினர் வளைப்பு: கூட்டணிக்கு வருமாறு நேரில் வலியுறுத்தல் Posted: 23 Dec 2015 10:15 AM PST தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை வளைக்கும் விதமாக, மக்கள் நல கூட்டணி தலைவர்கள், சென்னையில் நேற்று அவரை சந்தித்து, கூட்டணிக்கு வருமாறு நேரில் அழைப்பு விடுத்தனர். ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, 'மக்கள் நல கூட்டணி' ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 'இது, அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக இருக்கும்' என, அக்கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், சில கட்சிகளை, கூட்டணியில் சேர்க்கும் முயற்சியிலும், அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில், அந்த கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், நேற்று ... |
| காத்திருக்க விரும்பாத 'பைலட்': விமானத்தை தவறவிட்ட கவர்னர் Posted: 23 Dec 2015 11:05 AM PST திருவனந்தபுரம் : கேரளாவில், காங்., முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அரசு உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன், இம்மாநில கவர்னராக, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம், கோழிக்கோட்டில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற சதாசிவம், மீண்டும் திருவனந்தபுரம் திரும்ப, டில்லியில் இருந்து கொச்சி வழியாக, திருவனந்தபுரம் செல்லும் விமானத்தில், டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த விமானம், கொச்சி விமான நிலையத்தில் இருந்து இரவு, 11:40 மணிக்கு புறப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால், 11:28க்கு, கவர்னர் ... |
| புடினுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது: பிரதமர் மோடி Posted: 23 Dec 2015 01:10 PM PST மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என பிரதமர் மோடி கூறினார். இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக, இரு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும், 16வது உச்சி மாநாடு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு புடின் தனியாக விருந்தளித்தார். தொடர்ந்து மோடிக்கு இந்த சந்திப்பு குறித்து கருத்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, புடினை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 24,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |