ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம்
- சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !
- டிக்கட் முன்பதிவு - மின்சார ரயிலில் பயணம்
- அனைவருக்கும் வணக்கம்
- சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ?
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிச.13ல் பார்த்திபன் நடத்தும் 'மனக்களிம்பு'
- காற்றை சிறை வைக்காதீர்…
- கூடு கட்ட காத்திருக்கும் குருவி…
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு
- வெள்ளப் பேரழிவுக்கு என்ன காரணம் ? உழைக்கும் பாட்டாளிகளை மதிக்காததே !
- நெடுஞ்சாலை டோல்கேட் கட்டணம் வசூலிக்க தடை நீட்டிப்பு
- தொடத் தொடத் தொல்காப்பியம்(401)
- ஜாலியாக தண்ணீருக்கு உள்ளே ஒரு சிகிச்சை!
- தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
- சிரிக்காமலிருந்தாலும் அழகுதான்…
- பத்தாமல் போன பத்து வழிகள்
- ஒரு பாக்கெட் வெச்ச சட்டை…!
- மாமியார் பிறந்தநாளையும் நினைவில் வைத்திருப்பவன் மேதை.
- வாசலில் வண்ணக்கோலம்
- மழையை ரசித்தவர்கள்…
- பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…
- வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!
- மீண்டு வந்த புனிதம்
- அகத்தியர் -சிறு குறிப்பு
- மனிதன், மனிதனாகவே இருக்க விரும்புகிறானா?
- காத்திருக்கும் கப்பல்... கைகள் கட்டப்பட்ட சென்னை மேயர்! - 'ரண' களமாகும் நிவா'ரணம்'!
| வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம் Posted: 11 Dec 2015 11:28 AM PST வெள்ளத்தில் போன புத்தகங்கள் - அரிய புத்தக சேமிப்பாளரின் துயரம் சென்னையில் ஏற்பட்ட மழை - வெள்ளத்தில், தான் பல ஆண்டுகளாக சேகரித்த 2000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை இழந்து தவித்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த நூலகர் ஒருவர். வெள்ளத்தில் போன அரிய நூல்கள் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிவரும் ரெங்கய்யா முருகன், தாம்பரத்தில் உள்ள முடிச்சூர் பகுதியில் வசித்துவருகிறார். மானுடவியல் தொடர்பாகவும் தமிழகத்தில் அமைந்துள்ள பிராமணர் அல்லாத மடங்கள் தொடர்பாகவும் 2000க்கும் ... |
| சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் ! Posted: 11 Dec 2015 11:26 AM PST பணமிருந்தால் மான் வேட்டையாடலாம் , காரேற்றி மனிதர்களை கொல்லலாம். அவர்களை நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் ஒன்றும் செய்யாது. அப்படியே தண்டனை அறிவித்தாலும் அரை மணி நேரத்தில் ஜாமின் கொடுத்துவிடும். அடுத்து விடுதலையும் செய்துவிடும். அதிகாரமும் , பணமும் இல்லாத சாமானியன் சந்தேக கேஸில் பிடிபட்டால் கூட சிறையிலேயே கிடக்க வேண்டியது தான். ஆனால் கூத்தாடிக்கு கருணை காட்டும். அவனவன் மனசாட்சியே அவனவனுக்கு தண்டனை கொடுக்கட்டும். மேகி மீது ஒரு வருட தடை என்று ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக பரிசோதனை செய்து அறிவித்தார்கள். ... |
| டிக்கட் முன்பதிவு - மின்சார ரயிலில் பயணம் Posted: 11 Dec 2015 11:06 AM PST - இப்போது நீங்கள் திருச்சியிலிருந்து அல்லது எந்த ஊரிலிருந்தும் எழும்பூர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி மாம்பலம், கோடம்பாக்கம், கிண்டி என்று எழும்பூருக்கு முன்னதாக இருக்கும் எந்த நிலையத்திலும் சட்டபூர்வமாகவே இறங்கிக்கொள்ளலாம். வேறு எந்த டிக்கெட்டும் வாங்கவேண்டியதில்லை. - (ஏற்கனவே மின்சார ரயிலில் செல்ல அதற்கான டிக்கட் வாங்க வேண்டும் என்று விதி இருந்தது) - 0/7/2015 முதல் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது - - நன்றி- பத்ரி சேஷாத்ரி |
| Posted: 11 Dec 2015 10:36 AM PST அன்புள்ள அனைவருக்கும் வணக்கம் ...நலம் நலமறிய ஆவல் கே. பாலா எனற பாலசுப்ரமணியன் எழுதிக்கொண்டது நான் ஈகரையில் இணைந்து ஐந்து ஆண்டுகள் இந்த ஜனவரியோடு..... முகம் தெரியாத ..அகம் தெரிந்த நட்புக்கள் ....பலரையும் பெற்றதை அவர்களை எனக்கு தந்த ஈகரையையும் நன்றியோடு நினைக்கிறன் அப்புறம் ஏன் ஒருவருஷமா வரல? என்ற உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை அடிக்கடி இல்லை என்றலும் வந்துகொண்டிருப்பேன் ஏன்னா இது ஏன் வீடு |
| சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ? Posted: 11 Dec 2015 08:09 AM PST சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ? கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சென்னையை மூழ்கடித்ததற்கு என்ன காரணம், யார் இதற்குப் பொறுப்பு என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றன. தமிழக அரசின் உயர் மட்டத்தில் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதமே, இந்த வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என்பது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தமிழக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. இது குறித்து உண்மை நிலையை ... |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிச.13ல் பார்த்திபன் நடத்தும் 'மனக்களிம்பு' Posted: 11 Dec 2015 07:23 AM PST - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ரா.பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பில் வரும் 13ம் தேதி சென்னையில் 'மனக்களிம்பு' என்ற பெயரில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை நேரிடையாகவே செய்து வருகிறார் நடிகர் பார்த்திபன். மேலும், தெருக்களில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் மூலம் பொதுமக்களுக்கு நோய் வருவதை தடுக்க பிளீச்சிங் பவுடர்களை தூற்றினார். இந்நிலையில், ரா.பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பில் 'மனக்களிம்பு' என்ற பெயரில் ... |
| Posted: 11 Dec 2015 06:52 AM PST - காற்றை சிறை வைக்காதீர் புரட்சி வெடிக்கும் பலூன்கள்! – ———————– – மரம் பழுத்தது முந்திக் கொண்டது அணில்கள் – —————— – காலக் குப்பை கிளராதீர் அங்கே சவக்குழி – —————— – எறும்புகளுக்குமா எறும்புகள் ஜப்பானியர்கள் – ——————- – அடித்துப் போட்டாள் அழுகிறது சேலை! – ——————— -ராஜ்கவி படகென்பது துடுப்பையும் சேர்த்து- நூலிலிருந்து |
| கூடு கட்ட காத்திருக்கும் குருவி… Posted: 11 Dec 2015 06:49 AM PST - கரையானுக்குக்கூட தின்னப்பிடிப்பதில்லை பட்டம் வாங்கிய காகிதங்கள் – ————————– – தூக்கம் தொலைந்தது அறுவடை முடிந்த வயலில் பசித்திருக்கும் குருவிகள் – ————————- – சிறுவனின் கையில் சிறகுகள் தரையில் பட்டாம்பூச்சி – ———————– – கிணறு வற்றட்டும் ஏக்கமாய்க் காத்திருந்தது கூடு கட்ட குருவி – ——————— உண்டியலில் கிடக்கும் சில்லறைகளுடன்… சிறுமியின் புத்தாடைக் கனவு –[color:79fc= #000000] ———————— மு.முருகேஷ் கொஞ்சம் ஹைகூ கொஞ்சம் புதுக்கவிதை – |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 11 Dec 2015 06:19 AM PST தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு Posted: 11 Dec 2015 05:58 AM PST கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கப்படும் என மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு, பி.எஸ்.என்.எல். ஒரு வாரம் இலவச சேவை வழங்கும் என்றார். இந்த வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றார் அமைச்சர். ஏர்டெல் சலுகை இதேபோன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது சென்னை வாடிக்கையாளர்களுக்கு ... |
| வெள்ளப் பேரழிவுக்கு என்ன காரணம் ? உழைக்கும் பாட்டாளிகளை மதிக்காததே ! Posted: 11 Dec 2015 05:55 AM PST வெள்ளப் பேரழிவுக்கு என்ன காரணம் ? உழைக்கும் பாட்டாளிகளை மதிக்காததே ! தொழில் நுட்பத்திற் சிறந்த தமிழக விசுவகர்மர்களுக்குத் துப்பாக்கி செய்வது ஒன்றும் பெரிய காரியமில்லை ! ஆனால் தொழில் நுட்பத்தில் சிறந்தவர்களைத் தமிழகம் என்றுமே மதித்ததில்லை ! தொழில் நுட்பம் பின்னுக்குத் தள்ளப்பட்டது ! அதனால் 300 ஆண்டுகள் நாம் வெள்ளையனுக்கு அடிமையாக இருந்தோம் ! இதனை நான் ஏற்கனவே எனது ஒரு நூலில் எழுதியுள்ளேன் ! இந்த அடிப்படைதான் இப்போதைய நமது வெள்ள அழிவுக்குக் காரணமும் ! துப்புரவுப் பணியாளர்களை யாருமே ... |
| நெடுஞ்சாலை டோல்கேட் கட்டணம் வசூலிக்க தடை நீட்டிப்பு Posted: 11 Dec 2015 05:45 AM PST சென்னை: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் கட்டணம் வசூலிப்பதற்கான தடை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. - டிசம்பர் 18ம் தேதி வரை வசூலிக்கப்படாது என மத்திய அரசு கூறியுள்ளது. - |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(401) Posted: 11 Dec 2015 05:34 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ஜாலியாக தண்ணீருக்கு உள்ளே ஒரு சிகிச்சை! Posted: 11 Dec 2015 05:29 AM PST `மழையில நனைஞ்சா சளி பிடிக்கும்…' ' தண்ணியில விளையாடினா காய்ச்சல் வரும்…' சாதாரண தும்மல், இருமலுக்குக் கூட, இப்படி தண்ணீரைப் பழிக்கிற பலருக்கும், தண்ணீரின் இன்னொரு பக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. - தண்ணீருக்குள் இறங்கி உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் நோய்களை தீர்க்கும் சிகிச்சை முறையை 'ஹைட்ரோதெரபி' (Hydrotherapy) என்பர். இதுவெளிநாடுகளில் ரொம்பவே பிரபலம். - - |
| தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி Posted: 11 Dec 2015 05:28 AM PST படம் – ஆனந்தக்கும்மி பாடியவர் – பாலு இசை – இளையராஜா – ————————— – தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி உனை நாடி வாடினேன் சுப நேரில் ஓடினேன் பலன் இல்லை என்பதா இங்கு பாதை மாறினேன் தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி காலை வேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன் பாட நூலில் கேள்வி துனண என்று எழுதினேன் வீட்டு பூனையாம் வேங்கை பூனையாய் மாறினேன் நேரம் வந்ததடி ... |
| சிரிக்காமலிருந்தாலும் அழகுதான்… Posted: 11 Dec 2015 05:27 AM PST - - - ————- சிரிக்காமலிருந்தாலும் அழகுதான் காம்பில் மொட்டுகள் – ————————– – சுவரின் கிறுக்கல் அழிக்காதீர்கள் இறந்த குழந்தை ஞாபகம் – ———————– – தாத்தாஇன் நினைவில் சுருக்கம் விழவில்லை குழந்தைப்பருவ நாட்கள் – ————————- – ஓடாதே…நில் முகம் பார்க்க வேண்டும்… நதியே…! – ———————– மு.முருகேஷ் கொஞ்சம் ஹைகூ கொஞ்சம் புதுக்கவிதை |
| Posted: 11 Dec 2015 05:21 AM PST குழம்பாமல் இருப்பதற்கான இரண்டு வழிகள் முதல் வழியை நினைவில் வைத்துக்கொண்டு இரண்டாவது வழியை மறந்து விடுவது. – இரண்டாவது வழி தெரிந்து விட்டதா முதல் வழியை மறந்துவிடு முதல் வழி நினைவில் இருக்கின்றதா இரண்டாவது வழியைத் தேடாதே. – இலக்கை நினைவில் வைத்துக்கொண்டு வழியை மறந்து விடுவது பேதமை வழியை நினைவில் வைத்துக்கொண்டு இலக்கை மறந்து விடுவதுதான் மேதைமை – எளிமைகள் நிறைந்த சிக்கலான வழிகள் மனிதனுடையவை சிக்கல்கள் நிறைந்த எளிமையான வழிகள் இறைவனுடையவை – நல்வழிப்படுத்தத் தேவை மிகவும் மோசமான ... |
| Posted: 11 Dec 2015 05:19 AM PST @naiyandi சின்ன வயசில நிறைய வைச்ச டைலர் இப்ப ஒரே பாக்கெட் வைச்சுதான் சட்டை தைக்கிறார்… எங்கிட்ட காசில்லன்னு சிம்பாலிக்கா சொல்றாரோ! – ————————————– – @skpkaruna பைக் ஓட்டிச் செல்லும் நண்பர்கள், மாநகரப் பேருந்துகளின் அருகில் செல்லாதீர்கள். பயிற்சி ஓட்டுநர்களின் கருணை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. – —————————————- – @Prabinraj1 வருடத்தை நாள், வாரம், மாதம், ஆண்டாகக் கணித்தவன் கடைசியா சந்தோஷத்தில் அமர்ந்து சரக்கு போட்ட நாள்தான் முதல் நியூ இயர் கொண்டாட்டமா இருக்கும் – ——————————————– – @adhavanKSM ரொம்ப ... |
| மாமியார் பிறந்தநாளையும் நினைவில் வைத்திருப்பவன் மேதை. Posted: 11 Dec 2015 05:17 AM PST மனைவி பிறந்தநாளை மறக்காமல் நினைவில் வைத்திருப்பவன் அறிவாளி; மாமியார் பிறந்தநாளையும் நினைவில் வைத்திருப்பவன் மேதை. – – வெங்கடேஷ் ஆறுமுகம் – —————————————– நிறைவேற்றிய சத்தியங்களுடனும், நிறைவேற்றாத வாக்குறுதிகளுடனும், வாழ்க்கை கடந்து சென்று கொண்டிருக்கிறது. – – பாரதி கிருஷ்ணகுமார் – —————————————- – கணவரிடம் கோபித்துக் கொண்டு ''நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்'' என்று சொல்லும் மனைவிகள் முட்டாள்கள்… அம்மாவை தன் வீட்டிற்கு வரவழைக்கும் மனைவிகளே புத்திசாலிகள்! # செத்தாண்டா ... |
| Posted: 11 Dec 2015 05:14 AM PST - - வீட்டுக்குள் போகவே மனசில்லை வாசலில் வண்ணக்கோலம் – ————————- – தீபாவளிப் பொழுது விடியாமலே இருக்கட்டும் கனவில் புதுத்துணி – —————– – உருகும் தார்ச்சாலையில் அனாதைப்பிணம் உருகவேயில்லை…மனசு! – ———————– – தெருவிளக்கின் மேல் பறக்கும் இருட்டு அடடா…காக்கை! – ———————- – சிதறிய சோற்றை சேர்ந்தே தின்றன குருவிகள் – —————————- – மு.முருகேஷ் |
| Posted: 11 Dec 2015 04:54 AM PST ''என்னய்யா இது… மூணு நாளா பஸ் ஓடலையாம். பேச்சுவார்த்தை ஏதாவது நடத்துறாங்களா?'' – ''அய்யா, அந்தத் துறை மந்திரியே நீங்கதான்!'' – – கார்ட்டூனிஸ்ட் முருகு – —————————————— – சில நேரங்களில் மறதியும் நன்மை பயக்கும்… ரவை வாங்கிட்டு வரச் சொன்னா, மறந்துட்டேன். உப்புமா செய்யல! – – போட்டோக் கார் – ————————————– – மனதிற்குப் பிடித்தவர்களின் பெயரைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்ப்பது என்ன மாதிரியான வியாதி? – – தோழி ஹாஜிரா – ——————————————– பொய் சொன்னா கடைசி வரை நாம அந்தப் பொய் கூடவே ... |
| பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Posted: 11 Dec 2015 04:53 AM PST @i_rajtuty புரட்சி செய்ய முன்பெல்லாம் நிறைய பேங்க் பேலன்ஸ் தேவைப்பட்டது; இப்போது தேவையான பேட்டரி பேலன்ஸ் இருப்பதே போதுமானது! @SeSayv நமக்கு கனவுல யாராவது வந்தா, அவருக்கும் அந்த கனவு தெரியிறாப்ல இருந்தா, பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்! @kalasal ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்குத்தான் புரியும். அதனால்தான் பெண்கள் சக பெண்களை வெறுக்கிறார்கள்… @iam_moorthy காதலித்துப் பார்… தரையில கால் நிக்காது. போன்ல சார்ஜ் நிக்காது. பர்ஸ்ல காசு நிக்காது. ஆனா நீ மட்டும் நடுத்தெருவுல நிப்ப! @Carbon ... |
| வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Posted: 11 Dec 2015 04:51 AM PST அடையாற்றில் மனைவியுடன் அடித்துச் செல்லப்பட்ட சீனிவாசன்: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம். கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது. ஸ்ரீநிவாஸ் - தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர். வி.எஸ்.என்.எல். நிர்வாகத்துடன் இணைந்து இணையம் வழியாக வும் பொதுத்தேர்வு முடிவுகளை ... |
| Posted: 11 Dec 2015 04:35 AM PST இயற்கை தந்த இடுக்கண் – மக்கள் இதயத்தில் மாறாத வடுக்கள் அபயம் ஈந்த கரங்கள் – நெஞ்சில் அன்பைப் பொழியும் வரங்கள் மதத்தில் மறைந்த மனிதம் – இடரில் மீண்டு வந்த புனிதம்! மனத்தை இணைக்கும் உறவு – இது மானுடம் வெல்லும் நிகழ்வு! |
| Posted: 11 Dec 2015 12:21 AM PST அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் ... |
| மனிதன், மனிதனாகவே இருக்க விரும்புகிறானா? Posted: 11 Dec 2015 12:15 AM PST எல்லா உயிரினங்களிலிருந்தும் காலப்போக்கில் இன்னொரு உயிர் பரிணாமம் அடைவதை நாம் பார்க்கிறோம். ஒரே வகை எறும்புகளைப் பிரித்து ஒரு கூட்டத்தைப் மா மரத்திலும், மற்றொன்றை வேறொரு சூழலில், வேறொரு மரத்தில் விட்டு வளர்த்து வர, ஒன்றின் நடவடிக்கை, உடல் உறுப்புகள் இவற்றில் மாற்றம் ஏற்பட்டு இன்னொரு உயிராக பரிணாமம் அடைவதைப் பாடபுத்தகத்தில் படித்தும் இருக்கிறோம். இதே போல மனிதனிடம், பரிணாம வளர்ச்சியோ அல்லது மாற்றங்களோ சுட்டிக் காட்டும் அளவுக்கு ஏற்பட்டிருக்கிறதா? மனிதர்களும் வெவ்வேறு சூழல், உணவுப் பழக்கங்கள், ... |
| காத்திருக்கும் கப்பல்... கைகள் கட்டப்பட்ட சென்னை மேயர்! - 'ரண' களமாகும் நிவா'ரணம்'! Posted: 10 Dec 2015 11:23 PM PST காத்திருக்கும் கப்பல்... கைகள் கட்டப்பட்ட சென்னை மேயர்! - 'ரண' களமாகும் நிவா'ரணம்'! சென்னை மீது இரக்கம் கொண்டு மழையே வெறித்துவிட்டது. ஆனால், அரசு இயந்திரத்துக்கு அந்த இரக்கம் ஏனோ தோன்றவில்லை. சென்னை ரிப்பன் மாளிகையில் குவிந்து கிடக்கும் வெள்ள நிவாரணத்துக்கான உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் ஏக குழப்பம் நிலவுகிறதாம். ஒருபுறம், சென்னை துறைமுகத்தில் மக்களின் தேவைக்கான பொருட்களுடன் மூன்று பிரமாண்ட போர்க்கப்பல்கள் ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் வந்து இறங்கியிருக்கிறது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |