Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மார்க்கம் பகுதியில் தமிழர் ஒருவரைக் காணவில்லை

Posted: 24 Dec 2015 04:20 PM PST

kj

kjமார்க்கம் பகுதியில் தமிழர் ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

55 வயதான ஜெயகாந்தன் சிவபாதம் என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அவரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

குறித்த நபர் நேற்றுக் காலை ஒன்பது மணியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெனிசன் வீதி மற்றும் மார்க்கம் வீதிப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று காலையில் அவர் இருந்ததாகவும், எனினும் பின்னர் அவரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.kj

இறுதியாக காணப்படும் போது அவர் சாம்பல் நிற குளிர் அங்கியும், கறுப்பு நிற அடிடாஸ் ரக காலணியும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன அவரிடம் பணமோ, கையடக்கத் தொலைபேசியோ இல்லை என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரின் பாதுகாப்புப் தொடர்பிலும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவர் குறித்தத் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களிடம் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post மார்க்கம் பகுதியில் தமிழர் ஒருவரைக் காணவில்லை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவினுள் சிரிய அகதிகளை அழைத்து வருவது தொடர்பில் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Posted: 24 Dec 2015 12:27 PM PST

jlk

jlkகனடாவினுள் அடுத்த பெப்ரவரி மாத்தினுள் 25,000 சிரிய அகதிகளை அழைத்து வருவதாக லிபரல் அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. பின்ன இந்த எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் கனேடிய மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்த கனேடியர்களின் நிலைப்பாட்டை அறிவதற்கான கருத்துக் கணிப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது.அந்த கருத்துக் கணிப்பில்,சுமார் மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் 25,000 அல்லது அதற்கும் அதிகமான சிரிய நாட்டு அகதிகளை கனடாவுக்கு அழைத்துவரும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

1.பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் 25,000 சிரிய அகதிகளை கனடாவுக்குள் அழைத்துவர முடிவு செய்துள்ளதனை தாம் ஆதரிப்பதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 37 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.jlk

2. 25,000 இற்கும் அதிகமானோரை அழைத்துவர வேண்டும் என மேலும் 28 சதவீதம் பேர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

3.25,000ற்கும் குறைவான அகதிகளையே கனடாவுக்குள் அழைத்து வருவதனை விரும்புவதாக 28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
4.இந்த விடயம் தொடர்பில் தமக்கு தெளிவான நிலைப்பாடு இல்லை என ஏழு சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

அதிக அளவிலான சிரிய அகதிகளை அழைத்து வரும் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை அட்லான்டிக் கனடாவில் அதிக அளவாக 45 சதவீதத்தினரும், பிறைறீசில் (Prairies) 19 சதவீதத்தினரும் வெளிப்படுத்தியிருந்தாக கருத்துக் கணிப்பினை நடாத்திய நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post கனடாவினுள் சிரிய அகதிகளை அழைத்து வருவது தொடர்பில் கருத்துக்கணிப்பு முடிவுகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மெக்சிக்கோ சிறையில் கனேடியர் ஒருவர் உயிரிழப்பு

Posted: 24 Dec 2015 12:21 PM PST

gfiuu

gfiuuமெக்சிக்கோ சிறையில் இருந்துவந்த கனேடியர் ஒருவர் சிறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து தமக்கு தெரியப்படுத்தவில்லை என குடும்பத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.வடகிழக்கு மெக்சிக்கோவின் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த புரூஸ் விக்பியூசன் என்பவர் கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த செய்தி பிறிதொரு சிறைக்கைதியின் மூலமாகவே தமக்கு தெரியவந்ததாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பின்னர் தாமே இது குறித்து கனேடியத் தூதரகத்திற்கும் தெரியப்படுத்தியதாக குடும்பத்தினர் கூறுகி்ன்றனர்.உயிரிழந்தவர் கனடாவில் பிறந்தவர் என்பதுடன்,கனடாவிலேயே வளர்ந்தவர் என்றும், ஆனால் அவருக்கு உதவ கனேடியரோ அல்லது அரசாங்கமே முன்வரவில்லை என்றும் உயிரிழந்தவரின் மகன் கவலை வெளியிட்டுள்ளார்.gfiuu

மெக்சிக்கோவில் உள்ள சுரங்கத் தொழில் துறை ஒன்றில் பணிபுரிந்து வந்த குறித்த அந்த நபர் கடந்த 2012ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட திருடன் ஒருவரை தாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு நிரூபனமாகியதை அடுத்து அவர் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்துள்ளார். ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட தனது தந்தையார் உயிர்வாழ்வதற்கு, கடந்த மூன்று வருடங்களாக தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பணம் அனுப்பி வருவதாக உயிரிழந்தவரின் மகன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தமக்கு உதவ வேண்டும் எனவும் உயிரிழந்தவரின் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post மெக்சிக்கோ சிறையில் கனேடியர் ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™