Tamil News | Online Tamil News |
- ஆபத்தில் இருந்த பெண்ணுக்கு உதவியது ரயில்வே 'டுவிட்டர்'
- வாய்க்காலுக்கு விலை வைத்த வருவாய் துறை: நீர் நிலையை அழிக்கும் அரசு நிர்வாகம்
- வருமான வரி வலையில் சிக்கிய 27 லட்சம் பேர்!
- தென் மாவட்டங்களுக்கும் நிவாரணம்: கருணாநிதி
- கூடுதலாக ரூ.2,000 கோடி வேண்டும்: அருண் ஜெட்லியிடம் முதல்வர் கோரிக்கை
- மருத்துவ மாணவியை கற்பழித்த இளம் குற்றவாளி விடுதலை
- 'தங்கத்தை உருக்கினால் சுவாமி குத்தமாயிடுமோ': கோவில் நிர்வாகங்கள் தயக்கம்
- வெளிநாடுகளுக்கு கறுப்பு பணம் அனுப்பி ரூ.100 கோடி 'கமிஷன்'
- ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் சாத்தியமா? அரசியல்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு
- ஆளாளுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதால் விஜயகாந்த் கிராக்கி
- கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள்
| ஆபத்தில் இருந்த பெண்ணுக்கு உதவியது ரயில்வே 'டுவிட்டர்' Posted: 20 Dec 2015 02:17 PM PST பாட்னா : ரயிலில் பயணம் செய்த பெண், சக ஆண் பயணியின் அச்சுறுத்தலுக்கு ஆளானபோது, சரியான நேரத்தில், அந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டி, பாராட்டு பெற்றுள்ளது ரயில்வே அமைச்சகம். பா.ஜ.,வைச் சேர்ந்த சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர், அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, ரயில்வே துறையில் பல புதுமைகளை புகுத்தி வருகிறார். ரயில்வேயின், 'டுவிட்டர்' பக்கத்தில், பயணிகள் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண், சமீபத்தில், டில்லியிலிருந்து ... |
| வாய்க்காலுக்கு விலை வைத்த வருவாய் துறை: நீர் நிலையை அழிக்கும் அரசு நிர்வாகம் Posted: 20 Dec 2015 10:47 AM PST மறைமலை நகர் துணை நகரத்தில், ஆட்டோ நகர் அமைக்கும் திட்டத்துக்காக, கீழக்கரணை பகுதியில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,க்கு, 29,000 ச.அடி வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை, 1.52 கோடி ரூபாய் என, விலை நிர்ணயித்து வழங்கியது தெரிய வந்துள்ளது. அரசு நிர்வாகமே நீர் நிலையை அழிக்கும் இத்தகைய செயல்கள் என்ன வகையான நடைமுறை என, கேள்வி எழுந்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் மூழ்கின. ஏரி, குளங்களிலும், கால்வாய்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளே, இதற்கு காரணம் என, ... |
| வருமான வரி வலையில் சிக்கிய 27 லட்சம் பேர்! Posted: 20 Dec 2015 10:49 AM PST புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் இதுவரை, வருமான வரி செலுத்துவோர் பட்டியலில், புதிதாக, 27 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்தியாவின் மக்கள் தொகை, 127 கோடி; அதில், 3.27 கோடி பேர் தான், ஒழுங்காக வருமான வரி செலுத்துகின்றனர். இவர்களில், அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. இத்தகையோரின் ஊதியத்திலேயே, வருமான வரி பிடித்தம் செய்யப்படுவதும் இதற்கு காரணம்.மற்றபடி, கொழுத்த பணம் சம்பாதிக்கும் கோடிக்கணக்கானோர், 'வருமான வரியா... அப்படியென்றால் என்ன?' என, கேட்கும் நிலையே உள்ளது. அதனால், நடப்பு ... |
| தென் மாவட்டங்களுக்கும் நிவாரணம்: கருணாநிதி Posted: 20 Dec 2015 10:51 AM PST சென்னை: 'கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில், பெரிய அளவில் தவறுகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. அதிகாரிகளுக்குப் பதிலாக, ஆளுங்கட்சியினர் தான் பட்டியலை எடுக்கின்றனர். அவர்கள் தயாரித்து கொடுக்கும் பட்டியலைத் தான் அதிகாரிகள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆளுங்கட்சியினர், உண்மையாக பாதிக்கப்பட்டோரின் பட்டியலை எடுப்பதற்கு பதிலாக, தங்களுக்கு ஆதரவாக இருப்போரின் பட்டியலை எடுப்பதாகவும் பலரும் ... |
| கூடுதலாக ரூ.2,000 கோடி வேண்டும்: அருண் ஜெட்லியிடம் முதல்வர் கோரிக்கை Posted: 20 Dec 2015 10:52 AM PST சென்னை: சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ''தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேத, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள, கூடுதலாக, 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.தமிழகத்தில் பெய்த வட கிழக்கு பருவ மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். வெள்ளப் பாதிப்புகள் குறித்து, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் வந்து, ... |
| மருத்துவ மாணவியை கற்பழித்த இளம் குற்றவாளி விடுதலை Posted: 20 Dec 2015 10:54 AM PST புதுடில்லி: டில்லியில், மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதாகி, சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த இளம் குற்றவாளி, மூன்று ஆண்டுகள் தண்டனைக்கு பின், நேற்று விடுதலை செய்யப்பட்டான். அவனின் விடுதலைக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்ததால், தொண்டு நிறுவன பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டான்.தலைநகர் டில்லியில், 2012 டிசம்பரில், ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் கும்பல் காட்டுமிராண்டித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த மாணவியும், உடன் வந்த நண்பரும், கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர். படுகாயமடைந்த மாணவி, ... |
| 'தங்கத்தை உருக்கினால் சுவாமி குத்தமாயிடுமோ': கோவில் நிர்வாகங்கள் தயக்கம் Posted: 20 Dec 2015 10:56 AM PST புதுடில்லி:'மத்திய அரசின் தங்க சேமிப்பு திட்டத்திற்கு, கோவில் தங்கத்தை கொடுத் தால், அதை உருக்கி மதிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை உருக்கினால், சுவாமி குற்றமாகி விடுமே' என, பிரசித்தி பெற்ற கோவில் நிர்வாகங்கள் தயங்கி வருகின்றன.நம் நாட்டில், வீடுகளிலும், கோவில்களிலும், 22 ஆயிரம் டன் ஆபரண தங்கம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்கத்தை, வங்கிகளில் டிபாசிட் செய்து, அதற்கு ஈடான வட்டியை பெறும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனாலும், இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு ... |
| வெளிநாடுகளுக்கு கறுப்பு பணம் அனுப்பி ரூ.100 கோடி 'கமிஷன்' Posted: 20 Dec 2015 10:58 AM PST புதுடில்லி: 'பேங்க் ஆப் பரோடா' மூலம், வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக, 6,000 கோடி ரூபாய் அனுப்பியதற்கு, இடைத்தரகர்கள், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 'கமிஷன்' பெற்றுள்ளது, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது.டில்லியில், பேங்க் ஆப் பரோடாவின் அசோக் விஹார் கிளை மூலம், ஹாங்காங், துபாய் ஆகிய நாடுகளுக்கு, 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதை, அண்மையில், சி.பி.ஐ., கண்டுபிடித்தது. இறக்குமதி மதிப்பை குறைத்துக் காட்டி, இந்த மோசடி நடந்தது. இது தொடர்பாக, பேங்க் ஆப் பரோடா கூடுதல் பொது மேலாளர் எஸ்.கே.கார்க், அன்னியச் செலாவணி பிரிவு தலைவர் ... |
| ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் சாத்தியமா? அரசியல்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு Posted: 20 Dec 2015 11:00 AM PST 'அடிக்கடி தேர்தல் நடப்பதை தவிர்க்கவும், அதனால் ஏற்படும் செலவுகளை குறைக்கவும், லோக்சபாவுக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விஷயத்தில், அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதால், இது, சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த, 1952 முதல், 1967 வரை, தொடர்ச்சியாக நான்கு முறை, லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து, அனைத்து மாநில சட்டசபைகளுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. 1967க்குப் பின், இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. |
| ஆளாளுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதால் விஜயகாந்த் கிராக்கி Posted: 20 Dec 2015 11:03 AM PST வரும் சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க, பிரதான கட்சிகளான, தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியினர் ஆர்வர் காட்டி வருகின்றனர். அதனால், கூட்டணியில் சேரும்படி, அழைப்பு மேல் அழைப்பு விடுத்து வருகின்றனர்.ஆனாலும், தொகுதி பேரத்தை அதிகரிக்கவும், முதல்வர் வேட்பாளர் என்ற நிபந்தனையை உறுதி செய்யவும் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதால், கூட்டணி தொடர்பாக வாய் திறக்காமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற ... |
| கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள் Posted: 20 Dec 2015 11:21 AM PST புதுடில்லி:இந்தியா - ரஷ்யா இடையே, அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின், ரஷ்ய பயணத்தின் போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இதுபற்றி, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி, 23ல், ரஷ்ய பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு தலைநகர் மாஸ்கோவில், 23, 24ம் தேதிகளில், ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினுடன், வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.இக்கூட்டத்தின் போது, இந்தியா - ரஷ்யா இடையே, அணுசக்தித் துறையில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 21,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |