Tamil News | Online Tamil News |
- வெள்ள பகுதிகளை தத்தெடுங்கள்!
- ராஜ்யசபாவில் காங்., உறுப்பினர்கள் அமளி தொடர்கிறது: நரி போல ஊளையிட்டு தொடர் கோஷம்
- தென் மாநிலங்களில் கன மழை: ஐ.நா. எச்சரிக்கை
- நிவாரண உதவிகள் வழங்குவதில் ஒருங்கிணைப்பு இல்லை: தலைமை நீதிபதி கவலை
- பெருமழையை வெள்ளமாக மாற்றிய தமிழக அரசு
- தண்ணீரில் நனைந்த ஆவணம் சான்றிதழை காய வைப்பது எப்படி?
- கொற்றலையின் கோரதாண்டவம்: மண்ணோடு மண்ணான மணலி புதுநகர்
- வெள்ள எச்சரிக்கை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அறிவிக்காததால் பேரழிவு!
- ஐ.எஸ்., ஆதரவு பிரசாரம்: ஐ.ஓ.சி., மேலாளர் கைது
- எல்லாவற்றிற்கும் மேலிட ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருப்பு
- வீட்டு ஓனர் ஒப்புதல் தரணுமா? கணக்கெடுப்பில் புது குழப்பம்
| Posted: 11 Dec 2015 06:55 AM PST வெள்ளம் பாதித்த இடங்களை, பெரிய நிறுவனங்கள் தத்து எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:வெள்ளம் பாதித்த பகுதியின் மையத்தில், நிவாரண பொருட்களுடன் வரும் வாகனம் நிறுத்தப்படுகிறது. அப்போது, அந்த இடத்தில் நிற்போருக்கு மட்டுமே பொருட்கள் கிடைக்கின்றன. பெரும் நிறுவனங்கள்பல நிறுவனங்கள், ஒரே இடத்தில், ஒரே மாதிரியான பொருட்களை வழங்குகின்றன. இதற்கு பதில் உதவி செய்வோர், வெள்ளம் பாதித்த பகுதியில், ஒன்றாக கூட வேண்டும்; ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையில் உதவலாம்.பெரிய நிறுவனங்கள், கோட்டூர்புரம், ... |
| ராஜ்யசபாவில் காங்., உறுப்பினர்கள் அமளி தொடர்கிறது: நரி போல ஊளையிட்டு தொடர் கோஷம் Posted: 11 Dec 2015 09:17 AM PST புதுடில்லி: பழிவாங்கும் அரசியல் நடப்பதாக குற்றஞ்சாட்டி, நான்காம் நாளாக நேற்றும், காங்., உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. 'நரிபோல் ஊளையிட்டு கூச்சலிட்ட, காங்., உறுப்பினர்களின் செயல் ஏற்க முடியாதது' என, ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் வேதனையுடன் தெரிவித்தார். பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவனம் தொடர்பான வழக்கில், 'கோர்ட்டில் ஆஜராக வேண்டும்' என, காங்., தலைவர் சோனி யாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதை காங்கிரசார், மத்திய அரசின் பழிவாங்கும் ... |
| தென் மாநிலங்களில் கன மழை: ஐ.நா. எச்சரிக்கை Posted: 11 Dec 2015 10:13 AM PST சென்னை:'எல் நினோ என்ற வெப்பத் தாக்கத்தால் பசிபிக் கடலில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடும் வெப்பம் நிலவியது. இதனால் சில நாடுகளில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை கடும் மழை பெய்தது. இந்த மழை 2016 துவக்கம் வரை தொடரும். இந்தியாவின் தென் மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்யும்' என ஐ.நா., தெரிவித்துள்ளது.ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா., சபையின் பொருளாதார, சமூக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பசிபிக் மற்றும் ஆசிய நாடுகளில் 'எல் நினோ' வெப்பத் தாக்கம், 1998 முதல் சீதோஷ்ண நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டும் அதன் தாக்கம் உள்ளது. இதை ... |
| நிவாரண உதவிகள் வழங்குவதில் ஒருங்கிணைப்பு இல்லை: தலைமை நீதிபதி கவலை Posted: 11 Dec 2015 10:15 AM PST சென்னை : 'மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில், மத்திய, மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகளிடம் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லை' என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்., கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க, நிவாரண பொருட்களை, தன்னார்வ அமைப்புகள், தனி நபர்கள் வழங்குகின்றனர். இவற்றை சேகரித்து பாதிக்கப்பட்டோருக்கு கொண்டு சேர்க்க கீழ் மட்டத்தில் அரசு துறைகள் செயல்படவில்லை. மத்திய ஏஜன்சிகள், தன்னார்வ ... |
| பெருமழையை வெள்ளமாக மாற்றிய தமிழக அரசு Posted: 11 Dec 2015 10:19 AM PST டுவிட்டரில் டான் அசோக் என்பவர் சொல்வதைப் பார்த்தால், அரசின் செயலற்ற தன்மை விளங்கும்: சென்னையில் பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப்போக்கு தான் என, 'ஒயர்டு' உட்பட இதழ்கள் குற்றம் சாட்டியுள்ளன. அக்கட்டுரைகள் தரும் ஆதாரங்களை எளிதில் புரியும் வண்ணம் விளக்குவதே இப்பதிவு.நவம்பர் 8, 9, 12, 13, 15, 23ம் தேதிகள்: சென்னையில் கன மழை பெய்கிறது.நவம்பர் இறுதி வாரம் - தோராயமாக 26ம் தேதி: * சர்வதேச வானிலை மையங்கள், சென்னையில், டிச., 1 மற்றும் 2ம் தேதி, 50 செ.மீ., வரையில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.* எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை ... |
| தண்ணீரில் நனைந்த ஆவணம் சான்றிதழை காய வைப்பது எப்படி? Posted: 11 Dec 2015 10:23 AM PST வெள்ளத்தில் நனைந்த புத்தகம், சான்றிதழ், சொத்து ஆவணங்கள், ரூபாய் நோட்டுகளை, மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவது எப்படி என, நுாலக நிபுணர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலக முன்னாள் காப்பாளர் முனைவர் பெருமாள் கூறியதாவது:* அடுப்புக்கு அருகில் வைப்பது, சூடான பாத்திரங்களின் மீது ஒட்டி வைப்பது கூடாது. ஈர அட்டை, பைண்டிங் அட்டையை நீக்க வேண்டும். இதமான அறை இருந்தால், சிறிதாக சூடு தரும் பல்புகளை எரிய விட்டு, மின் விசிறி உதவியுடன் காய வைக்கலாம். * தாள்கள், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும் வகையில், சிறிய நுால் அல்லது மெல்லிய ... |
| கொற்றலையின் கோரதாண்டவம்: மண்ணோடு மண்ணான மணலி புதுநகர் Posted: 11 Dec 2015 10:29 AM PST மதிய வேளை. கொற்றலை திடீரென கக்கிய உமிழ்நீர் போல், வெள்ளப் பெருக்கை துப்பியது. சற்றும் எதிர்பாராத மக்கள், அலறி, அடித்து அங்கும் இங்குமாய் ஓடினர். அந்த காட்சிகள், ஹாலிவுட் திரைப்படக் காட்சிகள் போல், இப்போதும் நினைவில் நிழலாடுகிறது.சில மணித்துளிகள் கூட தாமதிக்காமல், யாருடைய அனுமதியையும் கேளாமல், கந்துவட்டிக்காரர்களைப் போல், குடியிருப்புகளை வெள்ளம் ஆக்கிரமிக்க துவங்கியது. கட்டளைக்கு காத்திருந்தது போல், கண் மூடி திறக்கும் முன், குடியிருப்புகளை மூழ்கடித்தது, காட்டாற்று வெள்ளம். தரைப்பாலங்களை தாண்டிய கொற்றலை ஆற்றின் தாண்டவம், ஊருக்குள் ... |
| வெள்ள எச்சரிக்கை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அறிவிக்காததால் பேரழிவு! Posted: 11 Dec 2015 10:57 AM PST அடையாற்றில், வெள்ளம் அதிகரித்த போது, கரை ஓரப் பகுதிக்கு மட்டுமே போலீசார் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கரையின் இருபுறத்திலும், ஒரு கி.மீ., துாரத்திற்குள் வசித்தோருக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. திக்கு திசை தெரியாமல்... செம்பரம்பாக்கம் ஏரியில், கடந்த நவ., ௩௦ம் தேதி முதல் வெள்ளம் அதிகரிக்கத் துவங்கியது. கடந்த, ௧ம் தேதி இரவு, 7:௦௦ மணிக்கு, கரை ஓரம் வசித்த, மணப்பாக்கம், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதிவாசிகளை, வீடுகளை விட்டு வெளியேறும்படி, போலீசார் அறிவிப்பு கொடுத்து ... |
| ஐ.எஸ்., ஆதரவு பிரசாரம்: ஐ.ஓ.சி., மேலாளர் கைது Posted: 11 Dec 2015 11:14 AM PST ஜெய்ப்பூர்: உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்த, இந்தியன் ஆயில் நிறுவன மார்க்கெட்டிங் மேலாளரை, ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள, இந்தியன் ஆயில் நிறுவன அலுவலகத்தில், மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றுபவர் முகமது சிராஜுதீன், 30. இவர், ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்திற்கு, இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம், குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ... |
| எல்லாவற்றிற்கும் மேலிட ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருப்பு Posted: 11 Dec 2015 11:23 AM PST புதிய பஸ் இயக்கம் முதல், திறப்பு விழா வரை எல்லா விஷயங்களுக்கும், மேலிட ஒப்புதலுக்கு அதிகாரிகள் காத்திருக்க வேண்டும் என்ற வேலை கலாசார மாற்றம், அரசு வட்டாரத்தில் ஆழமாக வேரூன்றி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தாமதமானதற்கும், சென்னை வெள்ளக்காடாக மாறியதற்கும், இதுவே காரணமாகி விட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் இரண்டு உயர் அதிகாரிகளை பலிகடாவாக்கி, பிரச்னையை மூடி மறைக்கும் முயற்சி நடப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.கொட்டி தீர்த்த கன மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்தன. வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட ... |
| வீட்டு ஓனர் ஒப்புதல் தரணுமா? கணக்கெடுப்பில் புது குழப்பம் Posted: 11 Dec 2015 12:47 PM PST சென்னையில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி நடக்கிறது. சில இடங்களில் அதிகாரிகள், ரேஷன் கார்டுகளை கேட்கின்றனர்.வேறு சில இடங்களிலோ, வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை, வீட்டு உரிமையாளர் உறுதிப்படுத்தினால் தான் ஏற்கப்படும் என, குழுவினர் கூறுவதாக, பொதுமக்கள் புகார் சொல்கின்றனர்.இதுகுறித்து, பொதுமக்களில் சிலர் கூறியதாவது: நான், பெரம்பூர் ராமகிருஷ்ணா தெருவில் குடியிருந்தேன். தற்போது, அருகில் உள்ள பகுதியில், வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். ஆனால், ரேஷன் கார்டு, பழைய முகவரியான, ராமகிருஷ்ணா தெருவில் தான் உள்ளது. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 12,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |