Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பீப் பாடல்! கவிஞர் இரா. இரவி

Posted: 21 Dec 2015 11:24 AM PST

பீப் பாடல்! கவிஞர் இரா. இரவி ***** நடிகர் சிம்பு பீப் பாடல் பாட அனிருத் இசையமைக்க அப்பாடல் யூடியூபில் இணையத்தில் வலம் வர பிரச்சனை வந்தவுடன் இருவருமே உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்று சொல்லி இருந்தால், பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கும். அதை விடுத்து நடிகர் சிம்பு வீர வசனம் பேசியது. எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவதாக இருந்தது.நான் இசை அமைக்கவில்லை என்று பல்டி அடித்தார் அனிருத்.பிரச்சனை மேலும் பெரிதானது. கண்டன ஆர்ப்பாட்டங்களும் காவல்துறையில் புகார்களும் ஆரம்பமானது. ...

இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...

Posted: 21 Dec 2015 11:16 AM PST

நம்ம ஜீனியஸ் கோயிந்து ராணுவத்தில் சேர்ந்து விட்டார். போர்க்களத்துக்கு கிளம்பும் போது.... நண்பர்: யோவ் கோயிந்து...குண்டு துளைக்காக சட்டை போடச் சொன்னா, எதுக்கு கொசு வலையை எடுத்து மேல சுத்திக்குற? ஜீனியஸ்: இத்துனூண்டு கொசு கூட இந்த வலைக்குள்ள நுழைய முடியலயே.. அவ்ளோ பெரிய துப்பாக்கி குண்டு எப்பிடி இதுக்குள்ள நுழைய முடியும்? நண்பர்: ................................. @####@@@@@@@@@@@ டாக்ஸியில் அவசரமாக ஆபிஸ் போய்க்கொண்டிருக்கிறார் நம்ம ஜீனியஸ் கோயிந்து... டாக்ஸி டிரைவர்: சாரி சார். வண்டில சுத்தமா ...

படம் பழசுதான் ஆனால் ரீல் புதுசுங்க

Posted: 21 Dec 2015 11:13 AM PST

குடிகாரர் அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற? . . . . . அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன். ---------------------------------- ராப்பிச்சை அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு? ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே? . . . . . அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே. --------------------------------------- என்ன சோகம் ? டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க? நோயாளி : எனக்கு சோகம் வரும் போது ...

கொடைக்கானல் வரை....!

Posted: 21 Dec 2015 10:46 AM PST

அன்பான உறவுகளுக்கு வணக்கம்! உங்களுக்காக –         இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! 'பழனி – கொடைக்கானல்' சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன். ஆனால்....... நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது. என் ...

ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!!

Posted: 21 Dec 2015 09:28 AM PST

இந்து கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையை வலியுறுத்தி கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்துவதாக 1970ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழக சட்டசபையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை ...

மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி

Posted: 21 Dec 2015 08:52 AM PST

வராமல் இருந்ததற்கும், வரப்போகாமல் இருப்பதற்கும் சேர்த்து எனது விடுமுறை விண்ணப்பம். சொல்லாமல் எடுத்த எனது விடுப்பிற்கு உறவுகள் முதலில் என்னை மன்னிக்க, மன்னிக்க...! முதலில், வராமல் இருந்ததற்கு – சமீபத்தில் பெய்த பேய் மழை பாதிப்பின் விளைவாக, வெள்ள நிவாரண உதவி புரிவதில் இயன்ற அளவு எங்களை ஈடுபடுத்திகொண்டதால், அது முடிவதற்குள், எனது தம்பி (மனைவி)க்கு குழந்தை பிறந்துவிடவே எதிர்பாராதவகையில் மருத்துவமனையில் அவளுடன் தங்கவேண்டிய சூழல். அது முடிந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு சிஸ்டம் ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 21 Dec 2015 07:54 AM PST

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

நீங்களே சொல்லுங்க. . .

Posted: 21 Dec 2015 07:41 AM PST

ஒரு நியாயம் பேசும்போது தீர்ப்புகளை எதிராளிகளுக்குமாகச் சேர்த்து வழங்கி விடாமல், இருப்பதைச் சொல்லி, நடந்தவற்றை விளக்கி, 'நீங்களே சொல்லுங்க! உங்களுக்கே இது நியாயம்னுபடுதா?' என்கிற கேள்வியை முன் வைக்கலாம். சில சமயங்களில் உரியவர்களிடம் பேச முடியாமல் போய் உரியவர்களுக்கு வேண்டியவர்களிடமோ, மத்தியஸ்தம் செய்பவர்களிடமோ சொல்லி இதே வார்த்தைகளால் நியாயம் கேட்டால், அந்த அணுகுமுறை நமக்குச் சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது. நீ செய்யுறது அக்கிரமம்; அநியாயம்! எந்த ஊர் நியாயம் இது! என்று நாமே சாதகத் ...

சின்ன சின்ன கவிதைகள் - தொடர் பதிவு

Posted: 21 Dec 2015 07:32 AM PST

கதவு
-

-
மனக்கதவு திறந்தது
மழைத்தூறல்
தேகம் தொட்டபோது!

–
==================
>ப.மதியழகன்

அழகுப்பூ

Posted: 21 Dec 2015 07:16 AM PST

- - – நீரும் இல்லை! வேரும் இல்லை! நிஜமாய் பூத்த பூ! நேற்று இல்லை! இரவும் இல்லை! காலையில் பூத்த பூ! – தோட்டம் இல்லை! வீட்டு வாசல் முன்னே பூத்த பூ! தோற்றம் காணக் கொள்ளை அழகு! என்னே! அழகுப் பூ ! – காட்டின் பூவோ, கடையின் பூவோ இல்லை, இந்தப் பூ! போட்டவரே வந்தாலும் எடுக்க முடியாக் கோலப் பூ! – —————- -கவிஞர் கிருங்கை சேதுபதி சிரிக்கும் பனைமரம் – (சிறுவர் பாடல்கள்)

நன்றி சொல்லுக…!

Posted: 21 Dec 2015 07:15 AM PST

- - வண்டு, வண்ணப் பூவைப் பார்த்து என்ன சொன்னது?- கற் கண்டுத் தேனைத் தந்ததற்கு நன்றி சொன்னது! – காற்று, பூவைச் சிரிக்க வைத்து என்ன சொன்னது?- ம்ம்ம் கம கமக்கும் வாசனைக்கு நன்றி சொன்னது! – கரையை நோக்கி அலை விரைந்து என்ன சொன்னது? – தன்னைக் காவல் காத்து நிற்பதற்கு நன்றி சொன்னது! – மரத்தின் மீது கிளியமர்ந்து என்ன சொன்னது? – தின்ன மாம்பழங்கள் தந்ததற்கு நன்றி சொன்னது! – தோகை மயில் மேகத்திடம் என்ன சொன்னது? – பெருந் தூறல் மழை தந்ததற்கு நன்றி சொன்னது! – ஆக மொத்தம் ஒவ்வொன்றுமே நன்னி ...

ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா!

Posted: 21 Dec 2015 07:00 AM PST

இட்லி: ***** பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், ...

ஈச்சங்குலை...!!

Posted: 21 Dec 2015 06:52 AM PST

துடிப்பு…!!
*
இரவு அழகான உயிர்ப்பு
ஓசையற்று மலரும் துடிப்பு.
*
புரிந்துக் கொள்ளும் மனம் பூரிக்கும்
புரியாமல் போனால் மனம் பரிதவிக்கும்
*
மூப்பு, பிணி, சாக்காடு
மனித குல்த்திற்கு சாபக்கேடு.
*
நோன்பு பலகாரம் கொடுத்தாள்
அதில் தெரிந்தது அவள் அன்பு.
*

பனைமரம் { சிறுவர் பாடல் }-கவிஞர் ந.க.துறைவன்

Posted: 21 Dec 2015 06:40 AM PST

- ஏரியோரம் பனை மரம் உயர்ந்து நிற்கும் பனை மரம் குலைகுலையாய் பனங் குலைகள் காய்த்துத் தொங்கும் பனைமரம் - கோடையிலே மட்டைகள் விசிறியாகும் பனை மரம் வீட்டின் மேலே வேய்வதற்குக் கூரையாகும் பனைமரம் - வெட்டிவெட்டித் தின்பதற்கு நுங்கு தரும் பனைமரம் அவித்துத் தின்ன ருசிமிகும் கிழங்கு தரும் பனைமரம் - கருப்பட்டி தரும் பனைமரம் கற்கண்டு தரும் பனைமரம் பதநீர் தரும் பனைமரம் காயகல்பம் பனைமரம் - உடல் வெப்ப நோய்களைக் குணப்படுத்தும் பெரும் மரம் சித்த மருத்துவத் துறையிலே சிறந்து விளங்கும் மருந்து ...

சென்னையில் சாக்கடையில் இறங்கி குப்பையை அகற்றும் பெல்ஜியம் நாட்டுக்காரர்!

Posted: 21 Dec 2015 05:45 AM PST

சுயநலமிகளே தூரப் போங்கள்... இவர் மனிதரில் புனிதர்... நம்மிலும் மேலானவர்!     சென்னை: சென்னையில் இருந்து கொண்டே கொஞ்சம் கூட இந்த மக்களின் வெள்ளத் துயரத்தில் பங்கு பெறாத சுயநலமிகள் வெட்கித் தலைகுணிய வேண்டும் இந்த பெல்ஜியம் நாட்டுக்காரரைப் பார்த்து. இங்கு வந்து இவர் சாக்கடை அடைப்பை எடுத்து விடுகிறார், குப்பை அள்ளுகிறார், கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், நம் நகரை சுத்தப்படுத்துகிறார்.   முகம் முழுக்க முகமூடிகளை அணிந்து கொண்டு கேமராவுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டே குப்பை அள்ளிய பலருக்கும் நல்லதொரு ...

புதியதோர் உலகு செய்தோம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 21 Dec 2015 05:42 AM PST

புதியதோர் உலகு செய்தோம் ! கவிஞர் இரா .இரவி ! புதியதோர் உலகு செய்தோம் அதில் ! புதுமைகள் பல செய்தோம் ! உண்ணும் உணவில் புதுமை செய்தோம் ! துரித உணவு துரித சாவு என்றானது ! தோசை போய் பீசா புதுமை வந்தது ! தோன்றியது புதிய புதிய நோய்கள் ! இடியாப்பம் போய் நூடுல்ஷ் புதுமை வந்தது இடி விழுந்தது உடல் நலத்தில் ! ஆடைகளில் புதுமை செய்தோம் ! அலங்கோலம் அரங்கேற்றமானது ! மாடிக்கு மேல் மாடிகள் கட்டி புதுமை செய்தோம் ! மண்ணுக்குள் புதைந்தன மாடி வீடுகள் ! இருக்கும் வீட்டில் புதுமை செய்தோம் ...

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 21 Dec 2015 05:29 AM PST

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்

Posted: 21 Dec 2015 04:24 AM PST

விருந்தாளி :- என்ன பண்ற பையன் :- படிக்கிறேன் விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ? பையன் ;- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் விருந்தாளி :-என்னன்னு ? பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ? பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம் விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி பையன் :- ஒரு இன்ஜினியரின் பத்து வருட வருமானம் 450 லட்சம் விருந்தாளி :-அட அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி பையன் ;- டாக்டர் ...

பரமபதம் (விளையாட்டு) !

Posted: 21 Dec 2015 04:19 AM PST

பரமபதம் (விளையாட்டு) பரமபதம் [ltr] பரமபதம் (ஏணியும் பாம்பும்) ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு.  இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். பொதுவாக 8*8, 1-0*10, 12*12 எண்ணிக்கையில் சதுரக் கட்டங்கள் இருக்கும். சில கட்டங்களை ஏணிகளும் பாம்புகளும் இணைக்கும். ஏணிகள், பாம்புகளின் எண்ணிக்கை, அமைப்புபோன்றவையும் பலகைக்குப் பலகை வேறுபடலாம். வரலாறு இவ் விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டது. ...

சகாயம் முதல்வராக வேண்டும்.. சென்னையில் ஒரு பேரணி!

Posted: 21 Dec 2015 04:15 AM PST

- திருச்சியைச் சேர்ந்த இலக்கு அமைப்பானது சகாயம் முதல்வராக வேண்டும் என்று கோருவோர் சென்னையில் திரண்டு பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. – அதை ஏற்று இன்று பலர் வந்திருந்தனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து இந்த பேரணி தொடங்கியது. வெள்ளை நிற உடையில், சகாயம் தான் எங்கள் முதல்வர் என்ற பதாகைகள ஏந்தியபடி இவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். – தமிழகத்திலிருந்து ஊழல் அழிக்கப்பட, தமிழக மக்களின் உரிமை காக்க, ஊழலற்ற சமுதாயத்தை, ஆட்சியை நிர்மானிக்க சகாயம் ...

திரை விமர்சனம்: தங்க மகன்

Posted: 21 Dec 2015 04:11 AM PST

--- பாசத்துக்கு முன்னால் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று வாழும் ஒரு தங்கமான மகனின் கதை. தனுஷ், எமி ஜாக்சன் இருவரும் காதலிக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த கருத்து வேறுபாட்டால் காதல் முறிகிறது. பெற்றோர் தனுஷுக்கு சமந்தாவைத் திருமணம் முடிக்கிறார்கள். எமி, தனுஷின் அத்தை மகன் ஆதிக்கை மணந்துகொள்கிறார். அப்பா பணியாற்றும் அலுவலகத் திலேயே வேலைக்குச் சேருகிறார் தனுஷ். புதுமண வாழ்க்கை, பாசமான பெற்றோர், ஒட்டித் திரியும் நண்பன் சதீஷ் என எல்லாம் சரியாக அமைந்துவிட்ட தனுஷின் ...

மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

Posted: 21 Dec 2015 03:45 AM PST

- நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். டீசலில் இயங்கும் பேருந்து, தற்போது நவீன தொழில்நுட்பத்தின் பயனாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்தாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநகரப் பேருந்துக் கழகத்தில் இயங்கி வரும் சுமார் 1.5 லட்சம் டீசல் பேருந்துகளை மின்சாரத்தில் இயங்கும் லித்தியம்-அயன் பேருந்துகளாக மாற்றி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், எச்சா எண்ணெய் ...

வியக்க ...சிரிக்க சில படங்கள் :)

Posted: 21 Dec 2015 03:40 AM PST

வியக்க ...சிரிக்க சில படங்கள் புன்னகை ..கண்டு மகிழுங்கள்!



மின்னஞ்சல் முலமும் முங்க நூல் முலமும் பெற்றவை  புன்னகை

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Posted: 21 Dec 2015 03:28 AM PST

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன் உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார். என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உற்றொழிய ...

குண்டலினி சக்தி ரகசியம்

Posted: 21 Dec 2015 12:01 AM PST

குண்டலினி சக்தி ரகசியம் "மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை நாலு நாடி உம்முள்ளே நாடியே இருந்தபின் பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம் ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே". - சிவவாக்கியார் - நன்றி-சோதிடர் சுக்கிரன்

ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...

Posted: 20 Dec 2015 10:37 PM PST

நன்றி - https://www.facebook.com/groups/haikusenryuworld/ Rajan Raj -  செரிமானமாகவில்லை புகைப்படம் ஒட்டிய நிவாரண உணவு (சென்ரியு) Jothi Jothi - வெள்ளப்பெருக்கு துளித்துளியாய் சேர்கிறது நிவாரணநிதி Jothi Jothi -நடுரோட்டில் தொழுகை அன்பு மழையில் பள்ளிவாசல். Tkeshav Tkeshav - வெள்ளத்தில் அனாதை பிணம் உரிமையாய் 100பேர் வெள்ள நிவாரணம் (சென்ரியு) விஜயகுமார் வேல்முருகன் - பத்திரமாக சேகரிக்கப்படுகிறது நிவாரணப் பொருட்கள்.. விற்பனைக்கு...! (சென்ரியு) மகிழ்நன் மறைக்காடு - வரலாறு ...

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Posted: 20 Dec 2015 09:54 PM PST

¦ அம்மா  விளையாடப்  போறேன் என்ன  விளையாட்டு? போய்ப்  படி ¦ உண்டி  கொடுத்தோரே உயிரை  எடுத்தனர் கல்லரை  வாசகம்:  ஈழத்தமிழர்   ¦ காதலியைப்  படைத்தவன் கடவுள்  என்றால் கடவுள்  எனக்கு  மாமா  உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

சித்தர்களை நேரில் தரிசிக்க முடியுமா?

Posted: 20 Dec 2015 08:47 PM PST

சித்தர்களை நேரில் தரிசிக்க முடியுமா? முடியும் என்று கூறுகிறார் அகத்தியர் நம்புவதற்கு சற்று சிரமமான ஒரு தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை நேரில் தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. ஒரு வேளை இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியதை இங்கே தருகிறேன். நன்றி-சோதிடர் சுக்கிரன்

இந்த வார சினிமா செய்திகள்....

Posted: 20 Dec 2015 07:33 PM PST


-
சென்னையில் நடைபெற்ற 'விடாயூதம்' திரைப்படத்தின்
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்.
-

சுடும் நினைவுகள்:- மும்பை ஆ. வேளாங்கண்ணி

Posted: 20 Dec 2015 07:23 PM PST

-- நிலவாக இருந்தால் ஒளி தரவேண்டும் கிளியாக இருந்தால் கொஞ்சி பேச வேண்டும் - உளியாக இருந்தால் சிற்பம் செதுக்க வேண்டும் நீர் துளியாக இருந்தால் தாகம் தீர்க்க வேண்டும் - நினைவு இருந்தால் வந்து என்னை சேர வேண்டும் தனியாக வாடுமென்னை வாரி தழுவ வேண்டும் - உரைக்கின்றேன் என் உள்ளத்தைத் திறந்து உரிமைக் கொண்டாட உலகத்தை மறந்து - காத்திருப்பேன் நானும் காலங்கள் உள்ளவரை காத்திருப்பதிலுமொரு சுகம் இல்லாமலில்லை - நீங்காத நினைவுகள் நெஞ்சிலே உள்ளவரை தூங்காது என்றும் அந்த சுடும் நினைவுகள் - ------------------------- நன்றி கவிதைமணி படம்- ...

அடடே - மதி கார்ட்டூன்

Posted: 20 Dec 2015 07:16 PM PST

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 20 Dec 2015 05:25 PM PST

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™