Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'கோவிலுக்குள் என்னை அனுமதிக்கவில்லை' - ராகுல் புகார்; புளுகுமூட்டை ராகுல் - பா.ஜ., பதிலடி

Posted: 14 Dec 2015 08:43 AM PST

புதுடில்லி :''அசாம் கோவிலுக்குள், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், என்னை அனுமதிக்கவில்லை,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.டில்லியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்து, பார்லிமென்ட் வளாகத்தில், ராகுல் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, செய்தியாளர்களிடம் ராகுல் பேசியதாவது:சமீபத்தில், அசாமில் உள்ள பார்பெடா சத்ரா கோவிலுக்கு சென்றேன். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் என்னை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. ஒரு பெண்ணை என் முன் நிறுத்திவிட்டனர். அவரை மீறி நான் எப்படி கோவிலுக்கு போக முடியும்; அதனால், திரும்பி ...

பாக்., உடன் மீண்டும் பேச்சை துவக்கியதற்கு மத்திய அரசு விளக்கம்: பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு தொடரும் என உறுதி

Posted: 14 Dec 2015 08:57 AM PST

புதுடில்லி: 'பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சை துவக்கும் முடிவு, நம்பிக்கை அடிப்படையிலானது; இதை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் சதித் திட்டங்களை முறியடித்து, தொடர்ச்சியாக பேச்சு நடத்த விரும்புகிறோம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் குறித்து பார்லிமென்டில் நேற்று, அவர் கூறியதாவது: சமீபத்தில், இந்தியா, பாக்., நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் எவ்வித விளம்பரமும் இன்றி சந்தித்து பேசினர். இதனால், மூன்றாம் ...

கடவுள் நம்பிக்கை வந்ததா: கருணாநிதி விளக்கம்

Posted: 14 Dec 2015 09:02 AM PST

'என் கையில், எந்த சிவப்பு கயிறும் கிடையாது. கையில் உள்ள சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம், நான் ஓராண்டிற்கும் மேலாக கையில் அணிந்திருக்கும் அதே கடிகாரம் தான். அதற்கும் எந்த முக்கியத்துவம் கிடையாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.கருணாநிதி, நேற்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை: கேள்வி:- கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது என்றும், அதன் காரணமாக, ஆந்திராவிலிருந்து யாரோ அனுப்பிய மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிற்றை கையில் கட்டியிருப்பதாகவும், ஒரு செய்தி, 'தினமலர்' நாளிதழில், முதல் பக்கத்தில் வெளி ...

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 10 ஆண்டுகளுக்கு போதுமான தண்ணீர் 'அவுட்': போதுமான அணைகள் கட்டாததால்

Posted: 14 Dec 2015 09:40 AM PST

தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படாததால், வட கிழக்கு பருவ மழை மூலம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கிடைத்த, 329 டி.எம்.சி., தண்ணீர், கடலுக்கு அனுப்பி வீணடிக்கப்பட்டுள்ளது. இது, மூன்று மாவட்டங்களின், 10 ஆண்டு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவாகும். ஆறுகளின் குறுக்கே, போதுமான தடுப்பணைகளை கட்டாததால், தண்ணீர் வீணாகியுள்ளது.தமிழகத்தில், அக்., 28ல் வட கிழக்கு பருவ மழை துவங்கியது. முதலில், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை கொட்டியது. பின், கடலுார் மாவட்டத்தை புரட்டி எடுத்தது. அதன் பின், சென்னை, திருவள்ளூர், ...

ரூ.5,000 கோடி கேட்டு ஜெ., கடிதம்

Posted: 14 Dec 2015 09:49 AM PST

சென்னை: 'ஆற்றங்கரையோர மக்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு, சிறப்பு நிதி தர வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

கடிதம் வருமாறு:சென்னை அடையாறு, கூவம் கரையோரங்களில் வசித்த, 50 ஆயிரம் பேர், வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு, மாற்று இடத்தில் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும். இதில், 25 ஆயிரம் குடும்பங்களை, குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியமர்த்தும் பணி, இரண்டு வாரத்தில் துவங்கும்; ஓராண்டுக்குள் குடியமர்த்தப்படுவர். அதுவரை, தற்காலிக இருப்பிட வசதி ஏற்படுத்தப்படும்.மீதமுள்ள, 25 ஆயிரம் குடும்பங்கள் ...

முதல்வர் தொகுதின்னா சும்மாவா...!

Posted: 14 Dec 2015 09:51 AM PST

சென்னை: ஒட்டுமொத்த சென்னை நகரமே, வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான, ஆர்.கே.நகரில் மட்டும், மூன்று அமைச்சர்கள் முகாமிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கி வருவது, மற்ற பகுதி மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.சென்னை, ஆர்.கே.நகரில், சுகாதார பணிகளை கண்காணிக்க, அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, செல்லுார் ராஜு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூவரும் அங்கு முகாமிட்டுள்ளதால், மாநகராட்சி அதிகாரிகளும், அந்த தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். மேலும் மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின் வாரிய ...

பள்ளி திறப்பு விழாவில் விபரீதம்: அமைச்சர்கள் நிகழ்ச்சியில் மாணவி மயக்கம்

Posted: 14 Dec 2015 09:52 AM PST

அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவியர் வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவி மயங்கி சாய்ந்தார். மற்ற மாணவியரும் களைப்பானதால், அவர்களை தரையில் அமர வைத்து நிலைமையை சமாளித்தனர்.சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், மழை, வெள்ள பாதிப்பால், 34 நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று மீண்டும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ள நிவாரண மருத்துவ முகாம் மற்றும் சீருடை வழங்கும் விழா நடந்தன. பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, துறை செயலர் சபிதா, இயக்குனர் கண்ணப்பன், அனைவருக்கும் கல்வி திட்ட ...

ஐ.நா., பருவநிலை மாநாட்டில் இந்தியா சாதித்தது என்ன?

Posted: 14 Dec 2015 09:59 AM PST

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில், 195 நாடுகள் கையெழுத்திட்ட பருவநிலை கூட்டு ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது. இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என, சில நாடுகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பாராட்டியுள்ளனர்.இருப்பினும், 'இது, ஒரு நல்ல ஆரம்பம் தான்; உலகம் எதிர்நோக்கியுள்ள பருவநிலை பேரிடர்களை ஒப்பிட்டு பார்க்கையில், இது போதாது' என்ற ரீதியில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு நடந்த மாநாட்டின் போது, இந்தியா தரப்பில், பல திட்ட அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டன. இதில், சில ...

செம்பரம்பாக்கம் ஏரி: 13 பக்க அறிக்கையால் எழும் 13 கேள்விகள்!

Posted: 14 Dec 2015 10:03 AM PST

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டது குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன், நேற்று முன்தினம் வெளியிட்ட, 13 பக்க அறிக்கையால், 13 புதிய கேள்விகள் எழுந்துள்ளன.'செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவிலான உபரி நீர் திறக்கப்பட்டதே, சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம்' என, புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக, வல்லுனர்களும், அரசியல் கட்சியினரும், பொது மக்களும் கேள்வி எழுப்பி உள்ள நிலையில், தலைமைச் செயலர் ஞானதேசிகன், விளக்க அறிக்கை வெளியிட்டார்.

13 கேள்விகள்:
இந்த அறிக்கை தொடர்பாக, ஓய்வு பெற்ற பொதுப்பணித் ...

கடலோர காவல்படை டி.ஐ.ஜி., 'டிஸ்மிஸ்

Posted: 14 Dec 2015 11:28 AM PST

புதுடில்லி : பாகிஸ்தான் மீன்பிடி படகு மூழ்கியது தொடர்பாக, அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்து கூறிய, கடலோர காவல் படை டி.ஐ.ஜி., லோஷாலி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த புத்தாண்டு தினத்தன்று, குஜராத் கடலோர பகுதியில், வெடி பொருட்களை ஏற்றிச் சென்ற, பாகிஸ்தானைச் சேர்ந்த மீன்பிடி படகு, வெடித்துச் சிதறி கடலில் மூழ்கியது; படகிலிருந்த நான்கு பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த அந்தப் படகில் இருந்தவர்களுக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது என, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், அப்போது கருத்து ...

இந்திய மக்களை இழிவுபடுத்தும் இனவெறி கார்ட்டூன்!

Posted: 14 Dec 2015 01:52 PM PST

மெல்போர்ன் : இந்திய மக்களை இழிவுபடுத்தி, ஆஸ்திரேலிய பத்திரிகை, கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இனவெறியுடன் வெளியிடப்பட்டுள்ள இக்கார்டூனுக்கு உலகஅளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் பாரீசில் நடந்த பருவ நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநாட்டில் இந்தியா சார்பில் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை துவக்கி வைத்தார். இந்நிலையில், பருவ நிலை மாநாடு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை கேலிக்குள்ளாக்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான 'தி ஆஸ்திரேலியன்' கார்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™