Tamil News | Online Tamil News |
- வெள்ள நிவாரணம் வேண்டாம் என மறுத்த சென்னை வாசிகள் 30,000 பேர்: உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கோரிக்கை
- சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டிய அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி
- இளம் குற்றவாளியை விடுவிக்க தடை இல்லை: சுப்ரீம் கோர்ட்
- கெஜ்ரிவால் மீது ஜெட்லி அவதூறு வழக்கு: ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு மனு
- புட்டபர்த்தியில் 'இலிசரோவ்' சிகிச்சை மாநாடு நிறைவடைந்தது
- 'தண்ணி' காட்டும் விஜயகாந்த், அன்புமணி; தள்ளாடும் பா.ஜ.,
- சென்னை மூழ்க காரணம் என்ன? மத்திய அமைச்சர் அதிர்ச்சி பதில்
- மிரட்டலுடன் முடிகிறது வட கிழக்கு பருவ மழை
- ஐ.எஸ்.,சில் மும்பை இளைஞர்கள்
- தமிழகத்தில் மீண்டும் 'டெங்கு' பீதி!
- 6 மாதத்தில் தமிழர்கள் மறுகுடியமர்வு: இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவாதம்
| Posted: 21 Dec 2015 10:14 AM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரணத்திற்கான கணக்கெடுப்பு, ஓரளவு முடிந்துள்ள நிலையில், சென்னை வாசிகள், 30 ஆயிரம் பேர், 'எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்; உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள்' என, வலியுறுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், கொட்டித் தீர்த்த கன மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னையில், அடுக்கு மாடி குடியிருப்புகளில், முதல் மாடி வரை தண்ணீர் புகுந்தது; மக்களின் ஒட்டுமொத்த உடைமைகளும் மூழ்கின. இந்நிலையில், 'குடிசைகளை இழந்தோருக்கு, 10 ஆயிரம் ரூபாய்; ... |
| சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டிய அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி Posted: 21 Dec 2015 10:16 AM PST புதுடில்லி: ''சுற்றுச்சூழல் மாசடைவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள், பெரும் சவாலாக உள்ளன; இதற்கான தீர்வுகளில் ஒன்றாக, சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். லோக்சபா எம்.பி.,க்கள் பார்லிமென்டுக்கு வந்து செல்ல, பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் பஸ்சை, சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பரிசாக வழங்கியது. இந்த பஸ்சை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான விழாவில், மோடி பேசியதாவது:சுற்றுச்சூழல் மாசடைவதால் ... |
| இளம் குற்றவாளியை விடுவிக்க தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் Posted: 21 Dec 2015 10:17 AM PST புதுடில்லி: 'டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய இளம் குற்றவாளியின், விடுதலைக்கு தடை விதிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது. டில்லியில், 2012 டிசம்பரில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவியை ஆறு பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, படுகாயப்படுத்தியது. இக்கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு பின், நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். ஆறாம் நபர், இளம் குற்றவாளியாக இருந்ததால், மூன்று ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டான். ... |
| கெஜ்ரிவால் மீது ஜெட்லி அவதூறு வழக்கு: ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு மனு Posted: 21 Dec 2015 10:21 AM PST புதுடில்லி: தன் மீது ஊழல் புகார் கூறிய, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லி கோர்ட்டில், அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார். 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி, அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார். மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி, டில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, 13 ஆண்டுகள் பதவி வகித்தார். |
| புட்டபர்த்தியில் 'இலிசரோவ்' சிகிச்சை மாநாடு நிறைவடைந்தது Posted: 21 Dec 2015 10:24 AM PST புட்டபர்த்தி: புட்டபர்த்தி, சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகத்தின், எலும்பியல் துறை சார்பில், 'இலிஸரோவ்' என்ற சிகிச்சை முறை குறித்த சர்வதேச மாநாடு, ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி, பிரசாந்தி கிராமம், சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகத்தில், 18ம் தேதி துவங்கி, 20ம் தேதி நிறைவடைந்தது. மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் குருமூர்த்தி, மருத்துவமனையின் சிறப்புகள் குறித்து பேசினார். பிரசாந்தி கிராம அறிவியல் கழக எலும்பியல் துறைத் தலைவர் டாக்டர் டி.சி.சுந்தரேஷ் வரவேற்றார்.மாநாட்டில், எலும்பியல் துறை வல்லுனர்கள் பேசியதாவது:கடந்த, 60 ஆண்டுகளுக்கு ... |
| 'தண்ணி' காட்டும் விஜயகாந்த், அன்புமணி; தள்ளாடும் பா.ஜ., Posted: 21 Dec 2015 10:27 AM PST கட்சியின் மத்திய தலைமை ஒன்றை விரும்ப, மாநில தலைமையோ வேறு விதமாக செயல்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர்களில் சிலர் ஆதங்கப்படுகின்றனர்.லோக்சபா தேர்தலுக்கு பின், மத்தியில், பா.ஜ., ஆட்சி ஏற்பட்டது. தமிழகத்திலும், பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என, கட்சியின் தலைமை விரும்பியது. குறிப்பாக, தமிழக, பா.ஜ., தலைவர்களை சந்தித்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, 'மிஸ்டு கால்' மூலம், 1.5 கோடி உறுப்பினர்களை சேருங்கள்; தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்துவது என் பொறுப்பு' என, கூறினார். ஆனால், தமிழக பா.ஜ., 60 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்குள் திணறியது. ... |
| சென்னை மூழ்க காரணம் என்ன? மத்திய அமைச்சர் அதிர்ச்சி பதில் Posted: 21 Dec 2015 10:29 AM PST ''செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீரும், மழைநீரும் சேர்ந்து, அடையாறு மற்றும் அதன் கரையோரங்கள் வெள்ளத்தில் மூழ்க காரணமாக அமைந்தன,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.'சமீபத்தில் தமிழகத்தில், பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்துக்கு காரணம் என்ன?' என, தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, மத்திய சுற்றுச்சூழல் வன அமைச்சர் ஜாவடேகரிடம் எழுத்துப்பூர்வமான கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு, பிரகாஷ் ஜாவடேகர் அளித்த பதில்: பூமி அறிவியல் ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியன, சென்னையில், சராசரிக்கு ... |
| மிரட்டலுடன் முடிகிறது வட கிழக்கு பருவ மழை Posted: 21 Dec 2015 10:31 AM PST வட கிழக்கு பருவ மழையின் கடைசி கட்டமான இந்த வாரத்தின் இறுதி நாட்கள், மிரட்டலுடன் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வட கிழக்கு பருவ மழை, அக்டோபரில் துவங்கி, டிசம்பரில் முடியும். நடப்பு பருவ மழை, அக்டோபரில் எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால், நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த மழை, பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. தற்போது, வட கிழக்கு பருவ மழை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.அடுத்த, நான்கு நாட்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அடுத்த, இரு நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழை பெய்யலாம். டிச., 26 வரை, வறண்ட வானிலையே தென்படுகிறது' என, ... |
| Posted: 21 Dec 2015 10:32 AM PST புதுடில்லி: மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இங்குள்ள மும்பை நகரின், மால்வானி பகுதியில், அயாஸ் சுல்தான், 23, மொஹசின் ஷேக், 26,மற்றும் வாஜித் ஷேக், 25, ஆகிய இளைஞர்கள் அருகருகே வசித்தனர். இவர்களில், கல்லுாரி படிப்பை நிறுத்தி விட்டு, கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்த அயாஸ், அக்., 30ம் தேதியும், பட்டதாரியான மொஹசின் மற்றும் ஆட்டோ டிரைவரான வாஜித் ஆகியோர், 16ம் தேதியும் தங்களின் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். வெவ்வேறு காரணங்களை கூறி வெளியே சென்றவர்கள், இதுவரை வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் போலீசில் ... |
| தமிழகத்தில் மீண்டும் 'டெங்கு' பீதி! Posted: 21 Dec 2015 10:37 AM PST வெள்ள பாதிப்பு நீங்கியுள்ள நிலையில், கொசு உற்பத்தி மீண்டும் அதிகரித்து வருவதால், 'டெங்கு' காய்ச்சலின் தாக்கமும் துவங்கி உள்ளது. எனவே, தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், நவ., மாத இறுதியிலும், இம்மாதத்தின் துவக்கத்திலும், விடாது கொட்டி தீர்த்த கன மழையின் போது, காணாமல் போயிருந்த கொசுக்கள், மீண்டும், தலைதுாக்க துவங்கி விட்டன. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருகி வருவதால், சென்னை உள்ளிட்ட வெள்ள பாதிப்பு மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் தாக்கம் துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ... |
| 6 மாதத்தில் தமிழர்கள் மறுகுடியமர்வு: இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவாதம் Posted: 21 Dec 2015 12:46 PM PST கொழும்பு: ''இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக, இடம் பெயர்ந்த தமிழர்களை, ஆறு மாதங்களில், அவர்கள் ஏற்கனவே வசித்த பகுதிகளில் மறுகுடியமர்த்துவேன்,'' என, அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற, கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசியதாவது:இலங்கையில், 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில், ஏராளமான தமிழர்கள், வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் தற்போது, மிக மோசமான நிலையில் வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளுக்கு சென்ற போது, அதை என்னால் உணர முடிந்தது.எனவே, இடம்பெயர்ந்த தமிழர்களை, அடுத்த ஆறு மாதங்களில் மறுகுடியமர்த்த முடிவு செய்துள்ளேன். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 22,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |