Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வெள்ள சேதத்தால் தமிழக சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்பா? வாய்ப்பே இல்லை என்கிறது தேர்தல் கமிஷன்

Posted: 12 Dec 2015 06:31 AM PST

சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்காக, சட்டசபை தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பே இல்லை என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.அ.தி.மு.க., அரசின் பதவி காலம், 2016 மே, 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன், சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. ஜனவரி, 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக இருந்தது. வெள்ளம் காரணமாக, ஜன., 20க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிருப்தி:
மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், ...

ஜப்பான் நிதியுதவியுடன் இந்தியாவில் புல்லட் ரயில் ரூ.98 ஆயிரம் கோடி டில்லியில் ஷின்சோ அபேயுடன் மோடி ஒப்பந்தம்

Posted: 12 Dec 2015 08:03 AM PST

புதுடில்லி:வர்த்தக நகரமான மும்பை - குஜராத்தின் பெரிய நகரமான ஆமதாபாத் இடையே, 98 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், நாட்டின் முதல் புல்லட் ரயில் கட்டமைப்பை ஏற்படுத்த, இந்தியா - ஜப்பான் நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியா வந்துள்ள, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் நரேந்திர மோடி இடையேயான உயர்மட்ட பேச்சு, டில்லியில் நேற்று நடந்தது. முடிவில், பல்வேறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. அதில், புல்லட் ரயில் திட்ட ஒப்பந்தமும் கையெழுத்தானது.

குறைந்த வட்டியில்..:
இதன்படி, மும்பை - ஆமதாபாத் நகரங்கள் இடையே, 505 கி.மீ., துாரத்திற்கு புல்லட் ...

துறையில் அனுபவம் இல்லாத அதிகாரியை உயர் பதவியில் அமர வைத்த கொடுமை

Posted: 12 Dec 2015 09:10 AM PST

நீர்வளத் துறையில் அனுபவம் இல்லாத அதிகாரியை, உயர் பதவியில் பணியாற்ற வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து, பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:பொதுப்பணித் துறையில், நீர்வளப் பிரிவின் முதன்மை தலைமை பொறியாளராக இருந்த ஹேமராஜ், சில மாதங்களுக்கு முன், ஓய்வு பெற்றார். இவர், முக்கிய அமைச்சர் ஒருவரின் உறவினர். பணி ஓய்வு பெற்ற பின், ஹேமராஜ், துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். முதன்மை தலைமை பொறியாளராக, திருமாறன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.பொதுப்பணித் துறையின், கட்டடங்கள் பிரிவில் மட்டுமே, பல பதவிகளில் திருமாறன் பணிபுரிந்துள்ளார். இவர், ...

பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொ.ப.து., அதிகாரிகள் குடும்பத்துடன் ஓட்டலில் தஞ்சம்

Posted: 12 Dec 2015 09:11 AM PST

நீர் நிலைகளை பராமரித்து, பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புமிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள், வெள்ளத்தில் சிக்கி, வீட்டை விட்டு வெளியேறி, குடும்பத்தினருடன் ஓட்டல்களில் தங்கிய அவலம் அரங்கேறி உள்ளது.டிச., 1ல் கொட்டி தீர்த்த கனமழையால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு, 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், வினாடிக்கு, 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது.முறையான அறிவிப்பின்றி, கூடுதல் உபரிநீர் திறப்பால், சென்னையின் உள் ...

'வெள்ளத்தால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு'

Posted: 12 Dec 2015 09:36 AM PST

சமீபத்தில், சென்னை மற்றும் இலங்கையில் பெய்த கன மழை, வெள்ளத்தால், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்படும் எனவும், இது, இந்த ஆண்டு, உலக அளவில், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளில் மிக அதிகம் என்றும், பிரிட்டனைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும், 'எல் நினோ' விளைவு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு, பெரிய அளவிலான இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன; இதனால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், நவ., மற்றும் டிச., ...

சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீர்: ஜெனரேட்டரில் காசு பார்த்த அதிகாரிகள்

Posted: 12 Dec 2015 09:42 AM PST

வெள்ளநீரை அகற்ற பயன்படுத்தப்படும் ஜெனரேட்டரில், அதிகாரிகள் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில், குறு, சிறு தொழில், வணிக நிறுவனங்கள் உட்பட, 10 லட்சம் பேர் ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர். மாதந்தோறும், சராசரியாக, 15 ஆயிரம் ஜெனரேட்டர்கள் விற்பனையாகின்றன.சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வீடுகள், பள்ளி, கல்லுாரி, அரசு, தனியார் அலுவலகம், சாலைகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியது. மின் வாரிய துணைமின் நிலையங்களிலும் தண்ணீர் புகுந்ததால், டிச., 1 முதல், சென்னை மற்றும் புறநகரில், மின் வினியோகம் தடைபட்டது. ...

நாளை பள்ளிகள் திறப்பு: இயல்பு நிலையை காட்ட வேண்டுமாம்

Posted: 12 Dec 2015 09:43 AM PST

'எந்த நிலையில் இருந்தாலும், பள்ளிகளை நாளை திறந்து இயல்பு நிலையை காட்ட வேண்டும்' என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், சுத்தம் செய்யப்படாத பள்ளிகளில், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.நான்கு மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

எச்சரிக்கை:
'பள்ளிகளை திறந்தால் தான், இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அர்த்தம். எனவே, பள்ளி விடுமுறையை நீட்டித்தால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். என்ன நிலையில் ...

திருப்பூருக்கும் நேரிடும் சென்னை கதி? நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

Posted: 12 Dec 2015 10:17 AM PST

திருப்பூர்,:திருப்பூரில் குளம், குட்டை, ஓடை என நீர் நிலைகளை ஆக்கிரமித்து, அதிகளவு அரசு அலுவலகங்கள், கட்டடங்கள் உள்ளன. சென்னையை போல், கனமழை பெய்தால், கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.திருப்பூர் நகரின் பரப்பளவு, 169 சதுர கிலோ மீட்டர். நொய்யல் ஆறு, நல்லாறு, ஜம்மனை பள்ளம், சங்கிலிபள்ளம், கள்ளப்பாளையம், சபரி ஓடைகள், மொத்தம் 41.95 கி.மீ., நீளம் உள்ளன. மழை நீரை சேமிக்க, 60க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் இருந்தன.ஆக்கிரமிப்பு மற்றும் நகர வளர்ச்சி, போக்குவரத்துக்கான சாலை வசதி, என பல காரணங்களால் இவை, கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. பல ஓடைகள் மாயமாகிவிட்டன. ஆறு, ஓடைக ...

எம்.பி., - எம்.எல்.ஏ., - கவுன்சிலர்கள் மீது 4 மாவட்ட மக்கள் ஆவேசம்: தவித்தபோது மாயமாகிவிட்டு கணக்கெடுப்பில் குறுக்கிடுவதா?

Posted: 12 Dec 2015 10:27 AM PST

வெள்ளத்தில் தத்தளித்தபோது, உதவி செய்ய வராமல், நிவாரணத் தொகை வழங்குவதற்காக நடத்தப்படும் கணக்கெடுப்பில், அதிகாரிகளுடன் வரும், எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் மீது, நான்கு மாவட்ட மக்கள் கடும் கோபமாக உள்ளனர். பல இடங்களில் கேள்விக் கணைகளை தொடுத்து அவர்களை, விரட்டி அடித்து வருகின்றனர்.வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள், பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சென்னை மாவட்டத்தில், அ.தி.மு.க.,விற்கு, 12 எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.பி.,க்கள்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.பி; ...

ஐ.எஸ்., அமைப்பில் இணைய சென்ற சென்னை வாலிபர் கைது

Posted: 12 Dec 2015 10:40 AM PST

புதுடில்லி:ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தில் சேர, சூடான் நாட்டுக்கு சென்ற சென்னை வாலிபர்,இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவனை, தேசியபுலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர்.

துபாயில்...
சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணன் முகமது நாசர் பகீர் முகமது. இவனது தந்தை, துபாயில் பணியாற்றி வருகிறார். 2014ல், துபாய்க்கு சென்று, சென்னை திரும்பிய முகமது, இந்தாண்டு மே மாதம், மீண்டும் துபாய் சென்றுள்ளார்; பின், இணையதளத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களை தொடர்பு கொண்டுள்ளார். பயங்கரவாத இயக்கத்தில், முகமது சேர விரும்புவதை உறுதிப்படுத்திய, ...

பருவநிலை மாநாடு: வெப்பநிலை அதிகரிப்பை, கட்டுக்குள் வைத்திருப்பது என திட்ட வரைவு தயாரிப்பு

Posted: 12 Dec 2015 12:48 PM PST

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும், பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில், இரண்டு டிகிரி செல்சியசுக்கு உள்ளாக, வெப்பநிலை அதிகரிப்பை, கட்டுக்குள் வைத்திருப்பது என, திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு உள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பருவநிலை மாற்றம் தொடர்பாக, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு நடந்து வருகிறது. உலகத் தலைவர்களின் தீவிர முயற்சிகளுக்கு பலனளிக்கும் வகையில், நேற்று முக்கியத்துவம் வாய்ந்த, திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.இதன்படி, உலகளவில் இரண்டு டிகிரி செல்சியசுக்கு உள்ளாக, வெப்பநிலை அதிகரிப்பை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™