Tamil Star |
| அமெரிக்காவின் வட்டிவீத அதிகரிப்பு கனடாவின் டொலரிற்கு பாதிப்பு Posted: 17 Dec 2015 11:04 AM PST
கடந்த சுமார் ஏழு ஆண்டுகளாக நிலையான வட்டி வீதத்தின அமெரிக்கா பேணிவந்த நிலையில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பானது கனேடிய டொலர் மீது பாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. தற்போது கனேடிய டெலர் வலுவிழந்து போயுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பினால் கனேடிய டொலர் மேலும் நெருக்கடிகளைச் சந்திக்க கூடும் என பொருளியல் வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொருளியல் நிபுணர் ஒருவர், அமெரிக்காவின் இந்த அறிவிப்பினால் கனேடிய மத்திய வங்கி மாற்றங்கள் எதனையும் கொண்டுவராதென நம்புவதாக தெரிவித்துள்ளார். கனேடிய மத்திய வங்கி ஏற்கவே இந்த வருடத்தில் இரண்டு முறை மாற்றத்தை அறிவித்திருப்பதால்,இனியும் மாற்றத்தை கொண்டுவரும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் வட்டிவீதத்திற்கே முன்னுரிமை கொடுக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் காரணமாக அமெரி்க்க மத்திய வங்கியின் இந்த வட்டிவீத அறிவிப்பால், கனேடிய டொலரின் பெறுமதி மேலும் குறையக் கூடும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். The post அமெரிக்காவின் வட்டிவீத அதிகரிப்பு கனடாவின் டொலரிற்கு பாதிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாதிரியாருக்கு வட கொரிய நீதிமன்றம் தண்டனை வழங்கியமை தொடர்பில் பிரதமர் கவலை Posted: 17 Dec 2015 10:46 AM PST
அத்துடன் அவருக்கான உரிமையை நிலைநாட்டி நீதியைப் பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்துள்ளார். உலகின் எந்தப் பகுதியாகினும் கனேடியர்கள் அங்கு முறையான விதத்தில் நடாத்தப்படுகிறார்கள் என்பதனை உறுதிப்படுத்த வேண்டிய கட்டுப்பாடு தமக்கு உள்ளதாகவும் கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் குறித்த அந்த பாதிரியாரை சந்திப்பதற்கு வட கொரிய அரசாங்கத்திற்கு தமது அதிகாரிகள் அழுத்தினை வழங்குவர் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை பாதிரியாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ஆத்திரம் வெளியிட்டிருந்த கனேடியத் தூதுவர்,வடகொரியாவின் ஆட்சி முறையும், அங்கு நடைமுறையில் உள்ள நீதி பரிபாலன முறைமையும் அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர் என்றும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவர் கைதான பின்னர் அவரை கனேடிய தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், நேற்று வெறும் 90 நிமிட நேர வழக்கு விசாரணையினை அடுத்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனேடியப் பாதிரியாரான ஹெய்யன் சூ லிம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வட கொரியாவிற்கு சென்றிருந்த போது கைது செய்யப்பட்டிருந்தார். தமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டார் என வடகொரிய அரசாங்கம் பாதிரியார் மீது குற்றஞ்சாட்டப்பட்டியிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வட கொரிய உச்ச நீதிமன்றம் ஆயுள்கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. The post பாதிரியாருக்கு வட கொரிய நீதிமன்றம் தண்டனை வழங்கியமை தொடர்பில் பிரதமர் கவலை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

