4TamilMedia செய்திகள் | |
- துருக்கிக்கு தக்க பாடம் புகட்டுவோம்: விளாடிமிர் புட்டின்
- மொழிப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது: மனோ கணேசன்
- ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்துவது தொடர்பில் ஒபாமா- கமரூன் ஆலோசனை!
- சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இலங்கைப் பெண்ணை மீட்பது தொடர்பில் பேச்சு!
- சென்னை விமான நிலையம் இயக்க இன்னும் இரண்டு நாட்களாகும்!
- சென்னை மாநகர பேரூந்துகள் வரும் 08ஆம் திகதி வரை கட்டணமின்றிய சேவையில் ஈடுபடும்!
- தமிழ் மக்களிடமிருந்து த.தே.கூ.வை பிரிக்கும் சதியில் அரசாங்கம் ஈடுபடுகின்றது: எம்.ஏ.சுமந்திரன்
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டாம்: மஹிந்த ராஜபக்ஷ
- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல: மைத்திரிபால சிறிசேன
- 2016 மேஷ ராசி பலன்கள்
- தமிழக உறவுகளுக்கு எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: சி.வி.விக்னேஸ்வரன்
- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் தொடர்பில் கரிசனையோடு இருக்கின்றோம்: இரா.சம்பந்தன்
| துருக்கிக்கு தக்க பாடம் புகட்டுவோம்: விளாடிமிர் புட்டின் Posted:
ரஷ்ய போர் விமானத்தினைச் சுட்டு வீழ்த்தி தவறிழைத்துள்ள துருக்கிக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். Read more ... |
| மொழிப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது: மனோ கணேசன் Posted:
தமிழுக்கு சிங்களத்துக்கு இணையான இடம் இல்லாவிட்டால், இந்த நாட்டில் தேசிய மொழிப்பிரச்சினையை தீர்க்க முடியாது. தேசிய மொழிப் பிரச்சினையை தீர்க்காமலும், அரசு பணிகளில் தமிழருக்கு உரிய இடம் வழங்காமலும் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது பற்றி கனவுக்கூட காண முடியாது என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்துவது தொடர்பில் ஒபாமா- கமரூன் ஆலோசனை! Posted:
ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ். (IS -ISIS)) பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் ஆலோசனை நடத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. Read more ... |
| சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இலங்கைப் பெண்ணை மீட்பது தொடர்பில் பேச்சு! Posted:
சவுதி அரேபியாவில் கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இலங்கைப் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது. Read more ... |
| சென்னை விமான நிலையம் இயக்க இன்னும் இரண்டு நாட்களாகும்! Posted:
சென்னை விமான நிலையம் பழையபடி இயங்குவதற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். Read more ... |
| சென்னை மாநகர பேரூந்துகள் வரும் 08ஆம் திகதி வரை கட்டணமின்றிய சேவையில் ஈடுபடும்! Posted:
சென்னை மாநகர பேரூந்துகள் இன்றிலிருந்து (சனிக்கிழமை)) வரும் 08ஆம் திகதி வரையில் கட்டணமின்றிய சேவையில் ஈடுபடும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்களிடமிருந்து த.தே.கூ.வை பிரிக்கும் சதியில் அரசாங்கம் ஈடுபடுகின்றது: எம்.ஏ.சுமந்திரன் Posted:
தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிரிக்கும் சதித் திட்டத்தில் தற்போதையை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டாம்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எந்தவொரு காரணத்துக்காகவும் நீக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரமான மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல: மைத்திரிபால சிறிசேன Posted:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
கிரகநிலை: குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் - ராகு ரண ருண ரோகஸ்தானத்திலும் - சனி பகவான் அஷ்டமஸ்தானத்திலும் - கேது விரையஸ்தானத்திலும் இருக்கிறார்கள். புத்திர வகையில் புகழும் பெருமையும் உண்டாகும். வீட்டை புதுப்பிக்கும் நிலை ஏற்படும். அழகு சாதன பொருள் உற்பத்தி செய்வோர் மேன்மை பெறுவர். விஷப்பிராணிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும். கால்வலி, முதுகுவலி உடையவர்கள் சிகிச்சையை தொடர வேண்டி வரும். போக்குவரத்தின் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். தொழிலில் கிடைக்கும் ஆதாயம், தொழில் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு கிட்டும். புத்திரர்கள் வகையில் சுபச் செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு: கலைஞர்களுக்கு: அரசியல்வாதிகளுக்கு: பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும். சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன் அனுகூலமான திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு அதிர்ஷ்ட எண்கள்: 1, 5 அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருத்தணி, விராலிமலை ஜோதிடருடனான தொடர்புகளுக்கு : மின்னஞ்சல் : ramjothidar@gmail.com Read more ... |
| Posted:
பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு வடக்கு மாகாண மக்கள் எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பதை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் தொடர்பில் கரிசனையோடு இருக்கின்றோம்: இரா.சம்பந்தன் Posted:
பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனையோடு உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











