Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Flemingdon Parkஇல் கத்திக் குத்து – பதின்ம வயதுப் பெண் படுகாயம்

Posted: 25 Dec 2015 07:57 PM PST

i

iFlemingdon Park பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்த பதின்ம வயதுப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Overlea Boulevardற்கு வடக்கே, டொன் மில்ஸ் வீதியில் அமைந்துள்ள ஃபிளமிங்டன் பார்க் வர்த்தக வளாகத்திலேயே இன்று மாலை 6.50 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்த ஒரு குழு இளம் பராயத்தினரிடையே ஏற்பட்ட கைகலப்பே கத்திக் குத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்தினைச் சென்றடைந் போது குறித்த அந்த பெண் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்களும் காவல்த்துறையினரால் வெளியிடப்படவில்லை.i

The post Flemingdon Parkஇல் கத்திக் குத்து – பதின்ம வயதுப் பெண் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Trinity Bellwoods இல் தடப் பேரூந்து மோதி ஒருவர் படுகாயம்

Posted: 25 Dec 2015 07:53 PM PST

t

tஇன்று காலை Trinity Bellwoods பகுதியில் தடப் பேரூந்தினால் மோதுண்ட ஆண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Queen Street West மற்றும் Strachan Avenue பகுதியில் அமைந்துள்ள வீதிச் சந்திப்பில் இன்று காலை 8.30 அளவில் இந்த விபத்து சம்பவித்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த ரொரன்ரோ அவசர மருத்துவப் பரிவினர்,காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த இந்த விபத்தினை அடுத்து. குயீன் வீதியின் இரண்டு திசைகள் ஊடான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டன.t

The post Trinity Bellwoods இல் தடப் பேரூந்து மோதி ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வினிபெக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எயர் கனடா விமானம்

Posted: 25 Dec 2015 03:11 PM PST

ju

juஎட்மண்டனில் இருந்து ரொரன்ரொ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று வின்னிபெக்கில் அவசரமாக தரையிறக்க நேர்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எட்மண்டனில் இருந்து ரொரன்ரோ நோக்கி புதன்கிழமை இரவு புறப்பட்ட 154 என்ற இலக்க எயர் கனடா விமானமே வின்னிபெக்கில் அவசரமாகத் தரையிறக்க நேர்ந்ததாகவும், பயணி ஒருவரின் நடவடிக்கையாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ju

விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென கோபாவேசத்துடனும் நடந்து கொண்டதாகவும் அதனால் விமானம் அவசரமாக தரையிறக்க வேண்டி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது

விநிபெக்கில் விமானம் தரையிறங்கியதும் குறித்த பயணியை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 31 வயதான கெலி ஆம்ஃபெர்ரி என்ற நபர் என்றும், அந்த நபர் வின்னி பெக்கில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ள காவல்த்துறையினர், அவர் மீது அச்சுறுத்தல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

The post வினிபெக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எயர் கனடா விமானம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சூறைக்காற்றால் 39,000 வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் தடை

Posted: 25 Dec 2015 03:04 PM PST

kio

kioஒன்ராறியோவின் மத்திய மற்றும் வட பிராந்தியங்கள் சூறைக் காற்றால் பாதிப்பை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பிராந்தியங்களில் விசிய சூறைக் காற்று காரணமாக பல வாடிக்கையாளர்களுக்கான மின் இணைப்புகள் நேற்று காலையில் துண்டிக்கப்பட்டதாக ஹைட்ரோ வண் தெரிவித்துள்ளது.

97,000 ற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனவும் அது குறிப்பிட்டிருந்தது.சூறைக்காற்றின் பாதிப்பின் காரணமாக சுமார் 415 மின் தடைகள் தொடர்பில் தாம் திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் அது தகவல் வெளியிட்டிருந்தது.kio

நேற்று நள்ளிரவு 11.30 அளவில் ஹைட்ரோ வண் வெளியிட்ட தகவலில், மின் தடையினை சீர் செய்யும் நடவடிக்கைகளில் தமது பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஏறத்தாழ இன்னமும் 39,000 வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் தடைப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வாறே கியூபெக் பகுதியில் வியாழன் இரவு கடுமையான சூறைக் காற்று வீசியதாகவும், சுமார் 80,000 வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோம் தடைப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post சூறைக்காற்றால் 39,000 வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் தடை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

குழந்தைகளின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உப்பு நிறைந்த உணவுகள்!

Posted: 25 Dec 2015 06:15 AM PST

iki

ikiவாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.

வரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது தெரியவரும்.

குறிப்பாக, உங்கள் குழந்தைகளை சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.

ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குழந்தைகள் ஒரு நாளைக்கு, 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை எடுத்துக்கொள்ளலாம்.

சாதாரணமாக ஒரு டீஸ்பூன் உப்பில் 2,000 மில்லிகிராம் சோடியம் உள்ளது. ஒருநாளைக்கு நமக்கு பரிந்துரைக்கப்பட்ட சோடியத்தின் அளவு 2,300 ஆகும்.

அளவுக்கு அதிகமான உப்பால் ஏற்படும் விளைவுகள்

அளவுக்கதிகமான சோடியம் சேருவதால், செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் இடையூறு ஏற்பட்டு அதிகம் தாகம் ஏற்படும்.

வயிற்று உப்புசம் ஏற்பட்டு உங்கள் குழந்தைகளால் சாப்பிட முடியாமல் போகலாம்.

சோடியம் அதிகமானால், கை கால்களில் வீக்கம் ஏற்படும், எனவே உங்கள் குழந்தைகளின் கை கால்கள் வீங்கியிருந்தால், அவன் குண்டாக இருக்கிறான் என நினைத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

அளவுக்கு அதிகமான சோடியம் எலும்புகளில் கால்சிய அளவை குறையச் செய்து, சிறுநீர் வழியே வெளியேற்றும். இதனால் எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடும்.

மேலும், இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து, அதனால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாக்கப்படும். அப்படி சிறுநீரகங்கள் ஓய்வின்றி வேலை செய்ய நேர்ந்தால், எலும்புகளில் இருந்து வெளியேறும் கால்சியம் சிறுநீரங்களில் அதிகம் படிந்து, கற்களாக உருவாகிவிடும்.

எனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, அதிகளவு உப்பும் ஓர் காரணம் ஆகும்.

அதிகளவு உப்பினால் உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்தத்தின் கன அளவு அதிகரித்து, அதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றில் அழுத்தம் அதிகரிக்கும். இப்படி தமனிகளில் அழுத்தம் அதிகரித்தால், வாழ்நாள் முழுவதும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

uiu

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய தீனிகள்

கீரை பருப்பு மசியல். வெஜிடபிள் சூப். தேங்காய் அவல். வெஜிடபிள் சாண்ட்விச், பயறு வகைகள், கோதுமை அடை, சோள உணவுகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுங்கள்.iki

The post குழந்தைகளின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உப்பு நிறைந்த உணவுகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பச்சை மிளகாயின் 10 மருத்துவ குணங்கள்!

Posted: 25 Dec 2015 06:11 AM PST

uiyi

uiyiபச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் உணவு வகைகளில் மிளகாய் பொடி சேர்ப்பதை விட, பச்சை மிளகாயை சேர்க்கின்றோம்.

நாம் உணவில் பயன்படுத்தும் இந்த காரசாரமான மிளகாய் எவ்வகையான நோய்களை தடுக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மருத்துவ பயன்கள்

1. பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளது.

2. உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.

3. பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.

4. மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இது உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.uiyi

5. பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது.

6. பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது. அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் நீங்க உதவி புரிகிறது.

7. பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே பெண்கள் உட்கொள்வது நல்லது.

8.பச்சை மிளகாயில் வைட்டமின் �ஈ�யும் கூட அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.

9.பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

10. மிளகாய் வற்றல், 200 கிராம், மிளகு, 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து, 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால் அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் சேர்த்து, சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை, தலைமுழுகி வந்தால் எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

The post பச்சை மிளகாயின் 10 மருத்துவ குணங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™