Tamil Star |
- கனேடிய போர் விமானங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல்
- பிரிட்டிஷ் கொலம்பியாவின் உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஒருவர் நியமனம்
- நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
- சளி, காய்ச்சல் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
| கனேடிய போர் விமானங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் Posted: 18 Dec 2015 10:17 AM PST
ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மோசூல் நகரின் வடமேற்கு பிராந்தித்தில உள்ள ஐ.எஸ் நிலைகள் மீதே கனடாவின் CF-18 ரக போர் விமானங்கள் தாக்குதல்களை நடாத்தியிருந்தன. ஈராக்கின் வட பிராந்தியத்தில் குர்திய படைகளுக்கு எதிராக மிகப் பெரும் தாக்குதல் நடவடிக்கையை இஸ்லாமிய தீவிரவாதிகள் நேற்றைய நாள் ஆரம்பித்துள்ளனர். அதனை முறியடிப்பதற்கும் வகையிலான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே கனேடிய விமானங்களும் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளன. ஐ.எஸ் அமைப்பினால் சுமார் 17 மணித்தியாலங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட மூர்க்கமான தாக்குதல்களை முறியடிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க, பிரித்தானிய, பிரஞ்சு போர் விமானங்களும் ஈடுபட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பன்னாட்டு கூட்டு விமானத் தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து கனடா தனது போர் விமானங்களை மீட்டுக் கொள்ளும் என பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார். அத்துடன் எப்போது தமது போர் விமானங்களை மீட்டுக் கொள்வது என்பது தொடர்பில் லிபரல் அரசாங்கம் பரிசீலித்துவருகின்றது. நேற்றைய நடவடிக்கைகளிலும் கனேடிய போர் விமானங்கள் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மோதல்கள் இடம்பெற்ற அந்த பகுதிக்கு அருகாமையிலேயே குர்திய படைகளுக்கு பயிற்சிகளை வழங்கிவரும் 69 கனேடிய இராணுவ நிபுனர்களும் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கு எதுவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என அமெரிக்க கூட்டுப் படை கட்டளை மையம் தெரிவித்துள்ளது The post கனேடிய போர் விமானங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரிட்டிஷ் கொலம்பியாவின் உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஒருவர் நியமனம் Posted: 18 Dec 2015 10:01 AM PST
வள்ளியம்மை எனப்படும் அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் என்பதுடன்,இந்திய நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறியிருந்தார். இவர் தமது சட்டக் கல்வியை வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992-ம் ஆண்டு நிறைவு செய்திரந்தார். பின்னர் 1995-ம் ஆண்டிலிருந்து வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்து பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். கனேடிய தேசிய வழங்கறிஞர்கள் சங்கம் மற்றும் அதனுடைய பிரிட்டிஷ் கொலம்பியா கிளையின் பல்வேறு செயற்குழுக்களிலும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையிலும் செயலாற்றியுள்ளார். வழக்கறிஞர் தொழில் மட்டும்மல்லாது, பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் சட்டக்கல்வி பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ள இவர் பணியாற்றியுள்ளார். அத்துடன் வானொலி, தொலைக்காட்சிகளில் பலதரப்பட்ட சமுதாய கலாசாரங்கள் குறித்த தொடர் நிகழ்ச்சிகளையும் வழங்கி உள்ளார். பல்வேறு நிறுவனங்களும் இவருடைய சேவையை பாராட்டி இவருக்கு விருதுகளை வழங்கியுள்ள நிலையில், தற்போது பிரிட்டிஷ் கொலம்பிய உயர்நிதிமன்ற நீதிபதியாக வள்ளியம்மை நியமிக்கப்பட்டதன் மூலம் இவர் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். The post பிரிட்டிஷ் கொலம்பியாவின் உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஒருவர் நியமனம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்! Posted: 18 Dec 2015 06:55 AM PST
ஆகவே ஆரோக்கிய உணவுகளே எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் உணவுகளையும் தெரிவு செய்து சாப்பிடுங்கள். சிவப்பரிசி சிவப்பரிசியில் உள்ள ரைபோஃபிளேவின் என்ற விட்டமின் 'பி', மூளை செல்களின் ஆற்றலை வெளிப்படுத்த உதவுகிறது. நம் உடலில் போதுமான அளவு 'பி' வைட்டமின் இருக்கும் போதுதான் ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம், நியூரோடிரான்ஸ்மிட்டரான 'செரட்டோனின்' ஆக மாற்றப்படுகிறது. இது நம் மனதை அமைதியடைய வைத்து, கற்கும் திறனும் ஞாபக சக்தியும் மேம்பட உதவுகிறது. மன திருப்தியையும் நிறைவான தூக்கத்தையும் தருவதால் மனம் உற்சாகத்துடன் இருக்கும். மீன் புரதச்சத்து நிறைந்த மீன், டைரோசின் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டது. உடலில் டைரோசின் அதிகமாக இருக்கும் போது, மூளையின் செல்கள் டோபமைன் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்கின்றன. நம்மை சுறுசுறுப்படையச் செய்து முறையான நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. மீனில் உள்ள செலினியம் எனும் தாதுப் பொருள் ஆக்சிஜனேற்றத்துக்கு முக்கியம். ஆக்சிஜனேற்றம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவுவதுடன் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
வாழைப்பழம் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும். இதற்கு காரணம் அதில் உள்ள ட்ரிப்டோபன், டைரோசின் என்னும் அமினோ அமிலங்கள் மற்றும் செரட்டோனின், டோபமைன் போன்றவை. கடின உழைப்பால் ஏற்படும் உடல் சோர்வு உடனடியாக நீங்கி மீண்டும் வேலையை தொடர உதவும். இது தவிர, விட்டமின் 'சி' மிகுதியாக இருப்பதால், அது, மூளைக்கு தேவையான 'நார்எபிநெப்ரின்' தயாரிக்க உதவுகிறது. மூளையின் ரத்த நாளங்கள் சேதமடையாமல் காப்பாற்றக்கூடிய வாழையில் நம் உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் 'சி' சத்து 33 சதவிகிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முட்டை முட்டையின் மஞ்சள் கருவில் கோலின் உள்ளது. இது அசிடைல்கோலின் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்க தேவைப்படுகிறது. அசிடைல்கோலின், மூளையில் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டு வரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. அசிடைல் கோலின் போதுமான அளவில் இல்லாவிட்டால் கவனக்குறைவையும் ஞாபகமறதியையும் ஏற்படுத்தும்.
வல்லாரைக்கீரை வல்லாரையிலுள்ள ப்ரம்மிக் அமிலம், ப்ரமினோசைட் மற்றும் ப்ரம்மோசைட் போன்றவையே நினைவாற்றலுக்கு உதவுபவை. வல்லாரையில் டி.ஹச்.ஏ. இருப்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. மகத்துவம் வாய்ந்த வல்லாரையை குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சமைத்துக் கொடுக்கலாம்.
எள் மூளையின் செயல்பாட்டுக்கு உதவுவதுடன், சந்தோஷ உணர்வையும் ஏற்படுத்துகிறது.எள்ளில் துத்தநாகம் (Zinc) உள்ளது. இது ஞாபகசக்திக்கும் மூளை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். துத்தநாகம், மூளையின் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும். எள்ளில் அரிசியில் உள்ளது போல் ட்ரிப்டோபன் எனும் அமினோ அமிலம் உள்ளது. இதுவே மூளையின் முக்கிய நியூரோ டிரான்ஸ்மிட்டரான 'செரட்டோனின்' ஆக மாற்றப்படுகிறது.
The post நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சளி, காய்ச்சல் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் Posted: 18 Dec 2015 06:42 AM PST
சளி, காய்ச்சல் பிடித்தால், அவர் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் இப்பிரச்சனையை மோசமாக்கும். சளி, காய்ச்சல் பிடித்திருக்கும் போது சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். சரி இப்போது சளி பிடித்திருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி பார்க்கலாம். * பால் பொருட்களை சளி பிடித்திருக்கும் நேரத்தில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சளியின் அளவை அதிகரித்து, நோய்க்கிருமிகளின் தாக்கத்தை அதிகரிக்கும். ஆகவே சளி பிடித்திருந்தால், பால் பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுங்கள். * அசிட்டிக் உணவுகளை சளி பிடித்திருக்கும் போது முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். இறைச்சிகளில் அசிடிட்டி அளவு அதிகமாக இருப்பதால், அது உடலில் உள்ள இயற்கை அமிலங்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். * கொழுப்புமிக்க உணவுகளில் ஃபேட்டி அமிலங்கள் அதிகம் உள்ளதால், அவை உடலுக்கு பெரும் தொந்தரவைக் கொடுக்கும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளையோ, ஜங்க் உணவுகளையோ சளி பிடித்திருக்கும் போது, முற்றிலும் தவிர்க்க வேண்டும். * பெக் அடித்தால், எப்பேற்பட்ட சளியும் நீங்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து, உடல் வறட்சி அதிகரித்து, சளியின் அளவு மட்டுமின்றி, காய்ச்சலும் அதிகரித்துவிடும். * ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இல்லை மற்றும் கலோரிகள் ஏராளமாக உள்ளது. இத்தகைய உணவை உடல்நிலை சரியில்லாத காலத்தில் உட்கொண்டு வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைந்துவிடும். எனவே இந்த மாதிரியான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். * நோய்வாய்ப்பட்டிருக்கும் காலத்தில் ஜூஸ் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். The post சளி, காய்ச்சல் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஈராக்கின் வட பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து நேற்றைய தினம் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன், இந்த மிகப்பெரும் தாக்குதல் நடவடிக்கையில் கனேடிய போர் விமானங்களும் பங்கேற்றுள்ளன.


நாள் முழுவதும் உற்சாக மனநிலையோடு இயங்கவேண்டுமெனில் அதற்கு உணவுகளும் அவசியம்.





சளி, காய்ச்சல் பிடித்தால், அவர் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.