Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெள்ள முன் அறிவிப்பு மையங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 09 Dec 2015 12:10 AM PST

தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெள்ள முன் அறிவிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது பருவமழை காலங்களில் வானிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த வானிலை அறிக்கையை வானொலி,

போலீஸ்காரரை தாக்கிய ரஷ்ய தூதரக அதிகாரி மீது எப்.ஐ.ஆர் பதிவு

Posted: 08 Dec 2015 11:10 PM PST

இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முதன்மை செயலாளர் டிமிட்ரி கிரியுகோவ், இவர் இன்று அதிகாலை தெற்கு டெல்லியின் மோதிபாக் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் எதிரில் வந்த பைக்கின் மீது மோதி போலீஸ் தடுப்பின் மீதும் மோதி நின்றது.

குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் சொத்துக்கள் மும்பையில் இன்று ஏலம்

Posted: 08 Dec 2015 09:51 PM PST

1993–ம் ஆண்டு மும்பையில் ரெயில்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். குண்டு வெடிப்புக்கு முன்பே தாவூத் இப்ராகிம் வெளிநாடு தப்பி விட்டார். பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

டெல்லி போலீசை தாக்கிய ரஷ்ய தூதரக அதிகாரி

Posted: 08 Dec 2015 09:14 PM PST

தெற்கு டெல்லியில் உள்ள போலீஸ் அதிகாரியை ரஷ்ய தூதரகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முதன்மை செயலாளர் டிமிட்ரி க்ரியுகோவ், இவர் இன்று அதிகாலை தெற்கு டெல்லியின் மோதி பர்க்

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் ஒருமாத சம்பளம் வழங்க முடிவு

Posted: 08 Dec 2015 08:53 PM PST

சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ளம் பாதித்த மக்களுக்கு நாடு முழுவதும் இருந்து உதவிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே தமிழகத்துக்கு முதல்

இ.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் உடல்நிலை மேலும் கவலைக்கிடம்: தேசிய செயலாளர் டி.ராஜா தகவல்

Posted: 08 Dec 2015 08:44 PM PST

இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஏ.பி.பரதனுக்கு நேற்று முன்தினம் காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து கவலைக்கிடமான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அர்தேன்டு பூஷன் பரதன் என்ற இயற்பெயர் கொண்ட ஏ.பி.பரதன்(92), 1996

தகவல் தொழில்நுட்ப மையத்தில் பயங்கர தீ விபத்து: கொல்கத்தாவில் பரபரப்பு

Posted: 08 Dec 2015 08:41 PM PST

கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையத்தின் 6-வது மாடியில், சற்று முன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு 6 தீயணைக்கும் வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள்

சபரிமலை அய்யப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி ஊர்வலம் 23-ந் தேதி புறப்படுகிறது

Posted: 08 Dec 2015 08:40 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் வழக்கமாக பூஜைகளுடன், நெய்யாபிஷேகம் உள்பட பூஜைகள் நடந்து வருகிறது. மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடக்கிறது. அன்றைய தினம் சாமி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும், பத்தனம் திட்டை மாவட்டம், ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு

திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு பா.ஜனதா போராட்டத்தில் வன்முறை–போலீஸ் தடியடி

Posted: 08 Dec 2015 08:38 PM PST

கேரளாவில் கடந்த 2013–ம் ஆண்டு நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதானவர் சரிதா நாயர். இதில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார் கிளம்பியதை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் மோசடி பற்றி விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன் முன்பு சரிதா நாயரின்

சபரிமலைக்கு காட்டு பாதையில் செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு: கேரள வனத்துறை அறிவிப்பு

Posted: 08 Dec 2015 08:32 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். சபரிமலைக்கு பக்தர்கள் பத்தினம் திட்டா வழியாகவும், செங்கனூர்,

கேரளாவுக்கு 14–ந்தேதி பிரதமர் மோடி வருகை: 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்

Posted: 08 Dec 2015 08:25 PM PST

கேரளாவில் கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு கணிசமான வெற்றி கிடைத்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வருகிற 14–ந்தேதி திருச்சூரில் பாராட்டு விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்க மாநில பா.ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

Posted: 08 Dec 2015 08:19 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக, கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்களின் வருகை அதிகரித்தது. இந்த நிலையில், தமிழ்நாடு சென்னை உள்பட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வெள்ள சேதம் ஏற்பட்டதால், பக்தர்களின் வருகை குறைந்தது. மேலும் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, டிசம்பர் 5-ந் தேதி முதல், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று முதல் பாதுகாப்பு கெடுபிடி

திருச்சானூர் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted: 08 Dec 2015 07:54 PM PST

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி நேற்று யானை உருவம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை ஊழியர்கள், பக்தர்க

இன்று சோனியா காந்தி பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 08 Dec 2015 07:53 PM PST

பழிவாங்கும் அரசியலில் பா.ஜ.க. ஈடுபடுவதாக நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் நாள் முழுவதும் அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கிய நிலையில் இன்று 69-வது பிறந்தநாள் காணும் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உ.பி.: பட்டப்பகலில் ஓட்டல் அதிபர் சுட்டுக் கொலை

Posted: 08 Dec 2015 07:34 PM PST

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பட்டப்பகலில் ஓட்டல் அதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள மீரட் நகரின் கங்காநகர் பகுதியில் ஓட்டல் நடத்திவரும் சுஷில்

சீட் பெல்ட் போடுங்கள்: ஒடிசா முதல்வருக்கு பா.ஜ.க அறிவுரை

Posted: 08 Dec 2015 06:50 PM PST

காரில் பயணிக்கும் போது 'சீட் பெல்ட்' அணிந்து செல்லுமாறு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு பா.ஜ.க அறிவுரை வழங்கியுள்ளது. ஒடிசா சட்டப்பேரவையில் உள்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது அம்மாநில பாஜக தலைவர்

முல்லை பெரியாறு அணை திறப்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறது கேரளா - உம்மன் சாண்டி தகவல்

Posted: 08 Dec 2015 06:45 PM PST

முல்லை பெரியாறு அணை, தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. இந்த அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவுக்கு உயர்த்திக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் சிறுமி கற்பழிப்பு வழக்கில் 8 மாதங்களுக்கு பிறகு பாதிரியார் கைது

Posted: 08 Dec 2015 06:31 PM PST

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த கோட்டபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் எட்வின் பிகாரஸ் (வயது 41). இந்த தேவாலயத்தில் உள்ள திருச்சபையில் வேலை பார்த்து வந்த ஒரு சிறுமியை எட்வின் தொடர்ந்து மிரட்டி கற்பழித்து வந்தார்.

நிபுணர் குழுவை அமைத்து தமிழகத்தில் வெள்ள அபாயத்தை தவிர்க்க திட்டமிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

Posted: 08 Dec 2015 06:23 PM PST

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் கிருபா முனுசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தொடர்ச்சியாக பெய்த வடகிழக்கு பருவமழையினால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ரூ.2.2 லட்சம் லஞ்சம் வாங்கிய டெல்லி ஐஏஎஸ் அதிகாரி கைது

Posted: 08 Dec 2015 04:02 PM PST

டெல்லியில் 2.2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை சிபிஐ போலீசார் நேற்று கைது செய்தனர். டெல்லி மாநிலத்தின் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலாளராக இருப்பவர் ஐ.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™