மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொலை
- வாஜ்பாய் கிராமத்துக்கு ரெயில் சேவை தொடங்கியது
- கிரிக்கெட் சங்க ஊழல்: வழக்கு தொடர கீர்த்தி ஆசாத் முடிவு
- திருப்பதிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகை - இன்று மாலை சாமி தரிசனம் செய்கிறார்
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள்: இன்று நேரில் வந்து வாழ்த்துவதாக ஆப்கானிஸ்தானிலிருந்து பிரதமர் மோடி தகவல்
- நடிகை ரோஜாவின் சஸ்பெண்டு காலம் குறைக்கப்படுமா?: ஆய்வு செய்ய தனிக்குழுவை சபாநாயகர் அமைத்தார்
- ரத்ததானம் செய்தால் பஸ்சில் இலவச பயணம்: ஒடிசா அரசு அறிவிப்பு
- எங்கள் கட்சிக்கு வாருங்கள்: பா.ஜ.க.-வில் இருந்து நீக்கப்பட்ட கீர்த்திஆசாத்துக்கு காங்கிரஸ் அழைப்பு
- அருண்ஜெட்லி ஒரு நாளாவது ஜெயிலுக்கு போவது உறுதி: ராம்ஜெத்மலானி சொல்கிறார்
- திருப்பதி கோவில் சார்பில் சோலார் மின்சார நிலையம்: சித்தூரில் 50 ஏக்கர் பரப்பில் அமைக்கிறது
- மும்பையில் 10 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர்: பொதுமக்கள் அவதி
- மின்சார ரெயில்களின் வாசற்படியில் பயணிகள் தொங்குவதை தடுக்க மத்திய ரெயில்வே நடவடிக்கை
- அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை 27-ந்தேதி நடக்கிறது
- நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தமிழக மாலுமி உள்பட 5 பேர் விடுவிப்பு: சுஷ்மா சுவராஜ் தகவல்
- அதிர்ச்சி: சுவையாக ஆட்டுக்கறி சமைக்காத மனைவியை தீக்கிரையாக்கிய கொடூர கணவன்
- விமானத்தில் ஏற்ற மறுத்த விவகாரம் குறித்து விமான அமைச்சகத்திடம் கேரள கவர்னர் புகார்
- சவுதி தீ விபத்தில் பலியானவர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை: சுஷ்மா சுவராஜ்
- இந்தியா-ரஷியா கூட்டாக ஹெலிகாப்டர்களை தயாரிக்க முடிவு
- உல்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் அனுப் சேத்தியா விடுதலை
- அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற 25 இந்திய மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
| காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொலை Posted: 24 Dec 2015 11:10 PM PST வடக்கு காஷ்மீரின் பன்டிப்போரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பன்டிப்போரா மாவட்டத்தில் உள்ள சம்பல் என்ற இடத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் உலவுவதாக வந்த தகவலையடுத்து, நேற்று |
| வாஜ்பாய் கிராமத்துக்கு ரெயில் சேவை தொடங்கியது Posted: 24 Dec 2015 10:29 PM PST முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று டெல்லியில் வசித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்து வளர்ந்தாலும், வாஜ்பாய் தன் மூதாதையர்களின் பூர்வீகக் கிராமமான பதேஸ்வர் கிராமம் மீது தனி பற்றும், பாசமும் வைத்துள்ளார். பதேஸ்வர் கிராமம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆக்ரா – இடவா |
| கிரிக்கெட் சங்க ஊழல்: வழக்கு தொடர கீர்த்தி ஆசாத் முடிவு Posted: 24 Dec 2015 10:22 PM PST டெல்லி மாநில அரசின் தலைமை செயலகத்தில் கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், ''மத்திய நிதி மந்திரி |
| திருப்பதிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகை - இன்று மாலை சாமி தரிசனம் செய்கிறார் Posted: 24 Dec 2015 10:20 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மாலை சாமி தரிசனம் செய்கிறார். பீமவரத்தில் இன்று நடைபெறும் வேதபாட சாலை விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ரேணுகொண்டா விமான நிலையத்திற்கு மாலை 3 மணியளவில் வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் நரசிம்மன் |
| Posted: 24 Dec 2015 09:46 PM PST இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய், தனது 91-வது பிறந்த நாளை இன்று எளிமையாக கொண்டாடினார். 25-12-1924 அன்று குவாலியரில் பிறந்த வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்று முதல் தீவிர அரசியலில் தன்னை |
| நடிகை ரோஜாவின் சஸ்பெண்டு காலம் குறைக்கப்படுமா?: ஆய்வு செய்ய தனிக்குழுவை சபாநாயகர் அமைத்தார் Posted: 24 Dec 2015 09:26 PM PST ஆந்திர சட்டசபையில் இருந்து நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா ஒரு ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். முதல்–மந்திரி சந்திர பாபுநாயுடுவை தரக்குறைவாக பேசியதாக கூறி சபாநாயகர் கோடல சிவபிரசாத் இந்த நடவடிக்கையை எடுத்தார். |
| ரத்ததானம் செய்தால் பஸ்சில் இலவச பயணம்: ஒடிசா அரசு அறிவிப்பு Posted: 24 Dec 2015 09:25 PM PST ஒடிசா மாநிலத்தில் ரத்ததானம் செய்வதை ஊக்குவிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரத்ததானம் செய்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஒடிசா முதல் – மந்திரி நவீன் பட்நாயக் இது பற்றி ஆலோசிக்க நேற்று உயர் மட்டக்குழு கூட்டத்தை கூட்டினார். அதில் ரத்ததானத்தை ஊக்குவிப்பது பற்றி |
| எங்கள் கட்சிக்கு வாருங்கள்: பா.ஜ.க.-வில் இருந்து நீக்கப்பட்ட கீர்த்திஆசாத்துக்கு காங்கிரஸ் அழைப்பு Posted: 24 Dec 2015 09:25 PM PST டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. கீர்த்தி ஆசாத் ஆதாரங்களை வெளியிட்டதால் பா.ஜ.க.வில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. |
| அருண்ஜெட்லி ஒரு நாளாவது ஜெயிலுக்கு போவது உறுதி: ராம்ஜெத்மலானி சொல்கிறார் Posted: 24 Dec 2015 09:15 PM PST மத்திய மந்திரி அருண் ஜெட்லி மீது கிரிக்கெட் சங்க முறைகேடு குற்றச்சாட்டை டெல்லி முதல் – மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக விசாரணை கமிஷனையும் நியமித்து கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார். அருண்ஜெட்லி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக கூறி கெஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி தலைவர்கள் மீது ரூ. 10 கோடி கேட்டு கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். |
| திருப்பதி கோவில் சார்பில் சோலார் மின்சார நிலையம்: சித்தூரில் 50 ஏக்கர் பரப்பில் அமைக்கிறது Posted: 24 Dec 2015 08:52 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் பல கல்வி நிலையங்களும் பல மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகிறது. கல்வி |
| மும்பையில் 10 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர்: பொதுமக்கள் அவதி Posted: 24 Dec 2015 08:12 PM PST மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. உறைந்து போகும் அளவுக்கு குளிர் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மும்பையில் இந்த ஆண்டு குளிர்காலம் வழக்கத்தை விட சற்று தாமதமாகவே தொடங்கியது. எனினும் கடந்த சில நாட்களாக |
| மின்சார ரெயில்களின் வாசற்படியில் பயணிகள் தொங்குவதை தடுக்க மத்திய ரெயில்வே நடவடிக்கை Posted: 24 Dec 2015 07:46 PM PST மின்சார ரெயில்களின் வாசற்படியில் பயணிகள் தொங்குவதை தடுக்க மத்திய ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மும்பையின் 'வாழ்க்கை தடம்' என வர்ணிக்கப்படும் மின்சார ரெயில்களில் இருந்து தவறி விழுந்து பயணிகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அதை தடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய ரெயில்வே |
| அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை 27-ந்தேதி நடக்கிறது Posted: 24 Dec 2015 07:41 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலைக்கு பக்தர்கள் வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அய்யப்பசாமிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கிகள் ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த தங்க அங் |
| Posted: 24 Dec 2015 06:24 PM PST நைஜீரியா நாட்டில் வார்ரி என்ற இடத்தில் இருந்து கப்பலில் 5 இந்திய மாலுமிகள் கடந்த 11-ந் தேதி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை கடற்கொள்ளையர்கள் வழிமறித்தனர். பின்னர் வலுக்கட்டாயமாக அவர்கள் 5 பேரையும் கடத்தி சென்றனர். |
| அதிர்ச்சி: சுவையாக ஆட்டுக்கறி சமைக்காத மனைவியை தீக்கிரையாக்கிய கொடூர கணவன் Posted: 24 Dec 2015 03:57 PM PST சுவையாக ஆட்டிறைச்சி செய்யத் தெரியவில்லை என்று கூறி மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்திய குடிகார கணவன் ஒருவன் மனைவியை துள்ளத்துடிக்க தீக்கிரையாக்கியுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| விமானத்தில் ஏற்ற மறுத்த விவகாரம் குறித்து விமான அமைச்சகத்திடம் கேரள கவர்னர் புகார் Posted: 24 Dec 2015 03:38 PM PST கவர்னருக்காக காத்திருக்காமல் விமானம் புறப்பட்டுச் சென்ற விவகாரம் குறித்து விமான அமைச்சகத்திடம் கேரள கவர்னர் சதாசிவம் புகார் தெரிவித்துள்ளார். கேரள கவர்னராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், |
| சவுதி தீ விபத்தில் பலியானவர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை: சுஷ்மா சுவராஜ் Posted: 24 Dec 2015 02:38 PM PST அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் தென் பகுதியில் அமைந்துள்ளது ஜிஷன் பிராந்திய பகுதி. இதன் தலைநகர் ஜிஷன். இங்கு அரசு பொது மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 30 இந்திய செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையின் முதல் தளத்தில் |
| இந்தியா-ரஷியா கூட்டாக ஹெலிகாப்டர்களை தயாரிக்க முடிவு Posted: 24 Dec 2015 01:57 PM PST 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தனி விமானத்தில் ரஷியா புறப்பட்டு சென்றார். ரஷிய தலைநகர் மாஸ்கோ போய்ச் சேர்ந்த அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்த போது, அதை கவனிக்காமல் மோடி நடந்து செல்ல |
| உல்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் அனுப் சேத்தியா விடுதலை Posted: 24 Dec 2015 01:01 PM PST உல்பா தீவிரவாத அமைப்பின் பொதுச் செயலாளரான அனுப் சேத்தியா (எ) கோலாப் பரூவா, அசாம் மாநிலம், குவாஹத்தி சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். அனுப்பிற்கு எதிராக தொடுக்கப்பட்ட நான்கு வழக்குகளில், கடைசி |
| அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற 25 இந்திய மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் Posted: 24 Dec 2015 12:11 PM PST அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரில் உள்ள சிலிக்கான்வேலி பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் படிப்பதற்காக இந்தியாவில் இருந்து 25 மாணவர்கள் சென்றனர். சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் அவர்களின் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டதில், |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |