Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் போர்வைகள்: ஜெயின் வணிகக் கூட்டமைப்பு வழங்கியது

Posted: 05 Dec 2015 01:56 PM PST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, ஜெயின் சர்வதேச வணிக கூட்டமைப்பு சார்பில் 5 லட்சம் போர்வைகள், நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

அத்தியாவசியப் பொருள்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 05 Dec 2015 01:55 PM PST

சென்னை ஜாபர்கான்பேட்டையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மர்மக் காய்ச்சலால் மாணவர் சாவு

Posted: 05 Dec 2015 01:55 PM PST

திருத்தணி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் உயிரிழந்தார்.

குவிகிறது நிவாரணப் பொருள்கள்; முறையாக விநியோகிக்கப்படுமா?

Posted: 05 Dec 2015 01:54 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால், இவற்றை தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க, உதவிட முன்வரும் பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்க்கட்டளை ஏரி உடைப்பு

Posted: 05 Dec 2015 01:54 PM PST

பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள பல்லாவரம் பெரிய ஏரியில் அண்மையில் உடைப்பு ஏற்பட்டு, அருகில் கட்டப்பட்டு வரும் 16 அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தினுள் வெள்ளம் புகுந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள்

Posted: 05 Dec 2015 01:54 PM PST

காஞ்சிபுரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் பேருக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிவாரண உதவிகளை வழங்க விரும்புவோர் கவனத்துக்கு...

Posted: 05 Dec 2015 01:53 PM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புவோர் யாரைத் தொடர்பு கொள்வது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரத்தில் மீண்டும் மழை

Posted: 05 Dec 2015 01:52 PM PST

காஞ்சிபுரம் பகுதியில் மீண்டும் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

சொந்த ஊர் திரும்ப வட மாநில மாணவர்களுக்கு உதவிய விமானப் படையினர்

Posted: 05 Dec 2015 01:52 PM PST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதியிலிருந்து வடமாநில் மாணவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு விமானப்படையினர் உதவி செய்தனர்.

செங்கல்பட்டில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்: அத்தியாவசியப் பொருள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

Posted: 05 Dec 2015 01:51 PM PST

செங்கல்பட்டு, சுற்றியுள்ள இடங்களில் குடியிருப்புப் பகுதிகள் மழை வெள்ளத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற வழியின்றி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்ததால் பல வீடுகள் மூழ்கின. 

திருவள்ளூரில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

Posted: 05 Dec 2015 01:51 PM PST

திருவள்ளூரில், கடந்த இரு தினங்களாக மழை நின்ற நிலையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.

அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும்

Posted: 05 Dec 2015 01:50 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சேதமடைந்த சாலைகள் குறித்த முன்அறிவிப்பு பதாகைகள்

Posted: 05 Dec 2015 01:50 PM PST

மழை வெள்ளம் காரணமாக, சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து முன் அறிவிப்பு பதாகைகளை நெடுஞ்சாலைத் துறையினர் ஆங்காங்கே வைத்துள்ளனர். இது, வாகன ஓட்டிகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளன.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்கள் மீட்பு

Posted: 05 Dec 2015 01:50 PM PST

திருத்தணி அருகே, கொற்றலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன.

தொலைதூரப் பேருந்துகளை இலவசமாக இயக்க வேண்டும்

Posted: 05 Dec 2015 01:50 PM PST

தொலைதூர பேருந்துகளையும் இலவசமாக இயக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

நடமாடும் ஏ.டி.எம்.: 2 நாள்களில் 1,500 பேர் பணம் எடுப்பு

Posted: 05 Dec 2015 01:49 PM PST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக வாகனத்தில் தானியங்கி பணப் பட்டுவாடா மையத்தை ("நடமாடும் ஏடிஎம்') இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதில், கடந்த 2 நாள்களில் 1,500 பேர் பணம் எடுத்துள்ளனர்.

