Tamil News | Online Tamil News |
- ரூ.1,550 கோடி ஒதுக்கீடு பிரதமருக்கு ஜெ., கடிதம்
- உ.பி., இளைஞர்களை பயன்படுத்தி பிரதமர் மோடியை தாக்க திட்டம்
- அருணாச்சல பிரதேசத்தில் பரபரப்பான அரசியல் திருப்பம் முதல்வருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
- 'அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும்' சி.பி.ஐ., சோதனையால் குதிக்கிறது ஆம் ஆத்மி
- நம்ப முயலுங்கள்! கருணாநிதி அறிக்கை
- நீர்நிலைகளில் கட்டுமானங்களுக்கு ஐகோர்ட்...தடை :கண்டிப்பாக அமல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவு
- லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: பார்லி., குழு பரிந்துரை
- டிரைவர் இல்லாத கார்: கூகுளின் அடுத்த இலக்கு
- தொழில் துவங்க சிறந்த நாடு: இந்தியாவுக்கு 97வது இடம்
- புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்
- யமுனையை மாசுபடுத்தும் டில்லி சாக்கடைகள்!
| ரூ.1,550 கோடி ஒதுக்கீடு பிரதமருக்கு ஜெ., கடிதம் Posted: 17 Dec 2015 06:41 AM PST சென்னை: 'தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகை, 1,550 கோடி ரூபாயை, உடனடியாக வழங்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வுக்கு பின், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், உயர்கல்வி படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது; இத்திட்டத்திற்காக, தமிழக அரசு, 1,295 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பங்கு, 942 கோடி ரூபாய்; 2014ல் மத்திய அரசு பங்கு, 1,175 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.இதுவரை ... |
| உ.பி., இளைஞர்களை பயன்படுத்தி பிரதமர் மோடியை தாக்க திட்டம் Posted: 17 Dec 2015 07:32 AM PST புதுடில்லி: உ.பி., மாநில இளைஞர்களை பயன்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக, சமீபத்தில் பிடிபட்ட பயங்கரவாதிகள் கூறியுள்ளனர்.இரு தினங்களுக்கு முன், டில்லியில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவனான முகமது ஆசிப் உமரும், நேற்று முன்தினம், ஒடிசாவின் கட்டாக் நகரில், மற்றொரு பயங்கரவாதியான அப்துல் ரஹ்மானும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம், டில்லி சிறப்பு போலீசார் நடத்திய விசாரணையில், சமூக வலைதளங்கள் மூலம், உ.பி., மாநில இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்து பயிற்சி ... |
| அருணாச்சல பிரதேசத்தில் பரபரப்பான அரசியல் திருப்பம் முதல்வருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் Posted: 17 Dec 2015 08:28 AM PST இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநில அரசியலில், அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. துணை சபாநாயகர் தலைமையில் நடந்த சட்டசபை, 'போட்டி' கூட்டத்தில், ஆளும் காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் நபாம் துகிக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, புதிய முதல்வராக, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ., கலிகோ பால் தேர்வு செய்யப்பட்டார். வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் நபாம் துகி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. 60 உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபையில், ஆளும் காங்கிரசுக்கு, 42 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.,வுக்கு, 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ... |
| 'அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும்' சி.பி.ஐ., சோதனையால் குதிக்கிறது ஆம் ஆத்மி Posted: 17 Dec 2015 08:30 AM PST புதுடில்லி: 'டில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற, பல கோடி ஊழல்களுக்கு பொறுப்பேற்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும்' என, ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சாதா, செய்தியாளர்களிடம் பேசியதாவது: டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக, அருண் ஜெட்லி, 13 ஆண்டுகள் இருந்தார். அப்போது, போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக, தீவிர குற்றப் புலனாய்வு அமைப்பு, டில்லி கிரிக்கெட் சங்கம், டில்லி அரசு நியமித்த விசாரணைக் குழு போன்றவை அறிக்கை ... |
| நம்ப முயலுங்கள்! கருணாநிதி அறிக்கை Posted: 17 Dec 2015 08:49 AM PST சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:'வெள்ள சேதங்களால், நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து, நினைத்து நான் வருந்துகிறேன்' - சொல்வது யார்; முதல்வர் ஜெயலலிதா.அது மட்டுமா; உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது; உறவினர் கிடையாது; எனக்கு எல்லாமும் நீங்கள் தான் என, முதல்வர், 'வாட்ஸ் ஆப்' மூலம் பேசியிருக்கிறார்.மக்களின் துன்பங்களை துடைக்க, அவர்கள் தங்கியிருக்கிற முகாம்களுக்கு சென்று பார்த்தாரா; 'அம்மா' என்ற ஒரு சொல்லுக்காகவே, என் வாழ் நாட்களை உங்களுக்காக, அர்ப்பணித்து உழைத்து ... |
| நீர்நிலைகளில் கட்டுமானங்களுக்கு ஐகோர்ட்...தடை :கண்டிப்பாக அமல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவு Posted: 17 Dec 2015 09:52 AM PST சென்னை: 'தமிழக நீர்நிலைகளில், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது; இதை, தமிழக அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் பெய்த கன மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை திறந்து விட்டதால், சென்னை வெள்ளக்காடானது; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.வெள்ளப் பாதிப்புக்கு, ஆறுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றாததும், துார் வாராததும் தான் முக்கிய ... |
| லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: பார்லி., குழு பரிந்துரை Posted: 17 Dec 2015 10:10 AM PST புதுடில்லி: 'லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.சட்டம் தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழு, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்த அறிக்கை: லோக்சபாவுக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதே சிறப்பாக இருக்கும். அதற்காக, சில சட்டசபைகளின் காலத்தை நீட்டிக்கவோ, குறைக்கவோ ஆலோசிக்க வேண்டும்.அப்படி இல்லை எனில், லோக்சபா தேர்தலுடன், சில மாநில சட்டசபைகளுக்கும், லோக்சபாவின் பதவிகாலம், இரண்டரை ஆண்டு முடியும் போது, மற்ற மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் ... |
| டிரைவர் இல்லாத கார்: கூகுளின் அடுத்த இலக்கு Posted: 17 Dec 2015 10:12 AM PST புதுடில்லி: ''டிரைவர் இல்லாமல், கார்கள் இயங்குவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது தான், எங்கள் நிறுவனத்தின் அடுத்த இலக்கு,'' என, கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறினார்.அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான, கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக, தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, 47, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந் நிலையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த சுந்தர் பிச்சை, நேற்று டில்லியில், சில கல்லுாரிகளில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து, அவர் ... |
| தொழில் துவங்க சிறந்த நாடு: இந்தியாவுக்கு 97வது இடம் Posted: 17 Dec 2015 10:55 AM PST நியூயார்க் : உலகளவில், தொழில் துவங்க சிறந்த நாடுகள் பட்டியலில், இந்தியா, 97வது இடத்தில் உள்ளது. தொழில் துவங்க சிறந்த நாடுகள் குறித்த ஆய்வு ஒன்றை, 'போர்ப்ஸ்' பத்திரிகை நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மொத்தம், 144 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது; இதில், முதலிடத்தில் டென்மார்க் உள்ளது. அமெரிக்கா, 22வது மற்றும் இந்தியா, 97வது இடத்திலும் உள்ளன. 2009ல், இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்கா, தொடர்ந்து சரிவு கண்டு இப்போது, 22வது இடத்தை பெற்று உள்ளது. இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது; இங்கு தொழில் துவங்க சாதகமான நிலை உள்ளது. ... |
| புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம் Posted: 17 Dec 2015 10:58 AM PST சமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ, மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, 'நம்ம ஊரு அறக்கட்டளை' அமைப்பு சார்பில், 'நம்ம கல்வி' என்ற பெயரில், இலவசமாக கணினியில் வெளியிடப்பட்டுள்ளது.அறக்கட்டளைநம்ம ஊரு அறக்கட்டளையின், http://clsl.cu/ என்ற இணையதள ... |
| யமுனையை மாசுபடுத்தும் டில்லி சாக்கடைகள்! Posted: 17 Dec 2015 01:34 PM PST
புதுடில்லி : டில்லியிலுள்ள 18 சாக்கடை கால்வாய்களும், யமுனை நதியை அதிக அளவில் மாசுபடுத்துவதாக மத்திய அமைச்சர் உமா பாரதி, லோக்சபாவில் தெரிவித்தார். லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது, மத்திய நீர்வளம் மற்றும் நதிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி பேசியதாவது: யமுனை நதி டில்லி பகுதியில் 20 கி.மீ., நீளத்திற்கு பாய்கிறது. இப்பகுதியால் நதி அதிகளவில் மாசுபட்டுள்ளது. யமுனையின் 80 சதவீத மாசுபாடு, டில்லியிலுள்ள 18 சாக்கடை கால்வாய்கள் கலப்பதால் தான் ஏற்படுகிறது. எனவே, நதியை தூய்மைப்படுத்த விரிவான திட்டம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 18,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |