Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீரில் பிரபல தால் ஏரியில் படகு வீடுகள் எரிந்து நாசம்: கோடிக்கணக்கான பொருட்கள் சேதம்

Posted: 25 Dec 2015 10:55 PM PST

காஷ்மீர் மாநிலத்தின் தால் ஏரியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் நீரில் மிதக்கும் படகு வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன. பல்வேறு வசதிகளுடன் சொர்க்கபுரிபோல் காட்சியளிக்கும் இந்த படகு வீடுகளுக்கு ஒருநாள் வாடகையாக ஆயிரக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுகின்றது.

சவுதியில் முதலாளியால் அடித்து, உதைத்து சித்ரவதை செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் கேரளா வந்தடைந்தனர்

Posted: 25 Dec 2015 10:45 PM PST

ஏமன் நாட்டில் எலக்ட்ரீஷியன் வேலை வாங்கி தருவதாக கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்களை இங்குள்ள ஒரு இடைத்தரகர் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், சொன்னபடி ஏமனில் அவர்களை பணியமர்த்தாமல் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு செங்கல் சூளையில் அந்த மூன்று வாலிபர்களையும் கூலித்தொழிலாளிகளாக வேலையில்

அருண்ஜெட்லி மீது கிரிக்கெட் ஊழல் புகார்: விசாரணை கமிஷனுக்கு ஜெத்மலானி தலைவர் - கெஜ்ரிவால் அதிரடி முடிவு

Posted: 25 Dec 2015 10:40 PM PST

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக 10 ஆண்டுகள் இருந்த போது கோடிக்கணக்கில் ஊழல்கள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லி தலைமைச் செயலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

காளஹஸ்தி அருகே கணவனை வெட்டிக்கொன்ற பெண்

Posted: 25 Dec 2015 09:41 PM PST

காளஹஸ்தி அடுத்த சதுலவாடிப்பள்ளியை சேர்ந்தவர் கோபி (வயது 40). இவருடைய மனைவி துளசியம்மாள் (35). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அரி (8), நாகேஷ் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துளசியம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்

சந்திரசேகரராவ் யாகத்தில் ஜனாதிபதி நாளை பங்கேற்பு

Posted: 25 Dec 2015 09:05 PM PST

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் மெடக் மாவட்டம் எர்ர பள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது சொந்த பணம் ரூ.20 கோடி செலவில் மகாசண்டியாகம் நடத்தி வருகிறார். கடந்த 23–ந்தேதி தொடங்கிய இந்த யாகம் நாளை (27–ந்தேதி) நிறைவு பெறுகிறது.

ஸ்ரீகாளஹஸ்தி அருகே கடன் தொல்லையால் 2 விவசாயிகள் தற்கொலை

Posted: 25 Dec 2015 08:46 PM PST

ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ரெட்டி (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயத்தில் போதிய லாபம் இல்லை.

திருப்பதி வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பல் மீது மீண்டும் துப்பாக்கி சூடு: தமிழர்கள் 7 பேர் கைது

Posted: 25 Dec 2015 08:26 PM PST

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் கும்பலின் நடமாட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கு சேஷாசல வனப்பகுதியில் விளையும் செம்மரங்களுக்கு சர்வதேச சந்தையில் கிடைக்கும் அதிக விலை மதிப்பே காரணம். இதனால் சேஷாசல

கர்நாடக அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் பலி

Posted: 25 Dec 2015 07:49 PM PST

பெங்களூருவில் இருந்து சிவமொக்கா மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவு கர்நாடக அரசு பஸ் (கே.எஸ்.ஆர்.டி.சி) புறப்பட்டு சென்றது. அந்த பஸ் நேற்று அதிகாலை 2 மணியளவில் துமகூரு மாவட்டம் திப்தூர் தாலுகா ஹொன்னவள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை இன்று நடக்கிறது

Posted: 25 Dec 2015 07:24 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 17-ந் தேதி (கார்த்திகை முதல் தேதி) திறக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சாமியை தரிசனம் செய்ய சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரு மண்டலம் என்னும் 41 நாட்கள் முடிந்து நாளை (ஞாயிற்றுக்

நான் கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளதா?: அமித்ஷாவுக்கு கீர்த்தி ஆசாத் கடிதம்

Posted: 25 Dec 2015 07:10 PM PST

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது நடைபெற்ற முறைகேடுகளில் அவருக்கு தொடர்பு உள்ளது என்று பா.ஜனதா கட்சியை சேர்ந்த கீர்த்தி ஆசாத் எம்.பி. கூறினார். இதற்கு கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து கீர்த்தி ஆசாத் எம்.பி.யை கட்சியில் இருந்து

மன்மோகன்சிங் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி

Posted: 25 Dec 2015 01:16 PM PST

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 2007-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசுகையில், 'நமது மரியாதைக்குரிய தேசிய அடையாளங்களை எப்போது நினைவில் கொள்ளப்போகிறோம் என்று ஒரு நாள் நான் கனவு கண்டேன். ஒருவர் காலை உணவு

டெல்லி சரோஜினி நகர் ரெயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டுபிடிப்பு

Posted: 25 Dec 2015 12:38 PM PST

தலைநகர் டெல்லியின் தெற்குப்பகுதியில் உள்ள சரோஜினி நகர் ரெயில் நிலையம் அருகே அமைந்திருக்கும் தண்டவாளத்தில் பெண் உட்பட மூன்று பேரின் சடலங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும், அச்சடலங்களுக்கு அருகில் காயமடைந்த நிலையில் இருந்த ஒருவரையும் போலீசார் மீட்டுள்ளனர்.

டெல்லி, காஷ்மீர் உட்பட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல இடங்களில் நில அதிர்வு

Posted: 25 Dec 2015 11:52 AM PST

தலைநகர் புதுடெல்லி, காஷ்மீர் உட்பட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தாயார் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி

Posted: 25 Dec 2015 11:45 AM PST

லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ரைவிண்ட் மாளிகையில் நேற்று அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு நவாஸ் ஷெரீப் விருந்து அளித்தார். சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

இந்தியா பாகிஸ்தான் இடையே வருகிற ஜனவரி 15-ம் தேதி பேச்சுவார்த்தை

Posted: 25 Dec 2015 10:50 AM PST

இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளிடையே வருகிற ஜனவரி 15-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக முன்னணி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

Posted: 25 Dec 2015 09:34 AM PST

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91-வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்காரி உள்பட கட்சி நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில்

நவாஸ் ஷெரீப்பின் வரவேற்பு என்னை நெகிழச்செய்தது: பிரதமர் மோடி

Posted: 25 Dec 2015 09:24 AM PST

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தன்னை வரவேற்ற விதம் தனிப்பட்ட முறையில் மிகவும் நெகிழச்செய்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று காலை ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர்

ரிலையன்ஸ் ஜியோவின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அறிவிப்பு

Posted: 25 Dec 2015 08:36 AM PST

ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே 4G இன்டர்நெட் சேவையை துவங்கி நாடு முழுவதும் வழங்கி வரும் நிலையில், நாளை மறுநாள் முதல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதற்கட்டமாக தனது ஊழியர்களுக்கு இலவசமாக 4G இன்டர்நெட் வசதியை வழங்குகிறது. எனினும், வரும் மார்ச்-ஏப்ரல் மாதம் முதலே வர்த்தக ரீதியில் ரிலையன்ஸ்

மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

Posted: 25 Dec 2015 08:12 AM PST

2 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கெர்ம்லினில் நடைபெற்ற 16-வது ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அணு சக்தி மற்றும் பாதுகாப்பு துறை உட்பட பல முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரஷ்யா பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை ஆப்கானிஸ்தான்

ஜம்மு காஷ்மீரில் நாளை ஸ்டிரைக்: ஹூரியத் மாநாட்டுக் கட்சி அழைப்பு

Posted: 25 Dec 2015 07:23 AM PST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ரஜவுரியில் தாய்- மகன் இருவரும் கிராம பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் ஒருவரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படுகொலையைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™