Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆம்புலன்ஸ் மீது பேருந்து மோதியதில் மூவர் பலி

Posted: 19 Dec 2015 02:05 PM PST

மாரடைப்பால் மரணமடைந்தவரின் சடலத்தை ஆம்புலன்ஸில் கொண்டு வரும் போது இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தின் பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதியதில் மூவர் நிகழ்விடத்திலேயே பலியாயினர்.

லாரி புகுந்து 2 கடைகள் சேதம்

Posted: 19 Dec 2015 02:04 PM PST

கும்மிடிப்பூண்டி அருகே தறிகெட்டு ஓடிய சரக்குப் பெட்டக லாரி புகுந்ததில் சாலையோரம் இருந்த இரு கடைகள் சேதமடைந்தன.

பெண் எஸ்.ஐ.யிடம் நகை பறிப்பு

Posted: 19 Dec 2015 02:04 PM PST

சென்னை அசோக் நகரில் பெண் காவல் உதவி ஆய்வாளர் கழுத்தில் இருந்த நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

பூட்டை உடைத்து30 சவரன் நகை, 7 கிலோ வெள்ளி திருட்டு

Posted: 19 Dec 2015 02:04 PM PST

செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, 7 கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை திருடுபோனது. வடபெரும்பாக்கம், ரங்கா கார்டன் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் கணே

வெள்ளத்தால் பாதித்த வணிகர்களுக்கு நிவாரணம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

Posted: 19 Dec 2015 02:03 PM PST

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது யூசுஃப் கூறினார்.

லாரி மோதி மீன் வியாபாரி சாவு

Posted: 19 Dec 2015 02:03 PM PST

காசிமேட்டில் லாரி மோதி மீன் வியாபாரி உயிரிழந்தார்.

புதுதில்லி

Posted: 19 Dec 2015 02:03 PM PST

மழை-வெள்ளத்தில் பலியான 15 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

Posted: 19 Dec 2015 02:00 PM PST

மழை-வெள்ளத்தில் சிக்கி பலியான 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சிம்பு, அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted: 19 Dec 2015 02:00 PM PST

சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடி வெளியிட்ட நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நீர்நிலை ஆக்கிரமிப்பைப் பேச மறுப்பது ஏன்?: கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

Posted: 19 Dec 2015 01:59 PM PST

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி பேச மறுப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

"காட்ஸ்' ஒப்பந்தத்தால் உயர் கல்வி உருக்குலையும்:கருணாநிதி

Posted: 19 Dec 2015 01:58 PM PST

உலக வர்த்தக அமைப்பின் "காட்ஸ்' ஒப்பந்தத்தால் உயர் கல்வி உருக்குலையும் என்றும், இதற்கான ஒப்பந்தத்திலிருந்து மத்திய அரசு தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமெனவும் திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மீலாது நபி விடுமுறை: 10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

Posted: 19 Dec 2015 01:58 PM PST

மீலாது நபி விடுமுறையால், 10-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலக் கூட்டணியில் பாமக-வுக்கு இடமில்லை

Posted: 19 Dec 2015 01:56 PM PST

மக்கள் நலக் கூட்டணியில் பாமகவை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.

அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் அஞ்சாது:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Posted: 19 Dec 2015 01:55 PM PST

நேஷனல் ஹெரால்டு' வழக்கு பிரச்னையில் காங்கிரஸ் கட்சி பயந்துவிடாது என, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: தமாகா மகிழ்ச்சி

Posted: 19 Dec 2015 01:54 PM PST

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மின் வேலியில் சிக்கி இளைஞர் சாவு:சடலத்தை ஆற்றில் வீசியதாக 3 பேர் கைது

Posted: 19 Dec 2015 01:53 PM PST

வனப் பகுதியில் வேட்டைக்குச் சென்றபோது, மின் வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை மறைக்கும் நோக்கில், தென்பெண்ணை ஆற்றில் வீசிச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உயர் கல்வி உதவித் தொகை:மார்க்சிஸ்ட் கோரிக்கை

Posted: 19 Dec 2015 01:49 PM PST

உயர் கல்விக்கான உதவித் தொகை நிலுவையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது.

கிரிக்கெட்சங்க ஊழலை அம்பலப்படுத்துவேன்

Posted: 19 Dec 2015 01:48 PM PST

தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பில் (டிடிசிஏ) நடைபெற்ற மாபெரும் ஊழலை ஞாயிற்றுக்கிழமை (டிச.20) அம்பலப்படுத்துவேன் என்று பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.

சிறார் குற்றவாளி விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

Posted: 19 Dec 2015 01:47 PM PST

"நிர்பயா' பலாத்கார வழக்கில், சிறார் குற்றவாளியின் விடுதலைக்கு எதிராக தில்லி மகளிர் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவில் சிறப்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

திருவாரூரில் டெல்டா மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 19 Dec 2015 01:46 PM PST

காவிரி டெல்டாவை வெள்ளம் பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி, திருவாரூரில் சனிக்கிழமை திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

வாகன பழுதுபார்ப்பு முகாம்: நாளை கடைசி

Posted: 19 Dec 2015 01:44 PM PST

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்காக நடைபெற்று வரும் பழுதுபார்ப்பு முகாம் வரும் திங்கள்கிழமையுடன் (டிச. 21) நிறைவடைகிறது. இந்த முகாம் கடந்த 12 ஆம் தேதியன்றுதொடங்கியது.

ஆவணங்களின் நகல் பெற சிறப்பு முகாம்களில் 27,398 மனுக்கள் அளிப்பு

Posted: 19 Dec 2015 01:44 PM PST

மழை வெள்ளத்தில் பாதித்த ஆவணங்களின் நகலைப் பெறுவதற்காக பல்வேறு துறைகளின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், சனிக்கிழமை வரை 27,398 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

விஜயகாந்துடன் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு:வைகோவின் பேச்சு காரணம்?

Posted: 19 Dec 2015 01:43 PM PST

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, பாஜக தலைவர்கள் சனிக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக தலைவர்கள், இது நட்பின் அடிப்படையிலும், மரியாதை நிமித்தமாகவும் நடைபெற்ற சந்திப்பு எனக் கூறினர்.

பேராவூரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற டிச. 27-ம் தேதி வரை கெடு

Posted: 19 Dec 2015 12:28 PM PST

பேராவூரணியில் காவல்துறை சார்பில் சட்டம்-ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் நகராட்சி சிறப்பு முகாம்

Posted: 19 Dec 2015 12:26 PM PST

நகராட்சி சார்பில் இங்குள்ள முஸ்லீம் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில், மக்களை நாடி நகராட்சி என்ற பெயரில் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருப்பாலைத்துறை கோயிலில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணிபாபநாசம்

Posted: 19 Dec 2015 12:21 PM PST

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீபாலைவனநாதர் கோயிலில் மூலஸ்தானம், உள்சுற்று, வெளிசுற்று பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில்  அண்மை மழையால் தேங்கியிருந்த மழை நீரை மின் மோட்டார் மூலம் இறைத்து வடியவைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது.

குடந்தை நாகேஸ்வர சுவாமி கோயிலின் தெற்கு கோபுர வாசலை திறந்துவிட கோரிக்கை

Posted: 19 Dec 2015 12:20 PM PST

கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலின் தெற்கு கோபுர வாசலை பக்தர்களின் வசதிக்காக திறந்துவிடவேண்டும் என தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் இணைச் செயலாளர் வழக்குரைஞர் ராஜசேகர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் கஜேந்திரனுக்கு மனு அனுப்பியுள்ளார்.

சுவாமிமலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

Posted: 19 Dec 2015 12:19 PM PST

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்

Posted: 19 Dec 2015 12:17 PM PST

கும்பகோணம் ஒன்றியம், உள்ளூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பேராசிரியர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிப்பு

Posted: 19 Dec 2015 12:17 PM PST

திருச்சி கே.கே. நகரில் பேராசிரியர் மனைவியிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவாரூரில் டெல்டா மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 19 Dec 2015 12:16 PM PST

காவிரி டெல்டாவை வெள்ளம் பாதித்த பகுதியாக  அறிவிக்கக் கோரி, திருவாரூரில் சனிக்கிழமை தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சாலை விபத்தில் விவசாயி சாவு

Posted: 19 Dec 2015 12:15 PM PST

பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை நடுத்தெருவைச் சேர்ந்த விவசாயி வி. குணசேகர் (39). இவர் சனிக்கிழமை அதிகாலை தனது வீட்டிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். ஆத்திக்கோட்டை குறத்திப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் குணசேகர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாம்.

ஓய்வூதியர் தின விழா

Posted: 19 Dec 2015 12:15 PM PST

தஞ்சாவூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் துறை அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணி

Posted: 19 Dec 2015 12:14 PM PST

தஞ்சாவூர் அருகே காட்டுத்தோட்டம் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை மாலை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஓய்வுபெற்ற காவலர்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

Posted: 19 Dec 2015 12:14 PM PST

ஓய்வு பெற்ற காவலர்களுக்கும் பாதி விலையில் ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதிமுகவின் பிளக்ஸ் போர்டை அகற்ற டிராபிக் ராமசாமி வலியுறுத்தல்

Posted: 19 Dec 2015 12:13 PM PST

கும்பகோணத்தில் எம்ஜிஆரின் நினைவுத் தினத்தையொட்டி, நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் ராஜேந்திரன் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ  கிளையில் டிராக்டர் கடன் பரிசீலனை மையம் தொடக்கம்

Posted: 19 Dec 2015 12:12 PM PST

கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கியின் பஜார் கிளையில் டெல்டா டிராக்டர் கடன் பரிசீலனை மைய தொடக்க விழா மற்றும் டிராக்டர் டீலர்கள் சந்திப்பு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவருக்கு அரிவாள் வெட்டு

Posted: 19 Dec 2015 12:12 PM PST

கும்பகோணம் அருகேயுள்ள நாதன்கோயில் குடியானத் தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சிவசங்கர் (37). சேஷம்பாடி ஊராட்சித் தலைவராக உள்ளார்.

மதுபான பாரில் ரகளை செய்த இளைஞர் கைது

Posted: 19 Dec 2015 12:11 PM PST

பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளத்தில் டாஸ்மாக் கடை  அருகே மதுபான பார் உள்ளது. அங்கு திட்டக்குடியைச் சேர்ந்த ரமேஷ் (40) என்பவர் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்.

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Dec 2015 12:09 PM PST

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அவதூறு அரசியல் நடத்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், பழிவாங்கும் நடவடிக்கையை மோடி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Dec 2015 12:09 PM PST

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது பொய் வழக்குப் போடுவதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் அருகே ஏரியில் குதித்து இளைஞர் தற்கொலை

Posted: 19 Dec 2015 12:08 PM PST

அரியலூர் அருகே காதலுக்கு பெண் வீட்டினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் மனமுடைந்த இளைஞர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொண்டு நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 19 Dec 2015 12:07 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஸ்டார் தொண்டு நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஸ்டார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

செந்துறையில் போக்குவரத்து மாற்றம்

Posted: 19 Dec 2015 12:07 PM PST

அரியலூர் மாவட்டம், செந்துறை எம்.ஜி.ஆர். சிலை அருகே புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் உடையார்பாளையம் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.

பெண்ணிடம் 6 பவுன் பறிப்பு

Posted: 19 Dec 2015 12:06 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வெள்ளிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஜயங்கொண்டம் அருகே மனைவி காணாமல் போனதாக புகார்

Posted: 19 Dec 2015 12:06 PM PST

ஜயங் கொண்டம் அருகே மனைவி காணாமல் போனதாக அவரது கணவர் தா.பழூர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாரளித்துள்ளார்.

குன்னம் அருகே விஷம் குடித்த விவசாயி சாவு

Posted: 19 Dec 2015 12:05 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்

Posted: 19 Dec 2015 12:05 PM PST

அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

டிச. 23- ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 19 Dec 2015 12:04 PM PST

பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில் டிச. 23 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இந்தியர்களின் கல்வித்திறன் வெளிநாட்டினரை கவர்ந்துள்ளது

Posted: 19 Dec 2015 12:04 PM PST

இந்தியர்களின் கல்வித்திறன், கடின உழைப்பு வெளிநாட்டினரைக் கவர்ந்துள்ளது என்றார் இந்திய உதவும் கரங்களின் இயக்குநரும், கால்நடை மருத்துவருமான டி. ராஜேஷ்குமார்.

99 % குடும்ப அட்டைகள் இணையத்தில் பதிவு

Posted: 19 Dec 2015 12:03 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் 99 % குடும்ப அட்டைகள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான எஸ். கோபாலகிருஷ்ணன்.

வரத்துவாரிகளை தூர்வார வலியுறுத்தல்

Posted: 19 Dec 2015 12:03 PM PST

நீராதாரத்தைப் பெருக்க புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கண்மாய்,குளங்களின் வரத்துவாரிகளைத் தூர் வார வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் மாவட்டத் தலைவர் வி. துரைச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

Posted: 19 Dec 2015 12:02 PM PST

தேசிய நெடுஞ்சாலைகளில் போதிய எச்சரிக்கை விளக்குகளையும், முக்கிய சந்திப்புகளில் உயர்மின் கோபுரங்களையும் அமைக்க வேண்டும் என சாலை விபத்துத் தடுப்பு, மீட்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் க. மோகன்ராஜ் மத்திய  சாலை, கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் மாற்றுக் கட்சியினர்

Posted: 19 Dec 2015 12:02 PM PST

விராலிமலை ஒன்றித்தில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை அதிமுகவில் இணைந்தனர்.

சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு

Posted: 19 Dec 2015 12:02 PM PST

புதுக்கோட்டை மாவட்டம்,ஆவுடையார்கோயில் அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு கட்டாய இலவசக் கல்வி குறித்து பயிற்சி

Posted: 19 Dec 2015 12:01 PM PST

அனைவருக்கும் கல்வி இயக்கம் அறந்தாங்கி வட்டார வள மையத்துக்குள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி 2 கட்டங்களாக 12 மையங்களில் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Dec 2015 12:01 PM PST

நேஷனல் ஹெரால்டு பிரச்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கியில் வழக்குத் தொடர்ந்துள்ள பாஜகவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ்-2 தேர்வு வழிகாட்டி முகாம்

Posted: 19 Dec 2015 12:00 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியும், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கமும் இணைந்து பிளஸ்-2 பயிலும் மாணவ,மாணவியருக்கான  வழிகாட்டி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி பள்ளிகளில் நிலவேம்புக் குடிநீர் வழங்கல்

Posted: 19 Dec 2015 12:00 PM PST

பொன்னமராவதியில் உள்ள 5 பள்ளிகளில் ராயல் அரிமா சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரிமளம் பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 19 Dec 2015 11:59 AM PST

புதுக்கோட்டை மாவட்டம்,அரிமளம் சிவகமலம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8 ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அன்னவாசல்: 2,108 பேருக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 19 Dec 2015 11:59 AM PST

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அன்னவாசல் பேருராட்சியில் விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர்களை சனிக்கிழமை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.

புதுக்கோட்டை

Posted: 19 Dec 2015 11:58 AM PST

தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மக்களுக்கு நிவாரண உதவி

Posted: 19 Dec 2015 11:58 AM PST

புதுக்கோட்டை அருகேயுள்ள திருவரங்குளத்திலுள்ள ட்ரூத் தொண்டு நிறுவனத்தினர் சார்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட வேஷ்டி, சட்டை, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கடந்த வியாழக்கிழமை ரயில் மூலம் சென்னை கொண்டு சென்றனர். அங்கு பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கும்,குருகுலங்களில் வசிக்கும் மாணவர்களுக்கும் தொண்டு நிறுவன நிர்வாகி பாபு தெட்சிணாமூர்த்தி,சசிக்குமார் ஆகியோர் இணைந்து விநியோகித்தனர்.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் ஆய்வு

Posted: 19 Dec 2015 11:58 AM PST

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

இந்திரா காந்தி தொலைநிலை கல்வி: பல்வேறு படிப்புகளில் 86 பேர் சேர்க்கை

Posted: 19 Dec 2015 11:57 AM PST

இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை படிப்பு மையமான  ஜெ.ஜெ. கலை,அறிவியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2016 ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை முகாமில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 86 பேர் சேர்ந்தனர்.

மருத்துவக்கல்லூரியை அறந்தாங்கியில் தொடங்க பா.ம.க கோரிக்கை

Posted: 19 Dec 2015 11:57 AM PST

புதுக்கோட் டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை ஒன்றிய செயலாளர் இராம. துரைராஜன் தலைமையில் நடைபெற்றது.

புதுகையில்  விடியோ, புகைப்படக்கலைஞர்கள் சங்க மாநில மாநாடு

Posted: 19 Dec 2015 11:49 AM PST

புதுக்கோட்டையில் விடியோ, புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் 2-ஆவது மாநில மாநாடு  புகைப்படக் கண்காட்சி, மருத்துவ முகாம் போன்ற நிகழ்வுகளுடன் சனிக்கிழமை தொடங்கியது.

தந்தை கொலை; மகன் தலைமறைவு

Posted: 19 Dec 2015 11:48 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே சொத்துத்தகராறு காரணமாக வெள்ளிக்கிழமை இரவில் தந்தையைக் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகனைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

மக்கள் நலக்கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Dec 2015 11:48 AM PST

கந்தர்வகோட்டையில் மக்கள் நலக்கூட்டணி கட்சிகளின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நம்மாழ்வார் நினைவு மாராத்தான் போட்டி

Posted: 19 Dec 2015 11:47 AM PST

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு "இயற்கையைக் காப்போம்; இழந்ததை மீட்போம்' எனும் முழக்கத்துடன் மாரத்தான் ஓட்டப்போட்டி புதுகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உண்டு, உறைவிடப் பயிற்சி தொடக்கம்

Posted: 19 Dec 2015 11:47 AM PST

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் திறன்மிகு மாணவ,மாணவிகளுக்கு அளிக்கும் உண்டு,உறைவிடப் பயிற்சி ஒரு முன்னோடித் திட்டமாகும் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

மாநில குத்துச் சண்டை: கரூர் பள்ளி சிறப்பிடம்

Posted: 19 Dec 2015 11:41 AM PST

மாநில குத்துச்சண்டை போட்டியில் கரூர் பிஏ. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம் பிடித்தது.

திருச்சி அருகே அண்ணன் கழுத்தை அறுத்த தம்பி கைது

Posted: 19 Dec 2015 11:40 AM PST

திருச்சி அரியமங்கலம் உக்கடையைச் சேர்ந்த மதியழகன் மகன்கள் சக்திவேல் (30),  மணிகண்டன் (28). கூலித் தொழிலாளிகளான இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில் மணிகண்டன் தனது மனைவியுடன் அரியமங்கலம் சீனிவாசன் நகரில் வசித்து வருகிறார்.

பேருந்தில் திருடிய தம்பதி கைது

Posted: 19 Dec 2015 11:40 AM PST

கரூரில் முதியவரிடம் பேருந்தில் திருடிய செய்த கணவன், மனைவியைக் கைது செய்தனர்.

சென்னை துப்புரவுப்பணியில் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்

Posted: 19 Dec 2015 11:39 AM PST

சென்னையில் துப்புரவுப் பணியில் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா. அதியமான்.

"இதயப் பாட்டில்' கருப்பொருள் சிதைவு!

Posted: 19 Dec 2015 11:36 AM PST

மணிவாசகப் பெருந்தகையின் திருவாசகத்தில் உள்ள "கோயில் திருப்பதிக'த்தின் 7ஆவது பாடலை "இ(ரு)தயப்பாட்டு' என்று கூறுவர் சான்றோர். அதில், அணுத்தரும் தன்மையின் ஐயோனாகிய சிவபெருமானின் (திருவண்ட-45)

வினாவும் விடையும்

Posted: 19 Dec 2015 11:35 AM PST

தமிழ் பெற்ற பல செல்வங்களுள் ஒன்று "சிந்தாமணிச் செல்வம்' என்று போற்றத்தக்க சிறு நூல் விவேக சிந்தாமணி. பாடியவர் யார்? காலம் எது? பாடியவர் ஒருவரா பலரா? - இப்படிப் பல வினாக்களுக்கு

14-வது வார்டு பகுதியில் ஆய்வு

Posted: 19 Dec 2015 11:35 AM PST

கரூர் நகராட்சிக்குட்பட்ட 7 மற்றும் 14-வது வார்டு பகுதிகளில் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

"சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள்'

Posted: 19 Dec 2015 11:34 AM PST

சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருவதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

செம்பியனாரின் கவித்திறன்!

Posted: 19 Dec 2015 11:34 AM PST

உயர்ந்த மலை நாட்டிற்கு உரிமை உடையவன் தலைவன். அந்த மலைநாட்டில் வாழும் சாதாரண குறவரின் மகள் தலைவி. தினைப்புனக் காவலுக்குச் சென்றவள் அங்கே அவனைக் காணுகின்றாள். உள்ளத்தில் அவன் உருவத்தைப் பதித்துவிட்ட அவள், தினமும் மனதிற்குள்ளேயே அவனை நினைத்து மகிழ்கிறாள். நேரில் அவனைக் காணத்துடிக்கிறாள்.

வள்ளுவர் அறிவியல் மேலாண்மை கல்லூரியில் நேர்காணல் முகாம்

Posted: 19 Dec 2015 11:34 AM PST

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்தவார கலாரசிகன்

Posted: 19 Dec 2015 11:33 AM PST

இந்தவார கலாரசிகன்

பெண் பார்க்க சென்று திரும்பியவர் லாரி மோதி சாவு

Posted: 19 Dec 2015 11:33 AM PST

திருமணத்திற்கு பெண் பார்க்கச் சென்று திரும்பியவர் மணல் லாரி மோதி இறந்தார்.

கரூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Dec 2015 11:33 AM PST

கரூரில் காங்கிரஸ் கட்சியினர் மோடியின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

அதிமுகவின் சாதனைத் திட்டங்கள் தொடர வேண்டும்

Posted: 19 Dec 2015 11:32 AM PST

அதிமுகவின் சாதனைத் திட்டங்கள் தொடர மக்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

சொல் தேடல் -39

Posted: 19 Dec 2015 11:32 AM PST

ஒரு நாட்டுக்கு மலைகளும் ஆறுகளும் கடல்களும் அழகையும் வளத்தையும் சேர்க்கின்றன. நம் நாட்டுக்கு இமயமலை, விந்தியமலை, கிழக்கு மேற்குத் தொடர்ச்சிமலைகள் முதலியவை வளம் சேர்க்கின்றன

இணையதளத்தில் சிபிஎஸ்இ புத்தகங்கள் இலவசமாக வெளியிடப்படும்

Posted: 19 Dec 2015 11:29 AM PST

மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ-யின்) அனைத்து புத்தகங்களையும் இணையதளத்தில் இலவசமாக வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மோடியின் முகமூடிதான் சுப்பிரமணியன் சுவாமி:காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 19 Dec 2015 11:28 AM PST

பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செயல்டுகிறார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

வெள்ள பாதிப்பு: கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் தேவை:பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Posted: 19 Dec 2015 11:27 AM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்துக்கு கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

நடப்புக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற வாய்ப்பு இல்லை

Posted: 19 Dec 2015 11:26 AM PST

நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நிறைவேற வாய்ப்பு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாகத் தெரிவித்தார்.

வெள்ளத்தால் 14,000 நிறுவனங்கள் பாதிப்பு; 50,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு:மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தகவல்

Posted: 19 Dec 2015 11:26 AM PST

தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக 14,000 தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 50,000 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.

ஹெச்-1பி விசா கட்டணம் இரு மடங்காக உயர்வு

Posted: 19 Dec 2015 11:23 AM PST

அமெரிக்காவில் ஹெச்-1பி மற்றும் எல்-1 வகையிலான நுழைவு இசைவு (விசா) பெற்றுப் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்ட இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் 4,000 டாலர் (சுமார் ரூ.2.65 லட்சம்) கூடுதல் கட்டணம் செலுத்த வகை செய்யும் சட்ட மசோதாவில் அந்நாட்டு அதிபர் ஒபாமா சனிக்கிழமை கையெழுத்திட்டார்.

சென்னையில் பணியாற்றும் உளவு அதிகாரி ஜெர்மனிக்கு இடமாற்றம்

Posted: 19 Dec 2015 11:23 AM PST

சென்னையில் உள்ள மத்திய உளவுத் துறை (இண்டலிஜென்ஸ் பியூரோ) அலுவலகத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் ஐபிஎஸ் உயரதிகாரி டி.வி. ரவிச்சந்திரன், ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

"நிர்பயா' வழக்கு சிறார் குற்றவாளி ரகசிய இடத்துக்கு மாற்றம்: இன்று விடுதலையாகும் நிலையில் திடீர் திருப்பம்

Posted: 19 Dec 2015 11:22 AM PST

தில்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை முடிந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.20) விடுதலையாக இருக்கும் சிறார் குற்றவாளி திடீரென ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும்

Posted: 19 Dec 2015 11:21 AM PST

திருச்சியை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

மதுரையில் 42 மணி நேரத்தில் 1,600 வகையான உணவுகள்:சமையல் கலை நிபுணரின் கின்னஸ் சாதனை முயற்சி

Posted: 19 Dec 2015 11:20 AM PST

1,600-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 42 மணி நேரம் தொடர்ந்து சமைக்கும் கின்னஸ் சாதûனை முயற்சியை சமையல் கலை நிபுணர் ராஜ்மோகன் மதுரையில் சனிக்கிழமை தொடங்கினார்.

யானை தாக்கியதில் தொழிலாளி சாவு

Posted: 19 Dec 2015 11:20 AM PST

கோவை மாவட்டம், வால்பாறை அருகே யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

பண்டிகை கால சிறப்புச் சலுகை: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

Posted: 19 Dec 2015 11:19 AM PST

ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ப்ரீபெய்டு- செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக பேச வேண்டாம்:அமைச்சர்களுக்கு நவாஸ் ஷெரீஃப் கட்டளை

Posted: 19 Dec 2015 11:17 AM PST

இந்தியாவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்று பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகர் ரங்கநாத் தற்கொலை

Posted: 19 Dec 2015 11:16 AM PST

தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ரங்கநாத் (எ) திருமலா சுந்தர ஸ்ரீரங்கநாத் சனிக்கிழமை அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™