Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தேர்தல் நடத்தை விதி மீறல்: சந்திரசேகர ராவுக்கு நோட்டீசு

Posted: 10 Dec 2015 11:17 PM PST

தெலுங்கானாவில் சட்டமன்ற மேல்சபைக்கு 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வருகிற 27–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து விட்டது. தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், அவரது மகனும் மந்திரியுமான கோபு ராமராவ் ஆகியோர் தலைமைச்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 19–ந்தேதி விசாரணை: முன் ஜாமீன் பெற ராகுல்காந்தி மறுப்பு

Posted: 10 Dec 2015 11:01 PM PST

மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு டெல்லியில் ''த நேஷனல் ஹெரால்டு'' என்ற ஆங்கில பத்திரிகையை தொடங்கி நடத்தினார். இந்த பத்திரிகையின் அறக்கட்டளைக்கு சொந்தமாக டெல்லியில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த

ஆந்திராவில் பாக்சைட் கனிமம் வெட்ட எதிர்ப்பு: ஜெகன்மோகன் ரெட்டி கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பு

Posted: 10 Dec 2015 10:38 PM PST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மன்னியம் காட்டுப்பகுதியில் ''பாக்சைட்'' கனிம பொருள் உள்ளது. இந்த கனிமத்தை வெட்ட ஆந்திர அரசு அனுமதி அளித்து அரசானை வெளியிட்டு உள்ளது. இதற்கு மன்னியம் காட்டுப்பகுதி மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பாக்சைட் கனிமம் வெட்டுவதால் தங்களது

80–வது பிறந்தநாள்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 10 Dec 2015 10:00 PM PST

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று 80–வது பிறந்தநாள். 1935–ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் மிராதி என்ற இடத்தில் பிறந்தார். 60 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– பெரும் மதிப்பிற்குரிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எனது இதயப்

சிவகிரி மடத்திற்கு 15–ந்தேதி பிரதமர் மோடி வருகை

Posted: 10 Dec 2015 09:56 PM PST

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 14–ந்தேதி கேரளா செல்கிறார். திருச்சூர், கொச்சி, கொல்லம் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், 15–ந்தேதி மாலை 4.30 மணிக்கு சிவகிரி மடத்திற்கு செல்கிறார். அங்கு நாராயண குரு நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

தமிழக பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் தரிசனம்

Posted: 10 Dec 2015 08:55 PM PST

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1–ந் தேதி முதல் கனமழை பெய்தது. மழையால் திருவள்ளூரில் ஏரிகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலைகள் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆந்திராவுக்கு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சித்தூர் மேயர்–கணவர் கொலையில் 19 பேர் கைது

Posted: 10 Dec 2015 08:44 PM PST

சித்தூர் மாநகராட்சி மேயர் கட்டாரி அனுராதா, அவரின் கணவர் கட்டாரி மோகன் ஆகியோர் கொலை வழக்கில் பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதில் முக்கிய கொலை குற்றவாளியான கட்டாரி மோகனின் அக்காள் மகன் சிண்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் பிடிபட்ட டேவிட் ஹெட்லி அப்ரூவர் ஆனார்: கோர்ட்டு மன்னிப்பு அளித்தது

Posted: 10 Dec 2015 07:53 PM PST

மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் ரத்தக்களறியை ஏற்படுத்தினர். அதில் 166 பேர் பலியானார்கள். இதன் சதிகாரனான அமெரிக்கவாழ் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதி டேவிட்

வருமான வரி கணக்கு திருத்த நடைமுறையில் மாற்றம்: மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

Posted: 10 Dec 2015 07:43 PM PST

ஆன்லைன் வழியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறபோது, மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் வரிகள் (டிடிஎஸ்) பற்றி தவறான தகவல்களை அளித்து விட்டால் அல்லது முழுமையாக தெரிவிக்காமல் விட்டு விட்டால் பின்னர் திருத்தம் செய்து சரியான தகவல்களை அளிக்க

சல்மான்கான் எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்: விபத்தில் காயம் அடைந்தவர்கள் உருக்கம்

Posted: 10 Dec 2015 07:33 PM PST

மும்பை பாந்திராவில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி இந்தி நடிகர் சல்மான்கானின் கார் மோதி ஒருவர் பலியானார். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த வழக்கில் 13 ஆண்டுகள் கழித்து நடிகர் சல்மான்கானை ஐகோர்ட்டு விடுதலை செய்தது. இந்த சூழ்நிலையில், சல்மான்கான் கார் மோதி காயம் அடைந்தவர்களில் ஒருவரான அப்துல்லா ராப் சேக் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டில் தமிழ் பயன்பாட்டு மொழி ஆக்கப்படுமா?: பாராளுமன்றத்தில் சட்ட மந்திரி பதில்

Posted: 10 Dec 2015 07:13 PM PST

சென்னை ஐகோர்ட்டில் பயன்பாட்டு மொழியாக தமிழை அனுமதிப்பது குறித்த தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்றத்தில் சட்ட மந்திரி சதானந்த கவுடா பதில் அளித்தார்.

திருச்சானூரில் பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா

Posted: 10 Dec 2015 06:33 PM PST

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில், உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதிஉலாவுக்கு முன்னால் அம்மன், ஆஞ்சநேயர், சிவன், பார்

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட ருவாண்டா இளம் பெண்: கொல்கத்தாவில் மீட்பு

Posted: 10 Dec 2015 04:24 PM PST

தமிழகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ருவாண்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை, டெல்லி போலீசார் கொல்கத்தாவில் மீட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து ருவாண்டாவை சேர்ந்த மேரி கிரேஸ்

ஊழல் ஒரு நாட்டின் பொருளாதார பயங்கரம், சமூக பேராபத்து: உச்சநீதிமன்றம் கருத்து

Posted: 10 Dec 2015 04:11 PM PST

ஊழல் என்பது ஒரு நாட்டின் பொருளாதார பயங்கரம், சமூக பேராபத்து என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், ஊழலை கட்டுப்படுத்த சிறப்பு சட்டங்களை கொண்டு வருவது அரசின் கடமை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கைக்கு இடமில்லை: காங்கிரஸ் கட்சிக்கு நிதிஷ்குமார் ஆதரவு

Posted: 10 Dec 2015 03:23 PM PST

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் ஆளும் பா.ஜ.க., அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றம்சாட்டிற்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் 16-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

Posted: 10 Dec 2015 02:48 PM PST

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி என்ற இருவகை ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் இந்திய விண்வெளி ஆய்வு

75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால் ஸ்மார்ட் போன்: மத்திய பிரதேச அரசு

Posted: 10 Dec 2015 02:16 PM PST

கல்லூரிகளில் 75 சதவீதத்திற்கு மேல் வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.,

2050-க்குள் உலகில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும்

Posted: 10 Dec 2015 12:59 PM PST

2050-ம் ஆண்டிற்குள் உலக அளவில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பியு ஆராய்ச்சி மையம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. அதேபோல், 2050-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய மக்கள்

இந்தியாவில் எந்த ஒரு சமூகத்தினரும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவதில்லை: மனோகர் பாரிக்கர்

Posted: 10 Dec 2015 11:53 AM PST

இந்தியாவில் பல்வேறு சமூகத்தினர் இருந்த போதும், யாரும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவதில்லை என்று பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பாகிஸ்தான் பெண்

காங்கிரஸை சமாளித்து அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றுவோம்: அருண் ஜெட்லி உறுதி

Posted: 10 Dec 2015 10:37 AM PST

காங்கிரஸ் கட்சியை பேச்சுவார்த்தை மூலம் சமாளித்து, தொடர்ந்து சிக்கலில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்களை நிறைவோற்றுவோம் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™