Tamil News | Online Tamil News |
- சுங்கச்சாவடி கட்டண சலுகை நீட்டிக்கப்படுமா?
- 'தனிநபர் வெறுப்புக்கு ஜனநாயகத்தில் இடமில்லை'
- படிக்காதவர்கள் தேர்தலில் போட்டியிட...முடியாது சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
- அடையாறு, கூவம் ஆக்கிரமிப்பு அகற்றம்: பொதுப்பணித் துறைக்கு புத்தி வந்தது
- ராணுவம் மூலம் தற்காலிக பாலம்: நெடுஞ்சாலை துறை முட்டுக்கட்டை
- ஐ.டி., வளாகத்தில் 20 பேர் பலி? போலீசார் தீவிர விசாரணை
- வடகிழக்கு மழை குறைகிறது: மக்கள் நிம்மதி
- நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை...17 லட்சம் பேர் மறுவாழ்வு வழங்குவது மாபெரும் சவாலாக இருக்கும் என கணிப்பு
- பேரிடர் மேலாண்மை விதிகள் அமலானதா: கூடுதல் நிவாரணத்தில் சிக்கல்
- டில்லியில் டீசல் காருக்கு தடை?
| சுங்கச்சாவடி கட்டண சலுகை நீட்டிக்கப்படுமா? Posted: 10 Dec 2015 07:04 AM PST தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது. இச்சலுகையை, மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வடகிழக்கு பருவமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பிற மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து, நிவாரண உதவி கிடைத்து வருகிறது. நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள, டிச., 11ம் தேதி வரை, தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் ... |
| 'தனிநபர் வெறுப்புக்கு ஜனநாயகத்தில் இடமில்லை' Posted: 10 Dec 2015 07:43 AM PST புதுடில்லி:''தனி ஒருவரின் சுய விருப்பத்திற்கும், ஆசைக்கும் ஏற்ப, ஜனநாயகத்தை வளைக்க முடியாது,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 'நேஷனல் ஹெரால்டு' சொத்து அபகரிப்பு வழக்கில், காங்., தலைவர் சோனியா, துணை தலைவரும், அவரது மகனுமான ராகுல் ஆகியோர், 19ம் தேதி கோர்ட்டில் ஆஜராக, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இதனால், பார்லிமென்டின் இரு சபைகளையும் நடத்த விடாமல், காங்., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்டித்து, டில்லியில், 'டைனிக் ஜக்ரன்' பத்திரிகையின் கருத்தரங்கில், பிரதமர் மோடி பேசினார். |
| படிக்காதவர்கள் தேர்தலில் போட்டியிட...முடியாது சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு Posted: 10 Dec 2015 08:46 AM PST புதுடில்லி:ஹரியானா மாநிலத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, குறைந்தபட்ச கல்வித் தகுதியை கட்டாயமாக்கி, அம்மாநில சட்டசபையில் நிறைவேறிய புதிய சட்டத்துக்கு, தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. கல்வித் தகுதி சட்டம், நாட்டின் பிற மாநிலங்களிலும் இயற்றப்படும் வாய்ப்பை, இத்தீர்ப்பு ஏற்படுத்தி உள்ளது.ஹரியானா மாநிலத்தில், பா.ஜ.,வை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். இங்கு, 'உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, பொது வேட்பாளர்கள், குறைந்தபட்சம், 10ம் வகுப்பும், பெண்கள், எட்டாம் வகுப்பும், தலித் வேட்பாளர்கள், ஐந்தாம் ... |
| அடையாறு, கூவம் ஆக்கிரமிப்பு அகற்றம்: பொதுப்பணித் துறைக்கு புத்தி வந்தது Posted: 10 Dec 2015 08:59 AM PST 'சென்னை நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, இப்போதே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுப்பணித் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.சென்னையில் கூவம், அடையாறு ஆறுகள் பயணிக்கின்றன. பக்கிங்ஹாம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் -அரும்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பல கால்வாய்கள் உள்ளன. இந்த நீர்வழித்தடங்கள், பல ஆண்டுகளாக கழிவுநீர் செல்லவே பயன்படுகின்றன.கூவம் ஆற்றை புனர மைக்கப் போவதாக, தமிழக அரசு, நான்கு ஆண்டுகளாக கூறி வருகிறது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. பக்கிங்ஹாம் கால்வாயில், நீர்வழித் தடம் அமைக்க ... |
| ராணுவம் மூலம் தற்காலிக பாலம்: நெடுஞ்சாலை துறை முட்டுக்கட்டை Posted: 10 Dec 2015 09:09 AM PST சென்னை, ஆவடியில் தற்காலிக பாலம் அமைக்க, ராணுவம் திட்டமிட்டு உள்ளது. ஆனால், அதற்கு நெடுஞ்சாலைத் துறை முட்டுக்கட்டை போட்டுள்ளது.சென்னையில், ஆவடி - -கரையான்சாவடி இடையிலான ஆவடி சாலை, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலையில், செந்நீர்குப்பம் ஊராட்சி எல்லையும், திருவேற்காடு நகராட்சி எல்லையும் சந்திக்கும் இடத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் இருந்தது. இந்த பாலம், டிச., 3ல் வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டது.இதனால், ஆவடி -- கரையான்சாவடி இடையிலான போக்குவரத்து, முற்றிலும் முடங்கியுள்ளது. ஆவடியில் உள்ள பீரங்கி தொழிற் ... |
| ஐ.டி., வளாகத்தில் 20 பேர் பலி? போலீசார் தீவிர விசாரணை Posted: 10 Dec 2015 09:50 AM PST சென்னையில், 65 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும், டி.எல்.எப்., தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக பீதி கிளம்பியுள்ளது. எனினும், அதை நிர்வாகம் மறுத்துள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை நந்தம்பாக்கம், போரூர் - மவுன்ட் பூந்தமல்லி சாலையில், 42 ஏக்கர் பரப்பளவில், டி. எல்.எப்., தகவல் தொழில்நுட்ப வளாகம் உள்ளது. துப்புரவு ஊழியர்கள்அங்கு, 10 மாடிகள் கொண்ட ௧௦ கட்டடங்கள் உள்ளன. அவற்றில், 'சாம்சங்' உள்ளிட்ட, 57 பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. மென்பொறியாளர்கள், நிர்வாக பிரிவு அதிகாரிகள், பாதுகாப்பு காவலாளிகள், துப்புரவு ... |
| வடகிழக்கு மழை குறைகிறது: மக்கள் நிம்மதி Posted: 10 Dec 2015 09:54 AM PST சென்னை:'தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் குறைந்து வருகிறது' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.வட கிழக்கு பருவ மழை, 10 ஆண்டுகளுக்கு பின், அதன் கடுமையை, நடப்பு ஆண்டு காட்டிவிட்டது. அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை, மூன்று மாதங்களுக்கு பெய்யக் கூடிய பருவ மழை, இன்னும், 20 நாட்களில் முடிவுக்கு வர உள்ளது.இந்நிலையில், 'மழையின் வேகம் குறைகிறது' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.வட கிழக்கு பருவ மழை, 2005க்குப் பின், பற்றாக்குறை மற்றும் சராசரியாகவே பெய்துள்ளது. குறிப்பாக, 2012ல் - 16, 2013ல் - 33, 2014ல் - 2 சதவீத மழை, சராசரியை விட ... |
| Posted: 10 Dec 2015 10:03 AM PST தமிழகத்தில், வெள்ளப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட, 17 லட்சம் பேர், நிவாரணமுகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது,அரசுக்கு மாபெரும் சவாலாக இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாதமாக கொட்டி தீர்த்த கன மழையால், நான்கு முறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள், பெரிதும் பாதிக்கப்பட்டன.*வெள்ளத்தில் சிக்கிய, 17.64 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 6,605 நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்; வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, 600 படகுகள் பயன்படுத்தப்பட்டன; ... |
| பேரிடர் மேலாண்மை விதிகள் அமலானதா: கூடுதல் நிவாரணத்தில் சிக்கல் Posted: 10 Dec 2015 10:21 AM PST 'சென்னை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் தமிழக அரசு, பேரிடர் மேலாண்மை சட்டப்படி, மத்திய அரசின் சிறப்பு பணிக்குழு வகுத்த விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தாதது ஏன்?' என, நகரமைப்பு வல்லுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.சென்னையில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர். இந்த பாதிப்புகளின் தன்மையை கருத்தில் கொண்டு, சென்னையை, பேரிடர் பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இதை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என, தமிழக அரசு மத்திய ... |
| டில்லியில் டீசல் காருக்கு தடை? Posted: 10 Dec 2015 10:49 AM PST புதுடில்லி : டில்லியில், டீசல் கார்களுக்கு தடை விதிப்பது தொடர்பான மனுவை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. 'டில்லியில், மாசு அளவைக் கட்டுப்படுத்த, டீசல் கார், டிரக் ஆகியவற்றின் போக்குவரத்திற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு, டில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: டில்லியில் காணப்படும் மாசு, மிகவும் தீவிரமான பிரச்னையாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 11,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |