Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?

Posted: 15 Dec 2015 09:59 AM PST

காணமல் போன போன் கண்டுபிடிக்க

Posted: 15 Dec 2015 09:57 AM PST

திருப்பாவை

Posted: 15 Dec 2015 09:48 AM PST

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் ...

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ).

Posted: 15 Dec 2015 09:44 AM PST

லூசிபியர் , இலுமிநாட்டி , நியூ வேர்ல்ட் ஆர்டர் இவைகளை சிலர் கேள்வி பட்டிருக்கலாம் , சிலர் இதை முதல் முறை கேள்வி பட கூடும். இந்த பதிவு இவர்களை பற்றி உலகம் அறிந்ததும் , இவர்களின் நோக்கமும் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். லுசிபியர் என்பது சாத்தானை வழிபாடும் கூட்டத்திற்கு சொல்வது. என்னடா இது ஆரம்பத்திலே சாத்தானா ? என்று நினைக்க வேண்டாம். நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் சாத்தானின் கொள்கை தான் உலகத்தில் அதிகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நீங்கள் இந்த மூன்றிற்கும் சொந்தமான ...

பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Posted: 15 Dec 2015 09:39 AM PST

"இந்த பூச்சிய  பார்த்தால்  கையில தொடவோ அடிக்கவோ வேண்டாம். இதில் இருக்கிற வைரஸ் நம் கைகளை தாக்கினால்  கை கோரமாகிவிடும். இது இந்தியாவில்தான் நிறைய இருக்கு. அதுவும் இந்த வெள்ளத்தில் அதிகமாகத் தென்படுகிறது. அதனால் இதனைத் தொடவோ, தள்ளிவிடவோ வேண்டாம்" என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று  தேடி பார்க்கையில்,  இது அத்தனையும்  பொய் என்று வீடியோ ஆதாரம் நமக்கு காட்டுகிறது. அதனால் இனிமேல் இந்த படத்தையோ, வீடியோவையோ  ஷேர் செய்து யாரையும் பயமுறுத்த வேண்டாம். அந்த கையை எப்படி ...

பிஜி தமிழர்

Posted: 15 Dec 2015 09:19 AM PST

பிஜி பிஜித் தீவில் கரும்பு சாகுபடி செய்வதற்காகப் பீகார், வங்காளம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணங்களிலிருந்து 1879ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பிஜித் தீவு பற்றியோ தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பற்றியோ எதையும் அறியாதவர்களாக இவர்கள் அங்கே போனார்கள். 1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது. ...

வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்! கவிஞர் இரா. இரவி

Posted: 15 Dec 2015 08:54 AM PST

வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்! கவிஞர் இரா. இரவி இன்றைக்கு பல குடும்பங்களில் பிரச்சனைகள் வருவதற்கும், நிம்மதி இழப்பதற்கும் காரணம் புரிந்து கொள்ளாமையே! ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும். சங்க இலக்கியத்தில் வரும் ஒரு காட்சி. சுனை நீரி சிறிதளவே உள்ளது. ஒரு மான் குடிப்பதற்கு மட்டுமே உள்ளது. ஆண் மான் குடிக்காமல் பெண்மானைக் குடிக்கச் சொன்னால் குடிக்காது. எனவே ஆண் மான் நீரைக் குடிப்பது போல பாவனை செய்ய பெண் மான் குடித்தது. ...

கவிஞர் இரா .இரவியின் அத்தி சூடி !

Posted: 15 Dec 2015 08:33 AM PST

கவிஞர் இரா .இரவியின் அத்தி சூடி ! அன்பு செய் ! ஆறுதல் கூறு ! இயல்பாய் இரு ! ஈவு இரக்கம் கொள் ! உலகை அறி ! ஊதாரித்தனம் விடு ! எதற்கும் கலங்காதே ! ஏன் எனக்கேள் ! ஐயம் நீக்கு ! ஒன்றுபட்டு வாழ் ! ஓடாது நில் ! ஒளவையைப் படி ! நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி https://www.facebook.com/rravi.ravi www.eraeravi.com www.kavimalar.com http://www.eraeravi.blogspot.in/ . http://www.tamilthottam.in/f16-forum http://eluthu.com/user/index.php?user=eraeravi http://www.eegarai.net/sta/eraeravi இறந்த ...

