மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருவனந்தபுரம் அருகே குடில் கட்டி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்
- அன்னை தெரசாவுக்கு அடுத்த ஆண்டு புனிதர்பட்டம்: போப் ஆண்டவர் வழங்குகிறார்
- பாராளுமன்ற முடக்கம்: துணை ஜனாதிபதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
- திருப்பதி கோவிலில் குண்டு வைக்க ஒத்திகை பார்த்த தமிழக தீவிரவாதி
- சபரிமலையில் இதுவரை மண்டல பூஜை வருமானமாக ரூ.93 கோடி வசூலானது
- மதனப்பள்ளியில் செம்மரம் கடத்திய 4 பேர் கைது
- நைஜீரியாவில் ஐந்து இந்திய கப்பல் பணியாளர்களை கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்
- டாக்டர் பட்டம் பெற சந்திரபாபு நாயுடுவுக்கு தகுதி இல்லை: நடிகை ரோஜா தாக்கு
- கண்ணூரில் மண்ணில் புதைந்து கிடந்த 19 ஆயிரம் பீரங்கி குண்டுகள்
- சித்தூர் மேயர் கொலை வழக்கு: போலீஸ் விசாரணைக்கு பயந்து கவுன்சிலர் தற்கொலை
- மதனப்பள்ளி அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை
- ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து தற்கொலை தீவிரவாதியாக மாற முயன்ற புனே மாணவி சிக்கினார்
- ரசாயன கழிவுகளால் 7 தமிழக நதிகள் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசு உத்தரவு
- முழுமையான மதுவிலக்கு கிடையாது: நிதிஷ்குமார் திடீர் பல்டி
- தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது
- பாராளுமன்றத்தில் திருக்குறள் விழா: கவிஞர் வைரமுத்து உள்பட 4 பேருக்கு வள்ளுவர் விருதுகள்
- பிரதமர் மோடியுடன் அன்புமணி சந்திப்பு: வெள்ள நிவாரணம் குறித்து கோரிக்கை மனு அளித்தார்
- புதிய சூழ்நிலைக்கு ஏற்ப சந்தைகள் சரிசெய்துக்கொள்ள வேண்டும்: அருண் ஜெட்லி
- தமிழக வெள்ள பாதிப்பு பற்றி பிரதமரிடம் வெங்கையா நாயுடு விளக்கம்
- கார் மாசு சான்றிதழ் இல்லையா? ரூ.5,000 அபராதம் - டெல்லி அரசின் அடுத்த அதிரடி
| திருவனந்தபுரம் அருகே குடில் கட்டி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் Posted: 17 Dec 2015 11:05 PM PST திருவனந்தபுரம் அருகே பேரூர்கடை சந்திப்பில் பூமி பாதுகாப்பு சங்கம் சார்பில் 'குடில்' கட்டி நூதன போராட்டம் நடத்தப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை |
| அன்னை தெரசாவுக்கு அடுத்த ஆண்டு புனிதர்பட்டம்: போப் ஆண்டவர் வழங்குகிறார் Posted: 17 Dec 2015 10:57 PM PST அல்பேனியா நாட்டில் பிறந்து கொல்கத்தாவில் குடியேறி ஏழை – எளியவர்களுக்கு தன்னலமற்ற சேவை செய்ததன், மூலம் இந்தியர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் அன்னைதெரசா. கடந்த 1997–ம் ஆண்டு அவர்தன் 87–வது வயதில் மரணம் அடைந்தார். |
| பாராளுமன்ற முடக்கம்: துணை ஜனாதிபதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் Posted: 17 Dec 2015 10:55 PM PST எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் |
| திருப்பதி கோவிலில் குண்டு வைக்க ஒத்திகை பார்த்த தமிழக தீவிரவாதி Posted: 17 Dec 2015 10:55 PM PST ஒடிசாவில் நடந்த ரெயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணை நடத்தி சுபாஷ் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தனர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவருக்கு லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைத்தன. |
| சபரிமலையில் இதுவரை மண்டல பூஜை வருமானமாக ரூ.93 கோடி வசூலானது Posted: 17 Dec 2015 10:09 PM PST சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலையில் மழை நீடித்தாலும் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக பக்தர்கள் வருகை கடந்த ஆண்டைவிட குறைவாகவே காணப்படுகிறது. |
| மதனப்பள்ளியில் செம்மரம் கடத்திய 4 பேர் கைது Posted: 17 Dec 2015 09:48 PM PST கடப்பாவில் இருந்து மதனப்பள்ளி வழியாக பெங்களூருவுக்கு வாகனங்களில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக மதனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிஷிகேசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் மதனப்பள்ளி சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது |
| நைஜீரியாவில் ஐந்து இந்திய கப்பல் பணியாளர்களை கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர் Posted: 17 Dec 2015 09:45 PM PST நைஜீரியாவில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து கப்பல் பணியாளர்களை கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள சுஷ்மா, நைஜீரியாவின் வாரி கடற்பகுதியில் இருந்து கடந்த 11-ம் தேதி ஐந்து |
| டாக்டர் பட்டம் பெற சந்திரபாபு நாயுடுவுக்கு தகுதி இல்லை: நடிகை ரோஜா தாக்கு Posted: 17 Dec 2015 09:36 PM PST ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், நடிகையுமான ரோஜா ஐதராபாத்தில் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆந்திரா முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் அதிகாரிகள் தற்போது விஜயவாடாவில் தங்கியுள்ளனர். விஜயவாடாவில்தான் தற்போது 10 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து அட்டகாசம் செய்யும் கும்பல் நடமாடி வருகிறது. |
| கண்ணூரில் மண்ணில் புதைந்து கிடந்த 19 ஆயிரம் பீரங்கி குண்டுகள் Posted: 17 Dec 2015 09:28 PM PST கேரள மாநிலம் கண்ணூர் கோட்டை என்ற இடத்தில் சாலை பணிக்காக மண்ணை தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது மண்ணுக்குள் பீரங்கி குண்டுகள் புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அந்த குண்டுகளை பாதுகாப்பாக தோண்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது. |
| சித்தூர் மேயர் கொலை வழக்கு: போலீஸ் விசாரணைக்கு பயந்து கவுன்சிலர் தற்கொலை Posted: 17 Dec 2015 09:14 PM PST சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா, அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோர் கடந்த மாதம் 17–ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கட்டாரி மோகனின் மருமகன் சிண்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் சிலர் போலீசில் சரண் அடைந்தனர். சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். |
| மதனப்பள்ளி அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை Posted: 17 Dec 2015 08:58 PM PST மதனப்பள்ளி மண்டலம் நீருகுட்டவாரிப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 30). நெசவுத் தொழிலாளி. அதேபோல் கலிகிரியை சேர்ந்தவர் கவிதா (22). இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரெட்டியம்மா என்ற 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கவிதா தனது |
| ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து தற்கொலை தீவிரவாதியாக மாற முயன்ற புனே மாணவி சிக்கினார் Posted: 17 Dec 2015 08:57 PM PST மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த 16 வயதான பிளஸ்–1 மாணவி ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற சம்பவம் போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவி படிப்பில் மிகவும் திறமைசாலியாக திகழ்பவர். |
| ரசாயன கழிவுகளால் 7 தமிழக நதிகள் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசு உத்தரவு Posted: 17 Dec 2015 08:55 PM PST டெல்லி மேல்–சபையில் சமீபத்தில் நடந்த விவாதத்தின் போது நதிகள் மாசுபட்டது தொடர்பான எம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார். அப்போது அவர் நாடு முழுவதும் 275 நதிகளில் 302 இடங்களில் மாசு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் போது 7 நதிகள் மாசுபட்டு இருப்பதாக மந்திரி ஜவடேகர் கூறினார். |
| முழுமையான மதுவிலக்கு கிடையாது: நிதிஷ்குமார் திடீர் பல்டி Posted: 17 Dec 2015 08:38 PM PST பீகார் மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்த போது ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியை பிடித்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தார். தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்–ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நிதிஷ்குமார் மீண்டும் முதல்–மந்திரி ஆனார். முதல்வரான ஓரிரு நாட்களில் அவர், பீகாரில் முழுமையான மதுவிலக்கு |
| தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது Posted: 17 Dec 2015 07:51 PM PST தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது இலக்கிய சுவடுகள் என்ற நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் |
| பாராளுமன்றத்தில் திருக்குறள் விழா: கவிஞர் வைரமுத்து உள்பட 4 பேருக்கு வள்ளுவர் விருதுகள் Posted: 17 Dec 2015 06:57 PM PST திருக்குறளை போற்றும் வகையில் நேற்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, மாநிலங்களவை துணைத்தலைவர் பி.ஜே.குரியன், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ராம் கோபால் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி எம்பி டி.ராஜா, டி.கே.ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். |
| பிரதமர் மோடியுடன் அன்புமணி சந்திப்பு: வெள்ள நிவாரணம் குறித்து கோரிக்கை மனு அளித்தார் Posted: 17 Dec 2015 04:10 PM PST டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் வெள்ள நிவாரண பணிகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- |
| புதிய சூழ்நிலைக்கு ஏற்ப சந்தைகள் சரிசெய்துக்கொள்ள வேண்டும்: அருண் ஜெட்லி Posted: 17 Dec 2015 03:45 PM PST அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் கடந்த 2006 -ம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) அதிகரித்து உத்தரவிட்டுள்ளார் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜேனட் யெல்லென். இந்த முடிவு உலக பொருளாதரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது. |
| தமிழக வெள்ள பாதிப்பு பற்றி பிரதமரிடம் வெங்கையா நாயுடு விளக்கம் Posted: 17 Dec 2015 03:24 PM PST வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை நகரை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் நேரில் ஆய்வு செய்தார். வேளச்சேரி, ராம்நகர், முடிச்சூர் சாலை, ஈக்காட்டுதாங்கல், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசினார். |
| கார் மாசு சான்றிதழ் இல்லையா? ரூ.5,000 அபராதம் - டெல்லி அரசின் அடுத்த அதிரடி Posted: 17 Dec 2015 02:56 PM PST இந்தியாவின் தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டால் மூச்சு திணறிவருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்ற நிலையில் பல நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |