Tamil News | Online Tamil News |
- தை மாதம் தேர்தல் பணி துவக்கம்: அ.தி.மு.க., முடிவால் தொண்டர்கள் உற்சாகம்
- தென் மாவட்ட வளர்ச்சியில் பா.ஜ., மெத்தனம்: சட்டசபை தேர்தலில் பின்னடைவை சந்திக்குமா?
- சூடுபிடிக்கும் தேர்தல் ஜல்லிக்கட்டு: தூசி தட்டும் 'லெட்டர் பேடு' கட்சிகள்
- தெலுங்கானா முதல்வரின் மகா யாகத்தால் சர்ச்சை: ரூ.20 கோடியை வீணடித்ததாக குற்றச்சாட்டு
- தலைவர்களுக்கு புத்தாண்டு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு
- கோவில்களில் 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்' அணிய ஜன., 1 முதல் தடை
- காங்.,க்கு சவுக்கடியாக அமைந்த மோடியின் பயணம்
- புயலை திசை திருப்ப முடியுமா: பிரான்சிஸ் பிலிப் பார்க்லே
- பிரதமர் மோடியின் பாக்., பயணத்துக்கு வரவேற்பு அமோகம்: ஐ.நா., சபை, அமெரிக்கா உட்பட பல நாடுகள் வாழ்த்து
- 'மெட்ராஸ் ஐகோர்ட்' பெயர் மாறுமா?
- மியான்மர், தாய்லாந்துக்கு பஸ்களை இயக்க ஒப்புதல்: மணிப்பூரில் சுற்றுலா வளர்ச்சிக்கு வாய்ப்பு
| தை மாதம் தேர்தல் பணி துவக்கம்: அ.தி.மு.க., முடிவால் தொண்டர்கள் உற்சாகம் Posted: 26 Dec 2015 06:41 AM PST தை பிறந்ததும் தேர்தல் பணியை துவக்கவும், லோக்சபா தேர்தலை போல், அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக, வேட்பாளர் பட்டியலை வெளியிடவும், அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.லோக்சபா தேர்தலின் போது, தனித்து போட்டியிடுவதாக, அ.தி.மு.க., முதலில் அறிவித்தது. அதேபோல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தேர்தல் அறிக்கை வெளியீடு என, அனைத்திலும் முன்னணி வகித்தது.தேர்தல் முடிவும், அ.தி.மு.க.,விற்கு சாதகமாக அமைந்தது. தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், 37 இடங்களை பிடித்து, சாதனை படைத்தது. அதேபாணியில் சட்டசபை தேர்தலை அணுக, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. தற்போது, மார்கழி மாதம் நடைபெறுவதால், ... |
| தென் மாவட்ட வளர்ச்சியில் பா.ஜ., மெத்தனம்: சட்டசபை தேர்தலில் பின்னடைவை சந்திக்குமா? Posted: 26 Dec 2015 06:44 AM PST 'தென் மாவட்ட வளர்ச்சி மற்றும் மக்கள் நல விஷயங்களில் தமிழக பா.ஜ., தலைவர்கள் கவனம் செலுத்துவதில்லை' என, குற்றம்சாட்டப்படுகிறது. தமிழக பா.ஜ., மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் தென் மாவட்டங்களில் தான், வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த கால தேர்தல் கணக்குகளைப் பார்க்கும்போது, பா.ஜ., பெற்று ஓட்டுக்களின் அடிப்படையில், அந்த கட்சிக்கு தென் மாவட்ட மக்கள் கூடுதல் ஆதரவு தெரிவித்துள்ளது தெரிய வருகிறது. குற்றச்சாட்டுஅதனால்தான், தமிழக பா.ஜ., தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டதும் துாத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி உள்ளிட்ட உள்ளாட்சி இடைத் தேர்தல் ... |
| சூடுபிடிக்கும் தேர்தல் ஜல்லிக்கட்டு: தூசி தட்டும் 'லெட்டர் பேடு' கட்சிகள் Posted: 26 Dec 2015 06:45 AM PST தேர்தல் ஜல்லிக்கட்டில் குதிக்க, முக்கிய கட்சிகள் எல்லாம் தயாராகி விட்டன. தலைவர் சந்திப்பு, கட்சி ஆலோசனை கூட்டம் என, தேர்தலில் களத்தை நோக்கி, இப்போதே கட்சிகள் காய் நகர்த்த துவங்கி விட்டன. குறிப்பாக, மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள், தே.மு.தி.க., தலைவர் விஜய காந்தை சந்தித்து பேசியது; தி.மு.க., தலைவர் கருணாநிதி தே.மு.தி.க.,விற்கு அழைப்பு விடுத்தது என, கூட்டணிக்கான முன்னோட்டம் துவங்கி விட்டது.முக்கிய கட்சியான அ.தி.மு.க., ஒவ்வொரு தொகுதியிலும், தங்களுக்கு சாதகமான வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மூலம் பூத்வாரியாக ஓட்டுக்களை பெறும் திட்டத்தை வகுத்து ... |
| தெலுங்கானா முதல்வரின் மகா யாகத்தால் சர்ச்சை: ரூ.20 கோடியை வீணடித்ததாக குற்றச்சாட்டு Posted: 26 Dec 2015 07:21 AM PST ஐதராபாத்: உலக அமைதி மற்றும் நன்மை வேண்டி, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், 20 கோடி ரூபாய் செலவில் நடத்தும் யாகம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'கடும் வறட்சியால், விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ள நிலையில், தேவையில்லாத விஷயத்துக்காக பணத்தை வீணடிப்பது ஏன்' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அரசு உள்ளது. இங்கு, பருவ மழை பொய்த்ததால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். விவசாயத்துக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், பல விவசாயிகள் ... |
| தலைவர்களுக்கு புத்தாண்டு எப்படி? பிரபல ஜோதிடர்கள் கணிப்பு Posted: 26 Dec 2015 07:34 AM PST எண் ஜோதிடப்படி, 2016ம் ஆண்டின் கூட்டு எண்ணாக, 9 வருவதால், இந்த ஆண்டின் விதி எண்ணாக, 2 என்ற சந்திரன் ஆதிக்கம் வருவதால், பொருளாதார முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் உண்டாகும். ஜன., 8 பகல், 12:37க்கு (15 நாழிகைக்கு) ராகு பகவான் உத்திரம் நட்சத்திரம், 2ம் பாதம் கன்னி ராசியில் இருந்து, உத்திரம் நட்சத்திரம், ஒன்றாம் பாதம் சிம்ம ராசிக்கும், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரம், 4ம் பாதம் மீன ராசியில் இருந்து, பூரட்டாதி நட்சத்திரம், 3ம் பாதம் கும்பம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். இந்த புத்தாண்டு கால சர்ப்ப தோஷ ஆண்டாக பிறக்கிறது. எனவே, காளஹஸ்தி, திருப்பாம்புரம், ஸ்ரீவாஞ்சியம், ... |
| கோவில்களில் 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்' அணிய ஜன., 1 முதல் தடை Posted: 26 Dec 2015 07:43 AM PST தமிழக அறநிலையத்துறை யால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும், ஜன., 1 முதல், 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, மதுரை உயர் நீதிமன்ற கிளை வழங்கி உள்ள தீர்ப்பை தொடர்ந்து, அறநிலையத்துறை, அனைத்து கோவில்களுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.அதில், 'கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும். 'ஆண்கள் வேட்டி, சட்டை, பைஜாமா குர்தா; பெண்கள் புடவை, ரவிக்கை, ... |
| காங்.,க்கு சவுக்கடியாக அமைந்த மோடியின் பயணம் Posted: 26 Dec 2015 10:23 AM PST ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்து, பிரதமர் மோடி டில்லி திரும்புவார் என, அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அதிரடியாக பாகிஸ்தானில் இறங்கினார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அதிகாரிகள் என, அனைவரும் அரண்டு போய் விட்டனர். நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், கிரிக்கெட் ஊழல் புகார் விவகாரத்தில், விசாரணைக் கமிஷன் அமைத்த விவகாரம், டில்லி, 'டிவி' மீடியாக்களில் பெரிதாகிக் கொண்டிருந்தது. இந்த செய்திகள், மோடி பாக்., பயணத்தால் அடிபட்டுப் போனதோடு, அடையாளம் காணாமல் போய்விட்டது. மோடியின் இந்த அதிரடி பாக்., பயணம், மத்திய அமைச்சர்கள் பலருக்கு ... |
| புயலை திசை திருப்ப முடியுமா: பிரான்சிஸ் பிலிப் பார்க்லே Posted: 26 Dec 2015 10:36 AM PST உலகின் ஒரு பகுதியையே உலுக்கக் கூடிய சூறாவளி, இயற்கையின் விந்தை என்றால்... அதை வழிமறித்து, தகர்த்து திசை திருப்ப முடியும் என்று நம்புகிறவர்கள், விந்தையின் வித்தகர்கள். இவர்களின் பட்டியலில் சேர்கிறார், கோவை பாரதியார் பல்கலையின் முன்னாள் பேராசிரியர்.ஒரு சூறாவளியின் குறுக்களவு, 200 - 2,000 கி.மீ., வரை நீளும். நாள் ஒன்றுக்கு அது, 200 'எக்ஸா ஜூல்ஸ்'(எரிசக்தியின் சேமிப்பு அளவு) வெப்பத்தை உற்பத்தி செய்யும். உலகின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தி திறனுடன் ஒப்பிட்டால் இந்த வெப்பம், 200 மடங்கு.கடலில் உருவாகும் சூறாவளி உற்பத்தி செய்யும் வெப்ப சக்தியின் 10 சதவீதம்தான், ... |
| பிரதமர் மோடியின் பாக்., பயணத்துக்கு வரவேற்பு அமோகம்: ஐ.நா., சபை, அமெரிக்கா உட்பட பல நாடுகள் வாழ்த்து Posted: 26 Dec 2015 10:42 AM PST புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து டில்லி வரும் வழியில், திடீரென பாகிஸ்தான் சென்று, பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். அவரது இந்தப் பயணம், அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்கா உட்பட, பல நாடுகளும், ஐ.நா., சபையும் இதை வரவேற்றுள்ளதோடு, வாழ்த்தும் தெரிவித்துள்ளன.''மோடி - நவாஸ் ஷெரீப் சந்திப்பை, அமெரிக்கா வரவேற்கிறது; இது, இந்தியா - பாக்., மக்களுக்கும், ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் நன்மை பயக்கும்,'' என, அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.'இரு நாட்டு ... |
| 'மெட்ராஸ் ஐகோர்ட்' பெயர் மாறுமா? Posted: 26 Dec 2015 11:03 AM PST சென்னை:உயர் நீதிமன்றங்களின் பெயரை மாற்ற, தனித் தனியாக சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதால், பெயர் மாற்றும் அதிகாரத்தை, ஜனாதிபதிக்கு வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பிரிட்டன் ராணி உத்தரவில், இந்தியாவில் மெட்ராஸ், பம்பாய், கோல்கட்டா ஆகிய பெருநகரங்களில், உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. 1860ல் அமைக்கப்பட்ட, இந்த உயர் நீதிமன்றங்கள், 'சார்ட்டர்ட் ஐகோர்ட்' என அழைக்கப்படுகின்றன. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அடங்கிய, மெட்ராஸ் மாகாணத்தின் உயர் நீதிமன்றமாக, மெட்ராஸ் ஐகோர்ட் விளங்கியது. நாடு சுதந்திரம் ... |
| மியான்மர், தாய்லாந்துக்கு பஸ்களை இயக்க ஒப்புதல்: மணிப்பூரில் சுற்றுலா வளர்ச்சிக்கு வாய்ப்பு Posted: 26 Dec 2015 12:47 PM PST இம்பால்: நம் நாட்டின் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து, மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கு, பஸ் போக்குவரத்தை துவக்குவதற்கான ஒப்பந்தத்துக்கு, வெளியுறவு விவகார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் அமலாவதில், மியான்மர் தரப்பில், காலதாமதம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெற்காசிய நாடுகளை, சாலை மார்க்கமாக இணைக்கும் வகையில், இந்தியா, மியான்மர், தாய்லாந்து நாடுகள் இடையே சாலை போக்குவரத்தை துவக்க திட்டமிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தம், 2016 மார்ச்சில் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முன்னோட்டம்இந்த ஒப்பந்தம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 27,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |