Tamil News | Online Tamil News |
- 'அருண் ஜெட்லியிடம் 5 கேள்விகள்': ஆம் ஆத்மி
- நடந்தது ஆய்வு... நிதி ஒதுக்கீடு இல்லை...மழைக்கு ஒழுகும் அரசு பஸ்களால் பாதிப்பு
- ஐ.எஸ்., மனித வெடிகுண்டு: தயாரான புனே சிறுமி
- ராஜ்யசபா எம்.பி.,க்களில் சச்சினும், ரேகாவும் 'வேஸ்ட்'
- மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் சிக்கியவன் விடுதலை: குற்றவாளியை திருத்த குடும்பத்தாருடன் பேச யோசனை
- அரசின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்க: மோடி உத்தரவு
- 'மீனவர்களை மீட்கணும்': பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்
- பிரிந்தது நாகரிகமா? கருணாநிதி கேள்வி
- அரசு அறிவிப்பு அமலாகவில்லை: அபராதம் வசூலிப்பதால் அதிருப்தி
- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின் கணக்கெடுப்பு பணி தீவிரம்: இம்மாத இறுதிக்குள் 26 லட்சம் பேருக்கு நிவாரணம் கிடைக்கும்
- நீதிபதிக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம்?
- ஐ.எஸ்.,க்கு நிதி கிடைப்பதை தடுங்க: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
| 'அருண் ஜெட்லியிடம் 5 கேள்விகள்': ஆம் ஆத்மி Posted: 18 Dec 2015 09:06 AM PST புதுடில்லி,: டில்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம், ஐந்து கேள்விகளை, ஆம் ஆத்மி கட்சி கேட்டு உள்ளது. இது குறித்து, அக்கட்சி தலைவர் அசுதோஷ் கூறியதாவது:டில்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்த புலனாய்வு அறிக்கையை நாங்கள் வெளியிட்ட போது, 'அதில், எனக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டுக்கு கூட, ஆதாரம் இல்லை' என, அருண் ஜெட்லி கூறியுள்ளார். அதனால், அவர் முன், கீழ்கண்ட ஐந்து கேள்விகளை வைக்கிறோம். அதற்கு மட்டும் அவர் பதில் கூறினால் போதும்.* பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான, 10 பார்வையாளர் மாடங்களை, ... |
| நடந்தது ஆய்வு... நிதி ஒதுக்கீடு இல்லை...மழைக்கு ஒழுகும் அரசு பஸ்களால் பாதிப்பு Posted: 18 Dec 2015 07:39 AM PST விருதுநகர்: பழுதடைந்த அரசு பஸ்களை சீரமைக்க ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் சீரமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் பல பஸ்கள் மழைக்கு ஒழுகுவதால் பயணிகள் பாதிக்கின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் தென்காசியில் இருந்து கேரள மாநிலம் சென்ற நெல்லை கோட்ட அரசு பஸ்சில் பயணித்த பெண், பஸ் இருக்கையின் கீழ்ப்புற ஓட்டை வழியாக ரோட்டில் விழுந்து காயத்துடன் தப்பினார்.அதன்பின் தமிழகத்தின் அனைத்துக்கோட்ட பணிமனைகளிலும் உள்ள பஸ்களிலும் கட்டுமானம், மேற்கூரை, இருக்கை, முகப்பு விளக்குகள், படிக்கட்டுகள் உள்ளிட்டவற்றில் பழுதுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றை சீர் செய்ய ... |
| ஐ.எஸ்., மனித வெடிகுண்டு: தயாரான புனே சிறுமி Posted: 18 Dec 2015 08:47 AM PST புனே:ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து, மனித வெடிகுண்டாக மாறத் தயாராக இருந்த, 16 வயது சிறுமியிடம், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மஹாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., - சிவசேனா கட்சிகளின் கூட்டணி அரசு உள்ளது. முதல்வராக, பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார். இம்மாநிலத்தின் புனே நகரில் வசிக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் பற்றிய செய்தி களை, 'டிவி'யில் பார்த்து ஈர்க்கப்பட்டாள்.பின், இணையதளத்தில், அந்த இயக்கம் பற்றிய விவரங்களை தேடிப் பிடித்த சிறுமி, 'பேஸ்புக்' மற்றும், ... |
| ராஜ்யசபா எம்.பி.,க்களில் சச்சினும், ரேகாவும் 'வேஸ்ட்' Posted: 18 Dec 2015 08:50 AM PST புதுடில்லி: ராஜ்யசபா நியமன எம்.பி.,க்களில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகை ரேகா ஆகியோர், 6 சதவீதத்துக்கும் குறைவான நாட்களே சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபாவில், 12 நியமன எம்.பி.,க் கள் உள்ளனர். இவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகை ரேகா, கவிஞர் ஜாவேத் அக்தார், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்ட, 10 பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, ராஜ்யசபாவில் அவர்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை, இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:சச்சின், நியமன ... |
| Posted: 18 Dec 2015 08:58 AM PST புதுடில்லி,: டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்ட குற்றவாளி விடுவிக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அவனின் மனநிலையை மாற்றவும், திருத்தவும்,குடும்பத்தாருடன் பேச வேண்டும் என்றும், நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.டில்லியில், 2012 டிசம்பரில், ஓடும் பேருந்தில், 23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பல், காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் படுகாயமடைந்த அப்பெண், மருத்துவமனையில் ... |
| அரசின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்க: மோடி உத்தரவு Posted: 18 Dec 2015 09:04 AM PST புதுடில்லி: பார்லிமென்டை முடக்கும் எதிர்க்கட்சிகளின் சதித் திட்டத்தையும், மத்திய அரசின் சாதனைகளையும், நாடு முழுவதும் சென்று, மக்களிடம் பிரசாரம் செய்யும்படி, மத்திய அமைச்சர்களுக்கு, பிரதமர் மோடி உத்தரவிட்டு ள்ளார். 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு, அருணாச்சல பிரதேச அரசியல் குழப்பம் உள்ளிட்ட விவகாரங்களை வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லிமென்டை முடக்கி வருகின்றன. இதனால், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தே.ஜ., கூட்டணியைச் சேர்ந்த மத்திய ... |
| 'மீனவர்களை மீட்கணும்': பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் Posted: 18 Dec 2015 09:25 AM PST சென்னை: 'இலங்கை சிறையில் வாடும், 41 தமிழக மீனவர்களையும், 56 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், முதல்வர் கூறியிருப்பதாவது:பாக் ஜல சந்தியில் மீன் பிடிப்பதில் தொடர்ந்து நெருக்கடி ஏற்படுவதால், தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும், மாற்று முன்னோடி திட்டத்தை, தமிழக அரசு வரையறுத்து உள்ளது. இதற்காக பெரிய படகுகள் வாங்க, 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும், 51 கோடி ரூபாய் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.தமிழக மீனவர்கள், ஆழ்கடலுக்கு சென்று மீன் ... |
| பிரிந்தது நாகரிகமா? கருணாநிதி கேள்வி Posted: 18 Dec 2015 09:27 AM PST சென்னை: தி.மு.க.,விலிருந்து பிரிந்து ம.தி.மு.க., உருவானது எந்த வகை நாகரிகம் என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், 'மக்கள் மத்தியில் தி.மு.க., செல்வாக்கு இழந்து வருகிறது' என, வைகோ கூறியுள்ளார். அவரை நன்கறிவேன்; நல்ல பேச்சாளர். ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது, மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அவர், உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் நாகரிகம் இல்லாமல், ம.தி.மு.க.,வினரை, தி.மு.க.,வில் இணைத்துக் கொள்வதாக வைகோ கூறியுள்ளார். அவர் உள்ளிட்ட அனைவரும், தி.மு.க.,விலிருந்து பிரிந்து சென்று, இணைந்து உருவானது ... |
| அரசு அறிவிப்பு அமலாகவில்லை: அபராதம் வசூலிப்பதால் அதிருப்தி Posted: 18 Dec 2015 09:31 AM PST கடலுார்: மழையால் பாதிக்கப்பட்ட, கடலுார் மாவட்டத்தில், நவம்பர் மாத மின் பயன்பாட்டுக்கு, அபராத தொகை வசூலிப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.'மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலுார், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணத்தை, 2016 ஜனவரி 31ம் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், மின் வாரியத்தினர், இந்த மாதம் 1ம் தேதிக்கு பின் மின் அளவீடு செய்பவர்களுக்கு மட்டுமே, முதல்வர் அறிவித்த அபராத கட்டண சலுகை பொருந்தும் வகையில், கம்ப்யூட்டரில், 'சாப்ட்வேர்' பதிவேற்றம் செய்துள்ளனர். மின் ... |
| Posted: 18 Dec 2015 10:28 AM PST சென்னை: தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில், 11 லட்சம் உட்பட, மொத்தம், 26 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இம்மாத இறுதிக்குள், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகிறது.வெள்ளத்தில் முற்றிலும் அழிந்த குடிசைக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பாதிப்புகளுக்கு, 5,000 ரூபாய் என, நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கான, கணக்கெடுப்பு பணி, 7ம் தேதி துவங்கியது. ஒரு வாரத்தில் கணக்கெடுப்பு முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், வீடு வீடாக ஆய்வு நடத்த வேண்டி உள்ளதால், தாமதம் ... |
| நீதிபதிக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம்? Posted: 18 Dec 2015 11:26 AM PST புதுடில்லி: குஜராத் ஐகோர்ட் நீதிபதி பர்திவாலாவுக்கு எதிராக, கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி, ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம், 58 எம்.பி.,க்கள், நேற்று மனு அளித்தனர்.எம்.பி.,க்கள் அளித்த மனு விவரம்: குஜராத்தில், படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்தி வரும் ஹர்திக் படேல் சம்பந்தப்பட்ட வழக்கு, குஜராத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பர்திவாலா, 'இந்த நாட்டை சீரழிப்பது, இடஒதுக்கீடும், ஊழலுமே' என, தெரிவித்தார்.மேலும், 'அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இடஒதுக்கீடு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என, ... |
| ஐ.எஸ்.,க்கு நிதி கிடைப்பதை தடுங்க: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் Posted: 18 Dec 2015 12:42 PM PST நியூயார்க்: ஐ.எஸ்., மற்றும் அல் - குவைதா பயங்கரவாத இயக்கங்களுக்கான, அனைத்து நிதியாதாரங்களையும் துண்டிக்க, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள, 15 நாடுகளின் நிதி அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம், ஐக்கிய நாடுகள் சபையில், நடந்தது. கூட்டத்துக்கு, அமெரிக்க நிதியமைச்சர் ஜாக் லுவ் தலைமை வகித்தார்; அவர் பேசியதாவது:பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்களை, சர்வதேச நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான வகையில் நடக்கும் நிதிப் பரிவர்த்தனைகளை கண்டறிய, தனியார் துறையின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 19,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |