Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ராஜிவ் கொலையாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது:மத்திய அரசின் ஒப்புதல் அவசியம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted:

புதுடில்லி :'சி.பி.ஐ., போன்ற மத்திய அரசு அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு, மத்திய அரசு சட்டப்படி தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்யவோ, அவர்களின் தண்டனையைக் குறைக்கவோ, தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது. அப்படி செய்வதாக இருந்தால், மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாருக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த போது, விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., விசாரித்த இந்த வழக்கில், முருகன், ...

தமிழக வெள்ள நிலவரம் பிரதமர் மோடி ஆலோசனை

Posted:

புதுடில்லி :தமிழக வெள்ள நிலவரம் குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோருடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

ஜெ.,வுடன் பேச்சு:
லோக்சபாவில், அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து, செவ்வாய் கிழமையன்று, முதல்வர் ஜெயலலிதாவுடன், பிரதமர் மோடி பேசினார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு வழங்கும் என, பிரதமர் உறுதி அளித்தார். நிவாரண முகாம்களில் தங்கி உள்ளோருக்கு, ...

வானத்து சுனாமியால் தீவானது சிங்கார சென்னை: ஆர்ப்பரித்து ஓடும் ஆறுகளால் அல்லல்படும் மக்கள்

Posted:

'வானத்து சுனாமி' போல், இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கன மழையால், தமிழகத்தின் தலைநகரான, சிங்கார சென்னை, சீரழிந்து விட்டது. நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டு, ஆறுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதால், இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். முப்படைகளுடன், தேசிய பேரிடர் படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, ஒரு வாரத்திற்கு முன் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இடையில், மூன்று நாட்கள் மழை விட்ட நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து, ...

114 ஆண்டுக்கு பின் சென்னையில் கனமழை

Posted:

சென்னையில், 114 ஆண்டுகளுக்கு பின், டிசம்பர் மாதத்தில், நேற்று, மிக அதிகமாக மழை பெய்துள்ளது.வடகிழக்கு பருவ மழையின் போது, நவ., மற்றும் டிச., மாதங்களில் அதிகளவு மழை பதிவாகும். டிசம்பர் மாதத்தில், மிக அதிக அளவாக, 1901 டிச., 10ல், 26 செ.மீ., மழை பதிவானது; 2005 டிச., 3ல், 23 செ.மீ., மழை பதிவானது. தற்போது, டிச., 1 காலை, 8:30 மணி முதல், நேற்று காலை, 8:30 வரையிலான, 24 மணி நேரத்தில் சென்னையில், 29 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. ஒரு நுாற்றாண்டுக்கு பின், சென்னையில் டிசம்பர் மாதம் பெய்த, மிக அதிகபட்ச மழை அளவு இது தான்.

மழைக்கு 9 பேர் பலி-நிவாரணம் அறிவிப்பு:
தமிழகத்தில், கன மழைக்கு பலியான, ஒன்பது ...

பால் பாக்கெட் ரூ.100;குடிநீர் கேன் ரூ.75

Posted:

சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில், 18 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை விலை உள்ள, அரை லிட்டர் பால் பாக்கெட், 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. சில இடங்களில், தனியார் நிறுவன பால் ஏஜென்ட்களே, சாலை சந்திப்புகளில் வைத்து, இவ்வாறு விற்றனர். பள்ளிக்கரணை பகுதியில், அரை லிட்டர் பால் பாக்கெட், 100 ரூபாய் வரை விற்கும் கொடுமை நடந்தது. வழக்கமாக, 20 லிட்டர் குடிநீர் கேன், 30 - 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இரண்டு நாட்களாக, சென்னையின் பல பகுதிகளில், 40 - 50 ரூபாய் வரை விற்பனையானது. வெள்ளம் சூழ்ந்து மக்கள் தத்தளித்த பகுதிகளில், ஒரு கேன், 75 ரூபாய் வரை ...

இரண்டு நாட்களுக்கு மோசமான நிலைமை

Posted:

சென்னை:'தமிழகத்தில் அடுத்த, 72 மணி நேரத்துக்கு கனமழை தொடரும். இதில், இரண்டு நாட்களுக்கு அதாவது, 48 மணி நேரம் மிக கன மழை பெய்யும். இதனால் நிலைமை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகலாம்' என, இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழக அரசை எச்சரித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரத்தோர், நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்க கடலின் தென் மேற்கு பகுதியில், நிலைகொண்டுள்ள, காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழக கடலோர மாவட்டங்களில், அடுத்த, 72 மணி நேரத்துக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் பின், காற்று மேல் அடுக்கு சுழற்சியால், தமிழகத்தில், பரவலாக, ஏழு நாட்களுக்கு கன மழை ...

தீவுக்கடலாகிய கடலூர்: வெளிமாவட்ட தீயணைப்பு வீரர்கள் வருகை

Posted:

கடலுார்: மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக, வெளிமாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கடலுாருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கடலுாரில், நேற்று முன்தினம் இரவில் மட்டும், 13.4 செ.மீ., மழை கொட்டி தீர்த்ததால், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அனைத்து சாலைகளிலும் தண்ணீர் ஓடுவதால் எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதனால், கடலுார் மாவட்ட மக்கள் இரண்டாவது நாளாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர். கடலுார், கோண்டூர், பண்ருட்டி, நெய்வேலி, ஊமங்கலம், பீமாராவ் நகர், சுத்துக்குளம், உப்பலவாடி உள்ளிட்ட பகுதி களில், 10 ஆயிரம் குடியிருப்புகளில் தண்ணீர் ...

சென்னையில் 5 லட்சம் பேர் தத்தளிப்பு: முடங்கிய அரசு துறை இயந்திரங்கள்

Posted:

சென்னை: சென்னையில், வெள்ளத் தில், ஐந்து லட்சம் பேர் சிக்கி தத்தளிக்கின்றனர். இதுவரை, 50 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். முழுமையாக மீட்பு பணிகளை செய்ய முடியாமல், மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளன.சென்னையில் வரலாறு காணாத மழையால், நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நகரின் பிரதான பகுதிகளில் போக்கு வரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், நாள் முழுவதும் கொட்டி தீர்த்த மழையால், நகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் ...

'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை

Posted:

'வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின், '108' ஆம்புலன்ஸ் சேவை அழைப்பு, 'வாட்ஸ் ஆப்' தகவல்களையும் தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், தன் முகநுால் பக்கத்தில், 'தமிழக அரசுக்கு ஒரு அவசர அழைப்பு' என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

குழப்பம்:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள, பல தொடர்பு எண்கள் வழங்கப்படுகின்றன. இந்த எண்கள் வெவ்வேறு துறைகளிடம் இருப்பதால், எந்த கோரிக்கைக்கு எந்த ...

வெள்ள நீர் இன்னும் வடியவில்லை: விமான நிலையம் டிச.,6 வரை மூடல்

Posted:

கனமழை காரணமாக, சென்னை விமான நிலையம் டிச., 6ம் தேதி வரை மூடப்படுகிறது. சென்னை, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில், நவ., 30 அதிகாலை முதல், கனமழை பெய்து வருகிறது.

இதனால், அடையாறு ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை, விமானம் நிறுத்தும் இடம் ஆகியவற்றில் மழைநீர், குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, டிச., 1 இரவு, 9:00 மணிக்கு, விமான நிலையம் மூடப்பட்டு, 'நள்ளிரவு, 11:00 மணி முதல், விமானங்கள் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. எனினும், நேற்று காலை, 6:00 மணி வரை விமானங்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™