Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- லாரி மோதி மெக்கானிக் சாவு
- கிணற்றில் தவறி விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி சாவு
- தூத்துக்குடியில் மீனவர் நீரில் மூழ்கி சாவு
- சாத்தான்குளம்
- உடன்குடியில் இன்று கல்லீரல் காப்போம் முகாம்
- இளம்பெண்கள் இருவர் தற்கொலை
- இரு பிரிவினரிடையே மோதல்: மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு
- தூத்துக்குடி புறநகர் பகுதியில் டிசம்பர் 14 மின்தடை
- ஓடையில் அடைப்பு: தண்ணீர் சூழ்ந்த அங்கன்வாடி மையம்
- வெள்ள நிவாரணம்: திமுக வேட்டி, சேலை அளிப்பு
- மழை வெள்ளத்தில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை
- தாமிரவருணி ஆற்றில் வெள்ளம்: புன்னக்காயலில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- மறுகால் உயர்த்தப்பட்டதால் வயலுக்குள் புகுந்த தண்ணீர்: விவசாயிகள் புகார்
- மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பயிற்சி
- கோவில்பட்டி: மக்கள் நீதிமன்றத்தில் 1,654 வழக்குகளுக்கு தீர்வு
- சூரன்குடியில் மழைநீர் தேங்கி 400 ஏக்கரில் பயிர்கள் சேதம்: அமைச்சர் ஆய்வு
- 18இல் ஊரக விளையாட்டு போட்டிக்கான தேர்வுப் போட்டிகள்
- குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீர்: விரைந்து அகற்ற தமாகா வலியுறுத்தல்
- ரப்பர் விலை கிலோ ரூ. 85 ஆக சரிவு: உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி
- சென்னை வெள்ளத்தால் குமரியில் ரப்பர் வணிகர்கள் பாதிப்பு
- நித்திரவிளை அருகே 630 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
- நாகர்கோவில்
- களியக்காவிளையில் பலத்த மழை
- குளத்துக்குள் பேருந்து கவிழ்ந்து: 5 ஐயப்ப பக்தர்கள் காயம்
- நாகர்கோவிலில் பாரதியார் பிறந்த தின விழா
- பேச்சிப்பாறை அருகே கூலித் தொழிலாளி கொலை
- கல்லூரி மாணவி கடத்தல்: தூத்துக்குடி இளைஞர் கைது
- நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
- 20இல் குடியரசு தின விழா பேச்சுப் போட்டி
- குமரியில் மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு
- கருங்கல் அருகே முச்சந்தி - எட்டணி சாலையை சீரமைக்க கோரிக்கை
- குமரி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க கோரிக்கை
- ஐக்கிய கிறிஸ்தவ பெருவிழா
- ஆசாரிப்பள்ளம் நாராயண சுவாமி கோயிலில் கார்த்திகை மாத பஜனை
- குமரியில் மழை நீடிப்பு பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றம்
- தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று இரு தங்கத் தேர் பவனி
- கும்மிடிப்பூண்டியில் ரேஷன் கடை திறப்பு
- மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள்
- மத்திய அரசு ரூ.5,000 கோடி வழங்க வேண்டும்
- சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
- இருளர் சமுதாய மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தர கோரிக்கை
- வளர்ச்சியிலும் வேகம் வேண்டும்: மோடி வலியுறுத்தல்
- செல்லியம்மன் கோயிலில் திருட்டு
- அரசு ஊழியர் வெட்டிக் கொலை
- நேஷனல் ஹெரால்டு விவகாரத்துக்கும் ஜிஎஸ்டி மசோதாவுக்கும் தொடர்பில்லை:ராகுல் காந்தி
- பேருந்து மோதியதில் ஒருவர் சாவு
- பாலாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
- நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு சார்ந்த கூட்டாட்சி முக்கியம்: ராஜ்நாத் சிங்
- ஆற்றில் மூழ்கி மாணவர் சாவு
- மாவோயிஸ்டுகளை ஒடுக்க கூட்டு முயற்சி தேவை:முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா வலியுறுத்தல்
- சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு
- சாலை சீரமைப்புப் பணி: அமைச்சர் ஆய்வு
- மறைமலை நகர்
- விவசாயிகளின் தலைவர் சரத் ஜோஷி மறைவு
- கம்மாளம்பூண்டியில் சிறப்பு மருத்துவ முகாம்
- புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் ஒப்பந்தம்
- ரூ.25 கோடி நிதி: உ.பி. முதல்வர் அகிலேஷுக்கு ஜெயலலிதா நன்றி
- பொது மருத்துவ முகாம்
- எரிவாயு உருளைகள் உடனடி விநியோகம்: நூற்றுக்கணக்கில் மக்கள் குவிந்தனர்
- திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: இடதுசாரிக் கூட்டணி வெற்றி
- செய்யாற்றுப் பாலம் சீரமைப்புப் பணி தொடக்கம்
- வெள்ளப் பகுதிகளில் பால் பவுடர் விநியோகம்
- "இந்தியாவை ராமர் வாழ்ந்த பூமி என மோடி கூறியிருக்க வேண்டும்'
- ரயில் பெட்டி தீவைப்புச் சம்பவம்: புரி வந்தது என்ஐஏ குழு
- வளர்ந்த நாடுகள்கடமைகளை மதித்து நடக்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்
- நீரில் மூழ்கிய மாணவர்கள் சாவு
- பயங்கரவாதத்தை ஒடுக்க துர்க்மெனிஸ்தானுடன் இணைந்து இந்தியா செயலாற்றும்:ஹமீது அன்சாரி
- தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் இல்லாத கிராமங்களே இல்லை: அரக்கோணம் எம்.பி. அரி பேச்சு
- பாலாற்றில் வெள்ளம் பாய்ந்தும் நிரம்பாத புதுப்பாடி ஏரி
- தொகுதி மக்களுக்கு உதவி :எலிசபெத் ராணியின் மகள் வழியை பின்பற்ற ம.பி. அமைச்சர் திட்டம்
- கல்லூரியை ஆய்வு செய்ய மதிப்பீட்டுக்குழு நாளை வருகை
- வேலூர் சிறையில் முருகன், நளினி சந்திப்பு
- மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப் பாடுபடுவோம்:அமெரிக்கா உறுதி
- பெண் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்
- ஜிஎஸ்டி, மனை வணிக மசோதாக்களை அடுத்த வாரம் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு
- வேன் மீது லாரி மோதல்: 9 பேர் காயம்
- விசாகப்பட்டினம்: 9 தீவிரவாதிகள் சரண்
- பாரீஸ் மாநாட்டில் இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்தது:மேற்கத்திய ஊடகங்கள்
- இரு சக்கர வாகனத் திருட்டு: வழக்குப் பதிய உத்தரவு
- ஆம்பூரில் பாதுகாப்பு பணியில் போலீஸார்
- கொல்கத்தாவை பந்தாடியது சென்னை
- சந்தனக் கட்டைகளை கடத்த முயன்ற 9 பேர் கைது
- ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி
- கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
- பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
- நியூஸிலாந்து 308 ரன்கள் முன்னிலை
- விரிஞ்சிபுரம்
- 9-வது ஐபிஎல் சீசன்:புணே, ராஜ்கோட் அணிகளுக்கு 15-ம் தேதி வீரர்கள் தேர்வு
- கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்
- 12 நாடுகளுக்கு பயணிக்கும் உலகக் கோப்பை: இன்று புறப்படுகிறது
- மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு
- ரியோ ஒலிம்பிக் விகாஸ் கெளடா உள்பட 3 இந்தியர்கள் தகுதி
- கரும்பு விவசாயிகள் நாளை ஆர்ப்பாட்டம்
- லண்டன் கிளாசிக்: 7-வது சுற்றில் ஆனந்த் தோல்வி
- அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
- பாமக செயற்குழுக் கூட்டம்
- நிவாரணப் பொருள்கள் வழங்கல்
- சவூதி தேர்தலில் சரித்திரம்: முதன்முதலாகப் பெண்கள் பங்கேற்பு
- பாரதியார் பிறந்தநாள் விழா
- திருமலையில் புட்டிஜ் மடாதிபதி வழிபாடு
| Posted: 12 Dec 2015 12:00 PM PST தூத்துக்குடியில் சனிக்கிழமை லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மெக்கானிக் உயிரிழந்தார். |
| கிணற்றில் தவறி விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி சாவு Posted: 12 Dec 2015 12:00 PM PST கோவில்பட்டி அருகே சனிக்கிழமை கிணற்றில் குளிக்கச் சென்ற சுமை தூக்கும் தொழிலாளி தவறி விழுந்து இறந்தார். |
| தூத்துக்குடியில் மீனவர் நீரில் மூழ்கி சாவு Posted: 12 Dec 2015 11:59 AM PST தூத்துக்குடியில் சனிக்கிழமை படகை பழுது பார்த்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். |
| Posted: 12 Dec 2015 11:59 AM PST |
| உடன்குடியில் இன்று கல்லீரல் காப்போம் முகாம் Posted: 12 Dec 2015 11:59 AM PST உடன்குடியில் பாரத மாதா சேவை சங்கம் சார்பில் கல்லீரல் காப்போம் முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது. |
| Posted: 12 Dec 2015 11:58 AM PST குளத்தூர் அருகே தெற்கு கல்மேடு கிராமத்தில் குடும்பத் தகராறில் இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| இரு பிரிவினரிடையே மோதல்: மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு Posted: 12 Dec 2015 11:58 AM PST சாத்தான்குளம் அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கிராம மக்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் உறுதி அளித்தனர். |
| தூத்துக்குடி புறநகர் பகுதியில் டிசம்பர் 14 மின்தடை Posted: 12 Dec 2015 11:57 AM PST தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 14) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. |
| ஓடையில் அடைப்பு: தண்ணீர் சூழ்ந்த அங்கன்வாடி மையம் Posted: 12 Dec 2015 11:56 AM PST சாத்தான்குளத்தில் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதையொட்டி அதன் கரையோரம் இருந்த அங்கன்வாடி மையம், கழிப்பறை முன் சனிக்கிழமை தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து பேரூராட்சி சார்பில் உடனடியாக ஓடை சீரமைக்கப்பட்டு தண்ணீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது. |
| வெள்ள நிவாரணம்: திமுக வேட்டி, சேலை அளிப்பு Posted: 12 Dec 2015 11:56 AM PST தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோருக்கு திமுக சார்பில் சனிக்கிழமை வேட்டி, சேலை வழங்கப்பட்டன. |
| மழை வெள்ளத்தில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை Posted: 12 Dec 2015 11:55 AM PST விளாத்திகுளம் அருகே வேம்பாரில் கனமழை காரணமாக வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டு மூழ்கி இறந்த மாணவரின் குடும்பத்துக்கு, மாநில பேரிடர் நிவாரண உதவித்தொகையை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சனிக்கிழமை வழங்கினார். |
| தாமிரவருணி ஆற்றில் வெள்ளம்: புன்னக்காயலில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை Posted: 12 Dec 2015 11:54 AM PST தாமிரவருணி ஆற்றில் வெள்ள நேரங்களில் ஊரிலிருந்து வெளியேற மறுப்பது தொடர்பாக புன்னக்காயல் மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். |
| மறுகால் உயர்த்தப்பட்டதால் வயலுக்குள் புகுந்த தண்ணீர்: விவசாயிகள் புகார் Posted: 12 Dec 2015 11:53 AM PST சாத்தான்குளம் அருகே கோமானேரி பகுதியில் குளத்து மறுகால் கரையை உயர்த்தியதால் வயலுக்குள் தண்ணீர் புகுந்ததில் நெற்பயிர்கள் மூழ்கி சேதமாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். |
| மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பயிற்சி Posted: 12 Dec 2015 11:53 AM PST தூத்துக்குடியில் மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. |
| கோவில்பட்டி: மக்கள் நீதிமன்றத்தில் 1,654 வழக்குகளுக்கு தீர்வு Posted: 12 Dec 2015 11:52 AM PST கோவில்பட்டி நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,654 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. |
| சூரன்குடியில் மழைநீர் தேங்கி 400 ஏக்கரில் பயிர்கள் சேதம்: அமைச்சர் ஆய்வு Posted: 12 Dec 2015 11:52 AM PST விளாத்திகுளம் மற்றும் சூரன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக விளைநிலங்களில் மழைநீர் தேங்கி 400 ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| 18இல் ஊரக விளையாட்டு போட்டிக்கான தேர்வுப் போட்டிகள் Posted: 12 Dec 2015 11:51 AM PST தமிழக ஊரக விளையாட்டுப் போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. |
| குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீர்: விரைந்து அகற்ற தமாகா வலியுறுத்தல் Posted: 12 Dec 2015 11:47 AM PST தூத்துக்குடியில் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| ரப்பர் விலை கிலோ ரூ. 85 ஆக சரிவு: உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி Posted: 12 Dec 2015 11:47 AM PST ரப்பர் விலை சனிக்கிழமை கிலோ ரூ. 85 ஆக சரிந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகளும், வணிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். |
| சென்னை வெள்ளத்தால் குமரியில் ரப்பர் வணிகர்கள் பாதிப்பு Posted: 12 Dec 2015 11:46 AM PST சென்னையில் ஏற்பட்ட பெருமழையால் அம்பத்தூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் பாதிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு ரப்பர் செல்லாமல் முடங்கியுள்ளது. |
| நித்திரவிளை அருகே 630 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் Posted: 12 Dec 2015 11:46 AM PST நித்திரவிளை அருகே வேனில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 630 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெயை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| Posted: 12 Dec 2015 11:45 AM PST |
| Posted: 12 Dec 2015 11:45 AM PST களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. |
| குளத்துக்குள் பேருந்து கவிழ்ந்து: 5 ஐயப்ப பக்தர்கள் காயம் Posted: 12 Dec 2015 11:44 AM PST கன்னியாகுமரி அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களை ஏற்றி வந்த பேருந்து சனிக்கிழமை குளத்துக்குள் கவிழ்ந்ததில் 5 பேர் காயமடைந்தனர். |
| நாகர்கோவிலில் பாரதியார் பிறந்த தின விழா Posted: 12 Dec 2015 11:44 AM PST நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாரதியார் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| பேச்சிப்பாறை அருகே கூலித் தொழிலாளி கொலை Posted: 12 Dec 2015 11:43 AM PST பேச்சிப்பாறை அருகே முன்விரோதம் காரணமாக சனிக்கிழமை கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். |
| கல்லூரி மாணவி கடத்தல்: தூத்துக்குடி இளைஞர் கைது Posted: 12 Dec 2015 11:43 AM PST நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 12 Dec 2015 11:41 AM PST நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| 20இல் குடியரசு தின விழா பேச்சுப் போட்டி Posted: 12 Dec 2015 11:40 AM PST நேரு இளையோர் மையம் சார்பில் இளைஞர்களுக்கான குடியரசு தின விழாப் பேச்சுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 20) நடைபெறுகிறது. |
| குமரியில் மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு Posted: 12 Dec 2015 11:40 AM PST கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 5,474 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. |
| கருங்கல் அருகே முச்சந்தி - எட்டணி சாலையை சீரமைக்க கோரிக்கை Posted: 12 Dec 2015 11:39 AM PST கருங்கல் அருகே உள்ள முச்சந்தி - எட்டணி இணைப்புச் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| குமரி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க கோரிக்கை Posted: 12 Dec 2015 11:39 AM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 12 Dec 2015 11:38 AM PST ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில், தக்கலை புனித எலியாசியார் ஆலய அரங்கில் ஐக்கிய கிறிஸ்தவ பெருவிழா நடைபெற்றது. |
| ஆசாரிப்பள்ளம் நாராயண சுவாமி கோயிலில் கார்த்திகை மாத பஜனை Posted: 12 Dec 2015 11:37 AM PST மேலஆசாரிப்பள்ளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் கார்த்திகை மாத பஜனை விழா நடைபெற்றது. |
| குமரியில் மழை நீடிப்பு பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றம் Posted: 12 Dec 2015 11:37 AM PST குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. |
| தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று இரு தங்கத் தேர் பவனி Posted: 12 Dec 2015 11:36 AM PST கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று (டிச. 13) இரு தங்கத் தேர் பவனி நடைபெறவுள்ளது. |
| கும்மிடிப்பூண்டியில் ரேஷன் கடை திறப்பு Posted: 12 Dec 2015 11:24 AM PST கும்மிடிப்பூண்டி வசந்த பஜாரில் திருக்குளம் அருகே புதிய ரேஷன் கடை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. |
| மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் Posted: 12 Dec 2015 11:23 AM PST திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. |
| மத்திய அரசு ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் Posted: 12 Dec 2015 11:22 AM PST மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மத்திய அரசு ரூ. 5,000 கோடி வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். |
| சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள் Posted: 12 Dec 2015 11:14 AM PST திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்கள், ஆவணங்களை வழங்கும் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீராராகவ ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| இருளர் சமுதாய மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தர கோரிக்கை Posted: 12 Dec 2015 11:13 AM PST பொன்னேரி வட்டத்தில் மழையால் வீடு இழந்த இருளர் சமுதாய மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| வளர்ச்சியிலும் வேகம் வேண்டும்: மோடி வலியுறுத்தல் Posted: 12 Dec 2015 11:13 AM PST ஜப்பானின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில் சேவை தொடங்கவுள்ளதைப் போல, இரு நாடுகளும் இணைந்து பொருளாதாரத்திலும் அதிவேக வளர்ச்சியை அடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
| செல்லியம்மன் கோயிலில் திருட்டு Posted: 12 Dec 2015 11:13 AM PST கும்மிடிப்பூண்டி அருகே செல்லியம்மன் கோயிலில் இரு கோபுரக் கலசங்கள் உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| Posted: 12 Dec 2015 11:12 AM PST பெரியபாளையம் அருகே அரசு ஊழியர் அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| நேஷனல் ஹெரால்டு விவகாரத்துக்கும் ஜிஎஸ்டி மசோதாவுக்கும் தொடர்பில்லை:ராகுல் காந்தி Posted: 12 Dec 2015 11:12 AM PST சரக்கு-சேவை வரி விதிப்பு மசோதாவுக்கும் (ஜிஎஸ்டி), நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கு விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். |
| பேருந்து மோதியதில் ஒருவர் சாவு Posted: 12 Dec 2015 11:12 AM PST காஞ்சிபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்றவர் பேருந்து மோதியதில் வெள்ளிக்கிழமை இறந்தார். |
| பாலாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு Posted: 12 Dec 2015 11:12 AM PST மதுராந்தகம் அருகே பாலாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சனிக்கிழமை இறந்தார். |
| நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு சார்ந்த கூட்டாட்சி முக்கியம்: ராஜ்நாத் சிங் Posted: 12 Dec 2015 11:11 AM PST நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு சார்ந்த கூட்டாட்சி மிகவும் முக்கியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். |
| Posted: 12 Dec 2015 11:11 AM PST காஞ்சிபுரம் அருகே ஆற்றில் மூழ்கி மாணவர் வெள்ளிக்கிழமை இறந்தார். |
| மாவோயிஸ்டுகளை ஒடுக்க கூட்டு முயற்சி தேவை:முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா வலியுறுத்தல் Posted: 12 Dec 2015 11:11 AM PST மாவோயிஸ்டுகளை ஒடுக்க தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு தேவை என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும், மாவோயிஸ்டு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டுமெனவும் மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். |
| சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு Posted: 12 Dec 2015 11:11 AM PST செங்கல்பட்டை அருகே நின்றிருந்த டிராக்டர் மீது மொபெட் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். |
| சாலை சீரமைப்புப் பணி: அமைச்சர் ஆய்வு Posted: 12 Dec 2015 11:10 AM PST வெள்ளத்தில் சேதமடைந்த கிழக்கு கடற்கரை சாலை - பழைய மாமல்லபுரம் சாலையை இணைக்கும் கோவளம்-கேளம்பாக்கம் சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| Posted: 12 Dec 2015 11:10 AM PST |
| விவசாயிகளின் தலைவர் சரத் ஜோஷி மறைவு Posted: 12 Dec 2015 11:09 AM PST "ஷேத்காரி சங்கடனா' என்ற விவசாயிகள் அமைப்பின் நிறுவனரான சரத் ஜோஷி சனிக்கிழமை மறைந்தார். |
| கம்மாளம்பூண்டியில் சிறப்பு மருத்துவ முகாம் Posted: 12 Dec 2015 11:09 AM PST உத்தரமேரூர் வட்டம், கம்மாளம்பூண்டி கிராமத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் ஒப்பந்தம் Posted: 12 Dec 2015 11:09 AM PST புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
| ரூ.25 கோடி நிதி: உ.பி. முதல்வர் அகிலேஷுக்கு ஜெயலலிதா நன்றி Posted: 12 Dec 2015 11:08 AM PST தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.25 கோடி நிதியுதவி அளித்தமைக்காக, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Dec 2015 11:08 AM PST மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுராந்தகம் தியாகி ஒ.நா.துரைபாபு அறக்கட்டளை, வள்ளலார் சன்மார்க்க குழு, கட்டடத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| எரிவாயு உருளைகள் உடனடி விநியோகம்: நூற்றுக்கணக்கில் மக்கள் குவிந்தனர் Posted: 12 Dec 2015 11:07 AM PST காஞ்சிபுரத்தில் இண்டேன் நிறுவனம் சார்பில் உடனடியாக எரிவாயு உருளைகள் வழங்கும் முகாம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. |
| திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: இடதுசாரிக் கூட்டணி வெற்றி Posted: 12 Dec 2015 11:07 AM PST திரிபுரா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அகர்தலா நகராட்சி உள் ளிட்ட பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி, ஆளும் இடதுசாரிக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. |
| செய்யாற்றுப் பாலம் சீரமைப்புப் பணி தொடக்கம் Posted: 12 Dec 2015 11:07 AM PST உத்தரமேரூர் அருகே வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட செய்யாற்றுப் பாலத்தை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| வெள்ளப் பகுதிகளில் பால் பவுடர் விநியோகம் Posted: 12 Dec 2015 11:06 AM PST வெள்ளம் பாதித்தப் பகுதி மக்களுக்கு இலவச பால் பவுடர் பாக்கெட்கள் காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. |
| "இந்தியாவை ராமர் வாழ்ந்த பூமி என மோடி கூறியிருக்க வேண்டும்' Posted: 12 Dec 2015 11:06 AM PST இந்தியாவை ராமரும், கிருஷ்ணரும் வாழ்ந்த பூமி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்க வேண்டும் என்று குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகை பீடத்தின் சங்கராசாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார். |
| ரயில் பெட்டி தீவைப்புச் சம்பவம்: புரி வந்தது என்ஐஏ குழு Posted: 12 Dec 2015 11:06 AM PST புரியில் நடந்த ரயில் பெட்டி தீவைப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தாவில் இருந்து தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை புரி வந்தடைந்தனர். |
| வளர்ந்த நாடுகள்கடமைகளை மதித்து நடக்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல் Posted: 12 Dec 2015 11:05 AM PST வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் மேம்பாட்டுக்கு உதவும் விஷயத்தில் வளர்ந்த நாடுகள் தங்கள் கடமைகளை மதித்து நடக்க வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 12 Dec 2015 11:05 AM PST வேலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர். |
| பயங்கரவாதத்தை ஒடுக்க துர்க்மெனிஸ்தானுடன் இணைந்து இந்தியா செயலாற்றும்:ஹமீது அன்சாரி Posted: 12 Dec 2015 11:05 AM PST எல்லை தாண்டிய பயங்கரவாதம், அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை ஒடுக்க துர்க்மெனிஸ்தானுடன் இணைந்து இந்தியா செயலாற்றும் என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார். |
| தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் இல்லாத கிராமங்களே இல்லை: அரக்கோணம் எம்.பி. அரி பேச்சு Posted: 12 Dec 2015 11:04 AM PST தமிழகத்தில் தற்போது நியாய விலைக் கடைகள் இல்லாத கிராமங்களே இல்லை எனும் நிலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார் என அரக்கோணம் எம்.பி. கோ.அரி தெரிவித்தார். |
| பாலாற்றில் வெள்ளம் பாய்ந்தும் நிரம்பாத புதுப்பாடி ஏரி Posted: 12 Dec 2015 11:03 AM PST பாலாற்றில் வெள்ளம் பாய்ந்தும், ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி ஏரி நிரம்பவில்லை. |
| தொகுதி மக்களுக்கு உதவி :எலிசபெத் ராணியின் மகள் வழியை பின்பற்ற ம.பி. அமைச்சர் திட்டம் Posted: 12 Dec 2015 11:03 AM PST பிரிட்டன் ராணி எலிசபெத்தின் மகள் பாணியில், தன்னுடன் கைப்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்ள தொகுதி மக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு, அதை தாழ்த்தப்பட்ட இன மக்களின் நலன்களுக்காகச் செலவிட திட்டமிட்டு வருகிறார் மத்தியப்பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷா. |
| கல்லூரியை ஆய்வு செய்ய மதிப்பீட்டுக்குழு நாளை வருகை Posted: 12 Dec 2015 11:03 AM PST வாலாஜாபேட்டை அரசு மகளிர் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் வரும் 14-ஆம் தேதி வருகை தர உள்ளனர். |
| வேலூர் சிறையில் முருகன், நளினி சந்திப்பு Posted: 12 Dec 2015 11:03 AM PST ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூரில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். |
| மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப் பாடுபடுவோம்:அமெரிக்கா உறுதி Posted: 12 Dec 2015 11:02 AM PST மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. |
| பெண் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் Posted: 12 Dec 2015 11:02 AM PST வாணியம்பாடியை அடுத்த மாரப்பட்டில் தமிழக அரசின் சார்பில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வியாக்கிழமை நடைபெற்றது. |
| ஜிஎஸ்டி, மனை வணிக மசோதாக்களை அடுத்த வாரம் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு Posted: 12 Dec 2015 11:02 AM PST சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) தொடர்பான மசோதாக்களை, நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. |
| வேன் மீது லாரி மோதல்: 9 பேர் காயம் Posted: 12 Dec 2015 11:01 AM PST ஆம்பூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். |
| விசாகப்பட்டினம்: 9 தீவிரவாதிகள் சரண் Posted: 12 Dec 2015 11:01 AM PST ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் 9 தீவிரவாதிகள் சனிக்கிழமை சரணடைந்தனர். இதுகுறித்து விசாகப்பட்டினம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கோயா பிரவீண் கூறியதாவது: |
| பாரீஸ் மாநாட்டில் இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்தது:மேற்கத்திய ஊடகங்கள் Posted: 12 Dec 2015 11:01 AM PST பாரீஸில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இந்தியா அதிக முக்கியத்துவம் பெற்றது என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. |
| இரு சக்கர வாகனத் திருட்டு: வழக்குப் பதிய உத்தரவு Posted: 12 Dec 2015 11:01 AM PST இரு சக்கர வாகனத் திருட்டு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் புகார் அளித்தால், அதுகுறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்ய மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமாரி உத்தரவிட்டுள்ளார். |
| ஆம்பூரில் பாதுகாப்பு பணியில் போலீஸார் Posted: 12 Dec 2015 11:00 AM PST முகமது நபி குறித்து அவதூறுப் பிரசாரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ஆம்பூர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். |
| Posted: 12 Dec 2015 11:00 AM PST இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் 2-வது அரையிறுதியின் முதல் சுற்றில் சென்னையின் எப்.சி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை தோற்கடித்தது. இதன்மூலம் இறுதிச்சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது சென்னை. |
| சந்தனக் கட்டைகளை கடத்த முயன்ற 9 பேர் கைது Posted: 12 Dec 2015 11:00 AM PST காட்பாடி அருகே வனப்பகுதியில் சந்தனக் கட்டைகளை கடத்த முயன்ற 9 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| Posted: 12 Dec 2015 11:00 AM PST மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. |
