Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காங்., சுயநலத்தால் பார்லி.,யில் அமளி: பா.ஜ., அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு

Posted: 15 Dec 2015 07:03 AM PST

புதுடில்லி: 'தேசத்தின் நலன் பாதிக்கும் வகையில், 'நேஷனல் ஹெரால்டு' விவகாரத்தை, காங்கிரஸ் பயன்படுத்துகிறது; அதன் அரசியல் சுயநலத்தால், நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கிறது' என, பார்லிமென்டில் நேற்று, பா.ஜ., சரமாரியாக குற்றம் சுமத்தியது.

ஆஜராக உத்தரவு:
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவன வழக்கில், கோர்ட்டில் ஆஜராகும்படி, காங்., தலைவர் சோனியாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக்கூறி, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், ஒரு வாரமாக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், லோக்சபா, ...

பேய் மழை செய்த பேருதவி! கூவத்தின் சுத்தம் தொடருமா?

Posted: 15 Dec 2015 07:42 AM PST

வெள்ளப் பெருக்கால், சென்னையில் கூவம், அடையாறு நதிகள் சுத்தமாகி உள்ளன. இப்போதாவது, கழிவு நீர் கலப்பை தடுத்தால், எதிர்காலத்தில் அதன் பராமரிப்புக்காக ஒதுக்கப்படும், பல ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணம் மிச்சமாகும்; கொசுத் தொல்லைக்கும், நிரந்தர தீர்வு கிடைக்கும் என, நீர்வள ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூவம்:
சென்னையில் இருந்து, 75 கி.மீ., தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசாவரம் எனும் சிற்றுாரில், கல்லாறின் கிளை ஆறாக உருவாகிறது கூவம். இந்த ஆறு, கடம்பத்துார் ஒன்றியம், கூவம் கிராமத்தில் துவங்கி மணவாள நகர், அரண்வாயல், திருமழிசை, ...

மீண்டும் இலவச மிக்சி, கிரைண்டர்!

Posted: 15 Dec 2015 07:44 AM PST

வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு, மீண்டும் இலவச பொருட்கள் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துஉள்ளது.தமிழக அரசு, 1.85 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கி வருகிறது. நவம்பர் வரை, 1.40 கோடி கார்டுகளுக்கு, இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுாரில் பெய்த கன மழையால், பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததில், 'டிவி, பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மிஷின்' உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன; தண்ணீர் புகுந்ததால் பழுதடைந்துள்ளன. வெள்ள நிவாரணமாக, 'குடிசையை இழந்திருந்தால், 10 ...

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொய்க்கணக்கு: கடும் சட்டம் தேவை என நசீம் ஜைதி யோசனை

Posted: 15 Dec 2015 08:41 AM PST

புதுடில்லி: ''நம் நாட்டில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் செலவு கணக்கை குறைத்துக் காண்பிக்கின்றனர். அரசியல் கட்சிகளின் நிதியை கட்டுப்படுத்த, தக்க சட்டங்கள் இல்லை; இதனால், நியாயமாக தேர்தலை நடத்த இயலவில்லை,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி கூறினார். டில்லியில் நேற்று, தேர்தல் நடைமுறை தொடர்பான சர்வதேச மாநாட்டில், தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி பேசியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், வெற்றி பெற்ற, 535 பேரில், பெரும்பாலானவர்கள், 40 முதல், 80 சதவீத செலவு கணக்கையே, தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளனர். உண்மையில், சட்டரீதியாக ...

'நாட்டை அழிக்க துடிக்கும் காங்.,': பிரதமர் மோடி சாடல்

Posted: 15 Dec 2015 08:43 AM PST

கொல்லம்: ''லோக்சபா தேர்தல் தோல்வியை சகிக்க முடியாத காங்கிரஸ், பார்லி மென்டை முடக்கி, நாட்டை அழிக்க முற்படுகிறது,'' என, பிரதமர் மோடி காட்டமாக தெரிவித்தார்.கொல்லத்தில், கேரள முன்னாள் முதல்வர் ஆர்.சங்கரன் சிலையை திறந்து வைத்து மோடி பேசியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தொடர்பான கருத்து வேறுபாடுகளை களைந்து, பார்லிமென்ட் சுமுகமாக நடைபெற, விவாதம், கருத்து பரிமாற்றம், முடிவெடுத்தல் என்ற மூன்று அம்சங்கள் அவசியம் என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். ஆனால், காங்கிரசோ, பார்லியை நடத்த விடாமல், இடையூறு செய்வது, நேரத்தை வீணாக்குவது, மசோதாக்களுக்கு சட்ட ...

'உங்களுடனே இருப்பேன்!': ஜெயலலிதா உருக்கம்

Posted: 15 Dec 2015 09:20 AM PST

சென்னை : 'எந்த நேரத்திலும், உங்களுடனே இருப்பேன்; கலங்காதீர். என்னுடைய எண்ணம் முழுவதும், உங்களை பற்றியதாகவே இருக்கிறது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:வெள்ள சேதங்களில் இருந்து, மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிற பெரும் பணியில், அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறது. நிவாரணப் பணிகளில், எல்லாரும் பங்கேற்கும் வகையில், சமூகத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற பொருளுதவியையும், உடல் உழைப்பையும் வழங்கி வருகின்றனர். நிவாரணப் பணிகளில், தன்னலமின்றி ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.அ.தி.மு.க., ...

எப்படி கிடைக்கும் வௌ்ள நிவாரணம்? பதில் இல்லாததால் மக்கள் குழப்பம்

Posted: 15 Dec 2015 10:00 AM PST

வௌ்ள நிவாரணம் தொடர்பாக, அரசு வௌியிட்ட அறிவிப்பு குறித்து ஏற்பட்டுள்ள பல சந்தேகங்களுக்கு பதில் இல்லாததால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில், வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குழப்பங்கள்:
* வௌ்ளம் பாதித்த பகுதிகள் எவை; பாதிக்காத பகுதிகள் எவை என்பது, வௌிப்படையாக அறிவிக்கப்படவில்லை. வௌ்ளம் பாதிப்பு ஏற்படாத, சென்னை, திருவல்லிக்கேணி மாட வீதி உட்பட பல பகுதிகளில், கணக்கெடுப்பு பணி நடந்துள்ளது. இதனால், வௌ்ளத்தால் பாதிக்கப்படாதவர்களுக்கும், நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்வி ...

தவறை மூடி மறைக்கும், அ.தி.மு.க., அரசு: கருணாநிதி

Posted: 15 Dec 2015 10:09 AM PST

சென்னை உட்பட தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் ஓய்ந்து, ஒரு வாரத்திற்கு மேலாகியும், தமிழக அரசியல் தலைவர்கள் இன்னமும், அந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.இதோ, அவர்களின் காரசார அறிக்கைகள்:

மறைக்காதீங்க!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, டிச., 1ல், தண்ணீர் திறந்து விட்டது தொடர்பாக, தலைமைச் செயலர் பொறுப்பில் இருப்பவர், உண்மைகளை மூடி மறைத்து, திசை திருப்பும் அறிக்கை விட்டுள்ளார். நீதி விசாரணை நடத்த முன் வராமல், உண்மைக்கு மாறாக, அறிக்கையை வெளியிடச் செய்திருப்பதிலிருந்தே, செய்த தவறை மூடி மறைக்கும், அ.தி.மு.க., அரசின் எண்ணம் ...

சி.பி.ஐ., வலையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சிக்குகிறார்: உதவியாளர் வீட்டில் பல லட்சம் ரூபாய் பறிமுதல்

Posted: 15 Dec 2015 10:14 AM PST

புதுடில்லி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சி.பி.ஐ., வலையில் சிக்குகிறார். அவரின் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரின் அலுவலகம், வீடு உட்பட 14 இடங்களில், நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உள்ளது. இந்த அரசின் தலைமை செயலகம், டில்லியின் மத்திய பகுதியில் 'பிளேயர்ஸ் பில்டிங்' என்ற கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூன்றாவது மாடியில் முதல்வர் கெஜ்ரிவாலின் அலுவலகம் உள்ளது. அதனருகே முதன்மை செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் ...

இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு

Posted: 15 Dec 2015 11:05 AM PST

சென்னை:'வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.வெள்ள பாதிப்புக்கு உள்ளான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள், டிசம்பர், 28க்கு தள்ளிவைக்கப்பட்டன. 'மற்ற கல்லுாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்த தேதிகளில் தேர்வு நடைபெறும்' என, உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் ...

ரூ.2 லட்சத்தை தாண்டுகிறதா? 'பான்' எண் அவசியம்

Posted: 15 Dec 2015 12:56 PM PST

புதுடில்லி:கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமான, அனைத்து நிதிப்பரிவர்த்தனைகளுக்கும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண், விரைவில்கட்டாயமாகிறது. லோக்சபாவில் நேற்று, துணை மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தின் போது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளுக்கும், பான் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு, விரைவில் வெளியாகும். உள்நாட்டில் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.நாட்டின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™