Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு கேரள ஜெயில் கைதிகள் தயாரித்த உணவு: ராணுவ விமானம் மூலம் அனுப்பபடுகிறது

Posted: 04 Dec 2015 11:02 PM PST

சென்னையில் இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உண்ண உணவும், உடுக்க உடையும் இன்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களும் நிவாரண உதவிகளை செய்து

நேதாஜி தொடர்பான 33 ரகசிய கோப்புகளை பிரதமர் அலுவலகம் வெளியிட்டது

Posted: 04 Dec 2015 10:30 PM PST

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 33 ரகசிய கோப்புகளை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கடந்த 1945–ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் சிக்கிய சம்பவம் இன்னும் மர்மமாகவே இருந்து வருகிறது. அந்த விபத்தில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்டாலும், அதுபற்றிய மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

பருவநிலை மாற்றத்தால் சென்னையில் பேய் மழை: விஞ்ஞானிகள் தகவல்

Posted: 04 Dec 2015 10:28 PM PST

வரலாறு காணாத அளவுக்கு பெய்த பேய் மழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்ததற்கு விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய டைரக்டர் சுனிதா நாராயணன் இதுபற்றி கூறியதாவது:–

சபரிமலையில் சாரல் மேடு பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு தொடக்கம்

Posted: 04 Dec 2015 10:09 PM PST

சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களின் உடல் நல பாதுகாப்புக்காக சன்னிதானம், எருமேலி உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் இருதய நோயாளிகளுக்காக ஆக்ஸிஜன் கியாசும் அமைக்கப்பட்டு உள்ளது.

சபரிமலையில் உணவு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு: ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட 350 பேர் பங்கேற்பு

Posted: 04 Dec 2015 09:58 PM PST

சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. தினமும் அதிகளவில் பக்தர்கள் தரிசனத்துக்காக சபரிமலைக்கு வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் சன்னிதானம் மற்றும் பம்பா பகுதிகளில் ஓட்டல்கள் திறக்கப்பட்டு உள்ளன.

வெள்ளத்தில் தவிக்கும் தமிழக மக்களின் துயரம் நீங்க பிரதமரின் தொகுதியில் மாபெரும் யாகம்

Posted: 04 Dec 2015 09:55 PM PST

வெள்ளத்தில் தவிக்கும் தமிழக மக்களின் துயரம் நீங்க பிரதமரின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் மாபெரும் யாகம் நடந்தது. சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழை உலக நாடுகளை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்கா தனது

திருச்சானூர் கோவில் பிரமோற்சவம் 8–ந்தேதி தொடங்குகிறது

Posted: 04 Dec 2015 09:26 PM PST

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் வருகிற 8–ந்தேதி தொடங்குகிறது. 16–ந்தேதிவரை விழா நடைபெறுகிறது. விழாயொட்டி தினமும் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 8–ந்தேதி காலை கொடியேற்றப்படுகிறது. அன்று இரவு சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதிகளில் தாயார் பவனி வருகிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு குறித்து ஆய்வு

Posted: 04 Dec 2015 09:04 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. தினமும் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 11.45 மணிக்கு அடைக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக சபரிமலையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

சபரிமலையேறும் பெண்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தேவஸ்தான சிறப்பு அதிகாரி தகவல்

Posted: 04 Dec 2015 08:14 PM PST

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளதால் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண் பக்தர்களுடன் இந்து பெண் பக்தர்களும் சபரிமலைக்கு மாலை அணிந்து வருகிறார்கள். இவர்களில் பூப்படையாத 10 வயது வரை உள்ள பெண்களும், 50 வயதுக்கு

சபரிமலை பக்தர்களின் பாதுகாப்புக்காக புல்மேடு பகுதியில் வனத்துறையினர் சிறப்பு பணி

Posted: 04 Dec 2015 08:06 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நடைபயணம் செல்லும் பக்தர்கள் தற்போது குமிளி, வண்டிப்பெரியாறு வழியாக புல்மேடு வனப்பகுதிக்கு சென்று அங்கிருந்து சபரிமலையை அடைந்து வருகிறார்கள். புல்மேடு பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

பாராளுமன்றம் இயங்குவதே பெரிய விஷயம்: பிரதமர் மோடி நகைச்சுவை

Posted: 04 Dec 2015 06:52 PM PST

டெல்லியில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை நகைச்சுவையாக குறிப்பிட்டார். அவர் தனது பேச்சை முடிப்பதற்கு முன்பு

5-12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் இனி ரெயிலில் முழுக் கட்டணம்

Posted: 04 Dec 2015 04:02 PM PST

ரெயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. 5 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட் (பாதி கட்டணத்தில்) வழங்கப்படுகிறது. இந்த முறையை ரெயில்வே நிர்வாகம் தற்போது மாற்றியமைத்துள்ளது.

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, ஒரு ராணுவ வீரர் பலி

Posted: 04 Dec 2015 02:02 PM PST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வாத்தெர் பாலா கிராமத்தில், ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்தை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் அபராதத்தை ரத்து செய்த ஹெச்.டி.எப்.சி

Posted: 04 Dec 2015 12:08 PM PST

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஹோம் லோன் கஸ்டமர்களுக்கு வீட்டுக்கடனுக்கான தவணையை தாமதமாக செலுத்தினால் வசூலிக்கப்படும் அபராதத்தை நவம்பர் மாதத்திற்கு ரத்து செய்துள்ளது எச்.டி.எப்.சி வங்கி.

நாளை முதல் பகுதி நேரமாக சென்னை விமான நிலையம் செயல்படும்: விமான ஆணையம்

Posted: 04 Dec 2015 11:20 AM PST

தொடர் கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலையம் நாளை முதல் பகுதி நேரமாக செயல்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு நிவாரண நிதியாக ரூ.5 கோடி அனுப்பிய ஒடிசா

Posted: 04 Dec 2015 10:52 AM PST

தமிழகத்தில் பெய்த தொடர் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில அரசு ரூ.5 கோடியை வழங்கியுள்ளது.

5 ஆயிரம் லிட்டர் பால், நூடுல்ஸ், பிஸ்கட் உட்பட 17 டன் உணவு பொருட்கள்: தமிழகத்திற்கு அனுப்பிய மத்திய அரசு

Posted: 04 Dec 2015 09:05 AM PST

வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் சென்னையின் நிவாரணப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அமைச்சரவை செயலர் பி.கே சின்ஹா தலைமையிலான தேசிய நெருக்கடிநிலை மேலாண்மை குழு (NCMC) புது டெல்லியில் இன்று கூடியது.

சட்டசபைக்குள் வரும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யுங்கள்: எம்.எல்.ஏ.க்களுக்கு பீகார் சபாநாயகர் கண்டிப்பு

Posted: 04 Dec 2015 04:35 AM PST

பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு முன் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிடும்படி சபாநாயகர் அறிவுறுத்தி உள்ளார். இதுபற்றி சட்டமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய சபாநாயகர் விஜய் சவுத்ரி, சட்டமன்றக் கூட்டம் தொடங்கும்போது சில உறுப்பினர்களின் செல்போன்

இம்ரான் கானின் முன்னாள் மனைவியை காக்பிட்டில் உட்கார வைத்ததால் விசாரணையை எதிர்கொள்ளும் பைலட்

Posted: 04 Dec 2015 02:49 AM PST

முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவியை விமான காக்பிட்டில் உட்கார வைத்த பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன பைலட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா வளர்ச்சி பெறுவதற்கு மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன: பிரதமர் மோடி பேச்சு

Posted: 03 Dec 2015 11:49 PM PST

டெல்லியில் இன்று காலை ஆங்கில நாளிதழ் நடத்திய கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:– உலக நாடுகளில் இந்தியா மிக வேகமான பொருளா தார வளர்ச்சியை பெற்றிருப்பது அனைவரும் ஒத்துக் கொள் ளக்கூடிய உண்மையாகும். இந்தியாவில் முன்பு என்ன


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™