| கதவை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 12 Dec 2015 10:59 AM PST வேலூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. |
| பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு Posted: 12 Dec 2015 10:59 AM PST ராணிப்பேட்டை, அக்ராவரம் அருகே 40 டன் இரும்பு தகடு சுருள் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி பள்ளத்தில் சிக்கி சாலையின் குறுக்கே பழுதாகி நின்றதால் அங்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. |
| நியூஸிலாந்து 308 ரன்கள் முன்னிலை Posted: 12 Dec 2015 10:58 AM PST இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து தனது 2-வது இன்னிங்ஸில் 48 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. |
| Posted: 12 Dec 2015 10:58 AM PST |
| 9-வது ஐபிஎல் சீசன்:புணே, ராஜ்கோட் அணிகளுக்கு 15-ம் தேதி வீரர்கள் தேர்வு Posted: 12 Dec 2015 10:58 AM PST 9-வது ஐபிஎல் சீசனில் புதிதாக களமிறங்கவுள்ள புணே, ராஜ்கோட் ஆகிய இரு அணிகளுக்கு தலா 5 வீரர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த வீரர்கள் தேர்வு மும்பையில் வரும் 15-ம் தேதி பகல் 12.15 மணிக்கு தொடங்குகிறது. |
| கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் Posted: 12 Dec 2015 10:58 AM PST வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| 12 நாடுகளுக்கு பயணிக்கும் உலகக் கோப்பை: இன்று புறப்படுகிறது Posted: 12 Dec 2015 10:57 AM PST இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவின் 8 நகரங்களில் நடைபெறுகிறது. |
| மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு Posted: 12 Dec 2015 10:57 AM PST வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) ரூ. 17.07 கோடி மதிப்பில் சமரசத் தீர்வு காணப்பட்டது. |
| ரியோ ஒலிம்பிக் விகாஸ் கெளடா உள்பட 3 இந்தியர்கள் தகுதி Posted: 12 Dec 2015 10:57 AM PST ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவைச் சேர்ந்த வட்டு எறிதல் வீரர் விகாஸ் கெளடா, மாரத்தான் வீரர் நிதேந்திரா சிங் ராவத், 20 கி.மீ. நடைப் போட்டி வீராங்கனை சப்னா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். |
| கரும்பு விவசாயிகள் நாளை ஆர்ப்பாட்டம் Posted: 12 Dec 2015 10:57 AM PST அம்முண்டி பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை (டிச.14) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. |
| லண்டன் கிளாசிக்: 7-வது சுற்றில் ஆனந்த் தோல்வி Posted: 12 Dec 2015 10:57 AM PST லண்டன் செஸ் கிளாசிக் போட்டியின் 7-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மேக்ûஸம் வச்சிரிடம் தோல்வி கண்டார். |
| அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி Posted: 12 Dec 2015 10:56 AM PST வாணியம்பாடியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக பகலில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். |
| Posted: 12 Dec 2015 10:56 AM PST பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 12 Dec 2015 10:55 AM PST குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு ஊராட்சி சார்பில், சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| சவூதி தேர்தலில் சரித்திரம்: முதன்முதலாகப் பெண்கள் பங்கேற்பு Posted: 12 Dec 2015 10:55 AM PST சவூதி அரேபியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதன்முதலாகப் பெண்கள் வாக்களித்ததுடன், ஏராளமான இடங்களில் போட்டியிட்டனர். |
| Posted: 12 Dec 2015 10:55 AM PST ராணிப்பேட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| திருமலையில் புட்டிஜ் மடாதிபதி வழிபாடு Posted: 12 Dec 2015 10:54 AM PST திருமலை ஏழுமலையானை புட்டிஜ் மடாதிபதி ஸ்ரீ சுகுனேந்திர தீர்த்த சுவாமிகள் சனிக்கிழமை வழிபட்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |