Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காங்கிரஸூடன் கூட்டணியா?சீதாராம் யெச்சூரி பதில்

Posted: 26 Dec 2015 01:10 PM PST

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படலாம் என்று பரவலாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்து கொல்கத்தாவில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அந்தக் கட்சியினர் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமையும்:ஆர்.நல்லகண்ணு

Posted: 26 Dec 2015 01:09 PM PST

ஊழலுக்கு எதிரான கட்சிகள் எங்கள் பக்கம் வந்தால் மக்கள் நலக் கூட்டணியின் ஆட்சி அமையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.

தொடர் விடுமுறை எதிரொலி: புத்துயிர் பெறும் கொடைக்கானல் சுற்றுலா!

Posted: 26 Dec 2015 01:08 PM PST

கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் தொடர் விடுமுறை நாள்களின் எதிரொலியாக மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது.

பழனி, திண்டுக்கல், ஆண்டிபட்டி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

Posted: 26 Dec 2015 01:08 PM PST

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

7,105 பேருக்கு ரூ.3.16 கோடியில் நலத்திட்ட உதவி

Posted: 26 Dec 2015 01:07 PM PST

பழனி அருகே தொப்பம்பட்டி ஒன்றியத்தில் சனிக்கிழமை  7,105 பேருக்கு சுமார் ரூ.3.16 கோடி மதிப்பிலான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, மடிக்கணினி, சைக்கிள் மற்றும் பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் ரூ.7 கோடி மதிப்பிலான புதிய பணிகள் தொடக்க விழாவும் நடைபெற்றது.

ராகுல் நிறைய பேச வேண்டும்:பிருத்விராஜ் சவாண் அறிவுரை

Posted: 26 Dec 2015 01:07 PM PST

நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நீண்ட நேரம் பேச வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவாண் வலியுறுத்தினார்.

வத்தலகுண்டு-பட்டிவீரன்பட்டி சாலையில் மின்விளக்கு வசதிகள் செய்ய வலியுறுத்தல்

Posted: 26 Dec 2015 01:07 PM PST

வத்தலகுண்டு- பட்டிவீரன்பட்டி குறுக்குச் சாலையில் மின்விளக்குகளை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகபுரி: நக்ஸல் தொடர்புடைய பேராசிரியர் சரண்

Posted: 26 Dec 2015 01:07 PM PST

நக்ஸல்களோடு தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பேராசிரியர், நீதிமன்ற உத்தரவின்படி நாகபுரி சிறைத் துறை அதிகாரிகளிடம் சரணடைந்தார்

மகளிர் சிறப்பு பட்டிமன்றம்

Posted: 26 Dec 2015 01:06 PM PST

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் கல்வி வள்ளல் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை பேராசிரியர்கள் பங்கேற்ற சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிசுவின் சடலம்: ஒப்பந்த தொழிலாளர் 4 பேர் நீக்கம்

Posted: 26 Dec 2015 01:06 PM PST

திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் இறந்தே பிறந்த சிசுவின் சடலத்தை  வீசிச் சென்றதாக ஒப்பந்த பணியாளர்கள் 4 பேரை பணி நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இளையான்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

Posted: 26 Dec 2015 01:06 PM PST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம், சாலைக்கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த 9 பேர் கைது

Posted: 26 Dec 2015 01:06 PM PST

மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, சனிக்கிழமை சிவகங்கையில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 9 பேரை, போலீஸார் கைது செய்தனர்.

வரதட்சணைப் புகார்: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Posted: 26 Dec 2015 01:06 PM PST

தேவகோட்டை அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண் அளித்த புகாரின்பேரில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மானாமதுரை, திருப்புவனம் பகுதி சிவாலயங்களில் திருவாதிரை விழா

Posted: 26 Dec 2015 01:06 PM PST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி சிவாலயங்களில் சனிக்கிழமை திருவாதிரை விழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 91ஆம் ஆண்டு தொடக்க விழா

Posted: 26 Dec 2015 01:06 PM PST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 91ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, காரைக்குடியில் சனிக்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது.

தேசிய கபடி போட்டி: சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் தேர்வு

Posted: 26 Dec 2015 01:06 PM PST

தேசிய கபடி போட்டியில் பங்குபெறும் மகளிர் அணிக்கு சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.

பெரியாறு பாசன நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

Posted: 26 Dec 2015 01:06 PM PST

சிங்கம்புணரி பெரியாறு பாசன நீட்டிப்புக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரத்தில் பலத்த மழை

Posted: 26 Dec 2015 01:06 PM PST

ராமேசுவரத்தில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் தத்தளித்தன. 

திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

Posted: 26 Dec 2015 01:06 PM PST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் சனிக்கிழமை ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் எதிர்காலத்தில் ஒன்றாக இணையும்:ராம் மாதவ்

Posted: 26 Dec 2015 01:06 PM PST

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும், எதிர்காலத்தில் ஒரே நாடாக இணையும் என்று பாஜக பொதுச் செயலாளரும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் மாதவ் தெரிவித்தார்.

ஆண்டிபட்டியில் தொழிலாளி மர்மச் சாவு

Posted: 26 Dec 2015 01:06 PM PST

ஆண்டிபட்டியில் நெசவுத் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து ஆண்டிபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி திண்டுக்கல் செல்லிடப்பேசி கோபுரத்தில் போராட்டம் நடத்த முயன்ற 7 பேர் கைது

Posted: 26 Dec 2015 01:05 PM PST

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்த முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 7 பேரை போலீஸார் சனிக்கிழமை செய்தனர்.

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Posted: 26 Dec 2015 01:05 PM PST

உத்தமபாளையம் அருகே கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

லாட்டரி விற்பனை: ஒருவர் கைது

Posted: 26 Dec 2015 01:05 PM PST

போடி அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

கோகோ வீராங்கனைக்கு ஊக்கத்தொகை

Posted: 26 Dec 2015 01:05 PM PST

ஆசியக் கோப்பைக்கான கோகோ போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சியில் கலந்து கொள்ளச் செல்லும் தமிழக வீராங்கனைக்கு சனிக்கிழமை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஊக்கத்தொகை வழங்கினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புகார் பெட்டி வழங்கல்

Posted: 26 Dec 2015 01:05 PM PST

போடி அருகே அரசுப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான புகார் பெட்டி தொடக்க விழா தேனி மாவட்ட சைல்டு லைன் அமைப்பின் சார்பில் நடைபெற்றது.

திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

Posted: 26 Dec 2015 01:05 PM PST

திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்குவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் திட்டம் இந்தியாவுக்கு தேவையில்லை: பார்வர்டு பிளாக் தொழிற்சங்க பொதுச்செயலர்

Posted: 26 Dec 2015 01:05 PM PST

இந்தியாவுக்கு புல்லட் ரயில் திட்டம் தேவையில்லை, இப்போதுள்ள ரயில் சேவையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய தொழிற்சங்க பொதுச்செயலர் எஸ்.பி.திவாரி தெரிவித்தார்.

சின்னக்காம்பட்டி பகுதிகளில் டிசம்பர் 28 மின்தடை

Posted: 26 Dec 2015 01:05 PM PST

ஒட்டன்சத்திரம் அருகே சின்னக்காம்பட்டி துணை மின்நிலையப் பகுதிகளில் டிச.28ஆம் தேதி மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி

Posted: 26 Dec 2015 01:05 PM PST

இளம் தொழில்முனைவோரை உருவாக்க 4 ஆண்டுகளில் ரூ.11.72 கோடி மானியம் வழங்கல்: மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர்

Posted: 26 Dec 2015 01:05 PM PST

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11.72 கோடிக்கு மானியம் வழங்கப்பட்டு 792 புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மா.ராமலிங்கம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

பழனி அருகே அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 26 Dec 2015 01:05 PM PST

பழனி அருகே வி.கே.மில்ஸில் சின்னக்கலையமுத்தூர் கிளைக் கழகம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி அருகே பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி நினைவு நாள் ஊர்வலம்

Posted: 26 Dec 2015 01:05 PM PST

தேனி அருகே சனிக்கிழமை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி எஸ்.ஆர்.தமிழன் நினைவு நாள் ஊர்வலம் நடைபெற்றது.

மோடியின் பாக். பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத காங்கிரஸ் தலைவர்!

Posted: 26 Dec 2015 01:05 PM PST

பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் விமர்சித்துள்ளனர். ஆனால் அக்கட்சி எம்.பி.யும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங், மோடியின் பயணத்தை விமர்சிக்கவில்லை.

"தியாகிகள், தேசத்துக்குப் பெருமை சேர்த்தவர்களின் தபால் தலைகள் வெளியிடப்படும்'

Posted: 26 Dec 2015 01:03 PM PST

தியாகிகள் மற்றும் தேசத்துக்குப் பெருமை சேர்த்தவர்களை கெளரவிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்படும் என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சனிக்கிழமை கூறினார்.

மோடி- ஷெரீஃப் சந்திப்புக்கு அமெரிக்கா, ஐ.நா. வரவேற்பு

Posted: 26 Dec 2015 01:01 PM PST

பாகிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் சந்தித்துப் பேசியிருப்பதை அமெரிக்காவும், ஐ.நா. சபையும் வரவேற்றுள்ளன.

திருப்பத்தூரில் ஓய்வூதியர் தின விழா

Posted: 26 Dec 2015 12:31 PM PST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டக் கிளை தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், சனிக்கிழமை ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.

மனைவி, குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டதால் கணவர் கழுத்தை அறுத்து தற்கொலை

Posted: 26 Dec 2015 12:31 PM PST

ராமநாதபுரம் அருகே மனைவி, குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டதால், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

ராமநாதபுரத்தில் தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

Posted: 26 Dec 2015 12:30 PM PST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி, சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.

ராமநாதபுரம்

Posted: 26 Dec 2015 12:28 PM PST

டிச.29 இல் ராமநாதபுரத்தில் மின்தடை

Posted: 26 Dec 2015 12:26 PM PST

ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதி துணை மின் நிலையங்களில்  டிசம்பர் 29ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், மின் விநியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் ஜி. கெங்காதரன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை விழா

Posted: 26 Dec 2015 12:26 PM PST

ராமநாதபுரம் அருகே பேராக் கண்மாயில் அமைந்துள்ள அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் மண்டல பூஜை விழா, வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

"ரூ.22.50 கோடியில் 15 மாவட்டங்களில் இறகுப் பந்து உள்விளையாட்டரங்கம்'

Posted: 26 Dec 2015 12:25 PM PST

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் ரூ.22.50கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருப்பதாக, தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் சனிக்கிழமை தெரிவித்தார்.

பரமக்குடியில் இ.கம்யூ. 90ஆவது ஆண்டு நிறைவு விழா

Posted: 26 Dec 2015 12:25 PM PST

பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 90ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

கீழக்கரையில் இலவச கணினிப் பயிற்சி

Posted: 26 Dec 2015 12:24 PM PST

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இலவச கணினிப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக, அக்கல்லூரியின் முதல்வர் சுமையா சனிக்கிழமை தெரிவித்தார்.

வாஜ்பாய் பிறந்த நாள்: பாஜக சார்பில் தூய்மை இந்தியா நிகழ்ச்சி

Posted: 26 Dec 2015 12:24 PM PST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, பரமக்குடி பேருந்து நிலையத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், வெள்ளிக்கிழமை தூய்மை இந்தியா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கிராமப்புற வசதி: பிற மாநிலங்களுக்கு வழிகாட்டுகிறது தமிழக அரசு: விருதுநகர் எம்.எல்.ஏ. பேச்சு

Posted: 26 Dec 2015 12:23 PM PST

கிராமப்புறத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டியாக உள்ளதாக விருதுநகர் எம்.எல்.ஏ. பாண்டியராஜன் பேசினார்.

ஆண்டாள் கோயிலில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி

Posted: 26 Dec 2015 12:23 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில், திருப்பாவை பாடல்களை ஒப்புவிக்கும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசியில் மணல் டிராக்டர் பிரச்னை: அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை

Posted: 26 Dec 2015 12:22 PM PST

மணல் ஏற்றி செல்லும் டிராக்டர்கள் பிரச்னை தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஸ்ரீவிலி. அரசு மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

Posted: 26 Dec 2015 12:22 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சிவகாசி விடுதியில் லாரி உரிமையாளர் தற்கொலை

Posted: 26 Dec 2015 12:21 PM PST

சிவகாசியில் தனியார் தங்கும் விடுதியில் லாரி உரிமையாளர் ஒருவர் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாக்காளர் பட்டியல்: கணினிப் பதிவில் முதன் முறையாக பிழை திருத்தும் பணி

Posted: 26 Dec 2015 12:21 PM PST

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்த பிறகு, முதன் முறையாக பிழை திருத்தும் பணி தேர்தல் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 120 பேருக்கு வீடுகள்

Posted: 26 Dec 2015 12:20 PM PST

தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 120 பேருக்கு வீடுகள் கட்டப்பட உள்ளன.

மதுரையில் பெண் மர்மச் சாவு: கணவரிடம் தீவிர விசாரணை

Posted: 26 Dec 2015 12:20 PM PST

மதுரையில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து கணவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி அஇமூமுக ஆர்ப்பாட்டம்

Posted: 26 Dec 2015 12:19 PM PST

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அய்யனார்கோயில் ஆற்றில் குளிக்க அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதி

Posted: 26 Dec 2015 12:19 PM PST

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர் வரத்து அதிகமானதால்,  மக்கள் இங்கு குடும்பத்துடன் குளிக்க வருவோர் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

தாயில்பட்டியில் நிலவேம்புக் குடிநீர் வழங்கல்

Posted: 26 Dec 2015 12:18 PM PST

சாத்தூர் அருகே தாயில்பட்டியில் நிலவேம்புக் குடிநீரை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு சனிக்கிழமை வழங்கினார்.

சிவகாசி அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண்சடலம்

Posted: 26 Dec 2015 12:18 PM PST

சிவகாசி அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகாசி

Posted: 26 Dec 2015 12:17 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் காலியிடங்களை நிரப்பக் கோரிக்கை

Posted: 26 Dec 2015 12:17 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள துப்புரவுப் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தூர் பகுதியில் மருத்துவ குணம் கொண்ட அதலைக்காய் விளைச்சல் அமோகம்

Posted: 26 Dec 2015 12:16 PM PST

சாத்தூர் பகுதியில் மருத்துவக் குணம் கொண்ட அதலைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.

வடபட்டியில் 49 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கல்

Posted: 26 Dec 2015 12:16 PM PST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் வடபட்டியில் 49 பயனாளிகளுக்கு ரூ. 6.32 லட்சம் மதிப்பிலான விலையில்லா வெள்ளாடுகளை செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சனிக்கிழமை வழங்கினார்.

மனித உரிமை மீறலை தட்டிக் கேட்க வேண்டும்: கல்லூரி மாணவர்களுக்கு பேராசிரியர் அறிவுறுத்தல்

Posted: 26 Dec 2015 12:15 PM PST

எங்கெல்லாம் மனித உரிமை மீறப்படுகிறதோ, அங்கெல்லாம் தட்டிக் கேட்கும் சிப்பாயாக மாணவர்கள் மாற வேண்டும் என கல்லூரி மாணவர்களுக்கு கோழிக்கோடு பல்கலை பேராசிரியர் ஜான்சன் அறிவுறுத்தினார்.

அருப்புக்கோட்டை அருகே பெண்ணை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

Posted: 26 Dec 2015 12:15 PM PST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வானத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 10 பவுன் நகை, 3 செல்லிடப்பேசிகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

மாயூரநாத சுவாமி கோயிலில் திருவாதிரை விழா

Posted: 26 Dec 2015 12:14 PM PST

ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை மார்கழி திருவாதிரை விழா நடைபெற்றது.

பேராவூரணி அருகே முன்விரோதத்தில் சத்துணவு அமைப்பாளர் கொலை

Posted: 26 Dec 2015 12:14 PM PST

பேராவூரணி அருகே முன்விரோதம் காரணமாக சத்துணவு அமைப்பாளர் சனிக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Dec 2015 12:12 PM PST

கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் பி.எட். கணினி அறிவியல் ஆசிரியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தீக்குளித்து பெண் சாவு; தடுக்க முயன்ற கணவர் காயம்

Posted: 26 Dec 2015 12:12 PM PST

கும்பகோணம் நாச்சியார்கோவில் திருநரையூர் அய்யம்பாளையத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகன் மணிகண்டன் (30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (23). இத்தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை  தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கலைவாணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற மணிகண்டனும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கலைவாணி சனிக்கிழமை இறந்தார்.

கும்பகோணம் கும்பேஸ்வரார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Posted: 26 Dec 2015 12:11 PM PST

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரன் கோயில்களில் சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

அய்யம்பேட்டை சிட்டி யூனியன் வங்கியில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 26 Dec 2015 12:11 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை சிட்டி யூனியன் வங்கிக் கிளை சார்பில் கிறிஸ்துமஸ் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

"ஆலைகளில் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் இல்லை'

Posted: 26 Dec 2015 12:10 PM PST

ஆலைகளில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச் சூழல் இல்லை என தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் குறிப்பிடப்பட்டது.

பெருவுடையார் கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு

Posted: 26 Dec 2015 12:10 PM PST

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குடந்தையில் மார்கழி இசைத் திருவிழா தொடக்கம்

Posted: 26 Dec 2015 12:10 PM PST

கும்பகோணத்தில் 10ஆம் ஆண்டு மார்கழி இசைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி  தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்: 26 பேர் கைது

Posted: 26 Dec 2015 12:09 PM PST

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள செல்லிடப்பேசி கோபுரங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சனிக்கிழமை ஏறி போராட்டம் நடத்தினர்.

மோட்டார்சைக்கிளில் சென்றவரிடம் வழிப்பறி: 2 பேர் கைது

Posted: 26 Dec 2015 12:08 PM PST

புதுக்கோட்டை அருகே பைக்கில் திருச்சி சென்றவரிடம் வழிபறி செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் : 11 கைது

Posted: 26 Dec 2015 12:07 PM PST

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும்,  அவசரச் சட்டம் மூலம் தடையை நீக்க வலியுறுத்தி செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக்கட்சி நிர்வாகிகள் 11 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அறந்தாங்கியில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

Posted: 26 Dec 2015 12:07 PM PST

அறந்தாங்கியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை

Posted: 26 Dec 2015 12:06 PM PST

லாரி மோதி முதியவர் சாவு

Posted: 26 Dec 2015 12:06 PM PST

புதுகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் லாரி மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

விராலிமலையில் நாளை தாற்காலிக வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு

Posted: 26 Dec 2015 12:06 PM PST

விராலிமலையில் தாற்காலிக வட்டாட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச. 28) விடியோகான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.

விராலிமலையில் நடராஜர் வீதிஉலா

Posted: 26 Dec 2015 12:05 PM PST

விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் வீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது.

புதிய தொழில்நுட்பத்தில் தரைப்பாலம் அமைப்பு

Posted: 26 Dec 2015 12:05 PM PST

புதுக்கோட்டை நகராட்சியில் முன் மாதிரியாக முன்வார்ப்பு கற்காரை(‌p‌r‌e-​ca‌s‌t‌i‌n‌g-​c‌o‌n​c‌r‌e‌t‌e ‌m‌e‌t‌h‌o‌d) என்னும் நவீன தொழில் நுட்பத்தின்  மூலம் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா

Posted: 26 Dec 2015 12:02 PM PST

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி ஆலயத்தில் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை  சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது.

ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Dec 2015 12:02 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"மொழித் திறனுடன், பேச்சுத் திறனும் அவசியம்'

Posted: 26 Dec 2015 12:00 PM PST

நல்ல மொழித்திறனையும், பேச்சுத்திறனையும் வளர்த்துக் கொண்டால்தான் முன் நிற்கும் போட்டிகளைச் சமாளிக்க முடியும் என்றார் திருமயம் பாரத மிகுமின் நிலைய பொதுமேலாளர் பி. பாலசுப்பிரமணியன்.

தமிழை வளர்த்ததில் நகரத்தாரின் பங்களிப்பு அதிகம்

Posted: 26 Dec 2015 12:00 PM PST

தமிழ்மொழியை வளர்த்ததில் நகரத்தார்களின் பங்களிப்பு அதிகம் என்றார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன்.

விராலிமலை ஒன்றியத்தில் கிராம சேவை மையக் கட்டடம் திறப்பு

Posted: 26 Dec 2015 11:59 AM PST

விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 3 கிராமங்களில் 3 கிராம சேவை மையக் கட்டடத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

அரியலூரில் டிச. 30-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 26 Dec 2015 11:59 AM PST

அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வரும் 30 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

கார் மோதி சிறுவன் சாவு

Posted: 26 Dec 2015 11:58 AM PST

அரியலூரில் கார் மோதி காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தான்.

அரியலூர் மாவட்ட சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்

Posted: 26 Dec 2015 11:58 AM PST

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, ரொக்கம் திருட்டு

Posted: 26 Dec 2015 11:57 AM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வேலாயுதநகர் பகுதியில் இரண்டு வீடுகளில் பணம், நகைகளை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜயங்கொண்டம் அருகே கார்கள் மோதல்: 7 பேர் காயம்

Posted: 26 Dec 2015 11:56 AM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

வேப்பூரில் திமுக தேர்தல் பணி ஆய்வுக் கூட்டம்

Posted: 26 Dec 2015 11:56 AM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பில் தேர்தல் பணி ஆய்வுக் கூட்டம் மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியையிடம் வரதட்சிணை கொடுமை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Posted: 26 Dec 2015 11:55 AM PST

பெரம்பலூர் புறநகர் பகுதியான தீரன் நகரை சேர்ந்த ஜெயராமன் மகள் நர்மதா (23). இவர், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட ஜமீன் ஆத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

லப்பைக்குடிக்காடு பகுதியில் டிசம்பர் 28 மின் தடை

Posted: 26 Dec 2015 11:55 AM PST

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பகுதியில் திங்கள்கிழமை (டிச. 28) மின் விநியோகம் இருக்காது.

அரசுத் துறைகளில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தல்

Posted: 26 Dec 2015 11:54 AM PST

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டுமென மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நூலகத்தில் செயல்படும் நியாய விலைக் கடை! வாசகர்கள் அவதி

Posted: 26 Dec 2015 11:52 AM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நூலகத்தில் நியாய விலைக்கடை செயல்பட்டு வருவதால், நூலக வாசகர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிருஷ்ணாபுரத்தில் நாளை சமூக பாதுகாப்பு திட்ட முகாம்

Posted: 26 Dec 2015 11:52 AM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் தொழிலாளர் அலுவலகத்தின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் வரும் 28}ம் தேதி  நடைபெறுகிறது.

அதிமுக அரசின் சாதனை விளக்க பிரசாரம்

Posted: 26 Dec 2015 11:51 AM PST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், சிறுவயலூரில் அதிமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.

பெரம்பலூர் அருகே விஷம் குடித்து விவசாயி சாவு

Posted: 26 Dec 2015 11:51 AM PST

பெரம்பலூர் அருகே விஷம் குடித்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™