வர்ண ஜாலமிடும் மயில்கள்

Posted: 15 Dec 2015 08:20 AM PST



நன்றி-முகநூல்

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது

Posted: 15 Dec 2015 08:18 AM PST

கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது. இது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10 000 மடங்குகள் பெரியதாகும். லைஃபை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண LED மின்குமிழ், இணைய இணைப்பு, மற்றும் போட்டோ டிரக்டர் ஆகியன போதுமானவை. வினாடி ஒன்றுக்கு 1 Gb (கிகாபைட்) வரையான வேகத்தில் இணைய பயன்பாட்டைப் பெற லைஃபை தொழில்நுட்பம் வகை செய்கிறது. ஓளிக்கற்றை ...

தெலுங்கு திரையுலகினர் வெள்ளத்தினால் கலங்கிய தமிழக உறவுகளுக்காய் உருவாக்கிய பாடல்

Posted: 15 Dec 2015 07:47 AM PST

This posting includes an audio/video/photo media file: Download Now

துளசி தீர்த்தமும்..வேப்பிலை மஞ்சள் தீர்த்தமும்..

Posted: 15 Dec 2015 07:28 AM PST

பொதுவாகவே பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் புரட்டாசி மாதங்களில் கொடுக்கப்படுவதன் காரணம்..புரட்டாசி மழைகாலம் என்பதாலும்..சளி..இருமல்..காய்ச்சல்.. இவற்றை விரட்டும் ஆற்றல் துளசிக்கு உண்டு என்பதே ஆகும்.. அம்மன் கோவில்களில் மாசி,சித்திரை.. மாதங்களில் மஞ்சள் கலந்த வேப்பிலை தீர்த்தம் கொடுப்பதற்கு காரணம் அந்த மாதங்களில் தோல் நோய்களும்.. அம்மை நோயும் வேகமாக பரவும்..அதை கட்டுபடுத்தி... குணமாக்கும் ஆற்றல் வேப்பிலை கலந்த மஞ்சள் நீருக்கு உண்டு என்பதே ஆகும்.. இவற்றையெல்லாம் கோவிலில் கொடுப்பதற்கு ...

ஆசைக்கும் பேராசைக்கும் சிறிய வித்தியாசம்தான். ..

Posted: 15 Dec 2015 07:24 AM PST

@sowmya_16 ஆசைக்கும் பேராசைக்கும் சிறிய வித்தியாசம்தான். நீ என்னுடன் பேசணும் என்று நினைப்பது ஆசை; நீ என்னுடன் மட்டுமே பேசணும் என நினைப்பது பேராசை… – —————————————— – நிலம் சரியாக இருந்திருந்தால் மழை பிழையாக மாறியிருக்காது. மனிதரின் மனம் சரியாக இருந்திருந்தால் நிலமே பிழையாக ஆகி இருக்காது. – – ஜெயராணி மயில்வாகனன் – ————————————– – @i_Soruba குற்றஞ்சொல்வதைப் போல் அவ்வளவு இலகுவாயில்லை, பணி செய்வது. – ———————————- – கொட்டித் தீர்த்த மழையில் பல தெய்வங்களையும், பல மனிதர்களையும், ...

கூண்டில் புறா…

Posted: 15 Dec 2015 07:18 AM PST

அராஜத்தை எதிர்த்து பறக்கவிடப்பட்ட புறா கூண்டில் அடைப்பு – ————– – வாடிக்கையாளர் வந்தார் செயற்கையாக சிரித்தாள் விலைமகள் – ——————– – தங்கத்தை விற்றவர் மகிழ்ச்சியாக இருந்தார் நகைக்கடை அதிபர் – ——————- – பணத்தை செலவு செய்தவன் சந்தோஷத்தில் துள்ளினான் கள்ள நோட்டு செல்லுபடி – ——————- – மகனுமில்லை, மகளுமில்லை தாத்தா பாட்டி சந்தோஷமாய் முதியோர் இல்லத்தில் – ——————— டி.என்.இமாஜான் நகைச்சுவையான நறுக்குக் கவிதைகள் –

‘உவமைக் கவிஞர்’ சுரதா (தமிழ் கவிஞர், எழுத்தாளர்)

Posted: 15 Dec 2015 07:12 AM PST

_ —————- கவியரங்குகளுக்கு புது வடிவம் கொடுத்த 'உவமைக் கவிஞர்' சுரதா (Suratha) பிறந்த தினம் இன்று (நவம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: – தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) 1921-ல் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்றார். பாவேந்தர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்று கொண்டவர். – பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப் படையாகக் கொண்டு 'சுப்புரத்தினதாசன்' என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். ...

மழையால் பூத்த நட்பு பூக்கள்…

Posted: 15 Dec 2015 07:10 AM PST

உலகம் முழுவதும் புயல் வந்துதான் புரட்டிப் போடும்… தமிழ்நாட்ல மட்டும்தான் கனமழையே புரட்டிப் போடுது! – – ஷர்மிளா ராஜசேகர் – ———————————————- – @raajarajan_r – எதையும் யாரிடமும் கற்றுக்கொள்ள ஒரு முதிர்ச்சி தேவை. – ——————————————— – மழையால் மனிதம் மறைத்த படலங்கள் நீங்கி, நட்பு பூக்கள் எங்கெங்கும் பூக்கின்றன. அன்பிற்கும் அஸ்திவாரமாகியிருக்கிறது இயற்கை. – ‪#‎ காஸ்ட்லி பாடம்‬ – – சுமிதா ரமேஷ் – ——————————————- – மழை பல மனசுகளைக் கழுவி இருக்கிறது. – – ஹன்சா ஹன்சா – ————————————— @YaruIvan ''ஆர்.சி. ...

கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறக்கவில்லை – புதிய பரபரப்பு தகவல்கள்!

Posted: 15 Dec 2015 07:05 AM PST

எகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ரா பாம்பு கடித்துத்தான் இறந்தார் என்று கூறப்படும் கதையை மான்செஸ்டர் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மறுத்துள்ளனர். பழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாகப் பாம்பு கடித்து அரசி இறப்பதற்கு எந்த அளவுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன என அந்தப் பல்கலைக்கழகத்தில் எகிப்து குறித்து ஆராயும் நிபுணர்களும் பாம்புகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் ஒன்றாக இணந்து ஆராய்ந்தனர். அரசியையும் அவரது இரண்டு தோழிகளையும் கொல்லக்கூடிய நாகத்தை அவ்வளவு சிறிய பெட்டிக்குள் மறைத்துக் ...

பெரிய குடை செஞ்சு சென்னைய மூடுனா என்ன…?

Posted: 15 Dec 2015 06:33 AM PST

மொத்தத்துல கமலஹாசன் வாய்ல ஒட்டின ஸ்டிக்கர்தான் டாப்பு! – – ரிட்டயர்டு ரவுடி – ————————————- – @thoatta உ.பி, பீகார்ல எல்லாம் லாரிய மறிச்சு பொருட்களைத் திருடுவாங்களாமேன்னு சில வருடங்களுக்கு முன் ஆச்சரியப்பட்டேன். இந்த வாரத்துல இருந்து இல்ல! – —————————————- – – ''உயிரோடதான் இருக்கோம்'' என்று பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லும்போது அதில் விவரிக்க முடியாத பல வலிகள் மறைந்துள்ளன. – – வெ.பூபதி – —————————————– – @writernaayon இப்போதெல்லாம் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடித்து விடுகிறது, ...

இரத்த தான அமைப்பு தொடர்புக்கு

Posted: 15 Dec 2015 06:25 AM PST

1917 -லில் இந்திய ருபாயின் மதிப்பு

Posted: 15 Dec 2015 06:15 AM PST

மரண வாக்குமூலம்

Posted: 15 Dec 2015 06:13 AM PST

பல வழக்குகளின் போக்கையே திசை திருப்பி விடும் சக்தி, மரண வாக்குமூலத்திற்கு உண்டு.இந்திய சான்று சட்டம் 1872-ன் பிரிவு 32-ன் படி மரண வாக்குமூலத்தை, ஏற்கக்கூடிய வாக்குமூலமாக கருதலாம் என்று சட்டம் சொல்கிறது. வினோதினி ஒருவர் இறக்கும் போதோ, இறப்பை எதிர்பார்த்து இருக்கும் போதோ கொடுக்கும் வாக்குமூலமே மரண வாக்குமூலம். தனது இறப்புக்கு யார் காரணம்? எப்படி தாக்கினார்கள்? என்ன ஆயுதம் பயன்படுத்தினார்கள் என்று இதில் விலாவாரியாக  கூறலாம். இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர் தனது மரண வாக்குமூலத்தை மருத்துவமனையில் ...

கணவரிடம் எப்பொழுது கடைசியாக ‘ஐ லவ் யூ’ சொன்னீர்கள்?’’

Posted: 15 Dec 2015 05:16 AM PST

வாட்ஸ் அப் லேடீஸ் கிளப் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட நடுவர், அங்கிருந்த பெண்களை நோக்கி, ''நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக 'ஐ லவ் யூ' சொன்னீர்கள்?'' என்று கேட்டார். பெரும்பாலானவர்களுக்கு நினைவே இல்லை. ''உடனடியாக ஒவ்வொருவரும் கணவருக்கு 'ஐ லவ் யூ' என்று மெசேஜ் அனுப்புங்கள். சிறந்த பதில் தரும் கணவருக்குப் பரிசு!'' என அறிவித்துவிட்டார் அவர். – எல்லோரும் மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். – அதற்கு வந்த பதில்கள்… – நபர் 1: அன்பே… உனக்கு உடம்புக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே? நபர் ...

தங்களைக் ‘குரைத்து’ மதிப்பிடுகிறான், மன்னா..!’

Posted: 15 Dec 2015 05:09 AM PST

– ''எதிரி ஏன் என்னைப் பார்த்து 'வள்… வள்…' என்கிறான்?'' – ''தங்களைக் 'குரைத்து' மதிப்பிடுகிறான், மன்னா..!'' – ---------------- ''உங்க பொண்ணுக்குப் பார்த்த மாப்பிள்ளை அரசியல்வாதின்னு சொல்றீங்களே… என்ன படிச்சிருக்கார்?'' – ''நேத்து வரைக்கும் அவருக்கு வந்த எல்லா குற்றப் பத்திரிகைகளையும் படிச்சிருக்கார்!'' – —————————————— – ''தலைவர் சமீபகாலமா பொதுக்கூட்டம் எதுவும் போடறதில்லையே… ஏன்?'' – ''தொண்டர்கள் வாடகைக்குக் கிடைக்கலையாம்..!'' – ——————————————- தத்துவம் மச்சி தத்துவம் – என்னதான் ...

வீடு – கவிதை -மு.மேத்தா

Posted: 15 Dec 2015 05:05 AM PST

– வாடகைக்கு நான் வந்தவனில்லை… – அனுதாப்பட்டோ அன்பு காட்டியோ எவரும் எனக்கிதை எழுதித் தரவில்லை – பெரிய மனித ஆதரவு பின்பலமாய் இருந்து கை கொடுத்ததால் – நான் கட்டியதில்லை… செங்கல் முதற்கொண்டு சேகரம் செய்து – வேர்வையுடன் சிலசமயம் கண்ணீரையும் – கலந்து என் கைகளால் பிசைந்து கட்டிய வீடிது! – இதை நோக்கி என் எதிரிகள் கடப்பாறையை அசைப்பதைக் கூட நான் அனுமதிக்க முடியாது! – —————— மு.மேத்தா காத்திருந்த காற்று – கவிதை தொகுப்பிலிருந்து

கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்

Posted: 15 Dec 2015 04:24 AM PST

உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன், கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக அறிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான மழை வெள்ளச் சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்ற பெரும்பணியில் தமிழக அரசு முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறது. வரலாறு கண்டிராத வகையிலும், திடீரென்றும் ஏற்பட்ட அரிதினும் அரிதான ...

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Posted: 15 Dec 2015 03:53 AM PST

@fradu_01 சைதாப்பேட்டை பாலத்துல நின்னு, அமைதியா ஓடுற வெள்ள நீரைப் பார்த்து, ''நீயாடா என்னைக் கொல்லப் பார்த்த?''ன்னுதான் கேக்க தோணுது! அவ்ளோ அமைதியா ஓடுது! – ———————————————– மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே, 1. இடம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக ஆக்கிரமிப்பு இடங்களை வாங்குவது 2. பெரிய ஆட்கள் ஆக்கிரமிக்கும்போது நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிப் போவது – 3. நம் வீடு சுத்தமானால் போதும் என்று நினைத்து குப்பைகளை சாக்கடையில் கொட்டுவது – 4. கடைக்காரர்களிடம் ...

மறை பொருள் ஞானம் (occultism)

Posted: 15 Dec 2015 02:05 AM PST

மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி.

வீட்டுக்குள்ளே வந்த குருவிக்குஞ்சு

Posted: 15 Dec 2015 01:56 AM PST

வீட்டின் முகப்பில் ஒரு நித்தியமல்லி கொடி வளர்ந்து இருந்தது.சில குருவிகள் அதில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.இரண்டு மாதங்களுக்கு முன் அக்குருவிக் கூடு சிதைந்து கீழே கிடந்தது.அருகில் ஒரு குருவி குஞ்சு.அதை கையில் எடுத்து வைத்து ஒரு வீடியோ கிளிப் எடுத்தேன். குருவி குஞ்சை காணாமல் மற்ற குருவிகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தன.குருவி குஞ்சு ஓரளவு பறக்கும் நிலையில் இருந்தது. அந்த சிதைந்த குருவிக் கூட்டை மீண்டும் எடுத்து நித்திய மல்லி கொடியில் வைத்து குருவிக் குஞ்சை அதில் அமர வைத்தேன்.மற்ற குருவிகள் வந்து ...

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Posted: 15 Dec 2015 01:45 AM PST

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன் உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார். என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உற்றொழிய ...

நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ?

Posted: 15 Dec 2015 01:39 AM PST

இப்பதிவு கொஞ்சம் பழசு , கொஞ்சம் உல்டா :- உலகத்தில் கொடுமையான நாற்றம் பிடித்த ஒரு விலங்குடன் யார் அதிக நேரம் இருகிறார்கள் என்று ஒரு போட்டி . இதற்காக பல நாடுகளிலிருந்து அரசியல் வாதிகள் வரவழிக்க படுகிறார்கள் .ஒரு நிபந்தனை மிருகத்துடன் யார் ஒரு மணி நேரம் இருக்கிறார்களோ அவர்களே வென்றவர்கள் .தோற்றவர்கள் அரசியல் வாழ்வை விட்டுவிட வேண்டும் . முதலில் அமெரிக்கர் ஒரு ஐந்து நிமிடம் அந்த மிருகத்துடன் இருந்து விட்டு என்னால் முடியாது என்று கூண்டை விட்டு வந்து விடுகிறார் . நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன் ...

முதலாளி நா யா இருக்கும்

Posted: 15 Dec 2015 01:34 AM PST

நானும் என் நண்பனும் நேற்று பணி முடிந்த பின் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தோம். ஒரு சூப் கடையில் சூப் குடிக்கும் போது ஏற்பட்ட நகைச்சுவை. எங்களைக் சுற்றிலும் நாய்கள் நாங்கள் தூக்கி போடும் எலும்பு துன்டுகளை உண்பதற்காக .பல நாய்கள் எலும்பு துன்டுகளை கவ்வியது. ஒரேயொரு நாய் மட்டும் எலும்புதுன்டுகளை எடுக்கவில்லை. நான் என் நண்பனிடம் கேட்டால் அதற்கு அவன் கூறிய அந்த நாய் முதலாளி நா யா இருக்கும்.. வீடு திரும்பிய பின் நினைத்துக் நினைத்துக் சிரிக்க வைத்தது.

ஆசாரக்கோவை-1

Posted: 15 Dec 2015 12:52 AM PST

ஆசாரக்கோவை உண்டது கேளார்,குரவை,மிக்காரை கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும் உண்டது கேளா விடல் நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும், என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று கேட்கக்கூடாது. நன்றி-தினதந்தி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™