Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கன மழையில் சிக்கியுள்ளவர்களை மீட்க மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

Posted: 02 Dec 2015 03:33 PM PST

- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை வரவுள்ளனர். கன மழையால் சென்னை விமானம் மூடப்பட்டுள்ள நிலையில், புதுதில்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் அவர்கள் விமானம் மூலம் சென்னை அருகேயுள்ள அரக்கோணம் விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையத்துக்கு வந்தடைகின்றனர். அங்கிருந்து குழுக்களாக பிரிந்து செல்லும் அவர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள. அவர்கள் தங்களுடன் மீட்பு பணிக்காக 40 காற்றடைத்த ...

திருப்பதி கருட சேவை

Posted: 02 Dec 2015 03:25 PM PST

- வேதங்களின் கடவுளாக விளங்குபவர் விஷ்ணு பகவான். பறவைகளின் அரசனாகவும், வேதங்களின் பிரதிநிதியாகவும் மட்டுமல்லாது மகாவிஷ்ணுவின் முதல் பக்தனாகவும் இருப்பவர் கருட பகவான் என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்பதியில் வெங்கடாஜலபதி தன்னுடைய வாகனமாக கருடனை தேர்ந்தெடுத்ததால் பிரம்மோற்சவத்தின் போது மற்ற வாகனங்களை விட கருட வாகனத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. கருட சேவையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னிதியில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு (ஏழுமலையான்) அணிவிக்கப்படும். இந்த ...

மகாலட்சுமி அருளும் வீடு

Posted: 02 Dec 2015 03:23 PM PST

- மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் கடாட்சம் செய்ய அதிகாலை எழுந்ததும் கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து, அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் செய்த பாவம் விலகும். ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளிப்பாத்திரங்களை தன் காலத்தில் விற்கவோ, அன்பளிப்பாக கொடுக் கவோ கூடாது. வெற்றிலை, பாக்கு, ...

சிதம்பரம் நடராஜர்

Posted: 02 Dec 2015 03:14 PM PST

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள நடராசர் கோயில் மிகச் சிறப்பு பெற்ற கோயிலாகும். இக்கோயில் பஞ்சப்பூத தலங்களில் ஒன்றாக உள்ளது. - தகவல் பலகை ---------------- சிவஸ்தலம் பெயர் சிதம்பரம் இறைவன் பெயர் கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர் இறைவி பெயர் கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் - உமையம்மை பதிகம் திருநாவுக்கரசர் - 8, திருஞானசம்பந்தர் - 2 சுந்தரர் - 1 எப்படிப் போவது சென்னையில் ...

அழியவிடலாமா அரிய ஓவியங்களை?

Posted: 02 Dec 2015 03:02 PM PST

சிவபிரானின் வீரச்செயல்கள் விளஙகிய இடங்களிலுள்ள திருத்தலங்களை அட்டவீராட்டனத் தலங்கள் என்று போற்றுவர். அட்டவீரட்டத் தலங்களில் ஆறாவது தலம் திருவழுவூர்த் திருத்தலம். பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது. அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த அரிய ஓவியங்கள் உள்ளன. அதைச் சிலர் செங்கல் மற்றும் கம்பி, கரிகளால் கிறுக்கி அலங்கோலப் படுத்தி வருகிறார்கள். அதைக் கோயில் நிர்வாகம் சரி செய்து பாதுகாக்க வேண்டும் என்கிறார் ஒரு பக்தர். சிவன் இவ்வாலயத்தில் கிருத்திவாசர் ...

வடபழனி ஃபோரம் மாலில் எஸ்பிஐ சினிமாஸின் புதிய திரையரங்கு திறப்பு

Posted: 02 Dec 2015 02:32 PM PST

- சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் திறக்கப்பட்டுள்ள எஸ்பிஐ சினிமாஸின் 'பளாஸோ' திரையரங்கின் பிரம்மாண்ட உட்புறத் தோற்றம். வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் எஸ்பிஐ சினிமாஸின் புதிய திரையரங்கு நேற்று திறக்கப்பட்டது. மொத்தம் 9 ஸ்கீரின்களைக் கொண்ட இந்த திரையரங்கத்துக்கு 'பளாஸோ' என பெயரிட்டுள்ளனர். சென்னை, வடபழனியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஃபோரம் மால் என்ற வணிக வளாகம் திறக்கப்பட்டது. பல அடுக்குகளைக் கொண்ட இந்த மாலில், எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்ட திரையரங்கத்தை அமைத்துள்ளது. உரிமம் கிடைப்பதில் ...

திரை விமர்சனம்: இஞ்சி இடுப்பழகி

Posted: 02 Dec 2015 02:28 PM PST

- உடல் பருமனான ஸ்வீட்டியை (அனுஷ்கா) திருமணக் கோலத்தில் பார்க்க அம்மா ராஜேஸ்வ ரிக்கு (ஊர்வசி) ஆசை. அனுஷ்காவின் உடல் எடையைப் பார்த்து மாப்பிள்ளைகள் பின்வாங்குகிறார்கள். அப்படிப் பெண் பார்க்க வரும் அபியும் (ஆர்யா) அனுஷ்காவும் திரு மணப் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டாலும் நட்பு தொடர்கிறது. அனுஷ் காவுக்கு ஆர்யா மீது காதல் வரும்போது அவர் இன்னொரு பெண்ணை விரும்புவ தாகத் தெரிகிறது. ஆர்யா தன்னை விரும்பாத தற்குத் தனது உடல் எடைதான் காரணம் என நினைக்கும் அனுஷ்கா, உடனடி எடை குறைப்புக்கு உத்தரவாதம் ...

கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை

Posted: 02 Dec 2015 02:22 PM PST

வரி விலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு மக்களிடம் கேளிக்கை வரியை வசூலித்து, அவர்களுக்கு சுமை ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. - இது தொடர்பாக கே.ஜே.சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு, வரியைத் தவிர்த்து மீதமுள்ள கட்டணத்தை நுழைவுச் சீட்டுகளில் அச்சடிக்க வேண்டும். - நுழைவுச் சீட்டின் பின்புறம் வணிகவரித் ...

அடுத்த ஆண்டில் 22 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 02 Dec 2015 02:16 PM PST

அடுத்த ஆண்டில் (2016) 22 நாள்கள் பண்டிகைக் கால அரசு விடுமுறை விடப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு பொதுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: - ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1 (வெள்ளிக்கிழமை) பொங்கல் ஜனவரி 15(வெள்ளி) திருவள்ளுவர் தினம் ஜனவரி 16 (சனிக்கிழமை) உழவர் திருநாள் ஜனவரி 17 (ஞாயிறு) குடியரசுதினம் ஜனவரி 26 (செவ்வாய்) புனித வெள்ளி மார்ச் 25 (வெள்ளி) வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு ஏப்ரல் 1 (வெள்ளி) தெலுங்கு வருடப் பிறப்பு ஏப்ரல் 8 (வெள்ளி) தமிழ்ப் புத்தாண்டு- அம்பேத்கர் பிறந்த ...

ஸ்குவாஷ் தரவரிசை: 13ஆவது இடத்தில் ஜோஷ்னா சின்னப்பா

Posted: 02 Dec 2015 02:13 PM PST

- உலக ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 13ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, 17ஆவது இடத்தில் இருந்த அவர், தோஹாவில் கடந்த மாதம் நடைபெற்ற கத்தார் கிளாசிக் போட்டியில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எகிப்தின் ரனீம் எல் வெலிலியை வெற்றி கொண்டார். இதன் மூலம் அவர் 4 இடங்கள் முன்னேறியுள்ளார். - இதனிடையே, மற்றொரு இந்திய வீராங்கனையான தீபிகா பல்லிக்கல் 16ஆவது இடத்தில் இருந்து 14ஆவது இடத்துக்கு பின்தங்கினார். சசிகா இங்லே 87ஆவது இடத்தில் உள்ளார். - ஆடவர் ...

வேலன்:-சங்கு தீர்த்த குளம் அன்றும் இன்றும்.(குளம் நிரம்பிய நிலையில்)

Posted: 02 Dec 2015 01:56 PM PST

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் கன்னிராசியில் பிரவேசிக்கும் லட்சதீபமும்;.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலிலே பிறக்கும் சங்கு இந்த குளத்தில் பிறப்பதும் விஷேம்.தமிழ்நாட்டில் உள்ள குளங்களிலே   இரண்டாவது  பெரிய குளம் (பரப்பளவு சுமார் 13 ஏக்கர் என பெயர் பெற்றது திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளம்.சஞ்சீவி மூலிகை கலந்த தண்ணீர் இந்த குளத்தில் கலப்பதால் இதில் ஒரு மண்டலம் காலையில் குளித்து மலையை சுற்றி வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நடைமுறை உண்மை.கடந்த வருடம் 2014 ...

கலகல வகுப்பறை’ ...

Posted: 02 Dec 2015 01:49 PM PST

- கலகல வகுப்பறை' என்ற தமது அமைப்பின் மூலம், வகுப்பை எப்படி கலகலப்பாக நகர்த்தலாம் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி முகாம்களை நடத்திவரும் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிவா, ரமணன், பாலமுருகன், முத்துக்குமார் மற்றும் இவர்களோடு இணைந்து செயல்பட்டு வரும் முதுகலை ஆசிரியர் தோழர் சுரேஷ் காத்தான் ஆகியோருக்கு, இரண்டு விஷயங்களுக்காக என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். 1) முதலில் 'கலகல வகுப்பறை' என்ற இந்த தலைப்புக்காக. 2) இரண்டாவதாக, ...

கன மழையில் சிக்கியுள்ளவர்களை மீட்க மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

Posted: 02 Dec 2015 01:39 PM PST

- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை வரவுள்ளனர். கன மழையால் சென்னை விமானம் மூடப்பட்டுள்ள நிலையில், புதுதில்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் அவர்கள் விமானம் மூலம் சென்னை அருகேயுள்ள அரக்கோணம் விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையத்துக்கு வந்தடைகின்றனர். அங்கிருந்து குழுக்களாக பிரிந்து செல்லும் அவர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள. அவர்கள் தங்களுடன் மீட்பு பணிக்காக 40 காற்றடைத்த ...

சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு

Posted: 02 Dec 2015 01:35 PM PST

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கப்படும் என மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு, பி.எஸ்.என்.எல். ஒரு வாரம் இலவச சேவை வழங்கும் என்றார். இந்த வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றார் அமைச்சர். ஏர்டெல் சலுகை இதேபோன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது சென்னை வாடிக்கையாளர்களுக்கு ...

சிறகுகள் நீளூதே!

Posted: 02 Dec 2015 09:24 AM PST

நிசப்தத்தைக் கலைத்தது, வீட்டுத் தோட்டத்திலிருந்து வந்த தேன் சிட்டின் குரலால், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கீர்த்திவாணி புரண்டு எழுந்தாள். மகன் நிர்மலின் கால், இவள் தொடை மேல் அழுத்தியிருக்க, மெல்ல எடுத்து நகர்த்தினாள். ஜன்னலில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சத்தைப் பார்த்து, 'அடடே... நேரமாகி விட்டதே...' என, நினைத்தவளுக்கு, அடுத்த கணமே, சுறுசுறுப்பு ஒட்டிக் கொள்ள, அடுத்தடுத்த வேலைகளில் பரபரவென ஈடுபட்டாள். பற்களை துலக்கி முடித்து, ஹாலுக்கு வந்தவளின் கண்களில், சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தின் ...

கவிதை : காதலிப்போர் கவனத்துக்கு…

Posted: 02 Dec 2015 08:32 AM PST

- காதல் தோற்றுப் போனால் தாடி வளர்ப்பதை வழக்கமாக்காதீர், தாடி முளைக்கத் துவங்காத நண்பர்களும் காதலித்துக் கொண்டிருக்கக் கூடும். காதலி என்று நீங்கள் சொல்லிக் கொள்பவர் வேறு யாருடனோ காஃபி குடிப்பதைக் காண்கையில் சுடச் சுடக் கவிதை எழுதி அழுது விடாதீர்கள் அல்லது குறைந்த பட்சம் எழுதியதை யாருக்கும் காட்டாதீர்கள். காதல் ஒரு முறைதான் வருமென்று ஒவ்வொரு முறையும் சொல்லித் திரியாதீர்கள், உங்கள் காதலி ஏற்கனவே காதலித்திருக்கக் கூடும். உன் பெயரைத்தான் என் மழலைக்குப் போடுவேன் என அடம்பிடித்து ...

மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு

Posted: 02 Dec 2015 08:02 AM PST

இரண்டு வாரங்களாக வேளச்சேரி- தரமணி சாலையில்
வெள்ளம் வடியாமல் உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் வெள்ளநீர்,
சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது.
-

புன்னகைப் பக்கம் - தொடர் பதிவு

Posted: 02 Dec 2015 07:37 AM PST

பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு

Posted: 02 Dec 2015 07:30 AM PST

பிரபல சமூக வலைதளத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் மார்க் ஜுகர்பெர்க் (31). இவரது மனைவி பிரிஸ்சில்லா சான், கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மஸிமா என ஜுகர்பெர்க் தம்பதியர் பெயர் சூட்டியுள்ளனர். இத்தகவலை ஷுகர் பெர்கரும் அவரது மனைவி பிரிசில்லாவும் தங்களது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளனர். மேலும் தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து பேஸ்புக்கில் ஒரு உயிலும் எழுதியுள்ளனர். அதில் ...

சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல்

Posted: 02 Dec 2015 07:26 AM PST

சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி, 171 பேரை கொன்று குவித்தது தொடர்பான வழக்குகளில் அல்கொய்தா மற்றும் பிற தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த 55 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற தீவிரவாத இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிற வகையில், இந்த 55 தீவிரவாதிகளுக்கும் ஒரே நேரத்தில், அதுவும் விரைவில் மரண தண்டனையை நிறைவேற்ற சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ...

எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 02 Dec 2015 07:23 AM PST

எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! 9942658054. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மதுரை பதிப்பகம், 6, காமராசர் தெரு, பழங்காநத்தம், மதுரை–625 003. விலை: ரூ. 30 ***** அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பின் அட்டையில் விரைவில் திறப்பு விழா காண உள்ள மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் படமும் உள்ளது. பாராட்டுக்கள். உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரணவாயிலாக ...

பெண்களுக்கு கரு உருவாகும் காலம்

Posted: 02 Dec 2015 07:15 AM PST

எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கரு தரிக்க முடியும்?

தயவு செய்து சரியான விளக்கத்தினை தாருங்கள்

பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி காலமானார்!

Posted: 02 Dec 2015 07:13 AM PST

- சென்னை: பிரபல தொழிலபதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி (84) சென்னையில் இன்று (2-ம் தேதி) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். - செட்டிநாடு குழு நிறுவனங்களின் தலைவராக இருந்து வந்தவர் எம்.ஏ.எம். ராமசாமி. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் இருந்தார். - இந்நிலையில், எம்.ஏ.எம்.ராமசாமிக்கு கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகங்கள் செயலிழப்பு உள்பட பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு ...

பால்கனிகள் எனும் பரவசம்

Posted: 02 Dec 2015 07:04 AM PST

- ஒரு வீட்டின் அனைத்துப் பாகங்களும் கட்டியவருக்கு நிம்மதியளிப்பவையே. ஆனாலும் அதில் சில பாகங்கள் தனிப்பட்ட ஆசுவாசத்தைத் தரும். அவற்றில் ஒன்று பால்கனி. பால்கனியில் நாம் எப்போதும் இருக்க மாட்டோம். ஆனால் நமது மனம் ஆசுவாசம் தேடும் நேரங்களில் எல்லாம் நாம் பால்கனிக்கு வருவதை வழக்கமாக வைத்திருப்போம். தாய் மடி போல் ஆறுதல் அளிக்கவல்லது பால்கனி. - ஒரு பால்கனியில் நிற்கும்போது நாம் அடைபட்ட வீட்டுக்குள் இருப்பது போன்ற நினைவு எழாது. ஏனெனில் நம் கண்ணெதிரே இயற்கை தன் அழகைக் காட்டி நிற்கும். கண்களுக்குள் அடங்காத ...

தொடரும் மழை வெள்ளம்! மிதக்கும் வீடுகள்... ஆரோக்கியம் காப்பது எப்படி?

Posted: 02 Dec 2015 06:16 AM PST

தொடரும் மழை வெள்ளம்! மிதக்கும் வீடுகள்... ஆரோக்கியம் காப்பது எப்படி? தமிழகத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில் 'மழை பெய்தது' என்று சொல்வதைவிட 'மழை கொட்டியது' என்று சொல்வதே பொருத்தம். சாலைகள் எங்கும் ஆறாக ஓடிய நீர், பல இடங்களில் இன்னும் இடுப்பு அளவு தேங்கிக்கிடக்கிறது. இப்படித் தேங்கிக்கிடக்கும் மழைநீரோடு கழிவு நீரும் கலந்துள்ளது என்பதுதான் வேதனை. மழைக்காலத்தில் தோன்றும் நோய்களும், உடல்நலத் தொந்தரவுகளும் எண்ணற்றவை. மழையின் உபவிளைவான மழைக்கால நோய்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்க என்னென்ன செய்யலாம்... வாருங்கள் ...

நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு!

Posted: 02 Dec 2015 01:52 AM PST

ஒரு மிகப்பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர், என் இனிய நண்பர். இவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர், இன்று, பல கோடிகள் வாங்கும் முன்னணி நடிகராகி விட்டார். 'நீங்கள் அறிமுகப்படுத்தி வளர்த்த ஆள், இன்னைக்கு பிரமாதமா வந்துட்டார். உங்களை பத்தி பிரமாதமா ஒரு பேட்டில இன்னைக்கு கூறியிருக்கிறார்; படிச்சேன்...' என்றேன், இவர் மகிழ்வார் என்றும் எதிர்பார்த்தேன். 'அந்த நன்றி கெட்ட நாயை பத்தி, என்னிடம் தயவு செஞ்சு பேசாதீங்க...' என்றாரே பார்க்கலாம் அந்த இயக்குனர்! இந்த விஷயத்தில் என் ஊகத்தை சொல்லட்டுமா... ...

ப்ளிஸ் சார்… ப்ளிஸ் சார்…

Posted: 02 Dec 2015 01:48 AM PST

"சென்னையில இருக்கிற அதிகாரிங்க எல்லாம் ஏன் லைன்ல முன்டியடிச்சிட்டு நிக்கிறாங்க..."

"தண்ணியில்லா காடுன்னு அடிக்கடி மிரட்டினாருல்ல... இப்ப உடனே மாத்திடச் சொல்லிதான்"

களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம்.

Posted: 02 Dec 2015 12:33 AM PST

சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையூம் பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்பெறுவன அது போலவேஇ சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. பதினெட்டு நூல்களையூம் குறிக்கும் வெண்பா வருமாறு. நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியூட னேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கிழ்க் கணக்கு முப்பொருள்களையூம் குறைந்த அடிகளில் சிறப்புற நான்கடிக்கு மிகாமல் உரைப்பது கீழ்க்கணக்கு நூல்களின் ...

திருநீற்றுப் பதிகம்

Posted: 02 Dec 2015 12:30 AM PST

முன்னுரை சமயங்கள் கடவூள் ஒருவர் இருக்கிறார் என்பதையூம் அவரே உலகை இயக்குகிறார் என்பதையூம் அவரவர் செய்கின்ற கருமங்களுக்கு ஏற்ற பலன்கள் அவரவர்கள் அனுபவித்து ஆக வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறுகின்றன. மறு பிறப்பு அனைவருக்கும் உண்டு என்றும் கூறுகின்றன.  சமயங்களே மக்களின் வாழ்க்கை நெறியினை அமைத்து அதன்படி நல்ல நெறியினை கடைபிடிக்க வழிகளை கூறி வந்துள்ளன.  மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கும்  லெவ்விக வாழ்க்கைக்கும் வழிநெறிகளை அமைத்து அவர்களை இறைபக்குவம் அடைய வழி சொல்கின்றன. அறவழியில் மக்கள் வாழ சமயம் தான் ...

சங்கடஹர சதுர்த்தியின் பலன்!

Posted: 01 Dec 2015 10:37 PM PST

இன்று, பெரும்பாலானோர் கடைப்பிடிக்கும் விரதம், சங்கட ஹர சதுர்த்தி! இதை மக்கள் மத்தியில் பரவச் செய்து, இதன் பலனையும் உணர்த்தியவரின் வரலாறு இது: நந்துரம் எனும் ஊருக்கு அருகில் உள்ள காட்டில், விப்ரதன் எனும் வேடன் வாழ்ந்து வந்தான். அவன், அக்காட்டின் வழியாக செல்வோரை கத்தியைக் காட்டி மிரட்டி, பொருட்களை அபகரித்து வந்தான்.  ஒருநாள், அவ்வழியே முத்கல முனிவர் தன் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது, முனிவரின் முன் சென்ற விப்ரதன், கத்தியை ஓங்கினான். ஆனால், முனிவரோ, கண் இமைக்காமல் விப்ரதனையே ...

உறக்கத்திலும் உன் நினைப்பு…

Posted: 01 Dec 2015 10:31 PM PST

- – உறக்கத்தில் விழிப்பு உன் நினைவு – ——————— – இழுத்துச் சாத்திய இமைக் கதவிலும் நீ – ——————— – வெள்ளைத்தாள் அழுக்கானது கவிதை – ——————– — வாழ்நாளில் வாழ்ந்த நாள் விரல்களுக்குள் – —————– இ.பரிமளா

தங்கம் குறித்த செந்திகள் - தொடர் பதிவு

Posted: 01 Dec 2015 10:26 PM PST

சென்னை : - - தங்கம் விலை இன்று(நவ.28ம் தேதி) சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,388-க்கும் சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.19,104-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.150 குறைந்து 25,540-க்கும் விற்பனையாகிறது. -- வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.36.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.34,090-க்கும் விற்பனையாகிறது. - ----------------

அள்ள முடியாத ஐஸ்கிரீம்…

Posted: 01 Dec 2015 10:14 PM PST

- – அள்ள முடியாத ஐஸ்கிரீம் மேகம் – ——————— – உயர்த்து சம்பளத்தை குறை வேலையை வாழ்க நாடு – ——————– – நாட்டுப் பற்றுடன் நாம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் – ———————— வாடிய மனத்தை வருடிக் கொடுத்தது தென்றல் – ———————— இ.பரிமளா

வளர்த்தெடுக்கும் நெல்மணி முத்தே!

Posted: 01 Dec 2015 09:56 PM PST

- வரண்ட நிலத்தை வாரியெடுத்து! வளமை பொங்க வேர்வைதெளித்து! வெயில்மழை நாளில் பதறித்துடித்து! வயல்வரப்பே கண்ணாய் காத்து! உடல்வலிபொறுத்து உழவுமடித்து! உதிரமதிர உழைத்துக்களைத்து! வளர்த்தெடுக்கும் நெல்மணி முத்தே! நீ,,,,, சேற்றில் நாற்றாகி,, செங்காற்றில் கூத்தாடி,,, வரப்பில் விளையாடி,, களத்தில் அடிவாங்கி,, அரைவையில் இடிதாங்கி,, அடுப்பில் சோறாகி,, அகப்பையில் கைதாகி,, அன்னமென்னும் ஆகாரமாகி பசி தீர்க்க வந்த, பஞ்சம் போக்க வந்த, படைத்தோன் விளைவிக்கும் உயர்திரு சொத்தே….. – —————————— -மலிக்கா ...

வயல் கரை மேல் வானுயர வீடு கட்டினால்…

Posted: 01 Dec 2015 09:53 PM PST

- – கண்டு களிக்கவும் உண்டு களிக்கவும்… பண்டு காலத்தில நானிருந்தேன்…. – நீலமே வானமாய் பசுமையே பூமியாய்… அன்று உலகை பார்த்திருந்தேன்… – பாலாற்றின் மேல் பாலம் கட்டலாம்… நீர் பயணிக்க! அணை கட்டலாம்…நீர் சேமிக்க! – வயல் கரை மேல் வானுயர வசிக்கும் வீடு கட்டினால் அது எனக்கும் உனக்கும்… கல்லறையன்றோ! – ——————————— -மணிலா கவிதைமணி

தெரிஞ்சுக்கோங்க!..---ஓபரா ஹவுஸ்!!

Posted: 01 Dec 2015 09:11 PM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

காப்பி – ஒரு பக்க கதை

Posted: 01 Dec 2015 09:09 PM PST

- – ''தம்பி, நீ பெரிய இயக்குநர்கிட்ட வேலை பார்த்திருக்கே. நம்பி உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன். ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து உல்டா பண்ணி கதை ரெடி பண்ணு. ஆனா… நாம காப்பி அடிச்சதை யாரும் கண்டுபிடிக்கவே கூடாது. கண்டுபிடிச்சிட்டா இந்த ஃபேஸ்புக், ட்விட்டர்ல இருக்குறவனுங்க கிழி கிழின்னு கிழிச்சுத் தொங்க விட்ருவானுங்க!'' – மணிமாறனிடம் கண்டிப்பாகச் சொன்னார் தயாரிப்பாளர் சிவநேசன். அவர் எதிர்பார்த்தது போலவே கவனமாகக் காப்பியடித்து ஒரு கதையை மணிமாறன் சொல்ல, சிவநேசனுக்குப் பிடித்துவிட்டது. ...

படித்ததில் பிடித்தது :) --யாதும் ஊரே!

Posted: 01 Dec 2015 08:12 PM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™