ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- விடுப்பு - ஒரு பக்க கதை
- அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும்
- 2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம்!
- இனம் - ஒரு பக்க கதை
- ஒரு கற்பனை.................. வெள்ளத்துப்பால்!
- முயல், ஆமை கதையின் #லேட்டஸ்ட்_வெர்ஷன் .
- முதல் முறையாக சவுதி அரேபியா தேர்தலில் பெண்கள் வாக்களித்தனர்
- உலக உத்தமர் கலாம் ! நூல் தொகுப்பாசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- திருவண்ணாமலை கிரிவலம்.
- ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள்
- எவெரெஸ்ட் சிகரம் அருகே பனி ஏரி உருகுகிறது - பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்
- காதல் கவிதைகள் - தொடர் பதிவு
- கணவர் 110, மனைவி 103: 90-வது திருமணநாள் கொண்டாடிய பஞ்சாப் ஜோடி
- தமிழ் வம்சாவளி எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கு தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது
- இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
- மழையால் மனிதனாகிய ஒருவன்
- ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் கைது!
- டுவிட்டர் தகவலால் ரயிலில் பசியால் துடித்த குழந்தையின் பசிதீர்த்த ரயில்வே அமைச்சர் !
- முள்ளிலும் பூக்கும் பூக்கள்…
- அந்த ரூபாய் நோட்டிலும் சிரித்தார் காந்தி…
- வேன் – ஒரு பக்க கதை
- தமிழகத்தில் குளிர் வாட்டுமா?
- பாலை வனத்திற்குள்ளா நந்தவனத்தை அடைப்பது..
- நகை – ஒரு பக்க கதை
- கடன் வேணுமான்னு உலக வங்கிக்கு போன் செஞ்சது தப்பா போச்சு..!
- சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டுக்காரர்!
- சிங்கப்பூர் செயற்கைகோளை விண்ணில் செலுத்துகிறது பி.எஸ்.எல்.வி
- புதுக்கவிதை.
- நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு)
- கஞ்சூஸ்!
- ஜன்னல்
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 12 Dec 2015 11:39 AM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 12 Dec 2015 09:34 AM PST ![]() |
| அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும் Posted: 12 Dec 2015 09:28 AM PST அம்மா , அம்மா கால் வலிக்குதும்மா! தூக்கிக்கம்மா!" அந்த சிறுவனின் வயது எட்டு. அம்மாவுக்கு பையனை தூக்க ஆசைதான். முயற்சித்தாள். "முடியலடா? இன்னும் கொஞ்ச தூரந்தான் ஊரு வந்துரும்பா" என்றாள். எப்போதும் தன் அப்பா ஊரிலிருந்து அம்மா ஊருக்கு , அந்த ஒத்தையடிப்பாதையில் தான் செல்வான். இயற்கை, தன் அழகை வழியெல்லாம், பச்சைப்பசேல் என்று வயல் வெளியாய் பறப்பிநிற்கும். தென்னை மரங்கள் கம்பீரமாய் , தலையசைத்து வரவேற்கும். அந்த அழகான சிறிய வாய்க்கால் வரப்பு ஓரம் , நடக்கும்போது அம்மா நிலக்கடலைச் செடியை , கொத்தாகப் ... |
| 2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம்! Posted: 12 Dec 2015 09:25 AM PST 2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம்! - சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்னும் புத்தகத்தில் படித்தது- 2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம். அவர் சில உதாரணங்களை கொடுத்து உள்ளார். அவை.... தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள் கதை: ஐயோ சுட்டுடாதே! தலைப்பு:2050ல் குழந்தை கதை: தங்கச்சின்னா என்னம்மா? தலைப்பு: வசந்தாவின் கணவன் கதை: சுசீலாவோடு எப்படி? சரி படிக்கும்போதே ரொம்ப சுவாரஸ்சியமா இருந்துச்சு. நானும் முயற்சி செய்யலாம்னு... 1) தலைப்பு: மாமியாரின் கோபம் கதை: பொண்ணு பொறந்திருக்கு! 2) ... |
| Posted: 12 Dec 2015 09:22 AM PST ![]() |
| ஒரு கற்பனை.................. வெள்ளத்துப்பால்! Posted: 12 Dec 2015 09:18 AM PST வள்ளுவர் இன்று இருந்திருந்தால், சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தைப் பற்றி....இப்படியும் குறள்கள் எழுதி இருப்பார்......... வெள்ளத்துப்பால்! மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 'போட்'தினில் பின் செல்பவர். வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் வேளச்ச்சேரியில் வீடு கட்டியோர். மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார் ..இளைத்தார் கீழ்போர்ஷனில் குடி இருப்பவர் . நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக, ஜலம் உள்ளே வருமாவென! சம்சாரம் தந்திடுமே துன்பம்; புயல்மழையால் மின்சாரம் ... |
| முயல், ஆமை கதையின் #லேட்டஸ்ட்_வெர்ஷன் . Posted: 12 Dec 2015 09:15 AM PST முயல், ஆமை கதையின் #லேட்டஸ்ட்_வெர்ஷன் . முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது. #நீதி : தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க! வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்! தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், 'நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்' என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ... |
| முதல் முறையாக சவுதி அரேபியா தேர்தலில் பெண்கள் வாக்களித்தனர் Posted: 12 Dec 2015 08:44 AM PST மன்னர் ஆட்சி நடக்கிற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு இன்று தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நியமனங்கள் செய்யப்படும். ஆண்களைப் பொறுத்தமட்டில் பதின்மூன்றரை லட்சம் பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். பெண்களைப் பொறுத்தமட்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் ... |
| Posted: 12 Dec 2015 08:37 AM PST உலக உத்தமர் கலாம் ! நூல் தொகுப்பாசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017. ***** மாமனிதர் அப்துல் கலாம் படம் தாங்கி எத்தனையோ நூல்கள் வந்து விட்டன. ஆனால் இந்த நூல் அட்டைப்படம் போன்று, உயிரோட்டமான கலாம் அவர்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக வடிவமைத்த பதிப்பகத்தாருக்கு முதல் பாராட்டு. கோவையின் பெருமைகளில் ஒன்றானவர், தன்னம்பிக்கை உரையாளர், எழுத்தாளர், ... |
| Posted: 12 Dec 2015 08:19 AM PST அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் ஐம்பூதத் தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என சண்டை மூண்ட பொழுது, யார் தன்னுடைய அடியையும், முடியையும் காணுகிறார்களோ அவர்களே பெரியவர் என்று சிவபெருமான் நீண்ட நெருப்புத் தண்டாக காட்சியளித்தார். இவ்வடிவம் லிங்கோத்பவர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வடிவின் ... |
| ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Posted: 12 Dec 2015 08:02 AM PST கோபி, டிச 12– திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு ... |
| எவெரெஸ்ட் சிகரம் அருகே பனி ஏரி உருகுகிறது - பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் Posted: 12 Dec 2015 07:54 AM PST எவரெஸ்ட் சிகரத்தின் அருகே பனிஏரி ஒன்று உருகி சாதாரண ஏரிகளாக உருவெடுத்துக்கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். Iகும்பு பள்ளத்தாக்கு- பனி ஏரி உருகுகிறது இந்தப் பகுதியில் பனிக்கட்டிப் பிரதேசங்கள் குறைவதைக் காட்டும் மிகச் சமீபத்திய சமிக்ஞையாக அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏரிகள் முதலில் சிறு சிறு குளங்களாக உருவாகி பின்னர் ஒன்றாக இணைகின்றன. இதன் மூலம், கும்பு பனிஏரியை உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயலும் மலைஏறிகள் கடப்பது மேலும் கடினமாகும். அவை ... |
| Posted: 12 Dec 2015 07:49 AM PST - - நன்றி- இணையம |
| கணவர் 110, மனைவி 103: 90-வது திருமணநாள் கொண்டாடிய பஞ்சாப் ஜோடி Posted: 12 Dec 2015 07:48 AM PST - இங்கிலாந்தில் வசித்து வரும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜோடி ஒன்று தங்களது 90-வது திருமண நாளை கொண்டாடி அசத்தியுள்ளனர். உலகிலேயே அதிக நாள்கள் கணவன்-மனைவியாக இணைந்து வாழ்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. பஞ்சாப்பில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கரம். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கர்தரிக்கும் கடந்த 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சீக்கிய பராம்பரியம்படி திருமணம் நடைபெற்றது. அப்போது கரமுக்கு வயது 20. கர்தரிக்கு 13. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, ... |
| தமிழ் வம்சாவளி எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கு தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது Posted: 12 Dec 2015 07:43 AM PST - ஆசியான் நாடுகளில் உள்ள எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது இந்த ஆண்டு, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கு வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் வசிக்கும் ஜே.எம்.சாலி என்று அழைக்கப்படும் ஜமாலூதீன் முகம்மது சாலி (76), சென்னையை பூர்விகமாக கொண்டவர். தனது 25 வயதில் சிங்கப்பூர் சென்ற அவர் தமிழ் முரசு நாளிதழில் துணை ஆசிரியரராக தனது பணியை தொடங்கினார். பின்னர் சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் தொலைகாட்சி நிறுவனத்திலும் ... |
| இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு Posted: 12 Dec 2015 07:41 AM PST விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில் - ஐதராபாத் : எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும் திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார். - ----------- |
| Posted: 12 Dec 2015 07:14 AM PST பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு. நிமிடம் தோறும் ஒரு இஞ்ச், அரையடி என உயர்ந்த தண்ணீர் சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத் துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே அது தளும்பத் துவங்கியது. நதிகளிடம் ... |
| ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் கைது! Posted: 12 Dec 2015 07:01 AM PST ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் கைது! ஐ. எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, லிபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த முகமது நஷீர் பக்கீர் முகமது என்ற வாலிபர் கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஆவார். கடந்த மே மாதம் இவர் துபாய் சென்றுள்ளார். ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் 'மேட் முல்லா' என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் வழியாக முகமது பஷீர், ஐ.எஸ் இயக்கத்தில் ... |
| டுவிட்டர் தகவலால் ரயிலில் பசியால் துடித்த குழந்தையின் பசிதீர்த்த ரயில்வே அமைச்சர் ! Posted: 12 Dec 2015 06:12 AM PST கான்பூர்: சமூக வலைதளமான, 'டுவிட்டர்' மூலம் கிடைத்த தகவலால் ஓடும் ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டு பசியை போக்கினார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. உத்தரப்பிரதேச மாநிலம் மந்துவாடி ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு அதிவேக விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் குசும் யாதவ் என்ற பெண் தன் ஐந்து வயது மகன் அவிஸ் உடன் வாரணாசியில் உள்ள மந்துயாதிஹ் ரயில் நிலையத்தில் ஏறினார். வட இந்தியாவில் கடும் மூடு பனியின் காரணமாக, ரயில் மிகவும் மெதுவாகச் ... |
| Posted: 12 Dec 2015 06:08 AM PST - - அழகான உருவம் ரசிக்க முடியவில்லை ஜவுளிக்கடை பொம்மை – ——————- – வறட்சியின் எல்லை வயல்வெளிகள் கிரிக்கெட் மைதானம் – ——————– – குதிரை மனம் அவள் பார்வை சவுக்கடி – —————– – முள்ளிலும் பூக்கும் பூக்கள் வண்ணத்துப் பூச்சி – —————— – தாய்நாடு இந்தியா கேளுங்கள் கொடுக்கப்படும் அம்மா…தாயே! – —————— -ராஜ்கவி - |
| அந்த ரூபாய் நோட்டிலும் சிரித்தார் காந்தி… Posted: 12 Dec 2015 06:05 AM PST - ஆலயம் நிறைந்தது பிரகாசமாய்கடவுள் படப்பிடிப்பு – ————– – செருப்புக்கும் பல்செட் விலை கையைக் கடித்தது – —————- – உணவை விலக்குங்கள் விரதமிருங்கள் நாளைய உணவு சந்தேகம் – ———————— – நடந்தது மாமூல் விஷயம் அந்த ரூபாய் நோட்டிலும் சிரித்தார் காந்தி – ———————– -அழுவதை நிறுத்து மெழுகுவர்த்தியே அணைக்கதான் கைகள் – —————————————- –ராஜ்கவி |
| Posted: 12 Dec 2015 06:02 AM PST ![]() |
| Posted: 12 Dec 2015 06:02 AM PST சென்னை: வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வருவதால், 'தமிழகத்தில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை, குளிர் வாட்டும்' என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ஒய்.ஏ.இ.ராஜ் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை, வாட்டும் அளவுக்கு குளிர் இருக்காது. வேலுார், ஜோலார் பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், குளிர் அதிகமாக இருக்கும். பிற மாவட்டங்களில், குளிர் சாதாரணமாகவே இருக்கும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், கடல் மட்டத்துக்கு இணையாகவே இருப்பதால், இப்பகுதிகளில், ... |
| பாலை வனத்திற்குள்ளா நந்தவனத்தை அடைப்பது.. Posted: 12 Dec 2015 05:58 AM PST - சாலையெங்கும் ஈரம் எங்கே படுப்பது...? பிளாட்பாரவாசி - ------------------ - பசுமாட்டின் காலில் மிதிபட்டது வைக்கோல் கன்று! - ---------------- - பாலை வனத்திற்குள்ளா நந்தவனத்தை அடைப்பது.. வீட்டுக்குள் அவள்! - -------------------- - மழை எச்சரிக்கை காப்பாற்றுவதுயார்...? குழந்தையின் மணல் வீடுகள் - ------------------------ - கால்களின் விரல்கள் ஓவியம் தீட்டும் கையிழந்த ஓவியன் - --------------------- மு.முருகேஷ் கொஞ்சம் ஹைகூ கொஞ்சம் புதுக்கவிதைகள் |
| Posted: 12 Dec 2015 05:56 AM PST ![]() |
| கடன் வேணுமான்னு உலக வங்கிக்கு போன் செஞ்சது தப்பா போச்சு..! Posted: 12 Dec 2015 05:48 AM PST ![]() |
| Posted: 12 Dec 2015 05:40 AM PST சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளார் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட் தலைமையிலான குழு. தற்போது இந்த குழு சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளது.சென்னையில் கொட்டித்தீர்த்த மழை நகரத்தையே உலுக்கிப்போட்டது. வெள்ளத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களை தீயணைப்பு படை வீரர்கள், ராணுவ வீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப் பிராணிகளையும் ... |
| சிங்கப்பூர் செயற்கைகோளை விண்ணில் செலுத்துகிறது பி.எஸ்.எல்.வி Posted: 12 Dec 2015 05:40 AM PST சென்னை: வரும் 16-ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான ஆறு செயற்கை கோளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது குறித்து இஸ்ரோ தெரிவித்திருப்பதாவது: ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான ஆறு செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுன்டவுன் வரும் 14-ம் தேதி துவக்கப்பட உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் இந்த ஏவு தளத்தி்ல இருந்து இந்திய செயற்கைகோளகள் மூன்று உட்பட வெளி நாட்டு செயற்கைகோள்கள் சுமார் 14 செயற்கை கோள்கள் ... |
| Posted: 12 Dec 2015 05:37 AM PST மழை…மழை… எங்கே பிழை…?? * இனிய குரல் கொடுத்து எனை அழைக்கும் சிநேகிதர்களைப் பார்த்துப் இருபது நாள்களாயிற்று. மழைவெள்ளப் பெருக்கின்போது எங்கே போயிருந்தன? அந்தமனப் பறவைகள். வெள்ளநீர் பார்வையிடப் போயிருந்ததா? அணைகள் ஏரிகள் உடைப்புப் பார்த்து ஆத்திரம் கொண்டு சிலிர்த்ததா? விளைநிலங்களைப் பார்த்து அழுததா? வாழ்நாளில் சேகரித்தப் பொருள்கள் வாரிச்சுருட்டிப் போன அவலத்தைப் பார்த்துக் கதறியழுததா? கோரமுகங்காட்டியப் பேயாய் பாய்ந்து மனிதஉயிர்களைப் பலிகொண்டதைப் பார்த்து பதறித் துடித்ததா? உணவின்றி ... |
| நகைச்சுவைப் பக்கம்.....(தொடர் பதிவு) Posted: 12 Dec 2015 05:36 AM PST டீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற? பையன்: கல்யாணம். டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற? பையன்: கணவன். டீச்சர்: இல்லப்பா... உனக்கு வாழ்கையில என்ன கிடைக்கனும்னு எதிர்பாக்குற? பையன்: மனைவி. டீச்சர்: ஒ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற? பையன்: மருமகள் தேடுவேன். டீச்சர்: டேய்..ஸ்டுபிட்... உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பாக்குராறு? பையன்: பேர குழந்தைகள் டீச்சர்: ஐயோ.. உன் வாழ்கையின் லட்சியம்தான் என்ன? பையன்: "நாம் இருவர் நமக்கு இருவர்...." டீச்சர்: ?!?.............. - -------------------------- படித்ததில் ... |
| Posted: 12 Dec 2015 05:34 AM PST - பெரியார் அவர்களின் எண்பத்து மூன்றாவது பிறந்த நாள் விழா மிகவும் கோலாகலமாக ஈரோட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழாவில் பேசியவர்களெல்லாம் அவரை வாழ்த்திப் பேசி, இன்னும் பல காலம் வாழ வேண்டுமென விரும்பினர். இதிலே மகிழ்ந்தும், திளைத்தும் போயிருந்தார் பெரியார். இவ்வாறு வாழ்த்தி பேசிய ஒருவர் மேடையிலேயே ஒரு வேண்டுகோளும் விடுத்தார். 'நமது ஊரிலே பெண்கள் மேற்படிப்புக்காக கல்லூரி ஒன்று கட்டப் போகிறோம். நமது பெரியார் அவர்கள் கஞ்சத்தனம் பாராமல் ஒரு பெருந்தொகையைத் தரவேண்டும்!' என்றார். இதற்கு ... |
| Posted: 12 Dec 2015 05:31 AM PST அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், "அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்" கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