சிறு பாலம் அமைக்க பேரூராட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

Posted: 05 Dec 2015 01:46 PM PST

கும்மிடிப்பூண்டி பஜாரில், மின்வாரிய அலுவலகம் அருகே சிறுபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவள்ளூரில் இலவசப் பேருந்துகள் இயக்கம்

Posted: 05 Dec 2015 01:46 PM PST

தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி ஆவடி, பூந்தமல்லி பணிமனைகளில் இருந்து திருவள்ளூருக்கு பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டன.

விழுப்புரம் கோட்டப் பேருந்துகளிலும் இலவச பயண வசதி அளிக்க கோரிக்கை

Posted: 05 Dec 2015 01:45 PM PST

சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவச பயணம் அறிவித்ததைப்போல் விழுப்புரம் கோட்ட பேருந்துகளிலும் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடமலைக்குண்டு அருகே பேருந்து மோதி ஒருவர் சாவு

Posted: 05 Dec 2015 01:45 PM PST

கடமலைக்குண்டு அருகே பேருந்து மோதியதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பயிர்களில் உரக்கரைசல் தெளிக்க செயல்விளக்கம்

Posted: 05 Dec 2015 01:44 PM PST

வத்தலகுண்டு பகுதி விவசாயிகளுக்கு பயறுவகைப் பயிர்களில் உரக்கரைசல் தெளிப்பு குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

கடமலைக்குண்டு அருகே உடையும் நிலையில் அம்மாகுளம்

Posted: 05 Dec 2015 01:43 PM PST

கடமலைக்குண்டு அருகே உடையும் நிலையில் உள்ள அம்மாகுளத்தை உடனே சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னமனூர் அருகே 60 ஆண்டு மயான பாதைப் பிரச்னை: சடலத்துடன் போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

Posted: 05 Dec 2015 01:43 PM PST

தேனி மாவட்டம், சின்னமனூர் அடுத்த காமாட்சிபுரம் அருகேயுள்ள மயானத்தில், இறந்தவரின் உடலை வேறு இடத்தில் புதைக்கக் கூறியதால், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கு இடையே சனிக்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இடப் பிரச்னை: 14 பேர் மீது வழக்கு

Posted: 05 Dec 2015 01:42 PM PST

தேனி மாவட்டம், மேகமலையைச் சேர்ந்த கோவிந்தன், ஜெயராஜ், வசந்தா, ராஜூ, சிக்கந்தர், மாரியம்மாள் ஆகியோர், அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

பயிர் விளைச்சல் போட்டி: ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 05 Dec 2015 01:41 PM PST

பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விரும்பும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள், அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என, வேளாண்மைத் துணை இயக்குநர் (மாநில திட்டம்) மு. தங்கசாமி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் அறுவடை: ஹெக்டேருக்கு 7 டன் மகசூல்

Posted: 05 Dec 2015 01:41 PM PST

தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் அறுவடையில் ஹெக்டேருக்கு சராசரி 7 டன் மகசூல் கிடைத்துள்ளது என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரங்கநாதன் தெரிவித்தார்.

மாநில சிலம்பப் போட்டி: செளராஷ்ட்ர மேல்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 05 Dec 2015 01:40 PM PST

பரமக்குடி செளராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பள்ளியின் சார்பில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பரமக்குடியில் உலக மண்வள பாதுகாப்பு தின விழா: நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

Posted: 05 Dec 2015 01:38 PM PST

பரமக்குடியில் சனிக்கிழமை வேளாண்மைத் துறை சார்பில் உலக மண் வள பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது.

புதுவைக்கு முதல்கட்ட நிவாரணம் ரூ. 50 கோடி

Posted: 05 Dec 2015 01:38 PM PST

மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு, முதல்கட்ட நிவாரணமாக ரூ. 50 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினம்: பாம்பன் பாலத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு: கடலோரப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு

Posted: 05 Dec 2015 01:37 PM PST

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பாம்பன் ரயில் பாலம், ராமேசுவரம் கோயில் மற்றும் கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,167 கன அடியாகக் குறைந்தது

Posted: 05 Dec 2015 01:37 PM PST

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

பள்ளியில் வீட்டுக்கு வீடு விஞ்ஞானி விழிப்புணர்வு முகாம்

Posted: 05 Dec 2015 01:37 PM PST

பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக்குலேசன் பள்ளியில் சனிக்கிழமை வீட்டுக்கு வீடு விஞ்ஞானி என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கீழ்க்கட்டளை ஏரி உடைப்பு: அடுக்குமாடி குடியிருப்பில் வெள்ளம்

Posted: 05 Dec 2015 01:37 PM PST

பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள பல்லாவரம் பெரிய ஏரியில் அண்மையில் உடைப்பு ஏற்பட்டு, அருகில் கட்டப்பட்டு வரும் 16 அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தினுள் வெள்ளம் புகுந்தது.

காஞ்சிபுரத்தில் 911 ஏரிகள் நிரம்பின

Posted: 05 Dec 2015 01:36 PM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 911 ஏரிகள் நிரம்பின. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. இவற்றில், 911 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டிவிட்டன.

ராமேசுவரத்தில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 05 Dec 2015 01:36 PM PST

ராமேசுவரத்தில் தொடர்ந்து 5 நாள்களாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் ராஜாளி கடற்படை தளத்தில் தரை இறங்கிய இரு தனியார் விமானங்கள்

Posted: 05 Dec 2015 01:36 PM PST

அரக்கோணத்தில் தாற்காலிக உள்நாட்டு முனையமாக செயல்படும் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் சனிக்கிழமை இரு தனியார் விமானங்கள் தரையிறங்கின. சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இறங்கிய நிலையில், 125 பயணிகள் அந்த விமானங்களில் புறப்பட்டுச் சென்றனர்.

கட்டணமில்லா பயணம்: அரசுப் பேருந்துகளில் கூட்டம்

Posted: 05 Dec 2015 01:35 PM PST

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணமில்லாமல் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள்: பரமக்குடியிலிருந்து லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன

Posted: 05 Dec 2015 01:35 PM PST

பரமக்குடி- எமனேசுவரம் பகுதியிலிருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 2 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

சிறைத் துறையில் 4 கண்காணிப்பாளர்கள் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு

Posted: 05 Dec 2015 01:34 PM PST

தமிழக சிறைத் துறையில் கண்காணிப்பாளர்களாகப் பணிபுரிந்த 4 அதிகாரிகளை டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி மறைவு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இரங்கல்

Posted: 05 Dec 2015 01:34 PM PST

செட்டிநாட்டுப் பராம்பரியத் தூண் சாய்ந்தது என்று தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி மறைவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

எம்.ஏ.எம் ராமசாமியின் உடல் இன்று தகனம்

Posted: 05 Dec 2015 01:33 PM PST

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கல்

Posted: 05 Dec 2015 01:33 PM PST

ராமநாதபுரம் அருகே வண்ணான்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரத்தில் தொடர் மழை

Posted: 05 Dec 2015 01:33 PM PST

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.

பி.எஸ்.என்.எல். சார்பில் ரூ.145 "டாக்டைமுடன்' இலவச சிம்கார்டு

Posted: 05 Dec 2015 01:33 PM PST

தமிழக தொலைபேசி வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் ரூ.145 "டாக்டைமுடன்' கூடிய "சிம்' கார்டுகளை இலவசமாகப் பெறலாம் என தமிழக தொலைபேசி வட்டம் (பி.எஸ்.என்.எல்) அறிவித்துள்ளது.

லாரி மோதி சைக்கிளில் சென்றவர் சாவு

Posted: 05 Dec 2015 01:32 PM PST

மானாமதுரை அருகே சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி மோதி சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.

தமிழகத்தை மத்திய குழு மீண்டும் பார்வையிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

Posted: 05 Dec 2015 01:32 PM PST

தமிழக மழை - வெள்ளப் பாதிப்புகளை மத்திய குழு மீண்டும் சென்று மதிப்பிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்.பி. பாராட்டு

Posted: 05 Dec 2015 01:32 PM PST

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பர் மாதம் நடந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, எஸ்.பி. பாராட்டு தெரிவித்து, அவரது அலுவலகம் முன் விளம்பரப் பலகை வைத்துள்ளார்.

பி.எஸ்.என்.எல்.சேவை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது

Posted: 05 Dec 2015 01:31 PM PST

சென்னையில் வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். சேவை இயல்பு நிலைக்குத் திரும்பயுள்ளது.

மாயமான மீனவர்களை தேட நடவடிக்கை எடுக்க வேண்டும்: த.மா.கா. கோரிக்கை

Posted: 05 Dec 2015 01:31 PM PST

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடலில் மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவர் ரவிச்சந்திரராமவன்னி சனிக்கிழமை கோரிக்கை விடுத்தார்.

பாகிஸ்தானில் வர்த்தக கண்காட்சி: இந்தியத் தூதரக அதிகாரிக்கு அனுமதி மறுப்பு

Posted: 05 Dec 2015 01:16 PM PST

பாகிஸ்தானில் நடைபெறும் "சார்க்' நாடுகளின் வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்பதற்கு இந்தியத் தூதரக அதிகாரிக்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.

மதேசி சமூகத்தினருடனான நேபாள அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

Posted: 05 Dec 2015 01:12 PM PST

நேபாளத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதேசி சமூகத்தினர் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அந்த நாட்டு அரசு சனிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

வங்கதேசத்தில் ஹிந்துக் கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் காயம்

Posted: 05 Dec 2015 01:11 PM PST

வங்கதேசத்தில் ஹிந்துக் கோயில் மீது மர்மநபர்கள் சனிக்கிழமை நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.

வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட ஜி.கே.வாசன்

Posted: 05 Dec 2015 01:09 PM PST

கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சனிக்கிழமை பார்வையிட்டார்.

பெங்களூரு-சென்னை இடையே இலவச பேருந்துச் சேவை

Posted: 05 Dec 2015 01:08 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, பெங்களூரு-சென்னை இடையே இலவச பேருந்து சேவையைத் தொடங்கியுள்ளதாக கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தை புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

Posted: 05 Dec 2015 01:08 PM PST

வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ கூறினார்.

18 நோயாளிகள் இறந்த சம்பவம்: விசாரணை தொடங்கியது

Posted: 05 Dec 2015 01:08 PM PST

சென்னை அருகே மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகள் இறந்த சம்பவம் தொடர்பாக, காவல் உதவி ஆணையர் மன்சூர் அலி விசாரணையைத் தொடங்கினார்.

மழை பாதிப்பிலிருந்து மீளாத கடலூர் மாவட்டம்

Posted: 05 Dec 2015 01:07 PM PST

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்குடிச.9-க்கு ஒத்திவைப்பு

Posted: 05 Dec 2015 01:07 PM PST

விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2002, 2011-ஆம் ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு - ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம்: தலைவர்கள் வேண்டுகோள்

Posted: 05 Dec 2015 01:07 PM PST

மருத்துவமனைகளுக்குத் தடையில்லாமல் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெள்ள நிவாரணத்துக்கு உதவிகள்: திமுகவினருக்கு கருணாநிதி உத்தரவு

Posted: 05 Dec 2015 01:06 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருள்கள் கொடுக்கும் திமுகவினர் அறிவாலயத்தின் மூலம் விநியோகிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வார கலாரசிகன்

Posted: 05 Dec 2015 01:06 PM PST

'கலைமாமணி' விக்கிரமன் மறைந்துவிட்டார் என்கிற செய்தி வந்தபோது நான் மதுரையில் இருந்தேன். சென்னை மாநகரமோ அடைமழையில் சிக்கி வெள்ளக் காடாக இருந்த நேரம். அவரை நேசித்த அன்பர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டுபோய் அஞ்சலி செலுத்தக்கூட முடியாத நிலைமை.

மலிவான விளம்பரம் தேடுகிறார் கமல்ஹாசன்! அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Posted: 05 Dec 2015 01:05 PM PST

சென்னை வெள்ளப் பாதிப்பு குறித்து கருத்துத் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார்.

மக்கள் வரிப் பணம் என்ன ஆனது? தமிழக அரசுக்கு கமல் கேள்வி

Posted: 05 Dec 2015 01:04 PM PST

மக்கள் செலுத்திய வரிப் பணம் என்ன ஆனது என, தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

"எடப்பாடி' பட்டதைக் கேளீர்!

Posted: 05 Dec 2015 12:31 PM PST

சேலம் மாவட்டம் எடப்பாடியில் 1916-ஆம் ஆண்டில் இருபெரும் துன்பங்கள் நேரிட்டன. அப்பொழுது அவ்வூரைக் கொடிய "பிளேக்' நோய் தாக்கியது.

அடைமழையும் அளபெடையும்!

Posted: 05 Dec 2015 12:30 PM PST

செய்யுளில் கையாளும் எழுத்துக்கான ஓசை நீட்டிப்பை அளபெடை என்பது இலக்கண வழக்கு. ஒவ்வோர் எழுத்துக்கும் குறில் நெடில் என்ற ஓசை அளவு இருந்தாலும் சிலவற்றிற்கு ஒரு தேவை கருதிய வகையில் ஓசை நீட்டிப்பைப் புலவர் கையாள்வது உண்டு. இத்தேவை என்பது இலக்கணத்தையொட்டிய கூடுதல் பொருளுக்காக அமைவதாகும்.

திருவாசகத்தில் கருவியல்: அறிவியல் தமிழ் - 44

Posted: 05 Dec 2015 12:28 PM PST

பக்திப் பனுவலாகவும் பைந்தமிழ் நூலாகவும் இலங்கும் திருவாசகம், அறவியல் கருத்துகளோடு அறிவியல் செய்திகளையும் உள்ளடக்கிய நூலாகும்.

சொல் தேடல் -37

Posted: 05 Dec 2015 12:25 PM PST

இன்று இந்தியர்களின் வாழ்நாள் கூடியிருக்கிறது. சராசரி வாழ்க்கை அறுபத்தைந்து ஆண்டு என்கிறார்கள்.

திரிகடுகம்: நல்லாதனார்

Posted: 05 Dec 2015 12:24 PM PST

ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங் - கதித்தொருவன்

தயாநிதி மாறன் கைது அவசியம்! உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ முடிவு

Posted: 05 Dec 2015 12:06 PM PST

பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கைது நடவடிக்கை அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

ஜி.எஸ்.டி. மசோதாவை அடுத்த வாரம் நிறைவேற்ற அரசு தீவிரம்

Posted: 05 Dec 2015 12:04 PM PST

தொடர் அமளி காரணமாக, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், கடந்த 2 வாரங்களாக முடங்கிய நிலையில், சரக்கு,சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதா, மனை வணிக மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை அடுத்த வாரம் நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

சமூக வலைதளங்களில் வெள்ள நிவாரண மீட்பு தகவல்களை உடனுக்குடன் தரும் என்டிஆர்எஃப்

Posted: 05 Dec 2015 12:03 PM PST

சமூக வலைதளங்களில் தமிழக வெள்ள நிவாரண மீட்புத் தகவல்களை உடனுக்குடன் தேசியப் பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) அளித்து வருகிறது. அப்படையின் தலைமை இயக்குநர் ஓ.பி. சர்மா சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக முகாமிட்டு மீட்பு நிவாரண நடவடிக்கைகளைப் பார்வையிட்டு வருகிறார்.

நிதீஷ்- பில் கேட்ஸ் சந்திப்பு: பிகாரில் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

Posted: 05 Dec 2015 12:02 PM PST

பிகாரில் பொதுச் சுகாதாரம், கர்ப்பிணிகள் நலன், குழந்தைகளின் ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனரும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் துணைத் தலைவருமான பில் கேட்ஸ், அந்த மாநில முதல்வர் நிதீஷ்குமாரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பகல் நேர விமான சேவை

Posted: 05 Dec 2015 12:01 PM PST

சென்னை விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல், பகல் நேரத்தில் விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் டிச.12 வரை ஒத்திவைப்பு

Posted: 05 Dec 2015 11:59 AM PST

சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் டிசம்பர் 12-ஆம் தேதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் நலச் சட்டங்களை பலவீனமாக்குகிறது மோடி அரசு: ராகுல் காந்தி

Posted: 05 Dec 2015 11:59 AM PST

தொழிலாளர் நலச் சட்டங்களை மோடி அரசு உள்நோக்கத்துடன் பலவீனமாக்கி வருகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பிகார், ஒடிஸா முதல்வர்களுக்கு ஜெயலலிதா நன்றி

Posted: 05 Dec 2015 11:58 AM PST

தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக தலா ரூ.5 கோடியை அறிவித்த, பிகார், ஒடிஸா மாநிலங்களின் முதல்வர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் வர்த்தக கண்காட்சி: இந்தியத் தூதரக அதிகாரிக்கு அனுமதி மறுப்பு

Posted: 05 Dec 2015 11:51 AM PST

பாகிஸ்தானில் நடைபெறும் "சார்க்' நாடுகளின் வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்பதற்கு இந்தியத் தூதரக அதிகாரிக்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.

ராமர் கோயில் கட்டும் தேதியை ஆர்எஸ்எஸ் தலைவர் அறிவிக்க வேண்டும்

Posted: 05 Dec 2015 11:51 AM PST

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் தேதியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அறிவிக்க வேண்டும் என்று சிவசேனைக் கட்சி வலியுறுத்தியது.

ஹிந்து மத சார்பு சிறு அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும்  

Posted: 05 Dec 2015 11:50 AM PST

ஹிந்து மத சார்பு சிறு அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீரை ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி தெரிவித்தார்.

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீரில் பள்ளி ஆசிரியர் கைது

Posted: 05 Dec 2015 11:50 AM PST

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரை தில்லி போலீஸார் கைது செய்தனர். இவரையும் சேர்த்து, பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிஎஸ்டி உச்ச வரம்பு 18 % என்பதை அரசமைப்புச் சட்டம் மூலம் உறுதி செய்ய வேண்டும்

Posted: 05 Dec 2015 11:47 AM PST

சரக்கு-சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) உச்ச வரம்பு 18 சதவீதம் என்பதை அரசமைப்புச் சட்டம் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிகாரின் 17.5% வளர்ச்சிக்கு மாஞ்சியே காரணம்!

Posted: 05 Dec 2015 11:47 AM PST

பிகார் மாநிலத்தில், கடந்த நிதிநிலை ஆண்டில் 17.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டதற்கு முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவருமான மாஞ்சியே காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

கின்னஸ் சான்றிதழை பிரதமரிடம் அளித்தது பெட்ரோலிய அமைச்சகம்

Posted: 05 Dec 2015 11:46 AM PST

இந்தியாவில் எரிவாயு உருளைக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டத்தை, உலகிலேயே மிகப் பெரிய பணப் பரிமாற்றத் திட்டமாக அங்கீகரித்து, கின்னஸ் சாதனை அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இலங்கை ராணுவத் தளபதிகளை விசாரணையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

Posted: 05 Dec 2015 11:45 AM PST

""இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரில், எனது வெற்றிக்கு உதவிய மூத்த ராணுவ தளபதிகளை போர்க்குற்ற விசாரணையில் இருந்து பாதுகாக்க வேண்டும்'' என்று முன்னாள் அதிபர் ராஜபட்ச கேட்டுக் கொண்டார்.

ராகுலுக்கு அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் தெரியுமா? பாஜக கேள்வி

Posted: 05 Dec 2015 11:43 AM PST

மத்திய அமைச்சர் வி.கே. சிங் பேசியது அரசமைப்புச் சட்ட மீறல் என்று கூறியுள்ள ராகுல் காந்திக்கு, அந்தச் சட்டப் பிரிவுகள் குறித்து தெரியுமா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

படேல் சமூகத்தினர் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்

Posted: 05 Dec 2015 11:38 AM PST

குஜராத் மாநிலத்தில், படேல் சமூகத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசு திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை அறிவித்தது.

அஸ்ஸாமில் இரட்டை குண்டுவெடிப்பு: 4 பேர் காயம்

Posted: 05 Dec 2015 11:37 AM PST

அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் குவாஹாட்டியில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 வயது குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

சிரியாவில் பிரிட்டன் தாக்குதல்: ஒபாமா, கேமரூன் ஆலோசனை

Posted: 05 Dec 2015 11:34 AM PST

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது பிரிட்டன் நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல் குறித்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

சிரியா அதிபர் உடனடியாக பதவி விலகத் தேவையில்லை

Posted: 05 Dec 2015 11:33 AM PST

சிரியா உள்நாட்டுச் சண்டைக்குத் தீர்வு காண, அந்த நாட்டு அதிபர் அல்-அஸாத் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பது அவசியமில்லை என பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன் ஃபேபியஸ் கூறியுள்ளார்.

இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம்

Posted: 05 Dec 2015 11:33 AM PST

இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

சிரியாவில் ரஷிய விமானங்கள் தீவிரத் தாக்குதல்

Posted: 05 Dec 2015 11:32 AM PST

சிரியாவில் ரஷிய விமானங்கள் தீவிர குண்டு வீச்சில் ஈடுபட்டு வருவதாக ரஷியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

எகிப்து நாடாளுமன்றத் தேர்தல்: அதிபர் ஆதரவுக் கூட்டணியினர் அமோக வெற்றி

Posted: 05 Dec 2015 11:32 AM PST

எகிப்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அல்-சிசிக்கு ஆதரவான கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Posted: 05 Dec 2015 11:26 AM PST

தேவகோட்டையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு டிச.9 முதல் 11 வரை பயிற்சி

Posted: 05 Dec 2015 11:24 AM PST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு இம்மாதம் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 3 நாள்கள் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

அமெரிக்க தம்பதி துப்பாக்கித் தாக்குதல்: பயங்கரவாதச் செயல் கோணத்தில் புலன் விசாரணை

Posted: 05 Dec 2015 11:24 AM PST

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 14 பேர் உயிர்களை பலி வாங்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம், பயங்கரவாதத் தாக்குதல் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்ற மாநாடு: நாடுகளிடையே தொடரும் கருத்து வேறுபாடு

Posted: 05 Dec 2015 11:23 AM PST

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் வரைவு ஒப்பந்தத்தை ஏற்பதில் நாடுகளிடையே கருத்து வேறுபாடு தொடர்கிறது.

சென்னை, கடலூர் மாவட்டங்களுக்கு காரைக்குடிப் பகுதியிலிருந்து ரூ.50 லட்சத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள்: சேவை சங்கங்கள் ஏற்பாடு

Posted: 05 Dec 2015 11:22 AM PST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மாவட்ட மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருள்களை காரைக்குடிப் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச. 6) அனுப்ப சேவை சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

அழகப்பா பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

Posted: 05 Dec 2015 11:22 AM PST

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் மகளிரியல் துறை மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள், திட்டம் மற்றும் செயல்முறைகள் வடி வமைத்தல் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

காய்கறி சேமிப்பு மைய தொடக்க விழா

Posted: 05 Dec 2015 11:21 AM PST

திருப்பத்தூர், கீழச்சிவல்பட்டி ஆகிய இடங்களில் அரசு தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை பெருநகர காய்கறி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறி சேகரிப்பு மையங்கள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

சார் ஆட்சியர் பொறுப்பேற்பு

Posted: 05 Dec 2015 11:20 AM PST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வருவாய் கோட்ட சார் ஆட்சியர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™