Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதியில் வேனில் கடத்திய ரூ.5 கோடி செம்மரக் கட்டைகளுடன் 4 பேர் கைது

Posted: 18 Dec 2015 11:51 PM PST

திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தும் கும்பலின் நடமாட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் சர்வதேச சந்தையில் திருப்பதியில் விளையும் செம்மரங்களின் விலை மதிப்பே ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் 7–ந் தேதி சேஷாசல வனப்பகுதியில்

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் சிறார் குற்றவாளி நாளை விடுதலை

Posted: 18 Dec 2015 11:32 PM PST

டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி இரவு ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி ஜோதி சிங் 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்துக் குள்ளானார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் டெல்லி, சிங்கப்பூர்

உ.பி.யில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் - 6 மாதம் சிறை

Posted: 18 Dec 2015 11:24 PM PST

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாலிதீன் எனப்படும் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பிற்கும், விநியோகம் செய்வதற்கும், தடை விதித்து முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநில அரசை கேட்டுக்கொண்டது

கேரள மாநில பா.ஜனதா புதிய தலைவராக கும்மனம் ராஜசேகரன் நியமனம்

Posted: 18 Dec 2015 11:19 PM PST

கேரளாவில் இதுவரை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளே இதுவரை ஆட்சி அதிகாரத்தில் மாறி மாறி இருந்து வந்தது. இந்நிலையை மாற்றி பா.ஜனதா தலைமையில் 3–வது அணியை உருவாக்குவோம் என்று அகில இந்திய பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா சமீபத்தில் அறிவித்தார்.

உலக அமைதிக்காக ஆயுத சண்டியாகம்: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஏற்பாடு

Posted: 18 Dec 2015 09:53 PM PST

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:– தனி தெலுங்கானா மாநிலம் ஏற்பட்டால் ஆயுத சண்டியாகம் நடத்துவதாக அம்மனுக்கு வேண்டிக்கொண்டேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் இப்படி சங்கல்பம் செய்து கொண்டேன். எனது லட்சியம் நிறைவேறியதன் பலனாக

கேரளாவில் தேர்வில் காப்பி அடித்த ஐ.ஜி.க்கு தேர்வு எழுத ஓராண்டு தடை: பல்கலைக்கழகம் நடவடிக்கை

Posted: 18 Dec 2015 09:41 PM PST

கேரள மாநிலம் திருச்சூர் சரக போலீஸ் ஐ.ஜி.யாக இருந்தவர் ஜோஸ். இவர் கோட்டயம் மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். சட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த மே மாதம் கொச்சி களமசேரியில் உள்ள பள்ளியில் எல்.எல்.எம். தேர்வு நடந்தது. அப்போது தேர்வு எழுதிய ஐ.ஜி. ஜோஸ் தேர்வு அறையில்

டெல்லியில் சுப்பிரமணியசாமிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

Posted: 18 Dec 2015 09:36 PM PST

பா.ஜ.க. தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியன் சாமிக்கு பல்வேறு அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் அவரது பாதுகாப்பு குறித்து அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேரளாவில் வனத்துறை ஊழியர்கள் 5 பேர் கடத்தல்: மாவோயிஸ்ட்டுகள் அதிரடி தாக்குதல்

Posted: 18 Dec 2015 09:07 PM PST

தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதால் இரு மாநில போலீசாரும் இப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி–அகழி அருகே உள்ள அமைதி பள்ளத்தாக்கில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கடந்த சில

பெண்களின் பாதுகாப்புக்காக கிராமம்தோறும் பெண் போலீஸ் தன்னார்வலர்கள்: மத்திய அரசு தகவல்

Posted: 18 Dec 2015 08:06 PM PST

நாட்டில் பாலினம் அடிப்படையில் பெண்கள் அனுபவித்துவரும் துன்பங்களை முடிவுக்கு கொண்டுவருவதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த

ஹமீது அன்சாரி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: சரக்கு-சேவை வரி மசோதா மீது ஒருமித்த கருத்து ஏற்படவில்லை

Posted: 18 Dec 2015 07:20 PM PST

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ளன. கடந்த 7 நாட்களாக மேல்-சபையில் எந்த ஒரு மசோதாவும் நிறைவேற்றப்படவில்லை. நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அடிக்கடி அவை ஒத்திவைக்கப்பட்டது.

விரல்கள் சுருங்கி உடலில் தோல் உரிந்து, சிறுமியை தாக்கிவரும் அபூர்வ நோய்

Posted: 18 Dec 2015 07:05 PM PST

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா ஹம்மக்கேரி அருகே இன்ஜினகெரே கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். கூலி தொழிலாளி. இவருடைய மகள் அகிலா(வயது 16). இந்த சிறுமியை ஒரு அபூர்வ நோய் தாக்கி உள்ளது. அதாவது அவளது உடலில் தோல் உரிந்தும், கை,

ஐகோர்ட்டு தடைக்கு எதிராக அருணாசல பிரதேச கவர்னர் அப்பீல்

Posted: 18 Dec 2015 07:04 PM PST

நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு சட்டசபையை ஜனவரி 14-ந் தேதி கூட்டுவதற்கு கவர்னர் ராஜ்கோவா உத்தரவிட்டிருந்தார். பின்னர் அவர் சட்டசபையை டிசம்பர் 16-ந் தேதி முன்கூட்டியே கூட்டினார்.

ஒத்துழைக்காத எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட சி.பி.ஐ.க்கு உத்தரவு: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் புதிய குற்றச்சாட்டு

Posted: 18 Dec 2015 06:44 PM PST

டெல்லி மாநில தலைமைச் செயலகத்தில் கடந்த செவ்வாய்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். மாநில அரசுக்கு ரூ.9½ கோடிக்கு கம்ப்யூட்டர்கள் வாங்கியதில் நடந்ததாக தொடரப்பட்டு உள்ள ஊழல் வழக்கு குறித்து முதல்-மந்திரியின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணையும்

சந்திரபாபு நாயுடுவை விமர்சித்ததாக குற்றச்சாட்டு: ஆந்திரா சட்டசபையில் ரோஜாவுக்கு ஒரு ஆண்டு தடை

Posted: 18 Dec 2015 06:23 PM PST

ஆந்திர பிரதேச மாநில சட்டசபை கூட்டத்தொடர் ஐதராபாத்தில் நேற்று காலை நடந்தது. அப்போது நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா எழுந்து பேசுகையில், விஜயவாடா பகுதியில் கந்து வட்டி கொடுமை நடக்கிறது. அப்போது குடும்ப பெண்களிடம்

சுதந்திர போராட்ட தியாகியின் மகன் இந்திய துணை கண்டத்தின் அல் கொய்தா தலைவன்

Posted: 18 Dec 2015 04:23 PM PST

சமீபத்தில் டெல்லி போலீசார் சம்பல் பகுதியை சேர்ந்த மொகமது ஆசிப் மற்றும் கட்டாக்கை சேர்ந்த அப்துல் ரஹ்மான் ஆகியோரை கைது செய்தனர். ரஹ்மான் ஒடிசாவில் இந்திய துணை கண்டத்தின் அல் கொய்தா இயக்கதிற்காக ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டு

வாகன போக்குவரத்தில் மாற்றம் எதிரொலி: டெல்லியில் பள்ளிகளை 15 நாட்கள் மூட உத்தரவு

Posted: 18 Dec 2015 01:51 PM PST

டெல்லியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, பதிவு எண்களில் கடைசி எண்ணை ஒற்றைப்படையாக கொண்ட கார்களும், இரட்டைப்படை எண் கொண்ட கார்களும் தனித்தனி நாட்களில் இயக்கப்பட வேண்டும் என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா இன்று கோர்ட்டில் ஆஜர் ஆகிறார்

Posted: 18 Dec 2015 11:28 AM PST

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜர் ஆவேன் என்று சோனியா காந்தி கூறினார். மறைந்த பிரதமர் நேரு தொடங்கிய 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கட்சி நிதியை

ஓரினச்சேர்க்கைக்கு குற்றவிலக்கு; பாராளுமன்றத்தில் சசிதரூரின் தனிநபர் மசோதா தோல்வி

Posted: 18 Dec 2015 10:00 AM PST

ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் 377 சட்ட பிரிவில் மாற்றம் செய்ய கோரும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் தனிநபர் மசோதா பாராளுமன்ற உறுபினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 377 பிரிவின் படி ஓரினச்சேர்க்கையானது இயற்கைக்கு மாறானது, 10-ஆண்டுகள் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

சட்டசபை லிப்டுக்குள் மனைவியுடன் சிக்கித் தவித்த உ.பி. முதல்வர்

Posted: 18 Dec 2015 07:38 AM PST

உத்தர பிரதேசத்தில் சட்டசபையில் உள்ள லிப்ட் திடீரென இயங்காததால், அதில் சென்ற முதல்வர் அகிலேஷ் யாதவும், அவரது மனைவியும் சுமார் அரை மணி நேரம் வெளியேற முடியாமல் தவித்தனர். உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவும் அவருடைய மனைவியும் மக்களவை உறுப்பினருமான டிம்பிள் யாதவும் இன்று சட்டப்பேரவை கட்டிடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்

தலைமை தகவல் ஆணையராக ஆர்.கே.மாத்தூர் நியமனம்

Posted: 18 Dec 2015 05:54 AM PST

பாதுகாப்புத்துறையின் முன்னாள் செயலரான ஆர்.கே. மாத்தூர் தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்து வந்த விஜய் ஷர்மாவின் பதவிக்காலம் டிசம்பர் 1-ம் தேதியோடு முடிவடைந்ததை அடுத்து ஆர்.கே மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதாவது தனது 65 வயதை பூர்த்தி செய்யும் வரை இவர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™